Saturday, 21 December 2024

ரேணுகாவும் சிவாவும் நான்காம் பாகம்

 ரேணு தலைக்கு எண்ணை தேய்க்கப்போகிறாள் என்று சிவா புரிந்துகொண்டான். “எங்கடி போற… இங்கயே எண்ணை தேய்கலாம்ல” என்று சாந்தி கூறுவதை கேட்டு, சிவாவை பார்த்தாள். பின்னர் “இல்லமா… நான் என்னோட ரூம்-ல போய் தேய்ச்சுக்கிறேன்” என்று கூறிவிட்டு சென்றாள். 


போகும்போது சிவாவிடம் “இன்னைக்கு எனக்கு Accounts சொல்லித்தரேன்-னு சொல்லி இருக்கீங்க. நான் அப்புறமா உங்க வீட்டுக்கு வறேன். ரெடியா இருங்க”-னு சொன்னாள்.


சாந்தி: சிவா, இங்க இருந்தா நீ கிண்டல் பண்ணுவே-னுதான் அவ உள்ள போறா.


சிவா: தெரியும் அத்தை. சரி விடுங்க. இப்போ போய் அவளை சமாதானம் செய்றேன்.


சாந்தி: முதல்ல அதை செய்.




சிவா ரேணுவிண் அறைக்கு சென்றான். ரேணு கண்ணாடிமுன் அமர்ந்திருந்தாள். சிவா அறையின் வாசலில் நிற்பதை அவள் கவனிக்கவில்லை. ரேணு தன் கொண்டையை அவிழ்த்தாள். அவள் ஜடையை கொண்டையாக போட்டிருந்ததால், அவள் கொண்டையை அவிழ்த்ததும் அவளுடைய நீளமான ஜடை தலையிலிருந்து விடுபட்டு வழிந்துவந்து அவள் மடியில் விழுந்தது. அவள் ஜடையை கழுத்தின் புறத்தில் இருந்து பிடித்து அப்படியே தடவிப்பார்த்தாள். 


ரேணுவிண் அடர்த்தியான ஜடையை பார்த்ததும் சிவாவின் மனது ஆனந்தக்கூத்தாடியது. ரேணுவிண் முன் இருந்த கண்ணாடி அருகில் ஒரு சின்ன கத்தரிக்கோல் இருப்பதை சிவா கவனித்தான். இன்று எப்படியாவது ரேணுவை சமாதானம் செய்து அவள் தலைமுடியை தொட்டுவிடவேண்டும். முடிந்தால் அவளுடைய முடியை கத்தரிக்க வேண்டும் என்று மனத்துக்குள் எண்ணினான். 


தன்னுடைய அழகிய கூந்தலை கத்தரிக்கும் எண்ணத்துடன் சிவா பின்னால் இருப்பதை அறியாமல், ரேணு அவளுடைய அடர்த்தியான ஜடையை அவிழ்க்கத்துவங்கினாள். தன் ஜடையில் இருந்த ரப்பர்.பேண்டை கழட்டி அந்த கத்தரிக்கோலின் அருகில் வைத்தாள். சிவா மெல்ல அறைக்குள் நுழைந்து ரேணுவிண் தலைமுடியை நோக்கி நடந்தான்.

ரேணுவின் தலைமுடியை ரசித்துக்கொண்டிருந்த சிவாவுக்கு அவளுடைய ஜடை அவனை கட்டி இழுப்பதைப்போல இருந்தது. ரேணுவின் அழகான இந்த கூந்தலில் ஒரு கத்தரிக்கோல் விளையாடினால் எப்படி இருக்கும் என நினைத்தான். 


ரேணுவின் முடியை வெட்டவேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில் பொங்கிவந்தது. தன் எண்ணத்தை அடக்கிக்கொண்டு காலடி சத்தம் வராமல் மெல்ல ரேணுவை நோக்கி நடந்தான். கண்ணாடி முன் அமர்திருந்த ரேணு, தன் முடியை கொஞ்சம் ட்ரிம் பண்ணலாமா என்று நினைத்துக்கொண்டிருந்தாள். 


நல்லவேளையாக சிவா அருகில் இல்லை என மனதில் நினைத்துக்கொண்டு மெல்ல ஜடையை அவிழ்க்கத்துவங்கினாள். ஒருவேளை சிவா அருகில் இருந்தால், “மொட்டை பாப்பா” என கிண்டல் செய்வான். அவளுக்கு அவன் மொட்டை என்று சொல்லும்போதெல்லாம் தன்னை மொட்டைத்தலையோடு நினைத்துப்பார்ப்பாள். அப்படி நினைக்கையில் கொஞ்சம் கூச்சமாகவும், பயமாகவும் இருக்கும். 




மறுபடி இந்த நீண்ட கூந்தலை மொட்டை அடிக்க ஆசை வந்துவிடுமோ என்று ஒரு பயம் இருந்தது. ஆனாலும் அவள் ஜடையை கையில் பிடித்து இருக்கும்போது இந்த உலகமே அவள் கைகளில் இருப்பது போல தோன்றும். தன்னுடைய அடர்த்தியான முடியை திருப்தியாக பார்த்துவிட்டு, ஜடையை பிரித்துக்கொண்டே கண்ணாடியில் பார்த்தாள். சிவா அறைக்குள் வருவதைக்கண்டதும், ஒருவித உணர்ச்சியில் கொஞ்சம் படபடத்தாள். 


மறுபடியும் சிவா அவள் தலைமுடியை வைத்து கிண்டல் செய்வானோ என நினைத்து அப்படியே தன் ஜடையை மீண்டும் கொண்டையாக போட்டாள். கொண்டையை போட்டுக்கொண்டே திரும்பி சிவாவை பார்த்து ” என்ன அண்ணா, இந்த பக்கம். எதுவும் வேணுமா?” என்றாள். ரேணு அவனைக்கண்டதும் மீண்டும் கொண்டை போட்டுக்கொண்டு அவளுடைய தலைமுடியை மறைத்தது அவனுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. 


அவன் ரேணுவின் அருகில் வருவதற்குமுன் ரேணு கொண்டைபோட்டு முடித்திருந்தாள். கருநாகம்போல நீண்டு தொங்கிய அவளுடைய ஜடை இப்போது மெல்ல பெட்டிப்பாம்பு போல சுருண்டு அவள் தலையில் கொண்டையாக அமர்ந்தது. ரேணு திரும்பி சிவாவை பார்த்து அமர்ந்தாள். அவள் கொண்டை அவன் கண்களில் இருந்து மறைந்தது. ஆனால் கண்ணாடியில் அவளுடைய கொண்டையை பார்த்தான். இவ்வளவு அடர்த்தியான அவளுடைய கொண்டை அவன் கைகளில் சிக்காமல் கண்களுக்கு மட்டும் விருந்தளித்தது.


ரேணு: என்ன அண்ணா,  எதுவும் வேணுமா?

சிவா: ஆமா ரேணு… அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்.

ரேணு: சொல்லுங்க அண்ணா

சிவா: எதுக்கு இப்போ என்னை பார்த்ததும் கொண்டை போட்டுகிட்ட?

ரேணு: உங்களுக்கு தெரியாதா? நீங்க எப்போ பார்த்தாலும் என்னை “மொட்டை பாப்பா”னு கிண்டல் பண்றீங்க. அதான் உங்ககிட்ட என்னோட முடியை காட்டகூடாது-னு கொண்டை போட்டேன்.



சிவா: ஹாஹாஹா…. என்ன ரேணு இன்னும் சின்னபொண்ணு மாதிரி பேசுற. நான் உன்னோட முடியை பார்க்காமலா இருக்கேன்?

ரேணு: அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க கிண்டல் பண்றதை நிறுத்துற வரைக்கும் நான் இப்படிதான் உங்க முன்னாடி என்னோட முடியை காட்ட மாட்டேன்.

சிவா: சரி. இனிமேல் உன்னை நான் கிண்டல் பண்ணலை. போதுமா?

ரேணு: உண்மையாவா இல்ல விளையாட்டுக்கு சொல்றீங்களா?

சிவா: இல்ல ரேணு உண்மையா சொல்றேன். இனிமேல் உன்னை நான் கிண்டல் பண்ணலை.

ரேணு: தாங்க்ஸ் அண்ணா. சரி இப்போ சொல்லுங்க என்ன வேணும்.

சிவா: அதான் சொன்னேன்-ல இனிமேல் கிண்டல் பண்ணலை-னு. உன்கிட்ட அதை சொல்லத்தான் வந்தேன்.

ரேணு: என்ன திடீர்னு இப்படி ஒரு ஞானோதயம்?


சிவா: ஞானோதயம் எல்லாம் ஒண்ணும் இல்ல. காலை-ல உன்னோட ஜடையை பார்க்கும்போதுதான் இவ்ளோ நீளமான முடி இருக்கிற உன்னைப்போய் நான் “மொட்டை பாப்பா”னு சொல்றேனேனு தோணுச்சு. அதான் வந்தேன்.

ரேணு: அப்பாடா.. ஒருவழியா எனக்கு நீளமான முடி இருக்குனு ஒத்துக்கிட்டீங்களே. அது போதும்.

சிவா: நான்தான் இனிமேல் கிண்டல் பண்ணலை-னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் ஏன் இன்னும் கொண்டை போட்டு இருக்க?

ரேணு: உண்மையை சொல்லணும்னா உங்க முன்னாடி என் கொண்டையை அவிழ்க்க கொஞ்சம் தயக்கமா இருக்கு. ஏதோ உங்ககிட்ட மொட்டை அடிக்கிறதுக்காக என்னோட முடியை விரிக்கிறமாதிரி இருக்கு.

சிவா: அடிப்பாவி. நீ இன்னும் அதை மறக்கலையா?

ரேணு: எப்படி அண்ணா மறக்கமுடியும். ஆனா, இதுவரைக்கும் இன்னும் என்னோட அம்மாகிட்டகூட சொல்லலை.

சிவா: நானும் இன்னும் அதை மறக்கலை ரேணு. அப்பப்போ நினைச்சு பார்ப்பேன்.

ரேணு: நல்லவேளை.. அன்னைக்கே நீங்க என்னை மொட்டை அடிக்க ஒத்துக்க வச்சிட்டீங்க…. இல்லைனா இப்போ எனக்கு இருக்கிற நீளமான முடியை மொட்டை அடிக்கணும்-னு சொன்னா அவ்ளோதான். நான் செத்தேபோயிருவேன்

சிவா: ஆனா, உண்மையை சொல்லு.. அன்னைக்கு மொட்டை அடிக்கும்போது உனக்கு எப்படி இருந்தது.

ரேணு: அது சூப்பரா இருந்துச்சு அண்ணா.

சிவா: எப்போவாவது மறுபடி மொட்டை அடிக்கணும்-னு உனக்கு தோணுச்சா?

ரேணு: தோணும் அண்ணா. இது மாதிரி கண்ணாடி முன்னாடி உட்கார்ந்து, என்னோட முடியை விரிக்கும்போதெல்லாம், மொட்டை அடிச்சா எப்படி இருக்கும்-னு தோணும். ஆனா நீளமான முடி இல்லாம இருக்கிறததை நினைச்சுப்பார்த்தா கஷ்டமா இருக்கும்.

சிவா: உனக்கு பிடிச்சிருந்தா, உன்னோட முடியை பத்தியும், அப்புறம் மொட்டை பத்தியும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். இப்போ ஃப்ரீயா இருந்தா மேல என்னோட ரூம்க்கு வா. பேசலாம்.


ரேணு: சரி அண்ணா. அப்பா இன்னைக்கு மதியம் ஊருக்கு கிளம்புறார். அவர் போனதுக்கு அப்புறமா அம்மாகிட்ட சொல்லிட்டு வறேன்.

சிவா: அம்மாகிட்ட சொல்லப்போறியா?

ரேணு: பயப்படாதீங்க அண்ணா. இதைப்பத்தி சொல்லமாட்டேன். வேற ஏதாவது சொல்லிட்டு வறேன்.

சிவா: சரி. நானும் அத்தைகிட்ட சொல்லிட்டு போறேன். நீ வா.
சொல்லிவிட்டு சிவா ரேணுவிண் அறையை விட்டு வெளியேறினான். ரேணுவோடு பேசும்போது அடிக்கடி அந்த மேஜையின் மேல் இருந்த கத்தரிக்கோலை பார்த்தான். 

ஆனால் இப்போதே பேசி ரேணுவை சம்மதிக்கவைத்து முடி வெட்டுவது கஷ்டம் என அவனுக்குத்தோன்றியது. தவிர ரேணு அவனிடம் சந்தோசமாக பேசினாலும் அவள் கொண்டையை கழட்டாமல் பேசியது கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. 

அவள் சம்மதம் இல்லாமல் அவள் முடியை தொடுவது அநாகரிகம் என்று கருதினான். சாந்தி எப்பொழுதும் அவனிடம் வந்து முடியை ட்ரிம் பண்ணுவது அவன்மேல் உள்ள நம்பிக்கையில் தான். அதே நம்பிக்கையை ரேணுவிடமும் பெறவேண்டும் என்று நினைத்தான். கடவுளிடம் முழுநம்பிக்கை உள்ள பெண்கள் மட்டுமே தங்கள் கூந்தலை காணிக்கையாக கொடுப்பார்கள். 

அதேபோல் அதற்கு இணையான நம்பிக்கையை பெற்று, அதற்குபின்னர் அவர்களின் விருப்பதிற்கு உட்பட்டு மட்டுமே பெண்களின் தலைமுடியை வெட்டவேண்டும் என்று சிவா உறுதியாக இருந்தான். சிவா அப்படி உறுதியாக இருப்பதற்கு ஒரு வழுவான காரணம் இருந்தது. எந்த நிலையிலும் அதில் இருந்து பின்வாங்ககூடாது என்று நினைத்தான். மீண்டும் சமயலறையில் சென்று பார்த்தபோது, சாந்தி சமையலை முடித்துவிட்டு ஒதுங்கவைத்துக்கொண்டிருந்தாள்.

சாந்தி: என்ன சிவா, ரேணுவை சமாதானம் பண்ணிட்டயா?


சிவா: கொஞ்சம் சமாதானம் பண்ணிட்டேன். ஆனா இன்னும் அவகிட்ட பேசணும். அப்புறமா மேல என்னோட ரூம்க்கு வரச்சொல்லி இருக்கேன். பார்க்கலாம்.

சாந்தி: சரி.. சரி. அப்போ இனிமேல் அத்தையோட முடியை கண்டுக்கமாட்டே.

சிவா: என்ன அத்தை இப்படி சொல்றிங்க. என்னை நம்பி எப்பவுமே முடியை கொடுக்கிறது நீங்க மட்டும்தான்.

சாந்தி: சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்டா சிவா.

சிவா: நான் இன்னைக்கு ரேணுகிட்ட பேசினதுக்கு அப்புறம் உங்களுக்கு ரெண்டு சர்பிரைஸ் இருக்கு.

சாந்தி: அப்படியா. சரி நான் காத்திருக்கேன். உனக்கும் ரெண்டு சர்பிரைஸ்  இருக்கு.

சிவா: சூப்பர் அத்தை. நானும் காத்திருக்கேன்.

சிவா சாந்தியிடம் சொல்லிவிட்டு அவனுடைய அறைக்கு சென்றான். மதியம் ஒரு வண்டியில் சுதாகர் கிளம்பிச்சொல்லும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். சாந்தியும் ரேணுவும் வீட்டின் கேட்முன் நின்றிருந்தார்கள். ரேணு நேராக மாடிக்கு வருவாள் என எதிர்பார்த்தான். ஆனால், இருவரும் நிமிர்ந்துகூட பார்க்காமல் வீட்டுக்குள் சென்றனர். 



சிவா ஜன்னல் அருகே ரேணு வருவாள் என்று நினைத்து பதினைந்து நிமிடங்கள் வரை நின்றிருந்தான். ஆனால் ரேணு வரவில்லை. இன்று ரேணு வருவது கடினம்தான் என்று நினைத்துக்கொண்டான். சிறிதுநேரம் கட்டிலில் படுத்து இருந்தான். பின்னர் வெளியே செல்ல தன்னுடைய பைக் சாவியை எடுத்துக்கொண்டு கீழே வந்தான். பைக்கை ஸ்டார்ட் செய்தபோது ரேணு அழைத்தாள்.

ரேணு: என்ன அண்ணா, என்னை வரச்சொல்லிவிட்டு எங்க போறீங்க?

சிவா: கொஞ்சம் வெளிய ஒரு வேலை இருக்கு. அதான்.

ரேணு: நான் இப்போதான் மேல வரலாம்-னு பார்த்தேன். சர்பிரைஸா மேல வரலாம்-னு பார்த்தா நீங்க வெளிய போறீங்க. சரி விடுங்க. உங்களுக்கு என்னோட சர்பிரைஸ தெறிஞ்சுக்க கொடுத்துவைக்கல. அவ்ளோதான்.

சிவா: என்ன….. நீயும் எனக்கு சர்பிரைஸ் தரப்போறியா?

ரேணு: நீயும்-னா? வேற யார் உங்களுக்கு சர்பிரைஸ் தரப்போறா?
(சிவா மாட்டிக்கொண்டோம் என மனத்திற்குள் நினைத்தான். பின்னர் மெல்ல சமாளித்தான்)

சிவா: அதில்ல ரேணு,  நான்தான்  உனக்கு ரெண்டு சர்பிரைஸ் கொடுக்கணும் நினைச்சேன். ஆனால் நீயும் அதையே சொன்னதும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன்.

ரேணு: வாவ்… நானும் உங்களுக்கு ரெண்டு சர்பிரைஸ் வச்சிருக்கேன்.

(சிவா மனதில் நினைத்துப்பார்த்தான்.

சிவா சாந்திக்கு இரண்டு சர்பிரைஸ் கொடுக்கப்போவது
சாந்தி சிவாவிற்கு இரண்டு சர்பிரைஸ் கொடுக்கப்போவது
சிவா ரேணுவுக்கு இரண்டு சர்பிரைஸ் கொடுக்கப்போவது
ரேணு சிவாவுக்கு இரண்டு சர்பிரைஸ் கொடுக்கப்போவது)



சிவா: அப்போ இன்னைக்கு எல்லாருக்கும் ஒரே சர்பிரைஸ்தான். சரி வா. நாம மேலபோய் என்னோட ரூம்-ல பேசுவோம்.
இருவரும் பேசிக்கொண்டே மேலே படிக்கட்டில் ஏறிச்சென்றனர். ரேணுவை முன்னே நடக்கவிட்டு சிவா பின்தொடர்ந்தான். ரேணு கொண்டை போடாமல் ஜடையை நீளமாக தொங்கவிட்டு வந்தது அவனுக்கு சந்தோசமாக இருந்தது. ரேணுவை சம்மதிக்க வைப்பது கடினமில்லை என புரிந்துகொண்டான். 



ரேணுவும் ஒரு காரணத்தோடுதான் முன்னாடி நடந்தாள். தன்னுடைய நீளமான முடியை சிவா பார்க்கவேண்டும் என நினைத்தாள். அவ்வாறு நீளமான முடியை பார்த்தபின் எப்படி தன்னுடைய முடியை புகழ்ந்து பேசுவான் என கேட்கவேண்டும் என தோன்றியது. நடக்கும்போது மெதுவாக தன்னுடைய ஜடையை முன்னாடி எடுத்துப்பார்த்து மீண்டும் பின்னால் தூக்கிப்போட்டாள். 

ரேணு தன்னை சீண்டுவதற்காக இப்படி ஜடையை தூக்கிப்போடுகிறாள் என்பதை புரிந்துகொண்டான். அறைக்குள் நுழைந்ததும் ரேணு சிவாவின் நாற்காலியில் அமர்ந்தாள். 



No comments:

Post a Comment