Monday, 10 February 2025

ரேணுகாவும் சிவாவும் பதிமூன்றாம் பாகம்

 சிவா விஜியின் இடதுபுறம் முடித்து விட்டு பின்புறம் மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். அப்போது கோதை தன்னையும் அறியாமல் தன்னுடைய ஜடையை முன்னால் எடுத்துப்போட்டாள். சிவா மொட்டை அடித்துக்கொண்டே கோதை என்ன செய்கிறாள் எனப்பார்த்தான். கோதையின் கண்கள் சிவாவின் கத்தி விஜியை மொட்டை அடிப்பதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தது. 




சிவா விஜியின் பின் தலையை மொட்டை அடித்து முடித்து வலதுபுறத்தை மொட்டை அடிக்க துவங்கியிருந்தான். விஜி அவள் தலையில் கத்தி சிரைக்கும் போது வரும் சத்தத்தை ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய நீண்டநாள் மொட்டை அடித்துக்கொள்ளும் ஆசை நிறைவேறி, அவள் தலைமுடி தரையில் விழுவதை பார்த்தாள். சிவா அவளுக்கு மொட்டை அடித்து முடித்தபோது, விஜியின் மொத்த முடியும் தரையில் விஜியை சுற்றி தரையில் கிடந்தது.


விஜி தன்னுடைய மொட்டை தலையில் கை வைத்தாள். நீண்டநாள் ஆசை நிறைவேறிய திருப்தி அவள் முகத்தில் தெரிந்தது. உடனே எழுந்து அருகில் இருந்த கண்ணாடியில் பார்த்தாள். மொட்டை தலையுடன் தன்னை பார்க்க அவளுக்கு சிரிப்பாக வந்தது. ரேணு எழுந்து வந்து விஜியின் மொட்டை தலையை தொட்டுப்பார்த்தாள். விஜியின் மொட்டை மண்டையில் ஒரு முத்தம் கொடுத்தாள். 


“அத்தை.. உங்களோட மொட்டை தலையும் அழகாதான் இருக்கு” என்றாள். விஜியும் சிரித்துக்கொண்டே வந்து தரையில் கிடந்த அவளுடைய மொட்டை அடிக்கப்பட்ட முடியை எடுக்க ஆரம்பித்தாள். சிவா திரும்பி சாந்தியை பார்த்தான். சாந்தி அடுத்ததாக நாற்காலியில் உட்கார எழுந்தாள். விஜி தன்னுடைய முடியை அறையின் ஒரு இடத்தில் வைத்துவிட்டு வந்து சாந்தி இருந்த இடத்தில் அமர்ந்தாள். சாந்தி இப்போது சிவாவின் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.


கோதை எழுந்து விஜியின் அருகில் சென்று அவள் மொட்டை தலையை தடவினாள். கோதை திடீரென மொட்டை தலையின் மேல் ஆர்வம் கொண்டதை அனைவரும் கவனித்தனர். விஜி கோதையை பார்த்து சிரித்தாள். ஆனால் ஒண்ணும் சொல்லவில்லை. கோதையின் கைகள் தலையில் தடவுவது விஜிக்கு பிடித்திருந்தது. 


நேற்று இதே நேரத்தில் தானும் இவ்வாறுதான் மொட்டைமீது ஆர்வமாக மாறியதை ரேணு நினைவுகூர்ந்தாள். சாந்தி நாற்காலியில் அமர்ந்ததும் தன் ஜடையை தூக்கி பின்னால் போட்டள். “இந்த முறையாவது என்னோட முடியை அப்படியே ஜடையோட மொட்டை அடிச்சு விடு சிவா” என்றாள். சரியென்று சொல்லி விட்டு சிவா கத்தியில் இருந்த பிளேடை மாற்றிக்கொண்டிருந்தான். 


அப்போது ரேணு “அண்ணா…. எனக்கும் மொட்டை அடிக்க ஆசையா இருக்கு. அம்மாக்கு நான் மொட்டை அடிச்சுவிடவா?” என்று எழுந்து நின்றாள். விஜியும் கோதையும் ரேணுவை ஆச்சரியமாக பார்த்தனர். சிவா ரேணுவை பார்த்து சிரித்துவிட்டு, சவரக்கத்தியை புதிய பிளேடுடன் ரேணுவின் கையில் கொடுத்து விட்டு நகர்ந்தான். 


“நேத்து சொன்னமாதிரி இப்போ நீயே எனக்கு மொட்டை அடிக்கப்போறியா ரேணு?” என்று சிரித்துக்கொண்டே சாந்தி கேட்டாள். “ஆமா…. உனக்கு மொட்டை அடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா?” என்று ரேணு பதிலளித்தாள். “விஜி…. எனக்கு எப்ப்டி மொட்டை அடிசாங்கனு கேட்பியே.. இப்போ நல்லா பார்த்துக்கோ” என்றாள் சாந்தி. விஜியும் அதை புன்னகையுடன் ரசித்தாள்.

ரேணு தன்னுடைய அம்மாவின் தலையில் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள். சாந்தி தான் தலையை ஜடையுடனே மொட்டை அடிக்க சொன்னதால் ரேணு நிறைய தண்ணீர் ஊற்றினாள். அப்போதுதான் மசாஜ் செய்யாமல் முடி இறக்க முடியும். சாந்தியின் தலையில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றியபின் அவள் ஜடை முழுவதும் ஈரமாக இருந்தது. 

ரேணு சாந்தியின் ஜடையை எடுத்து அவள் அம்மாவின் வலதுமுன்புறம் போட்டாள். சவரக்கத்தியை சாந்தியின் கண்முன்னால் விரித்தாள். சாந்தியின் தலைமுடியை அவள் நெற்றியின் வகிடில் வைத்து இடதுபுறம் சிரைக்க ஆரம்பித்தாள் ரேணு. ஏழு ஆண்டுகளுக்கு பின் சாந்தியின் தலை மீண்டும் மொட்டையாக துவங்கியது. சாந்தியின் தலை நல்ல ஈரமாக இருந்ததால் ரேணுவால் சுலபமாக மழிக்க முடிந்தது. 


மெல்ல மெல்ல சாந்தியின் வகிடில் இருந்து இடதுபுறம் அவள் தலைமுடி சிரைத்து ஒதுங்க ஆரம்பித்தது. அம்மாவின் தலை மொட்டையாக மாறுவதை ரேணு ரசித்தாள். இடதுபுறத்தின் மேல் சிரைத்து முடித்துவிட்டு இப்போது காது மடல்களின்மேல் இருந்த முடியை ரேணு வழித்துக்கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு முறை ரேணு சாந்தியின் தலைமுடியை சிரைக்கும் போதும் வந்த “சரக்… சரக்” என்ற சத்தம் விஜியையும் கோதையையும் உணர்ச்சிகளால் தூண்டியது. ரேணு சாந்தியின் இடது புறத்தை முடித்துவிட்டு பின்பக்கம் உள்ள முடியை மழிக்க ஆரம்பித்தாள். இடதுபுறம் இப்போது முழுதாக மொட்டையாக இருந்ததால், சாந்தியின் ஜடை இப்போது கனமாக ஒருபுறம் இழுத்தது. ரேணு இப்போது சாந்தியின் வலதுபுறம் வந்தாள். மீண்டும் கொஞ்சம் தன்னிற் எடுத்து சாந்தியின் வலதுபுற முடியில் ஊற்றினாள். 

மறுபடி கத்தியை வைத்து சிரைக்க ஆரம்பித்தாள். வலதுபுறத்தில் ஜடை கனமாக இருப்பதால் சாந்தி தான் தலையை கொஞ்சம் சாய்த்தே இருந்தாள். அது ரேணுவுக்கு மொட்டையடிக்க வசதியாக இருந்தது. ஆரம்பித்ததைவிட இப்போது ரேணு வேகமாக சிரைத்துக்கொண்டிருந்தாள். இப்போது சாந்தியின் வலதுபுறமும் மொட்டை ஆனது. ரேணு கடைசியாக  மழித்தபோது சாந்தியின் ஜடை அவள் மடியில் வழிந்து பின்னர் அப்படியே தரையில் வந்து விழுந்தது. சாந்தி முழுவதுமாக மொட்டை ஆனாள். குனிந்து தன்னுடைய ஜடையை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.

சாந்தி ஒரு கையில் தன்னுடைய மொட்டை தலையை தடவினாலும் இன்னொரு கையில் இருந்த ஜடையை சிவாவிடம் நீட்டினாள். சிவா சாந்தியின் ஜடையை கையில் வாங்கினான். அவன் தினமும் விளையாடும் சாந்தியின் ஜடை இப்போது முழுதாக அவன் கையில் இருந்தது. அவன் அதை அப்படியே கோதையின் கைகளில் கொடுத்தான். கோதை சாந்தியின் ஜடையை வாங்கினாள்.  

அவள் ஜடை அடர்த்தியாகவும், ஈரமாகவும், கனமாகவும் இருந்தது. கோதை சாந்தியின் மொட்டை தலையை பார்த்துவிட்டு சிரித்தாள். சாந்தியின் தலையையும் தொட்டு ரசித்து விட்டு அடுத்ததாக நாற்காலியை பார்த்தாள். அடுத்தது யார் என்பதுபோல நாற்காலி அமைதியாக இருந்தது. சிவா கோதையின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு தன் பாக்கடில் வைத்திருந்த அந்த புதிய கத்தியை எடுக்க முனைந்தான். 


கோதை தன்னுடைய ஜடையை தூக்கி முன்னால் போட்டு அவிழ்த்துப்போட ஆரம்பித்தாள். கோதை தன்னுடைய நீளமான தலைமுடியை விரித்துப்போட்டுக்கொண்டே நாற்காலியை நோக்கி நடந்து வருவதை ரேணு கவனித்தாள்.

தன்னுடைய தலையை மொட்டை அடிக்க எண்ணிய கோதை சிவாவை பார்த்து விட்டு சாந்தி மொட்டை அடித்த நாற்காலியில் உட்கார சென்றாள். கோதை தன் ஜடையை அவிழ்த்து விட்டுக்கொண்டே வருவதை ரேணுவும் கவனித்தாள். கோதையை கவனித்த விஜி, கோதையை அழைத்து நிறுத்தினாள். 

பின்னர் விஜி நாற்காலியின் அருகில் சென்று ரேணுவிடம் இருந்த கத்தியை வாங்கினாள். அனைவரும் விஜியை வியப்போடு பார்க்க பின்னர் ரேணு விஜியிடம் கேட்டாள்.

ரேணு: என்ன அத்தை… கத்தியை நீங்க வாங்கிடீங்க? கோதைக்கு நீங்க மொட்டை அடிச்சுவிடப்போறீங்களா?

விஜி: ஆமா ரேணு அடுத்து நான்தான் மொட்டை அடிச்சுவிடப்போறேன். ஆனா கோதைக்கு இல்ல… உனக்குதான்.

ரேணு: என்ன அத்தை எனக்கா?

விஜி: ஆமா ரேணு. நீதான் சொன்னியே…. வாய்ப்பு இருந்தா எனக்காக உன்னோட தலையை மொட்டை அடிச்சுக்குவேன்-னு.

ரேணு: இப்போவும் சொல்லுறேன். கண்டிப்பா உங்களுக்காக நான் மொட்டை அடிச்சுக்குவேன்.

விஜி: எனக்கு இப்போ உன்னோட தலையை மொட்டை அடிக்கணும்-னு ஆசையா இருக்கு. எனக்காக உன்னோட நீளமான தலைமுடியை இப்போ தருவியா?

ரேணு: எனக்காக நீங்களும் அம்மாவும் மொட்டை போட்டுகிட்டீங்க. இப்போ உங்களுக்காக நானும் மொட்டை போட்டுக்கிறேன்.

விஜி: தாங்க்ஸ் ரேணு. அப்போ நீ வந்து இந்த சேர்ல உட்காரு.

ரேணு: சரி அத்தை. நான் உட்காருறேன். நீங்க எனக்கு எப்படி மொட்டை அடிக்கப்போறீங்க?



விஜி: எனக்கு உன்னோட தலையை ஜடையோடவும் மொட்டை அடிக்க வேணாம். உன்னோட தலைமுடியை விரிச்சுப்போட்டும் மொட்டை அடிக்க வேணாம்.

ரேணு: அப்புறம் எப்படி மொட்டை அடிக்கப்போறீங்க?

விஜி: உனக்கு கொண்டை போட்டமாதிரி மொட்டை அடிக்கப்போறேன்.

ரேணு: கொண்டை போட்டு மொட்டை அடிக்க கஷ்டமா இருக்காதா அத்தை

விஜி: இல்லை நான் உனக்கு கோடாலி கொண்டை போட்டுதான் மொட்டை அடிக்கப்போறேன்.

ரேணு: ஓ.. அதுவா…. அதுவும் நல்லாதான் இருக்கும். சரி அப்படியே எனக்கு மொட்டை அடிச்சு விடுங்க.

விஜி: நீ முதல்ல உட்காரு.

ரேணு: சரி

ரேணு இப்போது நாற்காலியில் வந்து உட்கார்ந்தாள். கோதை புன்னகையுடன் சென்று தனது இருக்கையில் அமர்ந்துகொண்டாள். ரேணுவுக்கு மொட்டை அடித்தபின்னர் சிவாவின் கைகளால் மொட்டை அடிக்கலாம் என நினைத்துக்கொண்டாள். ரேணு தன் ஜடையை தூக்கி பின்னால் விஜியிடம் கொடுத்தாள். விஜி ரேணுவின் ஜடையை அவிழ்க்கத்துவங்கினாள். 

ரேணுவின் ஜடையை அவிழ்க்கும்போது கோதையின் கைகள் படபடத்தது. சிறிது நேரத்திற்குமுன் கோதைதான் ரேணுவுக்கு ஜடை பின்னிவிட்டாள். இப்போது அந்த நீளமான முடியை மொட்டை அடிக்கப்போகிறாள். விஜி ரேணுவின் ஜடையை ஒவ்வொரு பின்னலாக அவிழ்த்துவிட்டாள். 

சாந்தி தொடர்ந்து இரண்டாவது நாளாக ரேணுவின் ஜடை மொட்டை அடிப்பதற்காக அவிழ்க்கப்படுவதை பார்த்தாள். உண்மையில் அவள் ரேணுவின் தைரியத்தை நினைத்து ஆச்சரியப்பட்டாள். நேற்றுவரை தன்னுடைய நீளமான முடியை பொக்கிஷம்போல நினைத்தவள் இன்று கேட்டவுடன் மறுபேச்சு பேசாமல் மொட்டை அடிக்க கொடுத்து உட்கார்ந்துவிட்டாள். 

விஜி ரேணுவின் ஜடையை அவிழ்த்துவிட்டு அவளுடைய நீளமான முடியை கோதிவிட்டுக்கொண்டிருந்தாள். பின்னர் அதை அப்படியே கொஞ்சம் லூசாக விட்டு ரேணுவின் தலைமுடியை கோடாலி கொண்டையாக போட்டாள்.

விஜி ரேணுவின் தலையில் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்தாள். ரேணுவின் தலையில் ஊற்றிய தண்ணீர் அவள் தலைமுடியின் வேர்களை நனைத்துவிட்டு அப்படியே வழிந்து அவளுடைய கொண்டையை நோக்கி சென்றது. ரேணு தன்னுடைய தலையில் ஒரு குளிர்ச்சியை உணர்ந்தாள். 

விஜி கோதையை அழைத்து அந்த சவரக்கத்தியில் பிளேடை சொருகித்தரச்சொல்லி கையில் கொடுத்தாள். கோதை அதை வாங்கி ரேணுவின் கண்முன்னால் ஒரு பிளேடை சொருகினாள். ரேணுவும் அதை கண்கொட்டாமல் பார்த்தாள். கையில் கத்தியும், முன்னால் மொட்டை அடிக்க ரேணு தயாராக இருந்தது கோதையின் மனதை கொஞ்சம் ஆசைகளால் தூண்டியது. விஜி ரேணுவின் தலைமுடியை நன்றாக தண்ணீர் ஊற்றி விட்டிருந்தாள். கோதை ஏக்கத்துடனே கத்தியை விஜியிடம் கொடுத்தாள்.

விஜி ரேணுவின் கொண்டையை மீண்டும் ஒருமுறை கொஞ்சம் இறுக்கமாக போட்டுவிட்டு அவள் முன்னால் வந்து நின்று சிரைக்க ஆரம்பித்தாள். ரேணுவின் உச்சந்தலையில் கத்தியை வைத்து மொட்டை அடிக்க ஆரம்பித்தாள். 

கோதையின் கண்கள் ரேணுவின் தலைமுடியை விட்டு  அகலவில்லை. விஜி ரேணுவின் வகிடில் வைத்து முன்புறமாக சிரைக்கத் துவங்கினாள். ரேணு இரண்டாவது முறையாக தன்னுடைய தலை மொட்டையாக மாறுவதை உணர்ந்தாள். விஜி ரேணுவுக்கு மொட்டை அடிக்க அடிக்க அவளுடைய தலைமுடி ரேணுவின் தலையில் இருந்து விடுபட்டு வழிந்து விழுந்தது. ஆனால் இந்தமுறை அவளுடைய முடி அவள் மடியில் விழாமல் அவள் தோளில் விழுந்து நின்றது. தன்னுடைய முடி கொண்டையாக இருப்பதால் கீழே மடியில் விழவில்லை என ரேணு உணர்ந்தாள்.




கோதை கல்லூரியில் ரேணுவை ஒரு கூந்தலழகியாக தான் பார்த்திருக்கிறாள். இப்போது அவள் தன்னுடைய அடையாளாமாக இருந்த நீளமான தலைமுடியை இழந்து கொண்டிருக்கிறாள். சாந்தி கோதையை பார்த்துவிட்டு சிவாவை பார்த்தாள். சிவா ரேணுவுக்கு மொட்டை அடிப்பதை ரசித்துக்கொண்டிருந்தான். சாந்தி தன்னை பார்ப்பதை உணர்ந்த அவன் மெல்ல சாந்தியின் அருகில் சென்றான். 

சாந்தியின் பின்னால் நின்றுகொண்டு அவளுடைய மொட்டை தலையை தடவினான். சாந்தி சிவாவின் கைகள் அவளுடைய மொட்டை தலையை தடவுவதை அனுபவித்தாள். கோதை சிவா செய்வதை கவனித்தாள். சிவாவுக்கு மொட்டை எவ்வளவு பிடிக்கும் என்பதை கோதை புரிந்துகொண்டாள். விஜியும் ரேணுவும் கூட சிவா சாந்தியின் மொட்டைத்தலையை தடவுவதை கவனித்தார்கள்.

விஜி ரேணுவின் தலையை வலதுபுறம் மொட்டை அடித்து விட்டு இடதுபுறம் வந்தாள். மீண்டும் ரேணுவின் உச்சந்தலையில் கத்தியை வைத்து இடதுபுறம் சிரைக்க ஆரம்பித்தாள். விஜி ஒவ்வொருமுறை சிரைக்கும்போதும் அவள் கண்களில் தெரிந்த ஆர்வம் அனைவரையும் வியக்க வைத்தது. ஆனால் ரேணு கண்களை மூடி தன்னுடைய தலையை மொட்டை அடிப்பதை அனுபவித்துக்கொண்டிருந்தாள். 

கொஞ்சம் கொஞ்சமாக ரேணுவின் இடதுபுறமும் மொட்டையாக மாறிக்கொண்டிருந்தது. விஜி மெல்ல ரேணுவின் காது மடல்களின் மேல் இருந்த முடியை மழித்துக்கொண்டிருந்தாள். ரேணு மொட்டை அடிக்கும்போது ஒரு கூச்சத்தை உணர்ந்தாலும் தலைமுடியை மழிப்பதில் அவளுக்கு சந்தோசம் இருந்தது. விஜி ரேணுவின் இடதுபுறத்தை மொட்டை அடித்து முடித்திருந்தாள்.



இப்போது ரேணுவின் பின்புறம் சென்று மொட்டை அடிக்க ஆரம்பித்தாள். ரேணுவின் தலை முன்பகுதி மொட்டை அடிக்கப்பட்டு பின்னால் மட்டும் கொண்டையாக தொங்கி கொண்டிருந்தது. அதை பார்த்த சிவா ரேணுவின் தலை கோவில் பூசாரிபோல உள்ளது என கிண்டல் செய்தான். சிவா கிண்டலடித்ததை கேட்டு அனைவரும் சிரித்தனர். சற்று கோவம் வந்தாலும் ரேணுவும் சிரித்துவிட்டாள். 

விஜி சிரித்துக்கொண்டே மொட்டை அடிப்பதில் மும்மரமாக இருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக ரேணுவின் தலையிலிருந்த முடி இப்போது மழித்து கீழே வந்து அவள் கொண்டையை அதிக பாரமாக்கியது. விஜி இப்போது ரேணுவின் கழுத்தின் அடிப்பகுதியில் சிரைத்துக்கொண்டிருந்தாள். 



கடைசியாக சிரைத்தபோது ரேணுவின் கொண்டை அப்படியே வழிந்து “பொத்” என்று கீழே விழுந்தது. ஒரு வினாடி அனைவரின் பார்வையும் கீழே விழுந்த ரேணுவின் கொண்டையின்மேல் தான் இருந்தது (ரேணுவை தவிர). மொட்டை அடிக்கப்பட்ட தலைமுடியை எடுக்க கோதை அருகில் வந்தாள். ஆனால் விஜி குனிந்து  ரேணுவின் தலைமுடியை முதலில் எடுத்தாள்.
ஒரு கையில் ரேணுவின் மொட்டை தலையை தடவிக்கொண்டு இன்னொரு கையில் இருந்த ரேணுவின் கொண்டையை முத்தம் கொடுத்தாள். பின்னர் அந்த தலைமுடியை அப்படியே கோதையின் கைகளில் கொடுத்தாள். 




No comments:

Post a Comment