Saturday, 22 June 2024
வந்தனாவை தனியாக ரமேஷிடம் பேச வைத்தால் அவளுக்கும் இன்னும் கூச்சம் குறையும் என தோன்றியது. ரமேஷ் ஒரு HAIR FETISH என்பதால் அவனுக்கும் தனிமையில் வந்தனாவின் தலை முடியை தொட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தாள். திடீரென நினைவுக்கு வந்தவளாய், வித்யா வந்தனாவிடம் “விக்கி எழுந்தா தேடுவான்… நீ ரமேஷ்கிட்ட பேசிட்டு இரு…. நல்லா மனசு விட்டு பேசு….. செம்ம திரில்லீங்கா இருக்கும்…. நான் கொஞ்ச நேரத்துல வறேன்…. (சிரித்தபடி) எதுக்கும் உன்னோட முடியை ரெடியா வச்சிக்கோ” என்று சொல்லி விட்டு சில நிமிடங்களில் வருவதாக சொல்லிவிட்டு சென்றாள்.
இன்னுமும் ரமேஷ் கதவை திறக்காத நிலையில் வித்யா சொல்லி விட்டு சென்றது சற்று தயக்கமாக இருந்தது. தனியாக ரமேஷிடம் என்ன பேசுவது என நினைத்தாள்.
தயக்கத்துடன் திரும்பி பார்த்த போது வித்யா பின்னிய ஜடையை எடுத்து பின்னால் வீசியவாறே வீட்டின் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தாள். ஆனாலும் மனதிற்குள் ஒரு தைரியம்… அண்ணி இல்லாமல் தனியாக இருந்தால் இன்னும் நிறைய பேச முடியும். ஒருவேளை அப்படி பேச ஒரு வாய்ப்பு வேண்டும் என நினைத்து தான் வித்யா அங்கிருந்து செல்கிறாளோ என நினைத்தாள். அறையின் உள்ளே விளக்கு எரிவது தெரிந்தாலும் சில வினாடிகள் கழித்தே ரமேஷ் கதவை திறந்தான். வந்தனா இவ்வளவு காலையில் வந்து கதவை தட்டியது வியப்பாக இருந்தது.
புருவத்தை உயர்த்திக்கொண்டே “என்ன?” என்பதுபோல ஆச்சரியமாக பார்த்தான்.
“உள்ளே வரலாமா?” எனக் கேட்டவளை ஆமோதித்து உள்ளே அழைத்து சென்றான்.
ரமேஷ் வந்தனாவிடம் சில வித்யாசங்களை கவனித்தான். நேற்று முடி வெட்டிக் கொள்ள வந்த போது இருந்ததை விட இப்போது சற்று நெருங்கிப் பழகுபவள் போல நடந்து கொண்டாள். அவளிடம் ஒரு கூச்சமோ தயக்கமோ இல்லை. மேலும் வழக்கமாக அண்ணா என வார்த்தைக்கு வார்த்தை சொல்பவள் இன்னும் ஒரு முறை கூட அண்ணா என்று சொல்லவில்லை. தவிர வித்யா இப்போது அவளுடன் இல்லை… ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக உலா வருகிறாள். ஒரு வேளை வித்யா அவளுக்கு மொட்டை அடிக்கும் விஷயம் பற்றி சொல்லியிருக்க வேண்டும் என யூகித்தான். ஆனால் வித்யா நிராயுதமாக மொட்டை அடிக்க வேண்டும் என்ற முழு விவரத்தையும் சொல்லியிருப்பாளா என ரமேஷால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் வந்தனா ஏதாவது பேசினால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என காத்திருந்தான்.
வந்தனா ரமேஷின் அறையில் நுழைந்ததில் இருந்து அவளுடைய கண்கள் சுற்றி நோட்டமிட்டது. நேற்று அவளுக்கு முடி வெட்டிய நாற்காலி அப்படியே இருந்தது. அப்படியே ஹாலில் பார்த்தாள். நேற்று அவள் பார்த்த நிறைய பொருட்கள் அப்படியே தான் இருந்தன ஒரு சில பொருட்களை தவிர. அவனுடைய சவரக்கத்தி, கத்தரிக்கோல் போன்றவற்றை காணவில்லை. அவனுடைய லேப்டாப் அங்கு இல்லை. மெல்ல நடந்து அவன் படுக்கை அறையை எட்டிப்பார்த்தாள்.
ரமேஷின் மனது சற்று படபடத்தது. காரணம் நேற்று வெட்டிய வந்தனாவின் முடியை ஒன்றாக எடுத்து கட்டி வைத்திருந்தான். சுமார் அங்குலம் நீளமான முடியை மொத்தமாக வெட்டி கீழே போட்டு விட்டுத் தான் அவளுக்கு லேயர் கட்டிங் பண்ணி விட்டான். அவளுடைய கத்தையான முடியை கீழே போட்ட போது சிதறிக் கிடந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் வந்தனா, வித்யா இருவரும் சென்றபின் ரமேஷ் வந்தனாவின் முடியை எடுத்து பத்திரமாக கட்டி வைத்தான். நேற்று இரவு முழுவதும் அவன் வந்தனாவின் முடியை வைத்து எத்தனை முறை அதை ரசித்து தடவி அனுபவித்தான் என அவனுக்கே நினைவில்லை. இப்போது வந்தனாவின் கண்களில் அவளுடைய முடி பட்டு விடக்கூடாது என பதட்டமாக இருந்தான்.