Tuesday, 29 October 2024

அரவிந்தின் அம்மா புவனா - ஐந்தாம் பாகம்

அரவிந்த்: என்ன அம்மு இன்னும் தூங்கலையா நீ?


சஹானா: இல்லடா குண்டா… இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். அப்பா இன்னும் எனக்கு போனே பண்ணல.


அரவிந்த்: நீ போன் பண்ண வேண்டியதுதான?


சஹானா: ட்ரை பண்ணினேன். அவர் எடுக்கல…


அரவிந்த்: ஓ.. சரி..சரி…


சஹானா: என்ன இன்னைக்கு மாடிக்கு வந்திருக்க? நீ வழக்கமா கீழதான தூங்குவ?


அரவிந்த்: ஆமா… ஆனா இன்னைக்கு என்னோட அத்தை வந்திருக்காங்க.. அதுனால நான் மேல வந்துட்டேன்.


சஹானா: ஓ.. அதுனாலதான் சோகமா இருக்கியா?


அரவிந்த்: அப்படியில்ல… தினமும் அம்மா பக்கத்துல தூங்குவேன்… இன்னைக்கு தனியா படுக்கணும்… அதான்.


சஹானா: என்னோட நிலைமையை யோசிச்சு பார்த்திருக்கியா? நான் தினமும் தனியாதான் தூங்கணும்.


அரவிந்த்: புரியுது அம்மு… அம்மா இல்லைனு நீ எவ்ளோ வருத்தப்படுறேனு. ஆனா கவலைப்படாத… உனக்கு தான் நாங்க இருக்கோமே… என்னோட அம்மா உனக்கும் அம்மா மாதிரிதான…


சஹானா: எனக்கும் அப்பிடித்தான் தோணும்டா… ஆனா சில விஷயங்களை நேர்ல கேட்க கூச்சமா இருக்கு?


அரவிந்த்: கூச்சமா இருக்கா? ஏன்? அப்படி என்ன வேணும் உனக்கு? என்கிட்ட சொல்லு…


சஹானா: உன்னோட அம்மாகிட்ட கேட்கவே கூச்சமா இருக்கு… உன்கிட்ட எப்படி கேட்கிறது?


அரவிந்த்: அது சரி…


சஹானா: டேய் குண்டா…நான் உன்கிட்ட ஒண்ணு கேட்குறேன் கோவிக்ககூடாது.


அரவிந்த்:  என்ன அம்மு.. கேளு?


சஹானா: நீயும், உன்னோட அம்மாவும் ரொம்ப பாசமா இருக்கீங்களே எப்படிடா?


அரவிந்த்: என்ன அம்மு இப்படி கேட்கிற? அம்மாவும் பையனும் பாசமா இருக்கிறதுல என்ன இருக்கு?


சஹானா: இல்லடா குண்டா… பொதுவா .வந்ததுக்கு அப்புறம் அம்மாவும் பையனும் கொஞ்சம் இடைவெளி விட்டு இருப்பாங்க…. ஆனா நீயும் அம்மாவும் அப்பிதா இல்லையே…




அரவிந்த்: ஓ..அதுவா… என்னோட அப்பா வெளியூர்ல இருக்கார்ல… எனக்கும் இங்க நிறைய நண்பர்கள் கிடையாது. நானும் என்னோட அம்மா தவிர்த்து யார்கிட்டயும் எதையும் மனசுவிட்டு பேச மாட்டேன். அதுனால எனக்கு என்னோட அம்மாதான் பெஸ்ட் பிரெண்ட்.


சஹானா: அவ்ளோ பெஸ்ட் பிரெண்ட் ஆ?


அரவிந்த்: ஆமா.. என்னோட மனசுல எந்த ரகசியத்தையும் எங்கம்மாகிட்ட மறைச்சு வைச்சது இல்ல. என்னோட அம்மாவும் எனக்காக எதையும் செய்வாங்க. எது தப்பு எது சரின்னு சொல்லி கொடுப்பாங்க.


சஹானா: நல்ல அம்மா… உன்கிட்ட இன்னொண்ணு கேட்கணும்…


அரவிந்த்: நீ என்ன கேட்கபோறேன்னு தெரியும்….

சஹானா: என்ன?

அரவிந்த்: போனவாரம் என்னோட அம்மாவோட தலைமுடிக்கு என்னை தேய்ச்சு ஜடை பின்னி விட்டேனே.. அதுதான?

சஹானா: ஆமாடா…. உனக்கு எப்படி தெரியும்?

அரவிந்த்: அன்னைக்கு நீ கதவு வழியா பார்த்துட்டு திரும்பி போனதை நான் பார்த்தேன்.

சஹானா: அடப்பாவி… நீ சொல்லவே இல்ல.. இது அம்மாக்கு தெரியுமா?

அரவிந்த்: இல்ல.. இன்னும் தெரியாது.

சஹானா: சரி.. சொல்லு..  உனக்கு ஏன் அவங்க முடிமேல இப்படி ஒரு ஆசை. அம்மா எப்படி உன்கிட்ட அவங்களோட முடியை கொடுத்தாங்க? எனக்கு இது தெரியலைனா தலையே வெடிச்சிடும்.

அரவிந்த்: சரி சொல்றேன்… ஆனா அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு பதில் சொல்லு.

சஹானா: என்னடா சொல்லு?

அரவிந்த்: நீ ஏன் எப்பொவும் முக்காடு போட்டு இருக்க?

சஹானா: சின்ன வயசுல இருந்து பழக்கம்… எப்போ வீட்டை விட்டு வெளியே போனாலும் இப்படி தான் வருவேன்.


அரவிந்த்: இப்போ வீட்டில தான இருக்க… இப்பொவும் இது வேணுமா?

சஹானா: அதுக்கும் நான் உன்கிட்ட கேட்டதுக்கும் என்ன சம்பந்தம்?

அரவிந்த்: இருக்கு… நீ வீட்டில இருக்கிற போது இதை போட்டிருக்க மாட்டே… நான் உன்னை என்னோட வீட்டில ஒருத்தரா நினைச்சு சொல்லணும்னு பார்க்கிறேன். ஆனால் நீ என்னை அப்படி நினைக்கலைனு தோணுது. அதான் கேட்டேன்.

சஹானா: சே.. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லடா குண்டா…நீ என்னோட முகத்தை தினமும் பார்க்கிறேல… வேற என்ன உன்கிட்ட நான் மறைக்க போறேன்… என்னோட முடியை நீ பார்த்தது இல்ல அவ்ளோதான். இனிமேல் உன்னோட வீட்டுக்கு வந்ததும் நான் இதை கழத்தி வச்சிடுவேன். போதுமா?

அரவிந்த்: ஹாஹா… சந்தோசம்…. இது போதும்…

சஹானா:  சரி இப்போ சொல்லு…

அரவிந்த்: ஆனா அதுக்கு முன்னாடி ஒரு சின்ன சாரி சொல்லணும்…

சஹானா: எதுக்கு டா?



அரவிந்த்: இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாடிக்கு வந்ததும், உன்னோட ரூம்ல நீ முக்காடு இல்லாம இருந்ததை நான் பார்த்தேன். அதை உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு…

சஹானா: ச்சே.. அவ்ளோதானா… நான் அப்போதான் அதை கழத்தினேன்… உன்னோட ரூம்ல லைட் போட்டதும் மறுபடி அதை எடுத்து மாட்டினேன்.

அரவிந்த்: தெரியும்… நீ என்கிட்ட மறைச்சு வைச்சிருந்த உன்னோட முடியை கவனிச்சேன்…

சஹானா: நான் வேணும்னு மறைச்சு வைக்கலடா குண்டா…

அரவிந்த்: அதுவும் தெரியும்.

சஹானா: இப்போ என்ன.. இந்த முக்காடு தான பிரச்சனை… இப்போவே எடுக்குறேன்… என்னோட முடியை பார்த்துக்கோ….

சஹானா அரவிந்தின் முன்னால் தன்னுடைய தலைமுடியை மூடி இருந்த துணியை கழத்தினாள். அவளுடைய அழகு முகம் முழுவதுமாக தெரிந்தது. திரும்பி நின்றாள்… 



மடித்து க்லிப் போட்ட அவளுடைய ஜடை தெரிந்தது. மெல்ல தன்னுடைய க்லிப்பை கழத்தினாள். அவளுடைய ஜடை சரிந்து வந்து விழுந்தது. அவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த ஆறு அடி தூரம் அவனுக்கு அதிகமாக இருந்தது. ஆனாலும் அவள் கூந்தலை ரசித்தான். 

ஜடையை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டே மறுபடி அவனை நோக்கி திரும்பினாள். சஹானாவிற்கு  நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒருவர் முன் சுதந்திரமாக இருப்பதுபோல தோன்றியது. அர்விந்த் முன் தலையை மூடாமல் இருப்பது அவளுக்கு கூச்சமாக இல்லை… அவனை “வாடா”, “போடா” என அழைப்பது ஒரு காரணமாக இருக்கலாம். அரவிந்த் அவள் தலைமுடியை இன்னமும் ரசித்துக்கொண்டிருந்தான். 

பின்னர் சஹானாவின் கண்களை பார்த்து பேச ஆரம்பித்தான். தான் ஒரு Hair fetish என்பதையும்… அதை எப்படி முதன் முதலில் புவனாவிடம் எடுத்துக்கூறி சம்மதிக்க வைத்தான் என்பதையும் கூறினான். கண் சிமிட்டாமல் அவன் சொன்ன அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். அனைத்தையும் கூறி முடித்தபின் அவனை பிரமிப்புடன் பார்த்தாள். பார்க்க அமைதியாக இருந்தாலும் இதையெல்லாம் செய்ய தைரியம் வேண்டும் என நினைத்தாள்.

அரவிந்த்: என்ன அம்மு அப்படி பார்க்கிற?

சஹானா: சூப்பர்டா குண்டா… எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை.. நீ Luckyயா.. இல்ல உன்னோட அம்மா Luckyயானு…

அரவிந்த்: ரெண்டு பெரும் தான்…



சஹானா: அதுவும் சரிதான்…

அரவிந்த்: இப்போ உன்னோட சந்தேகம் சரியா போச்சா?

சஹானா: அது சரியா போச்சு… வேற ஒரு சந்தேகம் வருது…

அரவிந்த்: என்ன?

சஹானா: எனக்கும் உன்னோட அம்மாகிட்ட சொல்லி என்னோட தலைமுடிக்கு எண்ணை தேய்ச்சு, ஜடை பின்ன சொல்லணும்னு ஆசை இருக்கு… ஆனா உன்னோட அம்மாவுக்கே நீதான் தலைவாரி விடுற… இப்போ இதெல்லாம் நான் உன்னை கேட்கிறதா இல்ல.. அம்மாவை கேட்கிறதா?

அரவிந்த்: அப்படி போது…  நான் ஒரு யோசனை சொல்லுறேன் கேளு..

சஹானா:  என்னடா?

அரவிந்த்: என்னோட அம்மாகிட்ட கேளு… அவங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்?

சஹானா: என் அப்படி சொல்ற?

அரவிந்த்: என்னோட அம்மாவுக்கு பொண்ணு இல்லைனு வருத்தம். உன்னோட முடியை ஒரு தடவை பார்த்து, எனக்கு பொண்ணு இருந்தா இதுமாதிரி அழகா ஜடை பின்னி சந்தோச பட்டிருப்பேன்னு… என்கிட்ட சொல்லி இருக்காங்க…


சஹானா: சூப்பர் டா… நான் நாளைக்கு கண்டிப்பா அம்மாகிட்ட வந்து கேட்கிறேன்.

மறுநாள் சஹானா வீட்டிற்கு வந்தாள். எப்போதும்போல உள்ளே நுழைந்தவள் தன்னுடையை தலையை சுற்றியிருந்த முக்காடை கழத்தி வைத்தாள். புவனா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய க்லிப்பை கழத்திவிட்டு, நீளாமன ஜடையை சரிந்து தவழவிட்டாள். அரவிந்தும் அப்போது உள்ளிருந்து வந்தான். 



அவனும் சஹானா அவளுடைய தலைமுடியை கழத்திவிடுவதை கவனித்தான். பின்னர் அருகில் இருந்த ஒரு மேஜையில் அந்த துணியை வைத்துவிட்டு அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தாள். சேரின் பின்னால் வந்து நின்றான் அரவிந்த். சஹானா தன்னுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டாள்.  அவளுடைய பின்னல் தரையை தொட்டு ஆடிக்கொண்டு இருந்தது. அரவிந்த் வெளிச்சத்தில் சஹானாவின் தலைமுடியின் அழகை ரசித்தான்.  புவனா ஒன்றும் புரியாமல் பார்த்தாள். பின்னர் நிமிர்ந்து அரவிந்தை பார்த்தாள். அரவிந்த் புவனாவை பார்த்து சிரித்தான்.





No comments:

Post a Comment