Saturday, 2 November 2024

அரவிந்தின் அம்மா புவனா - ஆறாம் பாகம்

புவனா: என்ன அம்மு… இன்னைக்கு உன்னோட முக்காடை கழத்தி வைச்சுட்ட…?


சஹானா: பொதுவா… என்னோட வீட்டில இருக்கும்போது நான் இதை போட மாட்டேன்… அதான்… கழத்தி வைச்சுட்டேன்… ஏன்.. நான் அப்படி பண்ணக்கூடாதாம்மா..?




புவனா: இல்லடா… அம்மு… இதுவும் உன்னோட வீடுதான்… நீ உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம்… நீ திடீர்னு கழத்தி வைச்சதும் எனக்கு ஒண்ணும் புரியல…


சஹானா: அது மட்டும் இல்லம்மா.. எனக்கு உங்ககிட்ட நிறைய பேசணும்…. இப்படி சுதந்திரமா இருந்தாதான் என்னால பேச முடியும்…


புவனா: உனக்கு என்ன அம்மு… நீ அரவிந்த் இருக்கானேனு கூச்சபடுறியா?


சஹானா: இந்த குண்டணை பார்த்து நான் எதுக்கு கூச்சப்படணும்?


புவனா: ஹாஹா …அதுவும் சரிதான்…


சஹானா: நீங்க என்னைக்காவது உங்களுக்கு பொண்ணு இல்லைனு வருத்தப்பட்டு இருக்கீங்களா?


புவனா: ஏன் அம்மு திடீர்னு அப்படி கேட்குற?


சஹானா: நீங்க முதல்ல சொல்லுங்க…


புவனா: முன்னாடியெல்லாம் அப்படி தோனாது…. இப்போ சில நேரங்கள்ல தோணும்?


சஹானா: எப்போ?




புவனா: நீ வந்ததுக்கு அப்புறம் தான்… எனக்கும் உன்னை மாதிரி ஒரு பொண்ணு இல்லையேனு… இருந்திருந்தா அவளுக்கும் உன்னை மாதிரி நீளமா முடியை வளர்த்து, தலைசீவி பூ வைச்சு.. போட்டு வைச்சு ரசிச்சு இருப்பேன்ல னு தோணும்…


சஹானா: எனக்கும் இப்போலாம் உங்க கிட்ட பேசும்போது என்னோட அம்மா இருந்திருக்கலாம்னு தோணுது… நானும் அவங்ககிட்ட எனக்கு தலைக்கு குளிச்சா தலை துவட்டிவிட, எண்ணை வைச்சு தலைவாரிவிட சொல்லலாம்னு தோணும்…


புவனா: உனக்கு என்ன செய்யணும்னு சொல்லு.. நான் செய்யிறேன்…


சஹானா: நீங்க என்ன உங்க பொண்ணா நினைச்சு நான் கேட்டதை செய்யுங்க.. எனக்கும் என்னோட அம்மாவை ரொம்ப மிஸ் பண்றமாதிரி இருக்காது…


புவனா: தாராளமா…


சஹானா: (அரவிந்தை பார்த்துக் கொண்டே) வேணும்னா.. உங்களுக்கு நான் எண்ணை வைச்சு தலைவாரி விடுறேன்…


அரவிந்த் முறைத்தான்…. புவனா அதை கவனித்தாள்.


புவனா: இல்லடா அம்மு… எனக்கு நானே பண்றேன்….


சஹானா: ஏன்மா… அரவிந்த் கோவிப்பானா?


புவனா: என்னம்மா.. சொல்ற?


சஹானா: எனக்கு எல்லாம் தெரியும்… அன்னைக்கு அரவிந்த் உங்களுக்கு எண்ணை தேய்ச்சு விட்டதை நான் பார்த்தேன். அரவிந்த் நேத்து என்கிட்ட சொல்லிட்டான்.


புவனா: அடப்பாவி.. இது எப்போ நடந்தது?


அரவிந்த்: நேத்து நைட் ம்மா…. இன்னைக்கு உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்… அதுக்குள்ள அம்மு சொல்லிட்டா…

புவனா: எனக்கு தெரியாம என்னென்னமோ நடக்குது..

சஹானா: உங்களுக்கு தெரியாம எதுவும் நடக்க கூடாதுனு தான் நான் இதையெல்லாம் சொன்னேன்.

புவனா: பொண்ணுங்க எப்பொவுமே புத்திசாலி தான்…

சஹானா: கரெக்ட்…

அரவிந்த்: ரொம்ப தான் பண்றீங்க…

புவனா: சரிடா அம்மு.. இப்போ என்ன பண்ணனும்….

சஹானா: எனக்கு நீங்க இப்போ எண்ணை தேய்ச்சு ஜடை பின்னுங்க…  உங்களுக்கு அவன் பண்ணட்டும்

புவனா: நான் என்னோட ஜடையை பின்னியே இரண்டு வருஷம் ஆச்சு…. இப்படியே போனா எனக்கு ஜடை பின்னுறதே மறந்திடும்… டேய் அரவிந்த் நீ உள்ள போய் அந்த தேங்காய் எண்ணையும், சீப்பும் எடுத்துட்டு வா…



அரவிந்த் உள்ளே சென்று எண்ணை பாட்டிலையும் சீப்பையும் எடுத்து வந்தான். புவனா அருகில் ஒரு முக்காலியை எடுத்துப்போட்டு அமர்ந்தாள். சஹானா எழுந்து வந்து புவனாவின் முன் அமர்ந்தாள். அர்விந்த் சஹானா முன்னால் மண்டியிட்டு அமர்ந்து “அம்மு… நான் உன்னோட முடியை தொட்டுப்பார்க்கலாமா?” என்றான். 


சஹானா சிரித்துக்கொண்டே தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் நீட்டி “எடுத்துக்கோடா குண்டா.. தொட்டுப்பார்த்துக்கோ” என்றாள். அரவிந்த் சந்தோசமாக சஹானாவின் ஜடையை கைகளில் ஏந்தினான். அவளுடைய தலைமுடி, மிருதுவாகவும், அதே நேரத்தில் கனமாகவும் இருப்பதுபோல உணர்ந்தான். மெல்ல அவளுடைய முடியை நுகர்ந்து பார்த்தான். நல்ல மனமாக இருந்தது. 

கண்களை மூடி அந்த கூந்தலின் வாசனையை அனுபவித்தான். சஹானா அதை எதிர் பார்க்கவில்லை. சற்று கூச்சமாக இருந்தாலும், அவன் செய்வதை கவனித்துப்பார்த்தாள். பின்னர் அவன் கண்களை திறந்தபோது சிரித்துக்கொண்டே அவன் கைகளில் இருந்த தன்னுடைய ஜடையை உருவினாள். மீண்டும் தன்னுடைய ஜடையை பின்னால் எடுத்துப்போட்டாள்.


இதுவரை மகள் இல்லையே என நினைத்து ஏங்கியிருந்த புவனா மகிழ்ச்சியோடு சஹானாவின் ஜடையை கையில் எடுத்தாள். சஹானாவின் ஜடையை அவிழ்த்துவிட துவங்கினாள். அவளுடைய அடர்த்தியான முடி விடுபட ஆரம்பித்தது. அரவிந்த் அருகில் நின்று ரசித்தான். முழுவதுமாக அவளுடைய முடியை அவிழ்த்துவிட்ட போது அள்ளி முத்தம் கொடுக்க வேண்டும் என்று அரவிந்த் நினைத்தான். பின்னர் எழுந்து புவனாவின் அருகில் நின்றான்.

புவனா கைகளில் எண்ணையை எடுத்து சஹானாவின் தலைமுடியில் தேய்த்துவிட ஆரம்பித்தாள். அங்குலம் அங்குலமாக பொறுமையாக தேய்த்தாள். எண்ணை தேய்த்து முடித்தபின் அருகிலிருந்த சீப்பை எடுத்து தலைவாரிவிட ஆரம்பித்தாள். அரவிந்தின் கைகள் பரபரப்பாக இருந்தது. தனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கினான். ஆனால் புவனா அதைப்பற்றி கவலைப்படாமல் சஹானாவிற்கு ஜடை பின்ன ஆரம்பித்தாள். 



மிக அழகாக பின்னிக்கொண்டிருந்தாள். பாதி ஜடை பின்னியிருந்தபோது சஹானா புவனாவை நிறுத்த சொன்னாள். “அம்மா… மீதி ஜடையை இந்த குண்டன்கிட்ட கொடுங்க…. அவன் பின்னி விடட்டும்.. பாவம் ரொம்ப நேரமா என்னோட முடியை பார்த்துக்கிட்டே நிற்கிறான்” என்றாள். புவனாவும் சிரித்துக்கொண்டே அரவிந்திடம் சஹானாவின் முடியை கொடுத்தாள். அரவிந்த் ஆசையோடு வாங்கி சஹானாவின் மீதி ஜடையை பின்னி விட்டான். கடைசியில் ஒரு பாண்ட் எடுத்து போட்டதும் சஹானா தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டாள். மிக அழகாக இருந்தது.

அன்று மூவருக்குமே மிகுந்த மகிழ்ச்சி… தினமும் இந்த நிகழ்வு தொடர்ந்தது. சில நாட்களில் சஹானாபுவனாவிற்கும், அரவிந்த் சஹானாவிற்கும் தலைவாரி விட்டனர். இப்போதெல்லாம் அரவிந்த் எந்த கூச்சமும் இல்லாமல் சஹானாவின் முடியை தொட்டுப் பார்க்கிறான். சஹானாவும் கூச்சப்படுவதில்லை. இப்படி சுமூகமாக சென்று கொண்டிருந்த அவர்களுடைய கூந்தல் பயணம் ஒருநாள் சற்றே திசை மாறியது. சஹானாவும் அரவிந்தும் மாடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சஹானா அவனிடம் கேட்டாள்.

சஹானா: டேய் குண்டா… உனக்கு நீளமான முடி ரொம்ப பிடிக்கும்ல..

அரவிந்த்: ஆமா அம்மு…

சஹானா: எப்போவாவது இந்த நீளமான முடியை வெட்டனும்னு உனக்கு தோணுமா?

அரவிந்த்: உண்மையை சொல்லணும்னா.. நிறைய தடவை தோணும்…

சஹானா: எப்போ…?

அரவிந்த்: உனக்கு ஜடை பின்னும்போது சில நேரங்கள்ல தோணும்…

சஹானா: என்னோட முடியை மட்டும்தான் வெட்டனும்னு தோணுமா?

அரவிந்த்: இல்ல அம்மு.. என்னோட அம்மா முடியையும் வெட்டணும்னு தோணும்…

சஹானா: உன்னோட அம்மா முடியை எவ்ளோ வெட்டணும்னு தோணும்?

அரவிந்த்: பாதி முடியை வெட்டலாம்னு தோணும்…

சஹானா: அப்போ எனக்கு எவ்ளோ வெட்டலாம்ணு தோணும்…

அரவிந்த்: இன்னும் கொஞ்சம் அதிகமா…

சஹானா: அதிகமானா.. எவ்ளோ?

அரவிந்த்: உன்னோட  முடி எல்லாத்தையுமே வெட்டணும்னு தோணும்?

சஹானா: அடப்பாவி… அப்போ எனக்கு மொட்டை அடிக்கணும் னு தோணுதா?

அரவிந்த்: அப்படியும் பிடிக்கும்.. ஆனா ஒரு கத்தரிக்கோல் வைச்சு வெட்டணும்னு ஆசை…

சஹானா: இதுவரைக்கும் யாருக்கும் நீ முடி வெட்டி இருக்கியா?

அரவிந்த்: இல்ல அம்மு…



சஹானா: யாராவது நீளமான முடி இருக்கிறவங்க முடியை வெட்றதை பார்த்திருக்கியா?

அரவிந்த்: இல்ல..

சஹானா: உன்னோட அம்மாவுக்கு நீ அவங்க முடியை வெட்டணும் னு நினைக்கிறது தெரியுமா?

அரவிந்த்: தெரியும்…

சஹானா: என்ன சொன்னாங்க?

அரவிந்த்: முதல்ல திட்டுனாங்க… அப்புறம் முடியாதுனு சொன்னாங்க… கடைசியில சம்மதிச்சுட்டாங்க.

சஹானா: ஓ.. சூப்பர்… எப்போ அவங்களுக்கு முடி வெட்டப்போற?

அரவிந்த்: இன்னும் முடிவு பண்ணல.. இந்த வாரம் பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்?

சஹானா: அப்போ நானும் வரலாமா?

அரவிந்த்: தாராளமா? ஆனா உனக்கு என்ன திடீர்னு முடி வெட்டுறதுல இவ்ளோ ஆர்வம்?

சஹானா: இல்ல… உனக்கு நீளமான தலைமுடி மட்டும்தான் பிடிக்குமா இல்ல அந்த முடியை வெட்டுறதுலயும் ஆர்வம் இருக்கானு தெரிஞ்சுக்கதான் கேட்டேன்.


அரவிந்த்: உன்னோட அழகான தலைமுடியை வெட்டணும் னு சொன்னதும் உனக்கு கோவம் வரலயா?

சஹானா: உண்மையை சொல்லணும்னா கோவம் வரலை…

அரவிந்த்: ஏன்?

சஹானா: அதுக்கு ஒரு காரணம் இருக்கு அதை அப்புறமா சொல்லுறேன்…

அரவிந்த்: இப்போ சொல்லக்கூடாதா?

சஹானா: அவசரப்படாதடா குண்டா… கண்டிப்பா சொல்லுறேன்…

அரவிந்த்: சரி அம்மு…

ஓரிரு நாட்கள் கடந்திருந்தது. அரவிந்த் புவனாவிடம் பேசி அவள் முடியை வெட்ட சம்மதம் வாங்கியிருந்தான். அந்த வாரயிருதியில் வரும் ஞாயிறு மாலை அவள் முடியை வெட்டலாம் என முடிவு செய்தனர். தன்னுடைய தலைமுடியின் நீளத்தில் பாதியை வெட்ட வேண்டும் என்று அரவிந்த் கூறியதால் சற்று வருத்தம் இருந்தாலும், மகனுக்காக முடியை வெட்டிக்கொள்ள சம்மதித்தாள் புவனா.


சஹானாவும் அன்று கூடவே இருப்பதாக கூறியிருந்தாள். தலைமுடியை வெட்டுவது பற்றி நிறைய கேள்விகள் கேட்ட சஹானா பதிலுக்கு எதுவே சொல்லாமல் இருந்தது சற்று குழப்பமாக இருந்தது. ஒரு வேளை சஹானாவும் ஆக இருப்பாளோ என அரவிந்திற்கு தோன்றியது. ஆனாலும் அவளாக காரணம் சொல்லும்வரை காத்திருக்கலாம் என நினைத்தாள். 

இதற்கிடையில் சஹானா புவனாவிடம் அர்விந்த் எப்படி புவனாவை முடியை வெட்டிக்கொள்ள சம்மதிக்க வைத்தான் என கேட்டு தெரிந்து கொண்டாள். அவள் முடி வெட்டுவது மேல் உள்ள ஆர்வத்தை புவனாவும் கவனித்தாள். அதன் பின் அர்விந்திற்கு தெரியாமல் புவனாவும் சஹானாவும் மட்டும் தனியாக நிறைய பேசிக்கொண்டனர். அரவிந்த் இடையில் வந்தால், அந்த பேச்சை நிறுத்திக்கொண்டு வேறு பேச ஆரம்பித்தனர். சனிக்கிழமை மாலையில் சஹானா வந்தபோது புவனாவின் காதில் ஏதோ ரகசியமாய் சொன்னாள். பின்னர் வழக்கம்போல இரவு வரை நேரத்தை அங்கேயே செலவழித்துவிட்டு திரும்பி சென்றுவிட்டாள்.






No comments:

Post a Comment