Friday, 4 October 2024

வசந்தகாலம் - பதினான்காம் பாகம்

வசந்த் அமுதாவின் மொட்டை அடிக்கப்பட்ட தலைமுடியை எடுத்து வந்து ஒரு பெட்டியில் பத்திரமாக வைத்தான். மிருதுவான அந்த தலைமுடியை கைகளில் இருந்து கீழே வைக்க அவனுக்கு மனம் வரவில்லை. அமுதா தன்னுடையை தலைமுடியை விரித்துவிட்டு அமர்ந்ததும் அவள் முடியை மொட்டை அடித்த நினைவுகளும் மனதில் ரீங்காரமிட்டது. அமுதாவின் தலையை மொட்டை அடிக்கும்போது வனிதா தன்னுடைய தலைமுடியை விரித்துவிட்டு நின்று கவனித்துக்கொண்டிருந்தது அவனுக்கு நினைவிற்கு வந்தது. அவள் கண்களில் அமுதாவிற்கு மொட்டை அடிப்பதை காண்பதில் ஒரு ஆர்வம் இருந்தது. விரைவில் அவளே தன்னுடைய தலையை மொட்டை அடிக்க வருவாள் என்ற எண்ணம் அவனுக்குள் தோன்றியது.

நந்தினி தன்னுடைய தலை மொட்டை அடித்துக் கொண்டிருப்பதை  தவிர்க்க காலையில் அவள் கணுவந் அவளுக்கு ஜடை பின்னியதை நினைக்க ஆரம்பித்தாள். நீண்டநாளக்குப்பின்னர் அவனுடைய காதலை அவனுடைய ஸ்பரிசத்தில் உணர்ந்தாள்.


தன்னுடைய மொபைலை எடுத்து நந்தினிக்கு “நாளை உன்னுடைய தலைமுடியை கொடுப்பதற்கு தயாராக இரு” என ஒரு குறுஞ்ச்செய்தி அனுப்பினான். அவள் “ம்ம்” என பதி அனுப்பி இருந்தாள். பின்னர் இரவு உறங்கச்செல்வதற்கு முன்னால் ரம்யாவை அழைத்து அமுதாவின் தலையை மொட்டை அடித்தது பற்றியும், வனிதாவின் தலைமுடியை மொட்டை அடிக்காமல் விட்டதையும் கூறினான். ரம்யா தன்னுடைய தலைமுடியை தடவிக்கொண்டே அமுதாவின் நிலையை யோசித்தாள். ஆனால் வனிதாவிற்கு மொட்டை அடிக்காமல் விட்டது அவளுக்கு மகிழ்ச்சியே.


மறுநாள் காலை நந்தினியின் வீட்டிற்கு வந்துகொண்டிருப்பதாக அழைத்து கூறினான். நந்தினியின் கணவன் இன்னும் வீட்டிலேயே இருப்பது அவளுக்கு பயமாக இருந்தது. வழக்கமாக குடிக்க செல்லும் அவன் நேற்றுமுதல் குடிப்பது இல்லை என அவளுக்கு சத்தியம் செய்திருக்கிறான். மேலும் அவனுடைய சமீபத்திய நடவடிக்கைகள் நல்லவிதமாக இருந்தது. அதனால் அவனிடம் என்ன சொல்லி வெளியே அனுப்புவது என யோசித்துக்கொண்டிருந்தாள். அவனை தேடிக்கொண்டே படுக்கை அறைக்கு வந்தபோது அவன் குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டிருந்தான். அவன் வெளியே செல்ல தயாராகிறான் என புரிந்து சற்று நிம்மதியானாள். 

அவன் கண்ணாடிமுன் நின்று தலைவாரிக்கொண்டிருந்தான். நந்தினி அவன் பின்னால் நிற்பதை கண்ணாடியில் கவனித்தான். பின்னர் திரும்பி அவளைப்பார்த்து சிரித்தான். அவளை அருகில் வரச்சொல்லி கண்களால் சைகை செய்தான். நந்தினி மெல்ல அவனருகில் வந்தாள். அவள் தோள்களை பிடித்து மெல்ல  அவளை கண்ணாடிமுன் நிறுத்தினான். சற்றே நாணத்துடன் அழகாக கண்ணாடி முன் நின்றாள். அவள் கையில் இருந்த சீப்பை கீழே வைத்துவிட்டு அவளுடைய கொண்டையை தடவினான். பின்னர் மெல்ல அவளுடைய கொண்டையின்கீழ் கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தான். அவளுடைய முத்தத்தில் காதலும் காமமும் சேர்ந்தே தெரிந்தது. நந்தினி கையில் பிடித்திருந்த சேலையை நழுவவிட்டாள். அவளுடைய கொண்டையை அவிழ்த்துவிட்டு அவனை நோக்கி திருப்பினான்.


விரித்துவிட்ட அடர்த்தியான நீளமான முடியுடன் தலையை குனிந்தவாறே நந்தினி திரும்பினாள். அவள் முகத்தில் அவனிடம் எப்பொழுதும் காட்டும் கோவம் இல்லை. மாறாக சற்று சோகமும் நாணமும் தெரிந்தது. அவள் தலைமுடியை கோதி முத்தமிட்டான். பின்னர் அவன் இரு கைகளால் அவள் முகத்தை நிமிர்த்தி அவளிடம் “நீ உன்னோட தலைமுடியை மொட்டை அடிக்கப்போற… உனக்கு நான் தலை சீவி விடவா?” என்றான். நந்தினியின் கண்கள் ஈரமாயின. அவள் எதுவும் பேசாமல் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு குனிந்து அருகில் இருந்த சீப்பை எடுத்து அவனிடம் கொடுத்தாள். 

பின்னர் குனியும்போது வழிந்து முன்னால் விழுந்த தன் முடியை கைகளால் ஒதுக்கிவிட்டு திரும்பி நின்றாள். நந்தினி சம்மதித்துவிட்டாள் என்பதை புரிந்து கொண்டு அவளிடம் இருந்து வாங்கிய சீப்பை வைத்து அவளுடைய கூந்தலை வாரிவிட துவங்கினான். முதல் முறையாக அவளுடைய கணவன் அவளுக்கு தலைவாரிவிடுகிறான். ஆனால் இந்த அழகியகூந்தல் இன்று மொட்டை அடிக்கப்பட்டு வேறு ஒருவனுடன் சென்றுவிடும் என்ற எண்ணம் அவளை மேலும் வருத்தமுற செய்தது.


நந்தினியின் கணவன் அவள் தலைமுடியின் அழகை ரசித்தான். அவனுக்காக அவள் தன்னுடைய முடியை இழப்பது அவனுக்கு கஷ்டமாக இருந்தது. அவள் தலைமுடியை அள்ளி முத்தமிட்டுவிட்டு அவளுடைய நீளமான முடியை வாரிவிட்டான். நந்தினியின் அடர்த்தியான முடியை மூன்று கற்றைகளாக பிரித்தான். பின்னர் மெல்ல அவள் கூந்தலை பின்ன ஆரம்பித்தான். நந்தினியின் தலைமுடி அழகிய ஜடைப்பின்னலாக மாறிக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவளுடைய முடியை தொடைவரை தொங்கும் ஜடையாக பின்னி முடித்தான். நந்தினி அவன் பின்னிய ஜடையை எடுத்து முன்னால் போட்டு கண்ணாடியில் பார்த்துக்கொண்டே தடவினாள். 

இவ்வளவு அடர்த்தியான முடியை மொட்டை அடிக்கவேண்டுமே என்ற எண்ணம்  தோன்றியது. நந்தியின் கணவன் அவளை வெளியில் அழைத்துவந்தான். அவள் வாங்கிவைத்திருந்த மல்லிகை பூவை எடுத்து அவளை திரும்பி நிற்கவைத்து அவள் தலைமுடியில் சூடினான். பின்னர் அவளிடம் “ஒரு வேளையாக வெளியே செல்ல வேண்டும்.  திரும்பி வர சிறிது நேரம் ஆகும்” என்றான். நந்தினி அவனிடம் “எனக்கும் ஒரு வேலை இருக்கிறது. நீங்க திரும்பி வரும்போது நான் என்னுடைய தலையை மொட்டை அடித்திருப்பேன்” என்றாள். அவன் “சரி” என்பதுபோல தலையை அசைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.


நந்தினியின் கணவன் கதவை சாத்திவிட்டு வெளியே செல்லும்போது எதிரில் ஒரு கார் வந்து நின்றது. உள்ளிருந்து வசந்த் இறங்கினான். நந்தினியின் கணவனை பார்த்ததும் அவனிடம் வந்தான். அவன் கையில் ஒரு கவர் கொடுத்தான். அதில் கொஞ்சம் பணமும் ஒரு லெட்டரும் இருந்தது. அந்த லெட்டரில் வாசன் வேலை செய்யும் கம்பனியில் நந்தினியின் கணவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்த தகவல் இருந்தது. கண்களில் கண்ணீருடன் நிமிர்ந்து வசந்த்தை பார்த்தான். 

வசந்த்திற்கு அவன் கண்களை பார்த்து பேசுவது கஷ்டமாக இருந்தது. அவனுடைய மனைவியின் தலையை மொட்டை அடிக்கசென்று கொண்டே கணவனிடம் பணத்தை கொடுப்பது குற்ற உணர்ச்சியாக இருந்தது. ஆனால் ஒருவகையில் அவனுக்கு நல்லது செய்துகொண்டிருப்பதால் அவன் அந்த குற்ற உணர்ச்சியை கடந்து சென்றான். 

வசந்த் அவனிடம் “இனிமேலும் நீங்க குடிக்க மாட்டீங்கன்னு நம்புறேன்” என்றான். “நந்தினி மேல சத்தியமா குடிக்கமாட்டேன்” என்றான். வசந்த் நந்தினியின் தலையை மொட்டை அடிப்பது தவறு என்றாலும் தன்னை மன்னித்துவிடுமாறு கூறினான். அவன் “சீக்கிரம் மொட்டை அடித்துவிட்டு அவளுடைய முடியை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுங்கள்” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.



வசந்த் அவளுக்கு மொட்டை அடிப்பதை தனிமையில் அவளுடைய கணவனை சந்தித்து விளக்கி இருந்தான். போதையில் இருந்த அவள் கணவன் முதலில் கோவப்பட்டான். ஆனால் அவனுடைய குடிப்பழக்கமும், பார்த்திபனின் தவறான வழிகாட்டுதலும் தான் அவள் தலைமுடியை பணயம் வைக்கும் அளவிற்கு வந்துவிட்டதை விளக்கினான். ஆனாலும் அவனுடைய மனைவிக்கு மொட்டை அடிக்கப்போவதா கூறுவதை தாங்கிக்கொள்ளமுடியவில்லை. 

ஏற்கனவே வசந்த் வனிதாவின் தலையை மொட்டை அடிக்காமல் தவிர்க்க திட்டமிட்டு இருந்தான். கல்லூரி செல்லும் பெண்ணிற்கு மொட்டை அடித்து அவள் கல்லூரி கனவுகளை வீணாக்க அவன் விரும்பவில்லை. அதேபோல் நந்தினிக்கும் ஏதாவது சலுகை வழங்க நினைத்தான். அவளுக்கு மொட்டை அடிக்காமல் அவள் முடியை கழுத்துவரை வெட்டி எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தான். 

ஆனால் ஏற்கனவே அந்த திட்டத்தை வசந்த் ஷைலஜாவிற்கு முடிவுபண்ணியிருந்தான். மேலும் அவனுக்கு நந்தினியின் தலைமுடியை மொட்டை அடிக்க நிறைய ஆசை இருந்தது. அலுவலகத்தில் தினமும் அவன் கண்முன்னால் அவள் ஆட்டிக்கொண்டிருந்த அவளுடைய நீளமான ஜடையை தன்னுடைய கையால் அவிழ்த்துவிட்டு மொட்டை அடிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தான். 

அதனால் குடியில் இருக்கும் அவள் கணவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து தந்தால் அவள் மீண்டும் இதுபோல பணத்தை திருடும் நிலைக்கு வரமாட்டாள் என நினைத்தான் வசந்த். அதனால் அவள் கணவனிடம் அவன் திருந்தி வேலை செய்ய ஒரு வாய்ப்பும் சிறுது பண உதவியும் செய்வதாக சொல்லியிருந்தான். அவனுடைய மனைவியின் திருடும் எண்ணமும், அதற்கு காரணமான தன்னுடைய குடிப்பழக்கமும் அவனுடைய குற்ற உணர்ச்சியை தூண்டியது. தான் திருந்திவாழ ஒரு சந்தர்ப்பமாகவும், மனைவியுடம் மீண்டும் அன்பாக இணைய கிடைத்த வாய்ப்பாகவும் இதை நினைத்தான். 

அவளுடைய தலைமுடிய மிக அழகானாது என நினைத்தாலும், இந்த மறுவாய்ப்பிற்க்கு கொடுக்கும் காணிக்கையாக அவளுடைய தலைமுடியை மொட்டை  அடிப்பதை  ஏற்றுக்கொண்டான். ஆனால் அவனுக்கு இந்த விஷயங்கள் தெரியும் என்பதை அவளுடைய தலையை மொட்டை அடிக்கும்வரை அவளிடம் சொல்ல வேண்டாம் எனக்கேட்டுக்கொண்டான். வசந்த் அவனுக்க் சம்மதம் தெரிவித்தான். அதன் விளைவாகவே நந்தினி அவள் கணவனிடம் வித்தியாசங்களை கண்டாள்.


வசந்த் நந்தினி வீட்டின் கதவை தட்டினான். அவள் கணவன் சென்ற ஒருசில நிமிடங்களிலேயே வசந்த் வந்துவிட்டான் என புரிந்துகொண்டாள். நல்ல வேளையாக அவள் கணவன் சரியான நேரத்தில் வெளியே சென்றுவிட்டான் என நினைத்துக்கொண்டாள். வசந்த் உள்ளே வந்ததும் நந்தினி கதவை தாளிட்டாள். பின்னர் ஒரு நாற்காலி எடுத்துவந்து அவன் முன்னால் போட்டாள். அவளுடைய நீளமான ஜடையை கவனித்தான். அவள் வழக்கமாக அலுவலகத்திற்கு வரும்பொழுது பின்னுவது போல நேர்த்தியாக இல்லாமல் சற்று ஏனோதானோவென இருந்தது. 

அவன் சற்றும் யோசிக்காமல் அவள் ஜடையை கையில் பிடித்தான். நந்தினி அதை எதிர்பார்க்கவில்லை ஆனாலும் அமைதியாக அவளுடைய முடியை அவன் கைகளில் தவளவிட்டாள். வசந்த் அவள் முடியை நுகர்ந்து பார்த்தான். மிகவும் வாசனையாக இருந்தது. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூவுடன் அவள் தலைமுடியை தடவினான். அவள் குடிக்க ஏதாவது வேண்டுமா என்றபோது வேண்டாம் என தலையசைத்தான். நந்தினி அவனிடம் “ஆரம்பிக்கலாமா?” எனக்கேட்டாள். 

வசந்த் அவளிடம் சரி என சொல்லிவிட்டு அவன் பாக்கட்டில் இருந்து ஒரு சவரக்கத்தியை எடுத்தான். அதை நந்தினியிடம் நீட்டினான். நந்தினி புரியாமல் அதை கையில் வாங்கிக்கொண்டு அவனைப்பார்த்தாள். பின்னர் அவளை அருகில் இருந்த ஸ்டூல்-ல் அமரவைத்தான். அவளுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டுவிட்டான். அவளிடம் நடந்த அனைத்தையும் கூறினான். அவளுடைய கணவனை சந்தித்தது முடிதால் இப்போது அவன் வெளியில் செல்லும்போது அவன் கையில் வேலையும் அவனுடைய கடனைதீர்ப்பதற்கு கொஞ்சம் பணமும் கொடுத்ததை கூறினான். மேலும் அவள் தலையை இப்போது மொட்டை அடிக்கப்போவதற்கு மன்னிப்பும் கேட்டான். 



ஒரு வேலை அவளுக்கு மொட்டை அடிப்பதில் சம்மதம் இல்லாமல் இருந்தாலோ அல்லது அவனை மன்னிக்க மறுப்பதாக இருந்தாலோ வசந்த் அவளுக்கு இப்போது மொட்டை அடிக்கப்போவதி இல்லை எனக்கூறினான். நந்தினி சற்று அதிர்ச்சியுடனும் கண்களில் கண்ணீரோடும் அவனைப்பார்த்தால். அவளுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. தன்னுடைய தலைமுடியை இழப்பதை நினைத்தாள் அவளுடைய மனம் கனமாக இருந்தது. ஆனால் தன்னுடைய தவறுக்கு தண்டனை வேண்டும் என்றும், அதேபோல கணவன் குடியைவிட்டு மீண்டும் நல்வழிப்பட கிடைத்த வாய்ப்பிற்கும் நன்றியாக ஏதாவது செய்ய வேண்டும் என்றும் தோன்றியது. மேலும் இப்போது மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நல்ல மனம் கொண்டவனாக இருப்பதால் அவனுக்கு தன்னுடையை தலைமுடியை கொடுப்பதுதான் சரி என தோன்றியது. 

அவள் கண்களில் இருந்த நீரை துடைத்துக்கொண்டு கையில் இருந்த சவரக்கத்தியை விரித்து வசந்த் முன்னால் நீட்டினாள். அவன் அந்த கத்தியை வாங்கிக்கொண்டு அவளைப்பார்த்தபோது சிறிய புன்னகையுடன் அவளுடைய ஜடையை எடுத்து பின்னால் போட்டுவிட்டு தலையை குனிந்தாள். நந்தினி அவளுடைய தலையை மொட்டை அடிக்க சம்மதித்துவிட்டாள் என புரிந்துகொண்டு அவள் பின்னால் சென்றான்.

அவளுடைய கூந்தலில் சூடியிருந்த மல்லிகையை தடவினான். பின்னர் அவள் ஜடையில்இருந்து அந்த மல்லிகைப்பூவை எடுத்தான். தாயைப்பிரிந்த குழந்தைபோல அந்த மல்லிகைப்பூ சோகமாக அவள் தலைமுடிக்கு முத்தமிட்டு பிரிந்தது.  வசந்த் நந்தினியின் அடர்த்தியான ஜடையை பிடித்தான். தொடை வரை தொங்கும் அந்த ஜடையை கைகளில் எடுத்து மெல்ல தடவிக்கொடுத்தான். அவள் ஜடையை அவிழ்க்க நினைத்தான். 


அப்போது நந்தினி அவளுடைய ஜடையை அவிழ்க்காமல் அப்படியே மொட்டை அடிக்குமாறு கேட்டாள். ஆனால் வசந்த் அவளுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு மொட்டை அடிக்க ஆசை இருப்பதாக கூறினான். தன்னுடைய கணவன் சிறிது நேரத்திற்கு முன்னர் ஆசையாக ஜடை பின்னிவிட்டதை கூறினாள். அதனால் அந்த ஜடையை அப்படியே விட்டு மொட்டை அடிக்கமுடியுமா எனக்கேட்டாள். வசந்த் நந்தினியின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்ல முடியவில்லை. சரி எனக்கூறினான். ஆனால் அவளிடம் அவளுடைய தலையை தண்ணீர் ஊற்றாமல் மொட்டை அடிக்க வேண்டும் என்றான். நந்தினிக்கும் தலையில் தண்ணீர் ஊற்றி அவளுடைய உடையை ஈரமாக்கிக்கொள்ள மனமில்லை.  

அதனால் அவளும் சம்மதித்தாள். வசந்த் திருப்தியுடன் சவரக்கத்தியை விரித்து அவளுடைய நெற்றியில் நடுவில் உள்ள வகிடில் வைத்தான். கத்தியின் குளிர்ச்சி தன் நெற்றியில் பட்டவுடன் நந்தினி கண்களை மூடிக்கொண்டாள். வசந்த் அவளுடைய தலையின் ஒரு பகுதியை கையால் பிடித்துக்கொண்டே அவள் முடியை மழிக்கத்துவங்கினான். தன்னுடைய தலைமுடி மொட்டை அடிக்கப்படுவதை நந்தினி அறிந்தாள். வசந்த் கையில் இருந்த கத்தி அவளுடைய ஈரமில்லாத தலைமுடியை வேர்கால்களில் வெட்டி வீழ்த்துவது அவளுக்கு தெரிந்தது. 



தலையில் தண்ணீர் இல்லாமல் இருப்பதால் கத்தி அவளுடைய முடியை மழிக்கும் போது சற்று வலியும் எரிச்சலும் இருந்தது. ஆனாலும் நந்தினி அமைதியாக இருந்தால். சிறிது நேரத்தில் அவள் முன்தலையின்  ஒரு பகுதி சற்று குளிர்ச்சி தெரிய ஆரம்பித்தது. வசந்த் விரைவாக தன்னுடைய தலையை மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறான் என நினைத்தாள். அவன் மெல்ல அவளுடைய பக்கவாட்டில் வந்து சிரைக்கஆரம்பித்தான். 

அவள் காதுமடல் மேல் இருந்த முடியை மழிக்கும்போது அவளுக்கு சற்று கூச்சமாகே இருந்தது. மொட்டை அடிக்கப்பட்ட அவளுடைய முடி கீழே விழாமல் வழிந்து வந்து அவள் தோள்களில் நின்றது. வசந்த் அவளுடைய வலது பகுதியை மொட்டை அடித்து முடித்து விட்டு இடது பகுதிக்கு சென்றான். உச்சியில் இருந்த வகிடில் கத்தியை வைத்து சிரைக்கஆரம்பித்தான். மெல்ல மெல்ல அந்த நீண்ட கொணண்ததல் அழகியின் தலைமுடி அவளை விட்டு சென்று கொண்டிருந்தது. கத்தி மெல்ல அவள் நெற்றியை நோக்கி வந்தது. 

அவள் முன்னந்தலையை சிரைக்கும் போது வசந்த் அவள் முன்னாள் வந்து நின்றான். நந்தினி அவள் கண்களை மூடியே இருப்பதை அவன் கவனித்தான். வசந்த் அவளுக்கு மிக அருகில் வந்து அவள் தலையை மொட்டை அடித்துக்கொண்டிருந்தான். அவனுடைய மூச்சுக்காற்று அவள் முகத்தில் பாடுவதை அவள் உணர்ந்தாள். ஆனாலும் கண்களை திறக்காமல் அமர்ந்திருந்தாள்.


வசந்த் அவளுடைய இடது பக்கத்தை சிரைத்துமுடித்தபின் அவள் பின்னால் சென்றான். தன்னுடைய மொட்டை அடிக்கப்பட்ட முடி வழிந்து தன்னுடைய தோள்களில் தவழ்ந்து கொண்டிருப்பது அவளுக்கு தெரிந்தது. தன்னுடைய முடியின் கணம் இப்போது பின்னால் நோக்கி இழுப்பது அவளுக்கு தெரிந்தது. மெல்ல தன்னுடைய தலையை நிமிர்த்தினாள். வசந்த் இப்போது அவள் பின்னால் இருந்த முடியை மழிக்க ஆரம்பித்தான். நந்தினி தன்னுடைய தலை மொட்டை அடித்துக் கொண்டிருப்பதை  தவிர்க்க காலையில் அவள் கணுவந் அவளுக்கு ஜடை பின்னியதை நினைக்க ஆரம்பித்தாள். நீண்டநாளக்குப் பின்னர் அவனுடைய காதலை அவனுடைய ஸ்பரிசத்தில் உணர்ந்தாள். 



மீண்டும் தன்னுடைய முடி வளர்ந்ததும் அவள் கணவன் அவளுடைய கூந்தலை எப்படி அனுபவிப்பான் என நினைத்துப்பார்த்தாள். அவனுக்காகவே மீண்டும் தன்னுடைய தலைமுடியை நீளமாக வளர்க்க வேண்டும் என நினைத்தாள். நந்தினி தன்னுடைய முடியை நீளமாக வளர்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் வசந்த் அவளுடைய தலையை கிட்டதட்ட மொட்டை அடித்து முடித்திருந்தான். அவளுடைய தலையில் இருந்த கடைசி கற்றை முடியை மழித்தபோது அவளுடைய அடர்த்தியான கனமான ஜடை தரையில் விழுந்தது. நந்தினி தன்னுடைய ஜடை தரையில் விழும் சத்தத்தை கேட்டாள். 

ஒரு பெரிய பூங்கொத்து தரையில் விழுவதுபோல அவளுடைய மிருதுவான தலைமுடி மொத்தமாக தரையில் விழுந்தது. தன் தலையில் இருந்து ஒரு பெரிய பாரம் குறைந்ததுபோல உணர்ந்தாள். நந்தினியின் மொட்டை அடிக்கப்பட்ட தலையை மெல்ல தடவிக்கொண்டே அவள் முன்னால் வந்தான். அவளுடைய ஜடையை கையில் எடுத்து வந்து நந்தினியின் மடியில் கிடத்தி “நன்றி நந்தினி” என்றான். இப்போது நந்தினி மெல்ல கண்களை திறந்தாள். அவளுடைய மடியில் அழகிய தலைமுடி உயிரற்று கிடந்தது. அவள் தன்னுடைய மொட்டையடிக்கப்பட்ட முடியை தொட்டுப்பார்க்க விரும்பவில்லை. தன்னைப்பொருத்தவரை இது இனிமேல் அவளுக்கு சொந்தமான முடியில்லை. வசந்த் அவளுடைய முடியை எடுத்துக்கொண்டு அவளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். கிளம்பும்போது அவளுடைய மொட்டை தலையை ஒருமுறை தடவிப்பார்த்து முத்தம் கொடுத்தான்.

வசந்த் ஏற்கனவே அவனுடைய அலுவலகத்தில் தன்னுடைய ராஜினாமாவை சமர்பித்திருந்தான். அவன் மறுநாள் காலையில் அமுதா மற்றும் நந்தினியின் தலைமுடியை தன்னுடைய பொக்கிஷமாக எடுத்துக்கொண்டு ரம்யாவை பார்க்க சென்று கொண்டிருந்தான். தன்னுடைய நீண்ட தலைமுடியுடன் ரம்யா அவனுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.


திங்கள்கிழமை நிறைய புதிய விஷயங்கள் நடந்தேறியது. அமுதா வழக்கமாக செல்லும் கோவிலுக்கு மொட்டை தலையுடன் சென்றாள். அவளுடைய கணவன் பார்த்திபனும் மொட்டை தலையுடன் அவளுடன் நின்றிருந்தான். இனி திருந்தி வாழ்வதாக அமுதாவிடம் தெரிவித்து மன்னிப்பு கேட்டு ஆவலுடன் கோவிலுக்கு வந்திருந்தான். அவர்களை கோவில் பூசாரி அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தார். கல்லூரிக்கு சென்ற வனிதா இது வரை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்த தன்னுடைய காதலனை சந்தித்தாள். அவனிடம் நம் இருவருக்கும் திருமணமானால் தன்னுடைய தலைமுடியை காணிக்கை தருவதாக வேண்டிக்கொண்டுள்ளதாக கூறினாள். அவன் சற்று அதிர்ந்து போனாலும் அவளுடைய விருப்பத்திற்கு சம்மதம் சொன்னான்.

                                   
 தன்னுடைய திருமணத்திற்கு பின்னர் வசந்த் தன்னுடைய தலையை மொட்டை அடிப்பதற்கு தடையில்லாமல் செய்துவிட்டாள் வனிதா. அதே நேரத்தில் நந்தினி தன்னுடைய கணவனுடன் வண்டியில் வந்து அலுவலகத்தில் இறங்கினாள். அவளை இறக்கி விட்டு இன்வெட்ரியில் தன்னுடைய முதல் நாள் வேலையை துவங்க சென்று கொண்டிருந்தான். நந்தினி தன்னுடைய கணவனை பெருமையாக பார்த்துவிட்டு உள்ளே சென்றாள். 



அனைவரும் நந்தினி மொட்டை தலையுடன் வருவதை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தினர். அப்போது கார்த்திக் அவள் அருகில் வந்து தலைமுடி இல்லாமல் மொட்டையாக இருந்தாலும் அழகாக இருப்பதாக கூறிவிட்டு சென்றான்.  வசந்த் ராஜினாமா செய்து விட்டதாகவும் புதிய மேலாளர் வந்திருப்பதாகவும் அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நந்தினி இதை எதிர்பார்க்கவில்லை. புதிய மேலாளர் யார் என்று பார்த்து அறிமுகம் செய்துகொண்டு வாழ்த்துக்களை சொல்லலாம் என நினைத்து தன்னுடைய மொட்டைத்தலையுடனும் சிரித்த முகத்துடனும் மேலாளர் அறைக்கு சென்றாள். 

கிட்டத்தட்ட மேல்நாட்டு நாகரிகத்துடன் கழுத்துவரை பாப் வெட்டிய முடியுடன் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். நந்தினி கதவைதட்டிவிட்டு உள்ளே வருவதைப்பார்த்த அந்த பெண் சற்று நிமிர்ந்து அவளைப்பார்த்தாள். நந்தினி மொட்டைத்தலையுடன் இருப்பதை ஆர்வமாக பார்த்தாள். நந்தினி சற்று அந்த பெண்ணை உற்று நோக்கினாள். அது வேறு யாருமில்லை ஷைலஜா தான். தன்னுடைய நீளமான முடியை வெட்டி பாப் செய்து கொண்டிருந்தாள். ஒருவேளை இதுவும் வசந்த் கைவரிசை தானோ என நந்தினி நினைத்தாள். இருவரும் ஒருவருக்கொருவர் சிரிப்பை பரிமாறிக்கொண்டு புதிய நாளை துவங்கினர்.



முற்றும்




No comments:

Post a Comment