Wednesday, 13 November 2024

அரவிந்தின் அம்மா புவனா - ஒன்பதாம் பாகம்

அரவிந்த் சஹானாவின் விரிந்து கிடந்த தலைமுடியை கையில் எடுத்தான். அவள் அமர்ந்து இருந்ததையும் தாண்டி மெத்தை மேலே அவளுடைய முடி படர்ந்து இருந்தது. உண்மையிலேயே எல்லா பசங்களுக்கும் இந்த மாதிரி இளம்பெண்ணின் அழகான நீளமான முடியை தொட்டுப்பார்த்து கையில் எடுத்து, வெட்டிவிடும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்த வகையில் தன்னுடைய கையில் இருக்கும் இவளுடைய தலைமுடியை மென்மையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 




ஒரு முடிவுக்கு வந்தாவனாய் தன்னுடைய பாக்கட்டில் இருந்து கத்தரிக்கோலை எடுத்தான். அதை சஹானா கையில் கொடுத்தான். சிரித்துக்கொண்டே சஹானாவும் அதை வாங்கிக்கொண்டாள். பின்னர் அவளிடம் இருந்த சீப்பை வாங்கி அவளுடைய தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தான். அரவிந்த் பொறுமையாக அவளுடைய முடியை சீவி விட்டுக் கொண்டிருந்தான். சஹானா அவன் மென்மையாக தலைவாரி விடுவதை ரசித்தாள். அவளுக்கும் முடியை இழுக்காமல் வாரிவிடுவது சுகமாக இருந்தது. கையில் இருந்த கத்தரிக்கோலை அவ்வப்போது பார்த்துக்கொண்டாள்.


சஹானா உட்கார்ந்து இருந்ததால் அவளுடைய முடியை முழுவதுமாக சீவமுடியவில்லை. அரவிந்த் அவளை எழுந்து நிற்க சொன்னான். அவள் எழுந்து நின்றபோது அவளுடைய முடி தொடையை தாண்டி இரண்டு இன்ச் இருந்தது. அந்த இரண்டு இன்ச்தான் தன்னுடைய இன்றைய இலக்கு என அரவிந்த் தீர்மானித்தான். 


அவள் பின்னால் நின்று மீண்டும் அவளுடைய தலைமுடியை சீவி விட்டான். உச்சந்தலையிலிருந்து தொடைவரை அழகாக சீவி விட்டான். பின்னர் அவள் கைகளில் இருந்த கத்தரிக்கொலை வாங்கினான். அவள் பின்னால் முழங்கால் இட்டு அமர்ந்தான். அவளுடைய முடியின் அடிப்பகுதியை பார்த்தான். ஏற்கனவே இவளுடைய முடி ட்ரிம் செய்யப்பட்டதுபோல இருந்தது. ஆனாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. சஹானாவின் தலைமுடியை அடியில் பிடித்தான். 


ஒரு கற்றை முடியை மட்டும் விரல்களுக்கு இடையில் பிடித்து அளவு வைத்தான். இரண்டு இன்ச் முடியை குறிவைத்து வெட்டிவிட ஆரம்பித்தான். கத்தரிக்கோல்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு “க்க்க்றீரீற்ச்ச்ச்”, “க்க்க்றீரீற்ச்ச்ச்” என்ற சத்தத்துடன் சஹானாவின் தலைமுடி தன்னுடைய நீளத்தை இழந்து கொண்டிருந்தது. தன்னுடையை தலைமுடியை கத்தரிக்கோல் வெட்டும் சத்தம் சஹானாவின் காதுகளில் கூசியது. 




அரவிந்த் சஹானாவின் முடியிலிருந்து முதல் கற்றை முடியை வெட்டி முடித்தான். அவன் கைகளில் சஹானாவின் இரண்டு இன்ச் தலைமுடி இருந்தது. அதை முத்தமிட்டு தரையில் வைத்தான். மீண்டும்  இன்னொரு கற்றை முடியை எடுத்து “க்க்க்றீரீற்ச்ச்ச்”, “க்க்க்றீரீற்ச்ச்ச் என்று வெட்ட ஆரம்பித்தான். ஒவ்வொரு கற்றையாக சஹானாவின் முடியை வெட்டி முடித்தான்.


அவளுடைய வெட்டப்பட்ட முடி தரையில் கிடந்தது. சஹானா குனிந்து அவளுடைய வெட்டப்பட்ட முடியை எடுத்தாள். அவள் குனிந்த போது அவளுடைய தலைமுடி தரையில் படர்ந்தது. அரவிந்த் முன்னால் குனிந்து இருந்த அவளுடைய உச்சந்தலையை ரசித்தான். ஒவ்வொரு பக்கம் இருந்து பார்க்கும்போது ஒவ்வொரு விதமாக அழகாக தெரிந்தது. 


அரவிந்த் இப்போது தன்னுடைய பாக்கட்டில் இருந்து அந்த கத்தியை எடுத்தான். குனிந்திருந்த சஹானாவை எழுப்பி மீண்டும் மெத்தைமேல் அமர வைத்தான். அவன் கைகளில் கத்தி இருப்பதை சஹானா பார்த்தாள். ஆனால் அதிர்ச்சியாகாமல் அவன் என்ன செய்கிறான் என பார்த்தாள். அரவிந்த் அவளிடம் சிறிதுநேரம் அமைதியாக இருக்குமாறு கூறிவிட்டு அருகில் இருந்த தன்ணியை எடுத்தான். கைகளில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து சஹானாவின் விரிந்திருந்த தலைமுடியில் ஊற்றினான். சஹானா இதை எதிர்பார்க்கவில்லை ஆனாலும் அமைதி காத்தாள்.


“உனக்கு மொட்டை அடிக்கும்போது எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா  இருக்கு” என்று சொல்லிவிட்டு இன்னும் சிறிது நீரை அவள் தலைமுடியில் ஊற்றினான். சஹானாவின் தலைமுடி இப்போது ஈரமாக ஆரம்பித்தது. அரவிந்த் அவள் முடியை கொஞ்சம் நனைத்தபின்னர் தன்னுடைய கத்தியை எடுத்து அவளுடைய தலையில் வைத்தான். உள்ளே பிளேடு இல்லையென்றாலும் தன்னுடைய தலைமுடியில் கத்தியை வைத்ததும் சஹானா சற்று நடுங்கினாள். 


தன்னுடைய நீளமான முடியை இப்போது அரவிந்த் மொட்டை அடித்து விடுவானோ என நினைத்தாள். அரவிந்த் அவள் முடியை முன்புறமாக எடுத்து போட்டு மொட்டை அடிப்பது போல பாவனை செய்தான். சஹானா தன்னுடைய தலையை குனிந்து கொண்டாள். கண்களை மூடி மொட்டை அடிப்பது போல நினைத்துக்கொண்டாள். அரவிந்த் ஆசை தீர அவளுக்கு மொட்டை அடிப்பது போல அந்த கத்தியை வைத்து அவள் தலைமுடியில் விளையாடினான். பின்னர் கத்தியை மடக்கி வைத்தான். தன்னுடைய ஈரமான முடியை சரிசெய்துகொண்டே சஹானா நிமிர்ந்தாள். பின்னர் அருகிலிருந்த துண்டை எடுத்து தன்னுடைய முடியை துவட்ட ஆரம்பித்தாள். அரவிந்த் அவளுடைய முடியை காயவைக்க உதவினான். அவளுடைய ஈரக்கூந்தலை தொட்டுப்பார்க்க அவனுக்கு பிடித்தது.


அரவிந்த் அவளுடைய தலைமுடியில் விளையாடுவதும், தொட்டுப் பார்ப்பதும் அவளுக்கு பிடித்து இருந்தது. பின்னர் எழுந்து சென்று ஒரு போட்டோ ஆல்பம் எடுத்து வந்தாள். அதில் அவளுடைய சிறுவயது புகைப்படங்கள் இருந்தது. சிறுவயதிலும் இதேபோல நீளமான தலைமுடியோடுதான் இருந்தாள். 


இப்போது அவளும் அவளுடைய தலைமுடியும் மேலும் அழகாக வளர்ந்திருந்தது. அரவிந்த் சஹானாவின் அம்மாவை பார்த்து அதிசயித்தான். பார்ப்பதற்கு சஹானா போலவே இருந்தாள். இப்போது சஹானாவிற்கு இருப்பதுபோல அவளுக்கும் நீளமான தலைமுடி இருந்தது. அந்த போட்டோவை பார்க்கையில் அவள அறியாமல் சஹானா கண்களில் கண்ணீர் வந்தது. அர்விந்த் அவள் அழுகையை புரிந்து கொண்டான். அவளுடைய ஈரமான தலைமுடியை தடவிக்கொடுத்தான்.


அரவிந்த்: என்ன அம்மு.. உனக்கு உன்னோட அம்மா ஞாபகம் வந்திருச்சா?

சஹானா: ஆமா அரவிந்த்…

அரவிந்த்: நானும் ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன்… உன்னோட அம்மாவுக்கு என்ன ஆச்சு?

சஹானா: அவங்க ஒரு நோய்ல இறந்துட்டாங்க..

அரவிந்த்: அதுதான் என்ன?

சஹானா: கான்சர்…

அரவிந்த்: அய்யோ..

சஹானா: ஆமா… எங்கப்பா அவராளா முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணினார். ஆனால் எதுவுமே முடியல…


அரவிந்த்: ம்ம்..
சஹானா: நான் ஒருநாள் ஸ்கூல் முடிஞ்சு வீட்டிற்கு வரும்போது அப்பா அம்மா ரெண்டுபேரும் அழுதுட்டு இருந்தாங்க… அம்மா என்னை பார்த்ததும் கட்டிப்பிடிச்சு அழுதாங்க… முதல்ல எனக்கு புரியல… அப்புறமா எனக்கு சொன்னாங்க… எனக்கு எதுவும் புரியல.. ஆனா என்னோட அம்மா ரொம்ப நாளைக்கு உயிரோட இருக்கமாட்டாங்கனு தெரிஞ்சு எனக்கும் அழுகை வந்தது.

அரவிந்த்: ம்ம்..

சஹானா: அடுத்த வாரத்தில இருந்து கீமோதெரபீ பண்ணனும்னு சொன்னாங்க… அப்பா அதுக்கு தயாரா இருந்தார். ஆனா ஸ்டேஜ்-4 னு சொன்னாங்க. குணப்படுத்துறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டாங்க…

அரவிந்த்: ம்ம்..

சஹானா: முதல் வாரம் கீமோ தெரபீ போய்ட்டு வந்ததும் அம்மா ரொம்ப பலவீணமா இருந்தாங்க… அவங்களுக்கு அடுத்த ரெண்டு நாள்ல முடி கொட்ட ஆரம்பிக்கும்னு சொல்லிட்டாங்க…

அரவிந்த்: ம்ம்..

சஹானா: அதுனால அன்னிக்கு நைட் அப்பாவே அம்மாவுக்கு மொட்டை போட்டு விட்டார்.

அரவிந்த்: வீட்டிலேயேவா?

சஹானா: ஆமா… இப்போ நீ கையில வச்சிருக்கியே.. அதே கத்தியிலதான்.

அரவிந்த்: அப்புறம்

சஹானா: என்னோட அம்மா அவங்களோட அழகான தலைமுடியை அவிழ்த்துவிட்டு எங்கப்பா முன்னாடி உட்கார்ந்தாங்க. அப்பா அவங்களோட தலைமுடியில தண்ணி தெளிச்சு இந்த கத்தியை வைச்சு அவங்களுக்கு மொட்டை அடிச்சு விட்டார்.

அரவிந்த்: ம்ம்..

சஹானா: எங்கம்மாவோட நீளமான தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா தரையில வந்து விழுந்தது.

அரவிந்த்: ம்ம்..

சஹானா: அவங்களோட அடர்த்தியான முடி தரையில விழுகிறத பார்த்த என்னோட அம்மா கதறி அழுதாங்க. எனக்கும் ரொம்ப அழுகை வந்தது.

அரவிந்த்: ம்ம்..

சஹானா: நானும் மொட்டை அடிக்கப்போறேன்னு சொன்னேன். அம்மாவும் அப்பாவும் வேணாம்னு சொல்லிட்டாங்க…

அரவிந்த்: ம்ம்..

சஹானா: அதுக்கப்புறம் ரெண்டு மாசத்துல என்னோட அம்மா இறந்துட்டாங்க…


அரவிந்த்: சாரி அம்மு.. கேட்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு..

சஹானா: அவங்களோட அந்த முடியை கையில எடுத்து எங்கப்பா அழுதது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு.

அரவிந்த்: சரி.. நீ எதுக்காக மொட்டை அடிச்சிக்கனும்னு ஆசைப்படுற?

சஹானா: என்னோட அம்மா மொட்டை அடிச்சபோது நானும் அவங்களோட மொட்டை அடிச்சுக்கிட்டு அவங்களோட கஷ்டத்தை பகிர்ந்துக்க நினைச்சேன்… அப்போ என்னால முடியலை… ஆனா கண்டிப்பா ஒரு நாள் மொட்டை போட்டு இந்த நீளமான தலைமுடியில்லாம என்னோட அம்மா பட்ட கஷ்டத்தை நானும் தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு.

அரவிந்த்: ம்ம்

சஹானா: அதுனாலதான் நீ எனக்கு மொட்டை அடிக்கணும்னு சொன்ன போது நான் சரின்னு சொன்னேன்.

அரவிந்த்: உன்னோட அப்பா இதுக்கு எப்படி ஒத்துக்குவார்?

சஹானா: அவர்கிட்ட நான் ஏற்கனவே சொல்லிட்டேன்.. இந்த வருஷ கோடை விடுமுறையில நான் மொட்டை போட்டுக்க போறேன்னு…

அரவிந்த்: என்ன சொன்னார்?

சஹானா: முதல்ல முடியாதுனு சொன்னார். அப்புறம் கடைசியில ஒத்துக்கிட்டார்.

அரவிந்த்: ம்ம்

சஹானா: என்னோட அம்மாவுக்காக நான் மொட்டை அடிச்சாலும் உன்னோட கையாள மொட்டை அடிச்சுக்கணும்னு இருக்கு…

அரவிந்த்: அது என்னோட அதிர்ஷ்டம்..

சஹானா: நீயா உன் கையாள எனக்கு மொட்டை அடிக்கிற வரைக்கும் எப்போ வேணும்னாலும் என்னோட முடியை எடுத்து விளையாடு.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.


அரவிந்த்: தாங்க்ஸ் அம்மு.. ஆனா அதுக்கு இது மாதிரி தனிமை கிடைக்கணுமே..

சஹானா: உனக்கு ஒரு ரகசியம் சொல்லுறேன்… கேட்டுக்கோ…

அரவிந்த்: என்ன?

சஹானா:  உன்னோட அம்மா எல்லா சனிக்கிழமையும் கோவிலுக்கு போவாங்கள்ல… அப்போ நான் உன்னோட வீட்டுக்கு வறேன்… அப்போ நீ என்னோட முடியை எடுத்துக்கோ… உன் இஷ்டம்போல விளையாடு.

அரவிந்த்: நல்ல யோசனையா இருக்கே…

சஹானா: ஆமா… சரி.. இப்போ கிளம்பு..

அரவிந்த்: கிளம்புறதுக்கு முன்னாடி உன்னோட முடியை அள்ளி முத்தம் கொடுக்கலாமா?

சஹானா: இவ்ளோ நேரம் என்னோட முடியை நீதான உன்னோட கையில பிடிச்சிட்டு இருந்த.. இன்னும் என்னோட முடிமேல இறுக்கிற ஆசை குறையலையா?

அரவிந்த்: இல்ல அம்மு… ரொம்ப ஆசையா இருக்கு.. ப்ளீஸ் உன்னோட முடியை கொடேன்.

சஹானா: நீ திருந்தமாட்ட டா குண்டா.. என்னோட முடியை எடுத்துக்கோ…



அரவிந்த் மீண்டும் ஒருமுறை சஹானாவின் முடியை அள்ளி கைகளில் எடுத்து ஆசை தீர முத்தம் கொடுத்தான். சஹானவின் தலைமுடி அவளுடைய முத்த மழையில் மீண்டும் நனைந்தது. அன்றிரவு வீட்டிற்கு சென்றதும் அவனால் அவ்வளவு எழிதில் உறங்கமுடியவில்லை. சஹானவின் தலைமுடி அவன் கனவிலும் வந்து அவனை கவர்ந்து இழுத்தது. அதன் பின்னர் ஒவ்வொரு வாரமும் சஹானா தன்னுடைய தலைமுடியை தனிமையில் அர்விந்திடம் விளையாட கொடுப்பாள். 

அரவிந்த் அவன் இஷ்டம்போல அவளுடைய முடியை அனுபவிப்பான். சில நேரங்களில் கத்தரிக்கோல் அல்லது கத்தியை அவள் தலையில் வைத்து அனுபவிப்பான். சஹானாவும் அவனை எதுவும் சொல்லமாட்டாள். தன்னுடைய பழைய நினைவுகளில் இருந்து அரவிந்த் நிகழ்காலத்திற்கு வந்தான். வாசலில் புன்னகையுடன் சஹானா நின்றிருந்தாள். அவளை உள்ளே அழைத்தான் அரவிந்த். உள்ளே வந்த சஹானா புவனா அருகில் இருந்த கத்தரிக்கோலை கவனித்தாள். அர்விந்த் விளையாட்டை உணர்ந்து அவனை பார்த்து முறைத்தாள்.

அரவிந்தை பார்த்து.. “அடுத்த வாரம் நம்ம எக்ஸாம் எல்லாம் முடிஞ்சிரும். இன்னும் ரெண்டு வாரத்துல நான் உன்கிட்ட சொன்ன மாதிரி தயாரா இருப்பேன். நீயும் ரெடியா இரு” என்று கூறிவிட்டு தன்னுடைய ஜடையை எடுத்து முனாள் போட்டுக்கொண்டே அவனை பார்த்து கண்ணடித்தாள் சஹானா. 


அம்மாவின் முன்னால் இப்படி மொட்டை அடிப்பதை பற்றி கூறுகிறாள் என ஒரு நிமிடம் அதிர்ச்சியானான். பின்னர் அவள் சிரித்துக்கொண்டே “அம்மா… நீங்களும் இன்னும் ரெண்டு வாரத்துல மொட்டை அடிக்க ரெடியா இருக்கணும்” என்று புவனாவை பார்த்து கூறினாள். புவனா பதிலுக்கு “என்னோட முடியை எப்ப வேணும்னாலும் மொட்டை அடிக்க நான் ரெடியா இருக்கேன்” என்றாள். அங்கு என்ன நடக்கிறது என அரவிந்த் குழம்பினான். சஹானா தன்னுடைய நீளமான முடியை மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியது அவனுக்கு தெரியும். 



இப்போது அவனுடைய அம்மாவும் அவளுடைய தலையை சஹானாவுடன் சேர்ந்து மொட்டை அடித்துக்கொள்வதாக கூறியது அதிர்ச்சியாக இருந்தது. “நீங்களும் உங்களோட தலைமுடியை மொட்டை அடிக்க போறீங்களா?” என அரவிந்த் கேட்டபோது புவனா சிரிப்புடன் “ஆமா” என்றாள். ஒன்றுமே புரியாமல் அரவிந்த் இருவரையும் பார்த்தான். சஹானா அவளுடைய நீளமான ஜடையை தடவிக்கொண்டே அவனை பார்த்துக்கொண்டிருந்தாள். புவனா தன்னுடைய இடுப்பளவு அடர்த்தியான முடியை அள்ளி கொண்டை போட்டுக்கொண்டிருந்தாள்



No comments:

Post a Comment