Wednesday, 6 November 2024

அரவிந்தின் அம்மா புவனா - ஏழாம் பாகம்

மறுநாள் ஞாயிற்றுகிழமை காலையிலேயே மகிழ்ச்சியாக எழுந்தான் அரவிந்த். மிக நீண்டநாள் முயற்சிக்கு பின்னர் அவனுடைய அம்மாவின் முடியை இன்று அவன் கைகலாலேயே வெட்டப் போகிறான் என்ற சந்தோசம். தன்னுடைய அறையை விட்டு வெளியே  வந்த போது புவனா அவனுக்காக காப்பி போட்டுக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் எப்பொழுதும் போல இல்லாமல் சஹானாவும் உள்ளே வந்தாள். மூவரும் காப்பி குடித்தபின், புவனா தலைக்கு எண்ணை வைக்க சொன்னாள், 




அரவிந்த் எண்ணை பாட்டிலை எடுத்து வந்தான். புவனா உட்கார்ந்திருந்த சேரின் பின்னால் சென்று அவளுடைய ஜடையை கையில் எடுத்து பிரித்துவிட ஆரம்பித்தான். புவானவின் நீளமான தலைமுடிக்கு எண்ணை தடவுவது இன்றுதான் கடைசி… நாளைமுதல் அவளுடைய கூந்தலின் நீளம் குறைந்துவிடும். அதனால் விரித்துவிட்ட அவளுடைய நீளமான தலைமுடியை ஆசை தீர தடவிப்பார்த்தான்.  சஹானா அதை நன்றாக கவனித்தாள். எண்ணையை எடுத்து இரண்டு கைகளிலும் தடவி அவள் தலைமுடிக்குள் நன்றாக தேய்த்தான். புவனா தலையில் குளிர்ச்சியை உணர்ந்தாள். சுமார் பதினைந்து நிமிடங்கள் புவானாவின் தலைமுடியை எண்ணையால் மசாஜ் செய்தான். பின்னர் புவனா எழுந்து தன்னுடைய ஷாம்பூ பாட்டிலை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றாள்.


புவனா சென்றதும் அங்கு அரவிந்த், சஹானா இருவர் மட்டுமே இருந்தனர். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். சஹானா அவனருகில் இருந்த எண்ணை பாட்டிலை பார்த்தாள். அரவிந்த் அதை கவனித்தான். மெல்ல சஹானா அருகில் வந்து அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டான். அவளுடைய ஜடையை அவிழ்த்துவிட ஆரம்பித்தான். 


சஹானா அவன் எதை மனத்தில் வைத்து தன்னுடையை பின்னலை அவிழ்கிறான் என புரிந்தது. அவளும் அமைதியாகவே இருந்தாள். அவளுடைய கனத்த ஜடையை பிரித்துவிடும்போது மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசம் இருந்தது. மெல்ல அவளுடைய தலைமுடியை முழுவதுமாக அவிழ்த்து விட்டான் அரவிந்த். சில நிமிடங்கள் அவள் தலைமுடிக்குள் விரல்களை விட்டு கோதி விட்டான். அவன் வயதுக்கே உரிய உணர்ச்சிகள் அவனை தூண்டி விட்டது. மெல்ல அவனுடைய ஆண்கூறி எழுந்து நிற்க ஆரம்பித்தது. சஹானா முன்னால் அப்படியே நிற்க கூச்சமாக இருந்தது. மெல்ல அவள் பின்புறமாக சென்று நின்று அவளுடைய தலைமுடியை பின்புறமாக எடுத்து போட்டான். 


இப்போது சஹானாவிற்கு அர்விந்த் என்ன செய்கிறான் என தெரியவில்லை. ஆனால் அவளுடைய தலைமுடியில் இருந்து கைகளை எடுக்காமல் கோதிவிட்டு ரசித்துக்கொண்டிருந்தான் என தெரிந்தது. சஹானா மெல்லிய குரலில் கேட்டாள் 


“தே குண்டா.. உனக்கு என்னோட முடியை வெட்டணும்-னு ஆசை இருக்கா?”. 


அரவிந்த் சற்று நிதானித்து பதிலுக்கு “ஆமா” என்றான். 


“சரி… போய் ஒரு கத்தரிக்கோல் எடுத்துட்டு வா.. என்னோட முடியை கொஞ்சம் கட் பண்ணி விடு” என்றாள் சஹானா. 


இதை சற்றும் எதிர்பார்க்காத அரவிந்த் மனத்தில் சந்தோசத்துடன் உள்ளே சென்றான். அவனுடைய அம்மாவின் முடியுடன் சஹானாவின் முடியையும் வெட்ட வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி. கையில் கத்தரிக்கோலுடன் வெளிய வந்த போது சஹானா அவளுடைய அடர்த்தியான முடியை எடுத்து முன்னால் போட்டு தடவிப்பார்த்துக் கொண்டிருந்தாள். 


அரவிந்த் சஹானா அருகில் சென்று அவளுடைய தலைமுடியை கையில் ஏந்தினான். சஹானா கண் முன்னால் அரவிந்த் ஒருகையை அவளுடைய தலைமுடியிலும், இன்னொரு கையில் கத்தரிக்கோலுடனும் நின்றிருந்தான். 


“அம்மு… எவ்ளோ முடியை வெட்டலாம்?” என்றான் அரவிந்த். 


சஹானா “உனக்கு எவ்ளோ முடி வேணும்” என்றாள். “உன்னோட முடியை முழுசா எனக்கே கொடு அம்மு..” என்றான். 


சரி என்பதுபோல அவனைப்பார்த்து சிரித்தாள் சஹானா.      


கத்தரிக்கோலுடன் நின்றிருந்த அரவிந்த் யோசிக்க ஆரம்பித்தான். அழகான கூந்தலை அவனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள் சஹானா. சஹானாவின் முடியை மொத்தமாக இப்போதே வெட்டலாமா அல்லது கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து வெட்டலாமா என இரண்டு மனதாக போராடினான். 


ஒருவேளை இப்போது அவள் முடியை வெட்டி விட்டாலும், குளிக்க சென்ற அம்மா வந்து கேட்டாள் என்ன சொல்வது என யோசித்தான். சாஹானா முடியை வெட்டியது தெரிந்தால் புவனா கோபித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதையும் தாண்டி, அவன் சஹானாவின் முடியை விளையாடி அனுபவித்து வெட்டிவிட நினைத்தான். தன்னுடைய மனதில் பட்டதை கூறியபோது சஹானாவும் அரவிந்த் சொல்வதில் உள்ள காரணத்தை புரிந்து கொண்டாள். 


மீண்டும் ஒரு முறை தனியாக இருக்கும்போது அவளது முடியை அவனிடம் கொடுப்பதாக கூறினாள். சற்று ஏமாற்றம் இருந்தாலும், சஹானாவின் ஜடையை எடுத்து அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அவளிடமே கொடுத்துவிட்டான் அரவிந்த்.


சற்று நேரத்திற்குமுன் குளிக்க சென்ற புவனா தன்னுடைய ஈரக்கூந்தலை துண்டு வைத்து சுற்றி கொண்டைபோட்டுக்கொண்டு வெளியே வந்தாள். புவனா வந்த சற்று நேரத்தில் சஹானா பிறகு வருவதாக கூறி அவளுடைய வீட்டிற்கு சென்றாள். புவனா காலை உணவு தாயார் செய்ய சென்ற நேரத்தில் அரவிந்த்தும் குளித்து முடித்து வந்தான். உணவுக்கு முன்னால் புவனாவை உட்கார வைத்து அவளுடைய ஈரக்கூந்தலை அவிழ்த்து விட்டு துவட்டி விட்டான். 


புவனாவின் தலைமுடி ஈரத்தில் இருந்து காயும் போது அவளுடைய முடியின் உண்மையான அடர்த்தி வெளியே தெரிய துவங்கியது. அரவிந்த் அவ்வப்போது புவனாவின் முடியை அள்ளி முத்தம் கொடுத்துக்கொண்டே அவளுடைய தலையை துவட்டி விட்டான். சிறிது நேரம் கழித்து புவனா அவளே அவளுடைய தலைமுடியை ஜடையாக பின்னிக்கொண்டாள். நீண்டநாள் கழித்து அவளுடைய முடியை அவளே ஜடை பின்னிக்கொள்கிறாள். 


புவனா தன்னுடைய நீளமான முடியை மூன்று பாகங்களாக பிரித்து ஜடை பின்னிய அழகை அரவிந்த் அருகில் உட்கார்ந்து ரசித்தான். புவனா ஜடை பின்னி முடித்ததும், ஜடையை எடுத்து பின்னால் போட்டு விட்டு அரவிந்த்தை பார்த்து சிரித்தாள். அரவிந்த் அவள் பின்னால் சென்று அவளுடைய நீளமான ஜடையை கையில் எடுத்து ரசித்தான். 




அவளுடைய முடியை நுகர்ந்து பார்த்து, முத்தமிட்டு சந்தோசப்பட்டான். இப்போது இவ்வளவு நீளமான முடியை கொஞ்சி மகிழும் அரவிந்த், இன்று மாலை இந்த முடியை வெட்டி நீளம் குறைந்த பின்னர் என்ன செய்வானோ என மனதிற்குள் யோசித்தாள் புவனா. இருந்தாலும் சஹானாவின் நீளமான தலைமுடி இருப்பது சற்று ஆறுதலாக இருந்தது.


புவனாவின் தலைமுடியை ஆசைதீர கொஞ்சி முடித்தபின் அரவிந்த் பள்ளி நண்பர்களுடன் விளையாட வெளியே சென்றான். அவன் சென்ற சிறிது நேரம் கழித்து சஹானா மீண்டும் வந்தாள். புவனாவுடன் பேசிக்கொண்டிருந்தாள். புவனா தன்னுடைய மகனின் ஆசைக்காக அவளுடைய தலைமுடியை கொடுப்பது  பெருமையாக இருப்பதாக சஹானா கூறினாள். 


நீளமான தலைமுடியை இழப்பது சற்று வருத்தமாக இருந்தாலும் அரவிந்த் சந்தோசமாக இருப்பது முக்கியம் என புவனா கூறினாள். சஹானா அதை ஆமோதித்தாள். ஒரு வேலை அரவிந்த் அவளுடைய தலையை மொட்டை அடிக்கவேண்டும் என பிற்காலத்தில் கூறினாள் என்ன செய்வது என குழப்பமாக இருப்பதாக கூறினாள் புவனா. 


சஹானாவின் மனதில் ஒரு யோசனை தோன்றியது. நீண்ட நாட்களாக தன்னுடைய மனதில் இருந்த சில விஷயங்களை புவனாவிடம் மனசு விட்டு பேசினாள் சஹானா. தான் கடந்து வந்த சில கடினமான நிகழ்வுகளையும், அதனால் தான் எடுத்திருக்கும் சில முடிவுகளையும் புவனாவிடம் தெரிவித்தாள். அவள் சொன்ன வேஷயங்களை கேட்டுக்கொண்டிருந்த புவனா உண்மையில் கண்கலங்கிவிட்டாள். சஹானாவை அணைத்துக்கொள்வதை தவிர என்ன செய்வது என புவனாவிற்கு தெரியவில்லை. சஹானாவின் முடிவிற்கு துணையிருப்பதாக வாக்களித்தாள்.


மாலை நேரம் வந்தது. மதியம் விளையாடி முடித்து விட்டு வந்து தூங்கிய அரவிந்த் இப்பொழுதுதான் எழுந்தான். ஹாலில் புவனாவும் சஹானாவும் அமர்ந்து டீவீ பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அரவிந்த் வந்தபின் மூவரும் டீ குடித்தனர். அரவிந்த் சஹானாவின் தலைமுடியையும், புவனாவின் தலைமுடியையும் ரசித்துக் கொண்டு இருந்தான். அவன் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்தது. 


முடியை வெட்டலாமா என்பது போல திரும்பிப் பார்த்தாள் புவனா. அரவிந்த் அவளுடைய பார்வையை புரிந்து கொண்டு உள்ளே சென்று ஒரு சீப்பையும் கத்தரிக்கோலையும் கொண்டு வந்தான். சஹானாவும் புவனாவும் எழுந்து வீட்டில் நடுவில் இருந்த பொருட்களை யெல்லாம் எடுத்து ஓரமாக வைக்க ஆரம்பித்தனர். அரவிந்த் ஒரு ஸ்டூல் எடுத்து போட்டான். புவனா அதில் அமர்ந்து தன்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டு அமர்ந்தாள். அரவிந்த் புவனாவின் பின்னால் சென்றான். 




சஹானாவும் அவன் அருகில் சென்று  தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டு  நின்றாள். அரவிந்த் கையில் இருந்த சீப்பை சஹானாவின் தலையில் சீவுவதுபோல சொருகி வைத்தான். பின்னர் கையில் இருந்த கத்தரிக்கோலை அவளுடைய ஜடையில் சொருகினான். அரவிந்த் தன்னுடைய ஜடையை கத்தரிக்கோல் வைக்கும் ஸ்டாண்ட்போல பயன்படுத்துவதை சஹானா எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் எதுவும் சொல்லாமல் அவனைப்பார்த்து கண்களால் சிரித்தாள். ஒருவேளை அவன் கைகளால் இதே கத்தரிக்கோல் அவளுடைய தலைமுடியில் விளையாடப்போவதை எண்ணி அமைதியாக இருந்தாள் போல.

அரவிந்த் புவனாவின் ஜடையை எடுத்து அவிழ்த்துவிட ஆரம்பித்தான். ஒவ்வொரு பின்னலாக ரசித்து அவிழ்த்துக்கொண்டு இருப்பதை சஹானா அருகில் நின்று கவனித்தாள். அரவிந்திற்கு நீளமான கூந்தல் மீது ஆர்வமா இல்லை அந்த நீளமான முடியை வெட்டுவதுமேல் இவ்வளவு ஆர்வமா என பிரித்து பார்க்க முடியவில்லை. ஆனால் இவ்வளவு அழகான புவனாவின் தலைமுடி இன்னும் சில நிமிடங்களில் வெட்டப்பட இருக்கிறது என்பது சற்று வித்தியாசமான உணர்வா அவளுக்குள் ஏற்படுத்தியது. 

தன்னையும் அறியாமல் தன்னுடைய ஜடையை தடவிப்பார்க்க ஆரம்பித்தாள் சஹானா. அர்விந்த் மெல்ல புவனாவின் தலைமுடியை அவிழ்த்துவிட்டிருந்தான். அலை அலையாக அவளுடைய தலைமுடி கண்களுக்கு விருந்தாக இருந்தது. சஹானாவின் தலைமுடியில் சொருகி இருந்த சீப்பை அரவிந்த் எடுத்தான். புவனாவின் தலைமுடியை சீவிவிட ஆரம்பித்தான். அரவிந்த் அவளுடைய முடியை சீவி விடுவது ஒன்றும் புதிதில்லை என்பதால் புவனாவும் அமைதியாகவே இருந்தாள். 

காலையில்தான் தலைக்கு குளித்து இருந்ததால், இன்னமும் எண்ணை வைக்காத புவனாவின் தலைமுடி ஆங்காங்கே சிக்கல் இருந்தது. அர்விந்த் பொறுமையாக சிக்கல் இல்லாமல் அவளுடைய முடியை சீவி விட்டான். இடையில் சஹானா ஆசையாக புவனாவின் முடியை தொட்டுப்பார்த்தாள். அடர்த்தியாகவும், மிருதுவாகவும் இருந்த தலைமுடியை ரசித்தாள்.

அரவிந்த் மீண்டும் சீப்பை சஹானாவின் தலைமுடியில் சொருகினான். இப்போது அவள் ஜடையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்தான்.  புவனாவின் பின்னால் முழங்கால் இட்டு அமர்ந்தான்.  அரவிந்த் ஒரு கற்றை முடியை கழுத்தின் அருகில் பிடித்தான். கத்தரிக்கோலை இரண்டு முறை வெட்டிப்பார்த்தான். அந்த கத்தரிக்கோலின் சத்தம் காதுக்குள் நுழைந்து ஏதோ செய்வதுபோல புவனாவிற்கு தோன்றியது. மெல்ல அவளுடைய முடியை விரல்களுக்குள் பிடித்து அப்படியே கீழே இறங்கினான். 


இடுப்பிற்கு சற்று மேலே அளவுவைத்து பார்த்தான். அரவிந்த் தலைமுடியை பிடித்திருந்த இடம் முதுகுவரை இருப்பது போல புவனாவிற்கு தோன்றியது. அதிகமான முடியை வெட்டப் போகிறானோ என மனதிற்குள் நினைத்தாள். அவளுடைய இதையத் துடிப்பு அதிகமானது. அரவிந்த் புவனாவின் முடியை வெட்ட ஆரம்பித்தான். அந்த கத்தரிக்கோல் முடியை வெட்டும் சத்தம் புவனாவின் காதுகளுக்குள் கூசியது. 

புவனா கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அரவிந்த் தொடர்ந்து அவள் முடியை வெட்டினான். சஹானா கண் சிமிட்டாமல் அரவிந்த் புவனாவின் முடியை வெட்டுவதை கவனித்தாள். அடுத்த சில வினாடிகளில், புவனாவின் ஒரு கற்றை தலைமுடி அரவிந்த்தின் கைகளில் இருந்தது. அரவிந்த் அந்த முடிக்கு முத்தம் கொடுத்து பின்னர் சஹானாவின் கைகளில் கொடுத்து பிடித்திருக்க  சொன்னான். சஹானா புவானாவின் முடியை வாங்கி வைத்துக்கொண்டாள்.


அரவிந்த் மீண்டும் இன்னொரு கற்றை முடியை எடுத்து அதே அளவு வைத்து மீண்டும் வெட்டிவிட ஆரம்பித்தான். அரவிந்த் அவளுடைய முடியை வெட்ட வெட்ட, கத்தரிக்கோலில் இருந்து விடுபட்ட முடி புவனாவின் கைகளில் வந்து உரசியது. தன்னுடைய முடி வெட்டியபிறகு குட்டையாக தெரிவது போல உணர்ந்தாள். 

ஆனால் முழுவதுமாக அரவிந்த் முடியை வெட்டி முடிக்கும்வரை கண்களை திறந்து பார்க்க அவளுக்கு தைரியம் வரவில்லை. இப்போது வெட்டி முடித்த அடுத்த கற்றை முடியை மீண்டும் சஹானா கையில் கொடுத்தான். சஹானா அந்த முடியையும் வாங்கி கையில் வைத்துக்கொண்டாள்.





No comments:

Post a Comment