Monday, 21 October 2024

அரவிந்தின் அம்மா புவனா - மூன்றாம் பாகம்

அரவிந்த் குழந்தையாக இருந்தபோது பலமுறை அவளுடைய தலைமுடியை பிடித்து விளையாடியிருக்கிறான். இப்போது அவன் சற்று வளர்ந்த குழந்தை அவ்வளவுதான் என தோன்றியது. நீண்ட சிந்தனைக்கு பிறகு அவனிடம் தன்னுடைய முடியை கொடுப்பது என முடிவுக்கு வந்தாள். அரவிந்த் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவனை அழைத்து பேசினாள்.




புவனா: அரவிந்த்… இன்னைக்கு ஸ்கூல்-ல எப்படி போச்சு?


அரவிந்த்: நல்லா போச்சு… புதுசா ஒரு சார் வந்திருக்கார். நல்லா போர் அடிக்காம பாடம் சொல்லி கொடுக்கிறார்.


புவனா: உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.


அரவிந்த்: சொல்லுங்கம்மா….


புவனா: நீ அம்மாகிட்ட ஒரு விஷயம் கேட்ட.. ஞாபகம் இருக்கா?


அரவிந்த்: உங்களோட தலைமுடியை தொட்டுப்பார்க்கணும்னு கேட்டேன்-ல.. அதுவா?

                                  

புவனா: ஆமா…


அரவிந்த்: சொல்லுங்க…


புவனா: நான் என்னோட தலைமுடியை உன்கிட்ட கொடுக்க சம்மதிக்கிறேன். ஆனா இந்த விஷயம் ரகசியமா இருக்கணும்… வெளிய யாருக்கும் தெரியக் கூடாது.


அரவிந்த்: ரொம்ப தாங்க்ஸ் ம்மா… கண்டிப்பா நா யாருக்கும் சொல்லமாட்டேன்.


புவனா: அப்பாவுக்குகூட தெரியக்கூடாது.


அரவிந்த்: சரிம்மா….


புவனா: நீ அம்மாகிட்ட எப்போவுமே உண்மையை மட்டும் பேசுறங்கிற நம்பிக்கையில நான் என்னோட முடியை உன்கிட்ட கொடுக்கிறேன். நீ என்கிட்ட பொய் சொல்லவே கூடாது.


அரவிந்த்: கண்டிப்பா பொய் சொல்ல மாட்டேன்.


புவனா: ஆனா.. எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்குடா…


அரவிந்த்: பயப்படாதீங்கம்மா….


புவனா: பயம் இல்லடா… கூச்சம்…


அரவிந்த்: சரி… நா ஒரு யோசனை சொல்லுறேன்…




புவனா: என்ன சொல்லு…


அரவிந்த்: இன்னையில இருந்து உங்களுக்கு நான் தலை சீவி விடுறேன்… எனக்கு அவ்வளவா உங்களை மாதிரி தலை சீவி ஜடை பின்னி விட தெரியாது…. நீங்க கொஞ்சம் எனக்கு சொல்லி கொடுங்க… பாதி ஜடையை நீங்க பின்னி முடிச்சதும் மீதி ஜடையை நான் பின்னிவிடுறேன்.


புவனா: அதுவும் நல்ல யோசனை தான்.


அரவிந்த்: அதே மாதிரி… உங்களோட ஜடையை எப்போவுமே நான் தான் அவிழ்த்து விடனும்…  கொஞ்ச நாள் உங்களுக்கு இது பழகிடும்… அப்புறமா நானே உங்களோட தலைமுடிக்கு எண்ணை தடவி விடுறேன்….


புவனா: பரவாயில்லயே… நல்ல யோசனை சொல்லுற…


அரவிந்த்: எப்படியும் உங்களோட தலைமுடியை தொடணும் ஆசைதான். இப்போ ஆரம்பிக்கலாமா?


புவனா: இப்போவே-வா… ?


அரவிந்த்: வழக்கமா சாயங்காலம் நான் வந்ததுக்கு அப்புறமா தலைவாரி ஜடை பின்ணுவீங்களே… அதான் கேட்டேன்…


புவனா: ஆமா.. சரி.. நீ என்னோட சீப்பை எடுத்துட்டு வா…


அரவிந்த்: சரிம்மா…. இதோ வாரேன்.


(அரவிந்த் உள்ளே சென்று கண்ணாடியின் அருகில் இருந்த சீப்பை எடுத்து வந்தான்.)



அரவிந்த்: இந்தாங்கம்மா…


புவனா: முதல்ல என்னோட முடியை எப்படி சீவி ஜடை பின்ணுறேன்-னு கவனி…


அரவிந்த்: மறந்துட்டீங்களா… முதல்ல உங்களோட ஜடையை அவிழ்க்கனும்… அது இப்போ என்னோட வேலை.


புவனா: ஆமா கண்ணா.. மறந்துட்டேன். (ஜடையை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டே..) சரி இந்தா நீயே என்னோட ஜடையை அவிழ்த்துவிடு…


அரவிந்த்: முதல்ல இப்படி உட்காருங்க…


புவனா: சரி…


இவ்வளவுநேரம் அரவிந்துடன் பேசியதில் புவானாவின் மனதில் இருந்த கூச்சம் சற்று விலகியிருந்தது. மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன்னுடைய ஜடையை கையில் பிடித்துக் கொண்டே குனிந்து அருகில் இருந்த ஸ்டூல்-ல் அமர்ந்தாள். ஆவலுடன் நடந்து வந்த அரவிந்த் அப்படியே அவளுடைய பின்பக்கம் சென்றான். அரவிந்த் அவளுடைய தலை முடியை எப்படி தொட்டாலும் அமைதியாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே கண்களை மூடி அமர்ந்தாள். அரவிந்த் பல முறை ரசித்த அம்மாவின் தலை முடியை அவள் சம்மதத்துடன் தடவிப் பார்க்க தயாரானான். அரவிந்த் நேரடியாக புவானாவின் ஜடையை கழுத்தின் அருகே பிடித்தான். புவனா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்று கூச்சமான மற்றும் வித்யாசமான உணர்ச்சிகளை அனுபவித்தாள். புவனா முன்னால் எடுத்துப் போட்டிருந்த ஜடையை மெல்ல பின்புறமாக எடுத்தான். கண்களை மூடி அமர்ந்திருந்த புவனா, தன்னுடைய கைப்பிடிக்குள் இருந்த ஜடை மெல்ல கைகளில் இருந்து நழுவி, தோள்பட்டை வழியாக அரவிந்திடம் செல்வதை உணர்ந்தாள்.


அரவிந்த் புவானாவின் ஜடையை தன் உள்ளங்கைக்குள் பிடித்து அவள் தலைமுடியின் அடர்த்தியை உணர்ந்தான். மெல்ல அவளுடைய உச்சந்தலையில் கை வைத்து அவள் தலைமுடியை தடவிப் பார்த்தான். பின்னர் மெல்ல அவளுடைய தலைமுடியை தடவிக்கொண்டே மீண்டும் ஜடையை பிடித்தான். அவள் ஜடையின் அழகை பிடித்து ரசித்துக் கொண்டே வந்து ஜடையின் அடிப்பகுதியை பிடித்தான். 


கழுத்துப் பகுதியிலிருந்த ஜடையின் அடர்த்தியை அடிப்பகுதியிலும் உணர்ந்தான் அரவிந்த். மெல்ல புவானாவின் ஜடையை அவிழ்த்து விட ஆரம்பித்தான். ஜடையின் ஒவ்வொரு கற்றையையும் அனுபவித்து அவிழ்த்து விட்டான். முதலில் அரவிந்த் அவளுடைய ஜடையை அவிழ்த்து விடுவதை புவனா உணரவில்லை. அவன் மெல்ல முதுகுக்கு மேல் அவிழ்த்து விட ஆரம்பித்த பின்னர் தான் உணர்ந்தாள். அரவிந்த் அவசரப்படாமல் மென்மையாக அவளுடைய தலைமுடியை கையாழ்வது அவளுக்கு பிடித்தது.

அவளுடைய தலைமுடியை அவிழ்த்து முடித்த பின் மெல்ல அவனுடைய விரல்களால் புவனாவின் தலைமுடியை கோதி விரித்து விட்டான். பூக்களை வருடுவது போல அவள் தலை முடிக்குள் கை விட்டு தடவிக் கொண்டிருந்தான். அரவிந்தின் ஸ்பரிசம் மிகவும் மிருதுவாக இருந்தது. அரவிந்த் இவ்வளவு அழகாக தன்னுடைய தலை முடியை ஏந்திக் கொள்வான் என புவனா எதிர்பார்க்கவில்லை. 

புவனா தன்னையும் மறந்து அவன் விரல்கள் கூந்தலுக்குள் விளையாடுவதை ரசிக்க ஆரம்பித்தாள். தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அரவிந்த் வீணாக்க விரும்பவில்லை. புவனா மெய் மறந்திருந்த சில சமயம் அவளுடைய தலைமுடியை அள்ளி வாசனையை நுகர்ந்து பார்த்தான். பின்னர் சில வினாடிகள் முத்தம் கொடுத்தான். புவனா கண்ணை திறந்த போது சில நிமிடங்கள் ஓடியிருந்தது. சாதாரண நேரங்களில் இந்நேரம் புவனா ஜடையை அவிழ்த்து விட்டு, தலைவாரி மீண்டும் ஜடை பின்னி முடித்திருப்பாள். இப்போது அவளுடைய தலைமுடி ஜடையிலிருந்து அவிழ்ந்து, விரித்து விடப்பட்டுள்ளது. அவ்வளவு தான். ஆனால் அவள் அதை ரசித்துக்கொண்டிருந்தாள்.

அரவிந்த் புவனாவிடம் இருந்த சீப்பை கேட்டு வாங்கினான். இந்த முறை புவனா எதையும் யோசிக்கவில்லை. சீப்பை அரவிந்திடம் கொடுத்தாள். அரவிந்த் சீப்பை வாங்கி அவளுக்கு தலை வாரி விட ஆரம்பித்தான். புவனா மன அழுத்தங்கள் குறைவது போல உணர்ந்தாள். அவளுக்கு சிறு வயது ஞாபகம் வந்தது. புவனாவின் அம்மா அவளுக்கு தலை வாரி விடும் போது இது போல எந்த கவலையும் இல்லாமல் அமர்ந்திருப்பாள். இப்போதும் அவளுக்கு அது போலவே தோன்றியது. சிறிது நேரம் கழித்து எப்படி ஜடை பின்னுவது என அவனுக்கு சொல்லி கொடுத்தாள். பாதி ஜடையை பின்னி முடித்ததும் தலைமுடியை அரவிந்திடம் கொடுத்து மீதி ஜடையை பின்னி விட சொன்னாள். அரவிந்த் ஆர்வமாக அவளுக்கு ஜடை பின்னி விட்டான். ஓரளவு சரியாகவே பின்னல் போட்டிருந்தான். அதன் பின் இந்த நிகழ்வு தினமும் நடக்கும். மெல்ல புவனாவின் தலைக்கு எண்ணை தேய்த்து விடுவது, அவளுடைய ஈரமான தலைமுடியை துவட்டி விடுவது என அவள் தலைமுடி சம்பந்தப்பட்ட விஷயங்களை அரவிந்த் எடுத்துக்கொண்டான்.


பழைய நினைவுகளில் இருந்து புவனா மீண்டு வந்தாள். அரவிந்த் ஆசை தீர அவளுடைய தலைமுடியில் விளையாடிக் கொண்டு இருந்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடை வரை நீளமாக இருந்த புவனாவின் தலைமுடி இப்போது இடுப்பளவு மட்டுமே இருந்தது. அதுவும் அரவிந்தின் ஆசைக்காக அவன் கைகளாலேயே வெட்டப்பட்டது தான். 

அரவிந்த் நீளமான கூந்தலை விரும்புவதோடு சேர்த்து கூந்தலை கத்தரிக்க வேண்டும் என ஆசைகளை வளர்த்துக் கொண்டதன் விளைவு அது. ஆனால் அரவிந்தின் ஆசைகள் இதோடு நிற்க போவதில்லை என புவனா உணர்ந்திருந்தாள். கண்டிப்பாக ஒருநாள் மொட்டை அடிக்க வேண்டும் என கூறுவான் என்பது அவளுக்கு தெரியும். ஆனால் அதற்கான வழியும் அவளிடம் இருந்தது. அரவிந்தின் கவனத்தை புவனாவின் தலை முடியும், புவனாவின் கவனத்தை அரவிந்தின் ஆசைகளும் ஆட்கொண்டிருந்த நேரத்தில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. 

அரவிந்த், புவனா இருவரும் ஒரு வினாடி சுதாரித்து ஒருவரை ஒருவர் பார்த்தனர். பின்னர் புவனா கடிகாரத்தை நோக்கினாள். யார் வந்திருப்பது என இருவருக்கும் புரிந்தது. அரவிந்திற்குள் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. புவானாவின் தலைமுடிக்குள் மூழ்கியிருந்த அரவிந்த் எழுந்து சென்று கதவை திறந்தான். வெளிர் நீலநிற உடையில் சிரித்த உதடுகளோடு அழகான ஓவியம் போல நின்றிருந்தாள் சஹானா.  புவனாவை தவிர்த்து அரவிந்த் தொட்டுப் பார்த்து அனுபவிக்கும் அடர்த்தியான, நீளமான கூந்தலுக்கு சொந்தக்காரி.



சஹானா பற்றிய முன்கதை. அரவிந்த் வீட்டின் எதிர்வீட்டில் குடியிருக்கும் ஒரு அழகுப் பதுமை. 19 வயது, நல்ல சிவப்பு நிறம், அளவான உயரம். சற்றே மெல்லிய உடல்வாகு. தொடை வரை வளர்ந்த நீளமான தலைமுடி. அவளின் பின்னிய ஜடையை கையில் ஏந்தி பார்க்க பெண்களுக்கும் ஆசை வரும்.பழகியவர்களுடன் அளவாக பேசுவாள், அழகாக சிரிப்பாள். முன்பின் தெரியாதவர்களை நிமிர்ந்து கூட பார்க்கமாட்டாள். சஹானாவின் பெற்றோர் காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறியவர்கள். தாய் சமீரா மற்றும் தந்தை விஷ்ணுவின் ஒரே மகள். முக்காடு போடாத சஹானாவை வெளி உலகம் பார்த்தது இல்லை. அவளுடைய முக அழகை முழுவதுமாய் பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தாயைப் போலவே உருவமும் உள்ளமும் கொண்டவள். 

அதனால் தானோ என்னவோ ஒன்பது வயதில் தாயை இழந்த போது அவளுடைய அம்மாவை போலவே இருக்க நினைத்து இஸ்லாமியத்தை தழுவிக் கொண்டாள். எந்த மதமும் வேண்டாம் என கூறுபவள், அம்மாவின் நினைவுகளை தக்க வைத்துக் கொள்ள அவளைப் போலவே மாறினாள். தினமும் தவறாமல் ஐந்து முறை தொழுகை செய்யும் இஸ்லாமிய பெண். வெளியூரில் இருக்கும் சமீராவின் அக்கா அவ்வப்போது வந்து சஹானாவை பார்த்துவிட்டு செல்வாள். ஆனால் விஷ்ணுவிடம் பேசமாட்டாள்.

சஹானா புவனாவின் குடும்பத்தில் நெருக்கமானது ஒரு சுவாரஸ்யம். கணபதி தன்னுடைய குடும்பத்துடன் அந்த வீட்டில் குடியேறிய சமயம் அருகில் இன்னொரு வீடு கட்டிடப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருந்தது. காலையில் பால் காய்ச்சிய பின் அரவிந்த் பள்ளிக்கு சென்ற சில நிமிடங்களில், விஷ்ணு அவனுடைய வீட்டின் கட்டிடப் பணிகள்  பார்வையிட சஹானாவை அழைத்துக் கொண்டு வந்தான். அப்போது கணபதி மிகவும் வற்புறுத்தி அழைக்கவே, விஷ்ணுவும் சஹானாவும் உள்ளே வந்தனர். 

புவனாவும் அவர்களை வரவேற்று உபசரித்தாள். புவனாவின் நீளமான ஜடையை பார்த்தபோது சஹானாவிற்கு அவளுடைய அம்மாவின் நினைவு வந்தது. பின்னர் புவனா, சஹானாவை அழைத்துக் கொண்டு வீட்டை சுற்றிக்காட்டினாள். அம்மாவின் நினைவுகள் மனதில் வந்ததால், புவனாவின் அருகிலேயே உரசிக் கொண்டு சென்றாள் சஹானா. பெண் குழந்தை இல்லாத காரணத்தால், அரவிந்த் வயதை ஒட்டிய சஹானாவை பாசத்தோடு தோள் மேல் கைபோட்டு அழைத்துச் சென்றாள் புவனா. இரண்டு மாதங்கள் கழித்து விஷ்ணுவும் சஹானாவும் புது வீட்டில் குடியேறினார்கள். விஷ்ணுவின் காதல் திருமணம் பற்றியும், சஹானா தாயில்லாத குழந்தை என்பதையும் அறிந்து புவனா வருந்தினாள். அதனாலேயே அவ்வப்போது சஹானாவை வீட்டிற்கு அழைப்பாள்.


சஹானாவிற்கு நெருங்கிய தோழிகள் யாரும் கிடையாது. அவளுடைய தோழன், தோழி எல்லாமே அப்பா மட்டும் தான். ஆனால் ஒரு நாளில் விஷ்ணு அவளிடம் செலவிடும் நேரம் மிகவும் குறைவு. காலை 7மணிக்கு வீட்டிலிருந்து கிளம்புபவன் இரவில் வீட்டிற்கு வர 10 மணிக்கு மேல் ஆகும். ஞாயிற்று கிழமைகளை மட்டுமே முழுவதுமாக மகளுடன் செலவிடுவான். அதிக நேரத்தை தனிமையிலேயே செலவிடுவாள். தனிமையை தவிர்க்க படிப்பில் கவனம் செலுத்துவாள். ஆனாலும் அம்மா அருகில் இல்லாத சோகம் மனதை உறுத்தும். 



புது வீடு வந்தபின் அவ்வப்போது புவனாவிடம் வந்து பேசுவாள். அரவிந்த் டியூசன் சென்ற பின் தான் வருவாள். சில சில நாட்களிலேயே நல்ல நெருக்கமானாள். அரவிந்த்தை பார்க்கையில் மெலிதாக புன்னகைப்பாள், ஆனால் உடனே அங்கிருந்து நகர்ந்து விடுவாள். எப்பொழுது வீட்டிலிருந்து வெளியே வந்தாலும் தலையை முக்காடிட்டு மறைத்துக் கொண்டு தான் வருவாள். அழகாக தெரிந்தாலும் முகத்தை முழுவதுமாக காட்டாமல் மறைந்து கொள்வதால் அரவிந்த் அவளை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை.



No comments:

Post a Comment