Wednesday, 25 December 2024

ரேணுகாவும் சிவாவும் ஐந்தாம் பாகம்

 சிவா அருகில் இருந்த மேஜையில் அமர்ந்தான். ரேணு மறுபடி அவளுடைய கையை எடுத்து கழுத்தின் பகுதியில் இருந்து ஜடையை பிடித்து இழுத்து முன்னாடி தூக்கிப்போட்டாள். அப்போது அவளுடைய ஜடை சிவாவின் மேல் பட்டு அவள் மடியில் வந்து விழுந்தது.


ரேணு: சாரி அண்ணா… என்னோட முடி நீளமா இருக்கா.. அதான் உங்கமேல கொஞ்சம் இடிச்சது.




சிவா: (சிரித்துக்கொண்டே) நல்லா தெரியுது. இன்னைக்கு உன்னோட முடி நீளமா இருக்குனு எனக்கு காட்டணும் அவ்ளோதான.


ரேணு: பரவாயில்லையே.. கண்டுபிடிச்சுடீங்க.


சிவா: அதான் நீ வரும்போதே பார்த்தேனே. உன்னோட ஜடையை நல்லா ஆட்டிக்கிட்டே வந்ததை.


ரேணு: சும்மா உங்களை கலாட்டா பண்ணலாம்-னு பார்த்தேன்.


சிவா: நான் இனிமேல் உன்னை கலாட்டா பண்ணலை-னு சொன்னதும் நீ இப்போ என்னை கலாட்டா பண்ற.


ரேணு: அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. எவ்ளோநாள் நீங்க என்னை கலாட்டா பண்ணி இருக்கீங்க. அதான் இன்னைக்கு ஒரு நாள் உங்களை நான் என்னோட முடியை வச்சு சீண்டிப்பார்த்தேன்.


சிவா: சரி சரி. ஏதோ எனக்கு சர்பிரைஸ் இருக்குனு சொன்னியே என்ன அது.


ரேணு: நான் சொல்றேன் அதுக்கு முன்னாடி நீங்க என்கிட்ட என்ன பேசணும்.


சிவா: சரி சொல்றேன் கேளு. நான் உன்னை எப்போவும் எதுக்கு “மொட்டை பாப்பா”-னு கிண்டல் பண்ணுவேன்-னு தெரியுமா?


ரேணு: ஏன்னா… எனக்கு மொட்டை போட்டதுக்கு அப்புறம் யாராவது என்னை மொட்டை-னு சொன்னா கோவம் வரும். என்னை வெறுப்பேத்த அப்படி சொல்லுவீங்க.


சிவா: இல்ல.


ரேணு: அப்புறம்




சிவா: எனக்கு முடி நீளமா இருந்தா பிடிக்கிற மாதிரி மொட்டையும் பிடிக்கும். நான் யார்கிட்டயும் இவ்ளோ தைரியமா மொட்டை-னு கிண்டல் பண்ண முடியாது. அதான் சும்மா உன்னை மொட்டை-னு கூப்பிட்டு பார்த்தேன்.


ரேணு: அய்யோ.. உங்களுக்கு மொட்டைனா அவ்ளோ பிடிக்குமா.


சிவா: அது மட்டும் இல்லை ரேணு, எனக்கு ரொம்பநாளா யாருக்காவது மொட்டை அடிக்கணும்-னு ஆசை.


ரேணு: யாருக்கு மொட்டை அடிக்கப்போறீங்க?


சிவா: அதை இன்னும் முடிவு பண்ணலை. ஆனால் கண்டிப்பா சீக்கிரம் மொட்டை அடிப்பேன்.

ரேணு: நீங்க சொல்ற வேகத்தை பார்த்தால்… யாருக்கு மொட்டை அடிக்கப்போறீங்கனு தெரியல. பாவம் அவங்களோட தலைமுடி.


சிவா: நீ எப்போவாவது ஏன் பெண்கள் கோவில்-ல அவங்களோட தலைமுடியை காணிக்கையா கொடுக்கிறாங்கனு யோசிச்சு பார்த்திருக்கியா?

ரேணு: தெரியலை அண்ணா. எனக்கு சிலநேரம் இவ்ளோ நீளமான முடி வேண்டாம். கொஞ்சம் முடியை கத்தரிச்சு விடணும்-னு தோணும். ஆனால், அப்போவே… முடியை வெட்டிட்டா திரும்பிவளர ரொம்ப நாள் ஆகும்னு பயம் வரும். அதனால முடியை வெட்ட மாட்டேன். கோவில்-ல போயி மொத்த தலைமுடியையும் காணிக்கையா கொடுக்க ரொம்ப தைரியம் வேணும்.

சிவா: தைரியம் மட்டும் போதாது ரேணு. கூடவே நம்பிக்கையும் வேணும். அது மட்டும் இல்ல தலைமுடியை காணிக்கையா கொடுக்கும்போது முழுமனசோட தரணும்.

ரேணு: உண்மைதான் அண்ணா. சின்ன வயசுல மொட்டை போடும்போது எனக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்போ எங்க அம்மாவும்தான் மொட்டை போட்டாங்க. அவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்.

சிவா: நீ எப்போவாவது உங்க அம்மாகிட்ட மொட்டை போட்ட அனுபவம் பத்தி பேசியிருக்கியா?

ரேணு: இல்லை அண்ணா. நான் கேட்டா அப்புறம் அம்மாவும் என்கிட்ட கேட்பாங்க. அப்புறம் எனக்கு மொட்டை போட்டுவிட்டது நீங்கதான்-னு சொல்லிடுவேனோனு கொஞ்சம் பயம். அதான் கேட்கலை.

சிவா: சரி உங்க அம்மாகிட்ட கேட்கலை.. என்னை கேட்கலாம்-ல
ரேணு: அட.. ஆமா.. அன்னைக்கு அம்மா மொட்டை போடும்போது நீங்க கூட இருந்தீங்கனு விஜி அத்தை சொன்னாங்க. நான் மறந்துட்டேன். அப்போ அன்னைக்கு என்னோட அம்மா மொட்டை போடும்போது நீங்க நல்லா ரசிச்சு இருப்பீங்க. அதுவும் அப்போ எங்க அம்மாக்கு நல்ல நீளமான முடி. (இப்போவும்தான்). உண்மையை சொல்லுங்க நீங்க எங்க அம்மாவுக்கு மொட்டை அடிக்கும்போது சந்தோஷப்பட்டீங்களா இல்லை இவ்ளோ நீளமான முடியை இழக்குறாங்கனு வருத்தப்பட்டீங்களா?



சிவா: ரெண்டுமேதான். எனக்கு அவங்களோட நீளமான முடி பிடிக்கும். தினமும் காலைல அவங்க வாசல்ல கோலம் போடும்போது அவங்களோட ஜடையை ரசிப்பேன். ஆனால் மொட்டை அடிக்கும்போது நான் அவங்க உனக்காக செய்ற வேண்டுதலை நினைச்சேன். அப்போ எனக்கும் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. அப்போ எனக்கு அவங்க நீலாதேவியா தெரிஞ்சாங்க.

ரேணு: நீலாதேவியா? அது யாரு அண்ணா?

சிவா: இன்னைக்கு திருப்பதி-ல மொட்டை அடிக்கிற வழக்கம் கடவுளுக்கு இல்ல. அவங்களுக்கு தான்.

ரேணு: என்ன அண்ணா சொல்றீங்க?

சிவா: ஆமா ரேணு, ஶ்ரீவிஷ்ணு ஒருதடவை மானுடஅவதாரம் எடுத்து பூமிக்கு வந்தபோது, அவர் யாருன்னு தெரியாம ஒரு மாட்டுக்காரன் அவரை தாக்கிட்டான். அப்போ அவருக்கு தலைல ஏற்பட்ட காயத்துல அந்த இடத்துல முடி வளராம போயிருச்சாம். அப்போ அவரைப்பார்த்த ஒரு கந்தர்வ இளவரசி நீலாதேவி, 

“அடடா… இத்தனை அழகான முகத்தில் வழுக்கை ஒரு குறையாக இருக்குதே”னு நினைச்சு அவங்களோட கூந்தலை வெட்டி விஷ்ணுவின் வழுக்கையில் ஒட்டி முடி வளரச்செய்தாங்களாம். கண் விழித்து பார்த்த மகாவிஷ்ணு அவளது பக்தியையும் தியாகத்தையும் கண்டு மெச்சி இனி தன்னை காண வரும் பக்தர்கள் தரும் முடி காணிக்கைகள் அனைத்து நீலா தேவியையே சேரும்-னு வரம் கொடுத்தாராம். அவளது பெயரில் இருக்கும் மலைதான் நீலாத்திரி


ரேணு: அடேங்கப்பா… மொட்டை அடிக்கிறதைப்பத்தி ஒரு பெரிய ஆராச்சியே பண்ணி இருக்கீங்க போல.

சிவா: இது கொஞ்சம்தான். இன்னும் நிறைய இருக்கு.

ரேணு: சரி அதையும் சொல்லுங்க கேட்போம்.

சிவா: அதுக்குமுன்னாடி.. நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு. உன்மேல இருக்கிற பாசத்துலதான் உங்க அம்மா மொட்டை அடிச்சாங்க. நாளைக்கு உங்க அம்மாக்காக மொட்டை அடிக்க சொன்னா நீ மொட்டை அடிப்பியா?

ரேணு: என்ன அண்ணா இப்படி கேட்குறீங்க? எங்க அம்மாவைவிட எனக்கு எதுவும் பெரிசு இல்ல. எங்க அம்மா சொன்னா இப்போவும் என்னோட தலையை மொட்டை அடிப்பேன்.

சிவா: சரி… எனக்காக உன்னோட முடியை கொடுப்பியா?

ரேணு: நான் ஏற்கனேவே உங்ககிட்ட தான் என்னோட தலையை கொடுத்து மொட்டை அடிச்சு இருக்கேன். உங்களுக்கு இல்லாமலா… கண்டிப்பா உங்களுக்காகவும் என்னோட முடியை கொடுப்பேன். ஆனால் இன்னைக்கு நீங்க எனக்கு மொட்டை அடிக்கணும்னு சொல்லமாட்டீங்கனு நினைக்குறேன்.

சிவா: கண்டிப்பா இன்னைக்கு உன்னை மொட்டை அடிக்கமாட்டேன். ஆனால் எனக்கு ஒரு ஆசை.

ரேணு: என்ன அண்ணா.

சிவா: உன்னோட முடியை நான் தொட்டுப்பார்க்கணும்.

ரேணு: இவ்ளோதானா… நான்கூட என்னவோனு நினைச்சேன். உங்க பக்கத்திலதான இருக்கேன். என்னோட ஜடையை எடுத்துதொட்டுப்பாருங்க.

சிவா: தாங்க்ஸ் ரேணு.

ரேணு: உங்களுக்கு நான் கொடுக்கிற முதல் சர்பிரைஸ் இதுதான். இப்போ நீங்க என்னோட முடியை தொட்டாமட்டும் போதாது. எனக்கு நீங்க ட்ரிம் பண்ணி விடணும்.

சிவா: வாவ்.. சூப்பர் ரேணு. நீ உன்னோட முடியை தொட விடுவியா-னு யோசிச்சேன். ஆனால் நீ உன்னோட முடியை ட்ரிம் பண்ற வாய்ப்பை கொடுத்திருக்க. தாங்க்ஸ்.



ரேணு: நீங்க காலைல வரும்போது நான் ட்ரிம் பண்ணனும்னு தான் நினைச்சேன். உங்ககிட்ட பேசும்போது நீங்க அடிக்கடி அந்த கத்தரிக்கோலை கவனிச்சீங்க. அதைப்பார்த்ததும் எனக்கு தோணுச்சு. இனிமேல் நீங்க என்னை கிண்டல் பண்ணலைனு சொல்லிட்டீங்க. எனக்கும் உங்க முன்னாடி முடியை விரிக்க கொஞ்சம் கூச்சமா இருந்தது. அதன் உங்ககிட்ட முடியை ட்ரிம் பண்ண கொடுத்தா எனக்கும் அந்த கூச்சம் குறையும். உங்களுக்கும் என்னோட முடியை தொட்டமாதிரி இருக்கும்னு நினைச்சேன்.

சிவா: நீ உண்மையிலேயே கீரெட் ரேணு.

ரேணு: ரொம்ப யோசிக்கம சீக்கிரம் என்னோட முடியை ட்ரிம் பண்ணுங்க.

சிவா: சரி…. அப்புறம் காலேஜ்ல இப்படித்தான் எல்லாரையும் உன்னோட நீளமான முடியை வச்சு கலாட்டா பண்ணுவியா?

ரேணு: அண்ணா.. இங்க நான்மட்டும்தான். அங்க என்னோட பிரெண்ட்ஸ்-க்கும் நீளமான முடிதான். நாங்க ஒண்ணா சேர்ந்து குட்டையான முடி இருக்கிற பொண்ணுங்களை எல்லாம் செம்மையா கலாட்டா பண்ணுவோம்.

சிவா: யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்களா?

ரேணு: சிலநேரம் ரொம்ப ஜாஸ்தியா கலாட்டா பண்ணிடுவோம். அப்புறம் எங்க பிரின்ஸிபால் கூப்பிட்டு திட்டுவா… இனிமேல் இதேமாதிரி சேட்டை பண்ணினா எங்க முடியை கட் பண்ணிடுவேண்னு மிரட்டுவா. நாங்களும் கொஞ்சநாள் எங்க ஜடையை சுருட்டிவச்சிட்டு அமைதியா இருப்போம்.

சிவா: சரி.. இப்போ நான் ரெடி. ட்ரிம் பண்ணலாமா?
ரேணு: நானும் ரெடிதான். இந்தாங்க நீங்க ஆசையா பார்த்த கத்தரிக்கோல். இதைவச்சு என்னோட முடியை ட்ரிம் பண்ணுங்க.

சிவா: ஹாஹாஹா… இதையும் எடுத்துட்டுதான் வந்தியா? சரி கொடு.

ரேணு சிவாவிடம் கத்தரிக்கோலை கொடுத்துவிட்டு திரும்பி நின்றாள். திரும்பி நின்றவுடன் ஜடையை தூக்கி பின்னால் போட்டாள். அவள் தூக்கிப்போட்ட ஜடையை சிவா பிடித்தான். தன்னுடைய ஜடை சிவாவின் கையில் சென்று அகப்பட்டதை ரேணு கவனித்தாள். சிவா ரேணுவிண் ஜடையை கையில் பிடித்து அவள் முடியின் அடர்த்தியை ஆராய்ந்தான். சாந்திக்கு மொட்டை அடிக்கும்முன் அவள் ஜடையை பிடிப்பது போல இருந்தது. ஒரு நிமிடம் கண்களை மூடி ஏதோ நினைத்தான். 

பின்னர் அவள் கழுத்திலிருந்து ஜடையை தடவிக்கொண்டே ஜடையின் அடிப்பகுதிவரை வந்தான். சிவா கழுத்தருகில் ஜடையை பிடித்தபோது ரேணுவுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது. பின்னர் அவன் அவளுடைய ஜடையை தடவி அனுபவித்தபோது கொஞ்சம் பெருமையாக இருந்தது. 

தன்னுடைய நீளமான முடியை நினைத்து கர்வம் கொண்டாள். சிவா ரேணுவிண் ஜடையில் இருந்து பேண்டை உருவினான். அதை ரேணு கையில் வாங்கிக்கொண்டாள். அவள் ஜடையை அவிழ்க்கும்போது சிவா கவனித்தான். அவள் முடி நல்ல ஆரோக்கியமாக இருந்தது. கிட்டத்தட்ட நேராகத்தான் இருந்தது. 



அவள் முடியை ட்ரிம் பண்ண அவசியமே இல்லை. இருந்தும் ரேணு ட்ரிம் பண்ணனும் என்று கூறியது வியப்பாக இருந்தது. அவள் கூந்தலை சிவா தொடவேண்டும் என்பதற்காகவே ட்ரிம் பண்ணவேண்டும் என்று காரணம் சொல்லி கத்தரிக்கோலுடன் வந்து தலைமுடியை அவனிடம் கொடுத்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டான். மனதில் சிரித்துக்கொண்டே அவள் ஜடையை பிரித்துவிட்டான். 

அவள் ஜடையை அவிழ்க்கத்துவங்கியதும் அவள் பின்னல் விடுவித்து விழ ஆரம்பித்தது. ரேணுவின் ஜடையோடு சேர்ந்து சிவாவின் உணர்ச்சிகளும் விரிந்தது. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு ஜடையை அவிழ்த்தான். ரேணுவின் கழுத்தருகில் இருந்த பின்னலை அவிழ்த்தபோது ரேணுவிண் அடர்த்தியான தலைமுடி முற்றிலுமாக விரிந்தது. ரேணு தன் பழைய நினைவுகளுக்கு போனாள். 


சிவா அவளுக்கு மொட்டை அடித்தபோது இப்படித்தான் அவள் உணர்ந்தாள். ஆனால் அப்போது இருந்த பயம் இப்போது இல்லை. காரணம் இப்போது சிவா கையில் கத்தி இல்லை. இன்னொரு காரணம் மொட்டை அடிக்கும்போது இருக்கும் சுகம் என்னவென்று இப்போது அவளுக்கு தெரியும். சிவா ரேணுவின் தலைக்குள் கையை விட்டு அவள் முடியை கோதினான். 



சிவா ரேணுவின் முடியை தொட்டு அனுபவித்துக்கொண்டே அவள் முடியை சீவிவிட்டான். ரேணுவுக்கு சிவாவின் கைகள் அவள் முடிக்குள் நுழைவது ஜிவ்வென்று இருந்தது. தன்னையும் மீறி அவள் கூந்தல் ஸ்பரிசத்தை ரசித்தாள். எப்பொழுது சிவாவின் கைகள் தலைமுடியை கத்தரிக்கும் என்று ஆவலாக காத்திருந்தாள். அந்தக்கத்தரிக்கோல் தலைமுடியை கத்தரிக்கும் சத்தத்தை கேட்க ஆசையாக இருந்தது. 



No comments:

Post a Comment