ரம்யா: அப்படியெல்லாம் இல்ல… நீங்க வருங்கால மனைவின்னு சொல்லிட்டீங்க… இனிமேல் எனக்கு இங்க என்ன வேலை.. அதான்..
வசந்த்: அப்போ சரி… நானும் உன்கூடவே வாரேன்.
ரம்யா: வேணாம்… நான் ஷைலஜா அக்கா கூட போறேன்… நீங்க உங்க வருங்கால மனைவிகூட பேசிட்டு வாங்க…
வசந்த்: இல்ல.. அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்..
ரம்யா: இன்னும் நீங்க அந்த பொண்ணை பார்க்கவே இல்லையே..
வசந்த்: யார் சொன்னா…? நான் பார்த்துட்டேன்
ரம்யா: எப்போ?
வசந்த்: அது ரொம்ப வருஷம் ஆச்சு…
ரம்யா: ரொம்ப வருஷமா?
வசந்த்: ஆமா.. ஆனா அந்த பொண்ணுக்கு என்கிட்ட பேச பிடிக்கலை.. அதான் இப்போ கிளம்பி போறா…
ரம்யா: ?!?!?!?!
வசந்த்: அட மக்கு… திரும்பி பார்க்காத… உன்னைத் தான் சொன்னேன்
ரம்யா: என்னையா?
வசந்த்: ஆமா.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு…. என்னை கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்கத் தான் நான் கோவிலுக்கே வந்தேன்.
ரம்யா: விளையாடாதீங்க வசந்த்…
வசந்த்: நான் உண்மையா தான் கேட்குறேன்… உனக்கு என்னை பிடிக்குமா? என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா?
ரம்யா: !!!!
வசந்த்: அதுக்கும் முன்னாடி நீ கேட்க சொன்னதை உன்கிட்டயே கேட்கிறேன்… எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தெரியுமா? நான் கேட்டதை எல்லாம் நீ செய்வியா?
ரம்யா: !!!!
வசந்த்: என்ன வெட்கமா… அதெல்லாம் இருக்கட்டும்… முதல்ல பதில் சொல்லு…
ரம்யா: மக்கு நான் இல்ல… நீங்க தான்.
வசந்த்: நானா?
ரம்யா: ஆமா…
வசந்த்: ஏன்?
ரம்யா: உங்களை எனக்கு எப்போவோ பிடிக்கும்… அதுனாலதான் நீங்க பக்கத்துல வந்தா எனக்கு ரொம்ப வெட்கம் வரும்… அதை இப்போ வரைக்கும் நீங்க புரிஞ்சுக்கலை.
வசந்த்: ஹாஹா..
ரம்யா: எதுக்கு சிரிக்கிறீங்க… எவ்ளோ நாள் நீங்க இந்த வார்த்தையை என்கிட்ட கேட்பிங்களான்னு காத்திருந்தேன் தெரியுமா? என்னோட அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க… உங்களை மனசுல இருந்து மறக்க முடியாம இதுவரைக்கும் வந்த வரன் எல்லாத்தையும் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன். போன வாரம்கூட எனக்கும் என்னோட அம்மாவுக்கும் இதுனால சண்டை.
வசந்த்: தெரியும்
வசந்த்: ம்ம்ம்
வசந்த் சிறிது நேரத்தில் அந்த குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தான். அங்கு தன்னுடைய வண்டியை பார்க் செய்து விட்டு அருகிலிருந்த ஒருவனிடம், நந்தினியின் வீடு என்பதை பற்றி விசாரித்தான். அவன் வஸந்தை மேலும் கீழும் பார்த்தான். பின்னர் அவனிடம் “நீங்க யாரு?” என்றான். வசந்த் பதில் சொல்லவில்லை. பின்னர் அவன் “ஒரு இருவது ரூபா இருக்குமா?” என்றான். வசந்த் அமைதியாக அவனை பார்த்தான். பின்னர் அவன் “ஒரு பத்து ரூவா கொடுங்க ஸார். நீங்க என்னோட வீட்டுக்குத் தான் வழி கேட்குறீங்க” என்றான். வசந்த் சற்று அதிர்ச்சியானான்.
அங்கே ஹாலில் பார்த்திபன் அமர்ந்திருந்தார். வசந்த் வருவதை பார்த்ததும், அவன் கண்களை நேரில் பார்க்க முடியாமல் எழுந்து நின்றார். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே அமர்ந்தனர். வசந்த் இருவரையும் பார்த்து புன்னகைத்தான். பார்த்திபன் பதிலுக்கு லேசான புன்னகையை உதிர்த்தார். நந்தினி தர்ம சங்கடத்துடன் பார்த்தாள். அவளுடைய பார்வை மன்னிப்பு கேட்டு ஏங்கியது. வசந்த்திற்கு அவளை பார்க்க சற்று பாவமாக இருந்தது. பார்த்திபன் முகத்திலும் மாட்டிக் கொண்ட குற்ற உணர்வு இருந்தது. அப்போது வசந்த் பேச ஆரம்பித்தான்.