காலை எழுந்து, கையில் காப்பி கோப்பையுடன் சிவா பால்கணிக்கு வந்தான். கீழே சுதாகர் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். சுதாகர் சிவாவின் வீட்டில் கீழ் பகுதியில் குடியிருப்பவர். அவருடன் அவர் மனைவி சாந்தியும் மகள் ரேணுகாவும் இருக்கின்றனர். சிவாவிற்கு அப்பா இல்லை. அம்மாவுடன் வசித்து வந்தான். மிகவும் புத்திசாலி. பங்குச்சந்தையில் அதிக ஆர்வமுள்ளவன். எப்படியும் மாதம் இரண்டு லட்சங்களை சம்பாதித்து விடுவான். பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பான். எப்பொழுதும் அந்த கம்ப்யூட்டர் முன்னாடிதான் இருப்பான். சிவாவின் அம்மாவும் அவனை எதுவும் சொல்லமாட்டாள்.
சுதாகர் பேப்பரை கீழே வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றார். ரேணுகா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள். படிகளில் இறங்கி வரும்போது ரேணுகாவின் ஜடையை கவனித்தான்… “ஹே.. மொட்டை பாப்பா.. என்ன பண்ற” என்று கேலியாக கேட்டான். ரேணுகாவிற்கு கோவம் வந்தது. உடனே அவள் ஜடையை கொண்டை போட்டுவிட்டு “நான் ஒண்ணும் மொட்டை இல்ல.. நீங்க போங்க அண்ணா” என்று கோவமாக சொன்னாள். அவன் சிரித்துவிட்டு அவள் அருகில் வந்து “எனக்கு நீ எப்பவும் மொட்டச்சிதான்” என்று சொல்லிவிட்டு அவள் கொண்டையை தொட்டுவிட்டு போனான்.ரேணுகாவும் சிவாவும் அண்ணன் தங்கை போல இருப்பார்கள். ஆனால் இந்த தலைமுடி விஷயத்தில் இருவரும் எலியும் பூனையும்.
இந்த வீட்டிற்கு குடிவந்த புதிதில் ரேணுகாவிற்கு பதினான்கு வயது. ஒண்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். அப்போது சிவாவிற்கு இருவது வயது இருக்கும். அவள் சிவாவிடம் அண்ணா என்று நன்றாக ஒட்டிக்கொண்டாள். படிப்பில் எந்த ஒரு சந்தேகம் வந்தாலும் சிவாவிடம் கேட்டு படிப்பாள். படிப்பில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அதனால் ரேணுகாவின் பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரேணுகாவின் ஒண்பதாம் வகுப்பு விடுமுறையில் அவளுக்கு நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்த ஒரு வேண்டுதலுக்கு மொட்டை போட நினைத்தனர். ரேணுகாவின் முடி இடுப்பிற்கு கீழ் நீளமாக, அடர்த்தியாக இருக்கும். அதனால் ரேணுகா மொட்டை போட மறுத்துவிட்டாள். பின்னர் சிவா அவளிடம் மெல்ல எடுத்துக்கூறினான்.
சிவா: ரேணு.. அப்பா அம்மா சொன்னா கேட்கணும்… எதுக்கு இப்படி பிடிவாதம் பிடிக்கிற?
ரேணுகா: இல்ல அண்ணா.. என்னால மொட்டை போட முடியாது. பாருங்க என்னோட முடி எவ்ளோ நீளமா இருக்குனு.. எப்படி அண்ணா நான் மொட்டை போடுறது.
சிவா: சாமிக்கு முடியை கொடுக்குறேன்-னு சொல்லிட்டு.. மொட்டை போடமாட்டேன்-னு சொல்றியே… இது நல்ல இருக்கா. இப்போ மொட்டை போடலேனா… சாமிக்கு கோவம் வரும்… அப்புறம் பின்னாடி உனக்கு முடி வளரவே வளராது. தலை வழுக்கை விழும். உனக்கு அது நல்ல இருக்குமா?
ரேணுகா: அண்ணா என்னைய ரொம்ப பயமுறுத்துரீங்க….
சிவா: இல்ல ரேணு… உண்மைதான்…. நீ இப்போ மொட்டை போட்டா ஒண்ணும் இல்ல… இதுவே நீ காலேஜ் போனத்துக்கு அப்புறம் மொட்டை அடிச்சிக்க முடியுமா. அதான் இப்போவே மொட்டை போடுறது நல்லது.
ரேணுகா: எல்லார் முன்னாடியும் மொட்டை போட எனக்கு கொஞ்சம் கூச்சமா இருக்கு அண்ணா…
சிவா: சரி நான் உங்க வீட்டில சொல்லி இங்கயே மொட்டை போட சொல்றேன் ஓகே-வா?
ரேணுகா: ஓகே அண்ணா.. நீங்களும் என்கூட இருக்கணும்.
சிவா ரேணுகாவின் வீட்டில் நடந்ததை கூறினான்… ரேணுகா மொட்டை அடிக்க சம்மதம் சொன்னது அனைவருக்கும் திருப்தி. இன்னும் ஒரு வாரத்தில் வீட்டிலேயே மொட்டை அடித்துவிட்டு கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்மானித்தனர்.
ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு நாவிதனை வரச்சொல்லி இருந்தனர். ஒரு அறையில் ரேணுகாவிற்கு மொட்டை போட எல்லாம் செய்து வைத்திருந்தனர். சாந்தி வந்து ரேணுகாவை அழைத்தாள். முந்தையநாள் தலைக்கு குளித்து இருந்ததால் இப்பொழுது அழகாக ஜடை பின்னி இருந்தாள். அம்மாவிடம் யாரும் வரவேண்டாம் என்று கூறிவிட்டு மொட்டை அடிக்கும் அறைக்கு சென்றாள்.
சாந்தி சிவாவிடம் சென்று… “ரேணுகா தனியாக இருக்கவேண்டாம் சிவா.. நீயும் கூட இரு” என்று கூறி அனுப்பி வைத்தாள்.
அங்கு சென்ற சிவா ரேணு நின்று கொண்டிருப்பதை கவனித்தான். “என்ன ரேணு ரெடியா?” என்று கேட்டான்.
“அண்ணா.. எனக்கு இவரை பார்த்தா பயமா இருக்கு…. நான் இவர்கிட்ட மொட்டை போட மாட்டேன்” என்றாள். “அய்யோ.. அப்டியெல்லாம் சொல்லக்கூடாது ரேணு” என்றான்.
“நீங்கதான என்னை மொட்டை போட சொன்னீங்க.. நீங்களே எனக்கு மொட்டை போட்டு விடுங்க அண்ணா” என்று அழுகும் குரலில் சொன்னாள். சற்று யோசித்துவிட்டு சரி என்றான்.
நாவிதனிடம் அறையின் பின்பக்க கதவை காட்டி நீங்க வெளிய இருங்க என்று சொல்லிவிட்டு ரேணுவை அழைத்தான்.
பின்னர் கத்தியில் ஒரு பிளேடை சொருகினான். ரேணுவிண் தலையை குனிய வைத்து அவளுடைய உச்சந்தலையில் கத்தியை வைத்து மொட்டை அடிக்க தொடங்கினான்.
சாந்தி: ரொம்ப தாங்க்ஸ் சிவா… நீ கூட இல்லைனா ரேணு மொட்டை போட்டு இருக்க மாட்டாள். வேற எதுவும் சொன்னாளா?
சிவா: சரிங்க அத்தை.. இப்படி உட்காருங்க.