Monday, 19 August 2024
வசந்தகாலம் - இரண்டாம் பாகம்
மீண்டும் ஒரு முறை அவன் கத்தரிக்கோலை எடுத்து அவளுடைய முடியை வெட்ட முயற்சி செய்யாமல் இருந்தால் நல்லது என நினைத்தாள். ஆனால் முடியை வெட்டி விட்டாலும் சந்தோசமே என அவள் மனத்திற்குள் நினைத்தாள். பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அலுவலகம் பற்றி திரும்பியது. வசந்த் மனதில் இருந்த குழப்பத்தை தெளிவு படுத்திக்கொள்ள நினைத்தான்.
வசந்த்: ரம்யா… உன்கிட்ட ஒண்ணு கேட்பேன்… தப்பா நினைக்காத..
ரம்யா: என்ன சீனியர்.. என்னோட முடி வேணுமா?
வசந்த்: ச்சே..ச்சே… அதெல்லாம் இல்ல… இது வேற ஒண்ணு..
ரம்யா: சரி… சொல்லுங்க சீனியர்.
வசந்த்: முதல்ல.. சீனியர்-னு கூப்பிடுறத நிறுத்து… வசந்த்-னு பேர் சொல்லி கூப்பிடு…
ரம்யா: அது கஸ்டம் சீனியர்…. இவ்ளோ நாளா உங்களை நான் சீனியர்-னு தான கூப்பிடுறேன்..
வசந்த்: நான் என்ன உன்னை எப்பொவும் ஜூனியர்-னா கூப்பிடுறேன். ரம்யானு உன்னோட பேரை சொல்லித்தான கூப்பிடுறேன்…
ரம்யா: உங்களுக்கு என்னைவிட வயசு அதிகம் நீங்க என்னை அப்படி கூப்பிடலாம்.. நான் அதே மாதிரி பேர் சொல்லி கூப்பிட முடியுமா?
வசந்த்: நீ பேருக்கு தான் படிச்ச பொண்ணு… இன்னும் உன்னோட கிராமத்து புத்தி மாறல… வேலைக்கு வந்ததுக்கு அப்புறமாவது கொஞ்சம் மாறணும்…
ரம்யா: நான் முயற்சி பண்றேன்… நீங்க ஏதோ கேட்கணும்னு சொன்னீங்களே… அதை கேளுங்க…
வசந்த்: சரி. சொல்றேன்… நம்ம ஆஃபீஸ்ல நந்தினி இருக்கா-ல… அவ எப்படி..
ரம்யா: என்ன சீனியர்… அவளோட ஜடையையும் கவனிச்சீங்களா….? அடுத்து அவளோட ஜடையை வெட்டலாம்னு பார்க்கிறீங்களா?…
வசந்த்: இதே மாதிரி பேசிட்டு இருந்தேனா.. முதல்ல உன்னோட ஜடையை தான் வெட்டப்போறேன்.
ரம்யா: ஹாஹா… இப்போலாம் நான் பயப்பட மாட்டேன்… வேணும்னா வெட்டிக்கோங்க…
வசந்த்: நீ வீட்டுக்கு வா.. உன்னோட ஜடையை வெட்டி விடுறேன்.
ரம்யா: சரி.. சரி… கோவப்படாதீங்க… நந்தினியை பத்தி என்ன தெரியணும்…?
வசந்த்: பொதுவா… அவ எப்படினு சொல்லு..
ரம்யா: எனக்கு தெரிஞ்சு இங்க ஒரு ஐஞ்சு வருஷமா இருக்கா…போன வருஷம் தான் கல்யாணம் ஆச்சு… அதுவும் அவளுக்கு பிடிக்காம… அவ ஜாதகத்துல ஏதோ பிரச்னையாம்…. நாலு வருஷமா கல்யாணம் ஆகாம கடைசியில சொந்தக்கார பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டா.. இப்போ அவ புருசனுக்கு வேலை இல்லையாம்.
வசந்த்: இதுக்கு தான் பொண்ணுங்க கிட்ட எதையுமே கேட்கிறது இல்ல… நான் என்ன அவளோட சொந்த கதையவா கேட்டேன்.
ரம்யா: வேற என்ன வேணும்?
வசந்த்: ஆபீஸ்ல அவ எப்படி?
ரம்யா: ஆபீஸ்லயா… ரொம்ப நல்லா வேலை பார்ப்பா… போன வருஷம் Accounting section-ல ரெண்டு பேரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க… ஆனா இவ நல்லா வேலை செய்யுறான்னு ப்ரோமோசன் கொடுத்தாங்க….
வசந்த்: நம்பிக்கையான ஆளா?
ரம்யா: அப்படித்தான் தோணுது….
வசந்த்: நம்ம Inventory in-charge & Coordinator பார்த்திபன் எப்படி…
ரம்யா: அந்த ஆளா.. ஏன் அவரைப்பத்தி கேட்குறீங்க?
வசந்த்: காரணமாதான். சொல்லு..
ரம்யா: ரொம்ப கெடுபிடியான ஆளு… வேலையில ரொம்ப சரியா இருப்பாரு…
வசந்த்: வேற…
ரம்யா: அவர்மேல ஒரு வதந்தி இருக்கு….. அவர்க்கு பெண்கள்கிட்ட கொஞ்சம் சபலம் இருக்குனு…
வசந்த்: உண்மையாவா?
ரம்யா: எனக்கு ஷைலஜா அக்கா தான் சொன்னாங்க… அந்த ஆள் கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்னு… அதுனால அவர்கிட்ட பேசுறதே இல்ல… தவிர எனக்கும் அவர் Section-க்கும் வேலை இல்ல. ஆனா இப்போலாம் மனுசன் அடிக்கடி அந்த நந்தினிகிட்ட வந்து கடலை போடுவாரு…. ஒருவேளை அவருக்கும் நந்தினியோட நீளமான தலைமுடி பிடிக்குமோ என்னவோ… கடைசில கொஞ்சம் கொசுறு செய்தி… அவரை விட அவர் மனைவிக்கு பத்து வயசு கம்மி…ஹிஹி..
வசந்த்: சரி..சரி.. போதும்…. உன்னை பேசாம உளவுத்துறைல சேர்த்திடலாம் போல…
ரம்யா: பொண்ணுங்க எல்லாருமே உளவாளிகள் தான்… அவங்களுக்கு தெரியாம எதுவும் நடக்காது…
வசந்த்: அது என்னவோ உண்மைதான்.
வசந்த், ரம்யா இருவரும் சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்தனர். ரம்யா முதன் முதலாக அங்கு வருகிறாள். நல்ல விசாலாமாக இருந்தது. அவனுடைய தகுதிக்கு ஏற்ற பெரிய வீடாக இருந்தது. ஆங்காங்கே அவனுடைய துணிகள், படித்த புத்தகங்கள், சாப்பிட்ட பாத்திரங்கள் என பேச்சுலர் வீடு என்பதை உறுதி செய்தது. ரம்யா இதெல்லாம் நோட்டமிடுவதை கவனித்த வசந்த், வீட்டில் உள்ள நிலைமை தெரியாமல் அவளை அழைத்து வந்து விட்டோமோ என யோசித்தான். பின்னர் ரம்யா அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. வசந்த் தன்னுடைய உடையை மாற்றிக் கொண்டு வந்தான். ரம்யா மிகவும் பசியாக இருப்பதாக கூறியதும், ஆர்வமாக இருவருக்கும் சேர்த்து ஒரு காஃபீ போட்டான். காஃபீ மிகவும் சுமாராகவே இருந்தது. வசந்த் எதையும் யோசிக்காமல் மடமடவென குடித்துவிட, ரம்யா மிகவும் கஷ்டப்பட்டு குடித்தாள். வசந்த் இப்படித்தான் தன்னுடைய பேச்சுலர் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருக்கிறான் என அவளுக்கு புரிந்தது. இருவரும் இணைந்து மறுபடி பழைய கதை பேச துவங்கினர்.
இருவருமே, மற்றவர் மேல் சில வித்தியாசங்களை உணர்ந்தனர். ரம்யா வசந்த்திடம் பொறுமையும், பொறுப்பும் அதிகரித்து இருப்பதை கவனித்தாள். தான் உடுத்தும் உடையில் இருந்து அனைத்திலும் நிறைய மாறி இருக்கிறான். பேசும்போது சற்று கனிவு அதிகரித்து இருக்கிறது. அதிக நண்பர்கள் இல்லாமல் ஒரு நட்பை தேடுவது போல தெரிந்தது. வசந்த் ரம்யாவிடம் நிறைய கவனித்தான். கல்லூரியில் அவனிடம் பயந்து பேசுபவள் இப்போது மிகுந்த தைரியத்துடன் இருக்கிறாள், தைரியமாக பேசுகிறாள். மிகவும் சின்ன பெண்ணாக தெரிந்தவள், இப்போது பக்குவப்பட்ட இளங்குமரியாக மாறி விட்டாள். கல்லூரியில் சுடிதார் அணிந்து வருவாள். இப்போது அலுவலகத்தில் புடவை அணிந்து வருகிறாள்.
அவளுடைய தலைமுடி மட்டுமே இன்னமும் மாறவில்லை. அதே நீளமான முடியை பாராமரிக்கிறாள். முன்னைவிட சற்று நீளமான முடியாக தோன்றியது. முகத்திலும் அழகு சற்று அதிகமாக இருப்பதாக தோன்றியது. ஒருவேளை இருவருடைய வயதுக்கு ஏற்ற எதிர்பாலின ஈர்ப்பாக கூட இருக்கலாம். ஆனால் வசந்த் ரம்யாவை ரசித்தான்.
நேரம் கடந்தது. ஷைலஜா இன்னமும் வருவது போல இல்லை. இருவருக்குமே பசிக்க ஆரம்பித்தது. மறுபடி எங்கே வசந்த் சமைக்க ஆரம்பித்து விடுவானோ என பயந்த ரம்யா, அவளே சமைப்பதாக கூறினாள். சமயலறை புதிது என்பதால், வசந்த்தை அழைத்து எந்தெந்த பொருட்கள் எங்கிருக்கிறது என கேட்டுக்கொண்டாள். அவள் சமைக்கும் வரை வசந்த் அங்கேயே அவளுடன் நின்றிருந்தான். அவள் பின்னால் நின்று அவள் பின்னழகையும், பின்னல் அழகையும் ரசித்தான். மீண்டும் அவளுடைய தலைமுடியை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என யோசித்தான். அவள் அனுமதியில்லாமல் தலை முடியை தொட்டால் கோவித்துக் கொள்வாளோ என தயங்கினான். அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் ரம்யா மெதுவாக கேட்டாள்.