Wednesday 11 September 2024

வசந்தகாலம் - எட்டாம் பாகம்

ரம்யா: அப்படியெல்லாம் இல்ல… நீங்க வருங்கால மனைவின்னு சொல்லிட்டீங்க… இனிமேல் எனக்கு இங்க என்ன வேலை.. அதான்..

வசந்த்: அப்போ சரி… நானும் உன்கூடவே வாரேன்.


ரம்யா: வேணாம்… நான் ஷைலஜா அக்கா கூட போறேன்… நீங்க உங்க வருங்கால மனைவிகூட பேசிட்டு வாங்க…


வசந்த்: இல்ல.. அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்..


ரம்யா: இன்னும் நீங்க அந்த பொண்ணை பார்க்கவே இல்லையே..


வசந்த்: யார் சொன்னா…? நான் பார்த்துட்டேன்


ரம்யா: எப்போ?


வசந்த்: அது ரொம்ப வருஷம் ஆச்சு…


ரம்யா: ரொம்ப வருஷமா?


வசந்த்: ஆமா.. ஆனா  அந்த  பொண்ணுக்கு என்கிட்ட பேச  பிடிக்கலை.. அதான் இப்போ கிளம்பி போறா…


ரம்யா: ?!?!?!?!


வசந்த்: அட மக்கு…  திரும்பி பார்க்காத… உன்னைத் தான் சொன்னேன்


ரம்யா: என்னையா?



வசந்த்: ஆமா.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு…. என்னை கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்கத் தான் நான் கோவிலுக்கே வந்தேன்.


ரம்யா: விளையாடாதீங்க வசந்த்…


வசந்த்: நான் உண்மையா தான் கேட்குறேன்… உனக்கு என்னை பிடிக்குமா? என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா?


ரம்யா: !!!!


வசந்த்: அதுக்கும் முன்னாடி நீ கேட்க சொன்னதை உன்கிட்டயே கேட்கிறேன்… எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தெரியுமா? நான் கேட்டதை எல்லாம் நீ செய்வியா?


ரம்யா: !!!!


வசந்த்: என்ன வெட்கமா… அதெல்லாம் இருக்கட்டும்… முதல்ல பதில் சொல்லு…


ரம்யா: மக்கு நான் இல்ல… நீங்க தான்.


வசந்த்: நானா?


ரம்யா: ஆமா…


வசந்த்: ஏன்?


ரம்யா: உங்களை எனக்கு எப்போவோ பிடிக்கும்… அதுனாலதான் நீங்க பக்கத்துல வந்தா எனக்கு ரொம்ப வெட்கம் வரும்… அதை இப்போ வரைக்கும் நீங்க புரிஞ்சுக்கலை.


வசந்த்: ஹாஹா..


ரம்யா: எதுக்கு சிரிக்கிறீங்க… எவ்ளோ நாள் நீங்க இந்த வார்த்தையை என்கிட்ட கேட்பிங்களான்னு காத்திருந்தேன் தெரியுமா? என்னோட அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்காங்க… உங்களை மனசுல இருந்து மறக்க முடியாம இதுவரைக்கும் வந்த வரன் எல்லாத்தையும் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன். போன வாரம்கூட எனக்கும் என்னோட அம்மாவுக்கும் இதுனால சண்டை.

வசந்த்: தெரியும்

ரம்யா: எப்படி? ஷைலஜா அக்கா சொன்னாங்களா? வரட்டும் அவங்களை நான் பார்த்துக்கிறேன்

வசந்த்: அவங்க வரமாட்டாங்க.. நான்தான் உன்னை கூட்டிட்டு போகணும்…

ரம்யா: ஏன்?

வசந்த்: என்னோட ப்ளான் படி அவங்க தான் உன்னை கோவிலுக்கு கூட்டிட்டு வந்தாங்க… அவங்க வேலை அதோட முடிஞ்சு போச்சு.

ரம்யா: அப்போ இதெல்லாம் உங்க ஐடியாவா…

வசந்த்: ஆமா.. உனக்கு இன்னொரு ஸர்பிரைஸ் இருக்கு…

ரம்யா:  என்ன?

வசந்த்: நான் நேத்து உன்னோட அம்மாவுக்கு போன் பண்ணி பேசிட்டேன். அவங்களும் நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க..
                          
ரம்யா: அடப்பாவி..

வசந்த்: எனக்கு தெரியும் உன்னோட மனசுல நான் இருக்கேன்னு… அதுனாலதான் உன்கிட்ட பேசுறததுக்கு முன்னாடி உன்னோட அம்மாகிட்ட சொல்லி சம்மதம் கேட்டேன்

ரம்யா: அம்மா என்ன சொன்னாங்க..

வசந்த்: உனக்கு சம்மதம்னா.. அவங்களுக்கும் சம்மதம்னு சொன்னாங்க…

ரம்யா: என்னால நம்பவே முடியல. இவ்ளோதான் பேசியிருக்கீங்களா? இல்ல கல்யாண தேதியும் முடிவு பண்ணிட்டீங்களா?


வசந்த்: அதை நாம முடிவு பண்ணலாம்.

ரம்யா: எனக்கு ஒரே ஒரு சந்தேகம் கேட்கலாமா?

வசந்த்: என்ன ரம்யா.. சொல்லு

ரம்யா: நீங்க என்னோட தலைமுடிக்காக மட்டும் என்னை கல்யாணம் பண்ணலையே?

வசந்த்: முதல்ல என்னை கவர்ந்தது உன்னோட  தலைமுடிதான்… ஆனா நீ என்கிட்ட பழகின விதம் தான் அதை விட பிடிச்சது.

ரம்யா: எப்பொவுமே நீங்க என்னோட முடியை கட் பண்றேன்னு சொல்லுவீங்க. ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க என்னோட முடியை கட் பண்ணுவீங்களா?

வசந்த்: ஏன் எனக்காக உன்னோட முடியை நீ கட் பண்ணமாட்டியா?

ரம்யா: உங்க கையாள பண்ணனும்னா கண்டிப்பா கட் பண்ணிக்குவேன்.

வசந்த்: அப்புறம் என்ன?

ரம்யா: நீங்க என்னை மொட்டை அடிக்க சொல்லுவீங்களோன்னு ஒரு பயம் இருக்கு…

வசந்த்: ஏன் மொட்டை அடிக்க அவ்ளோ பயமா?

ரம்யா: பின்ன இருக்காதா… இவ்ளோ நீளமான முடியை மொட்டை அடிக்க சொன்னா கஷ்டமா இருக்குமே…



வசந்த்: ம்ம்ம்

ரம்யா: ஆனா எனக்கும் மொட்டை அடிக்க ஒரு யோசனை வந்தது.

வசந்த்: அடிப்பாவி… இது எப்போ?

ரம்யா: கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான்.

வசந்த்: எதுக்கு?

ரம்யா: ஒரு வேளை நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கலைன்னா நான் எதுக்கு இவ்ளோ நீளமான முடியை வளர்க்கணும்… பேசாம மொட்டை அடிச்சுக்கலாம்ன்னு தோணுச்சு.

வசந்த்: அப்போ நீ தயாரா தான் இருக்க… பேசாம கல்யாணம் ஆனதும் நாம ரெண்டு பெரும் சேர்ந்து போய் திருப்பதில மொட்டை போட்டுக்கலாமா?

ரம்யா: ஆசைதான்…

வசந்த்: எனக்கும் நீளமான முடியை மொட்டை அடிக்கணும்னு ஆசை இருக்கு. என்ன பண்றது?

ரம்யா: அதுக்கு வேற ஆளை பாருங்க… நான் என்னோட முடியை மொட்டை அடிக்க மாட்டேன்.

வசந்த்: சரி…

ரம்யா: என்ன சரி..

வசந்த்: வேற ஆளை பார்க்கலாம்.

ரம்யா: ஆமா… நீங்க கேட்டவுடனே நீளமான முடி இருக்கிற பொண்ணு வந்து உங்ககிட்ட அவ தலையை கொடுத்து மொட்டை அடிச்சுக்கோங்கன்னு சொல்லுவாளா?

வசந்த்: இல்ல…

ரம்யா: அப்புறம் என்ன?

வசந்த்: வேற ஒரு வழி இருக்கு…. ஒரு பொண்ணு என்கிட்ட வசமா மாட்டிக்கிட்டு இருக்கா… அவளுக்கு மொட்டை அடிக்கலாம்ன்னு இருக்கேன்…

ரம்யா: அய்யோ… யாரது?

வசந்த்: நம்ம ஆபீஸ் நந்தினிதான்

ரம்யா: நந்தினியா.. அவளுக்கு அழகான நீளமான முடி இருக்குமே.. அவ எப்ப்டி இதுக்கு சம்மதிச்சா..?

வசந்த்: அவளுக்கு வேற வழி இல்ல…

ரம்யா: எனக்கு புரியல…

வசந்த்: சரி.. இந்த வீடியோவை பாரு… அதோட அவ எனக்கு அனுப்பின மேசேஜ் எல்லாம் பாரு.

ரம்யா: அடிப்பாவி… இவ இவ்ளோ வேலை பார்க்கிறாளா?

வசந்த்: எனக்கு கொஞ்சம் ஷாக் தான்…

ரம்யா: அவளைப்பத்தி கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கேன்… ஆனா இந்த அளவு எதிர்பார்க்கலை..

வசந்த்: இப்போ புரியுதா அவ எப்படி என்கிட்ட மாட்டியிருக்கான்னு.

ரம்யா: புரியுது… போலீஸ்ல சொல்லலாம்ல

வசந்த்: சொல்லலாம்… அதுனால அவளோட குடும்பத்துக்கும் கெட்ட பேரு… வெளிய வேற எங்கயும் இனிமேல் வேலை செய்ய முடியாது… அதுக்காக மன்னிச்சுவிட எனக்கு மனசு இல்ல… எனக்கே அவளோட தலை முடியை வைச்சு வலை பின்னியிருக்காள்… அதுனால தான் அவளுக்கு மொட்டை அடிக்கலாம்ன்னு இருக்கேன். என்னோட அடிமனசு ஆசையும் நிறைவேறும். அவளுக்கு தண்டனை கொடுத்த மாதிரியும் ஆச்சு.


ரம்யா: உங்களுக்கு கொடுக்கிறதுக்கு தான என்னோ முடி இருக்கு… அவ எதுக்கு அவளோட முடியை கொடுக்கணும்… அவளுக்கு  மொட்டை அடிக்கிறது தப்பே இல்ல…  மொட்டை அடிக்கும் போது சொல்லுங்க நானும் வாரேன்.. என்னோட கையாள அவ முடியை வெட்டனும்.

வசந்த்: அடேங்கப்பா… எவ்ளோ கோவம்…

ரம்யா: ஆமா… நான் கட்டிக்கப் போறவர்கிட்ட அவளோட  முடியை கொடுத்தா எனக்கு கோவம் வராதா?

வசந்த்: நியாயம் தான்.

ரம்யா: எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க ஆசையை  முடிச்சுக்கோங்க.. கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட முடியை மட்டும் தான் தொடணும்… சரியா…

வசந்த்: சரிங்க மேடம்…

ரம்யா: இப்போ நாம கிளம்பலாமா? ஆபீஸ்க்கு போகணும்.


வசந்த்: சரி.. வா போலாம்.


இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். ரம்யா கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதில்  வசந்த் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். இனிமேல் கல்யாண வேலைகளை  துவங்க வேண்டும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டே கிளம்பினான். ரம்யாவும் அவனுடன் சேர்ந்து கிளம்ப இருவரும் ஜோடியாக சென்றனர். இருவரும் வெளியே வந்த போது அன்று மார்க்கட்டில் பார்த்த பார்த்திபனின் மனைவியும் அவளுடைய தங்கையும் கோவிலுக்குள் நுழைந்தனர். 

பார்த்திபனின் மனைவி அவனை தாண்டி செல்லும்போது தற்செயலாக அவனை ஏறிட்டு பார்த்து விட்டு கோவிலுக்குள் நுழைந்தாள். அவர்கள் இருவரின் தலை முடியையும் பார்க்க நினைத்து வசந்த் திரும்பிப் பார்த்தான். இருவரும் அவர்களுடைய நீளமான தலை முடியை ஜடையாக பின்னியிருந்தனர். அவன் அவர்களுடைய தலை முடியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க ரம்யா அவன் கன்னத்தில் ஒரு குத்து குத்தினாள். அவர்கள் யார் என்று வசந்த் ரம்யாவிடம் கூறினாள். ரம்யா அதிசயமாக அந்த பெண்களை பார்த்தாள். அவர்களுடைய நீளமான முடியை இப்போது ரம்யா பார்த்துக் கொண்டிருந்தாள். 

இப்போது வசந்த் ரம்யாவின் கன்னத்தை திருப்பி அங்கிருந்து அழைத்துச் சென்றான். அன்று அலுவலகத்தில் ரம்யா அதிக வெட்கத்துடன் இருப்பதை ஷைலஜா கவனித்தாள். வசந்த் ரம்யாவின் மனத்தில் இருக்கிறான் என்பதை ஷைலஜா புரிந்து கொண்டாள். மாலை அவன் நண்பணிடம் இருந்து போன் வந்ததும், சற்று விரைவாக கிளம்பினான். ரம்யாவும் ஷைலஜாவும் வழக்கம் போல கிளம்பினர்.தன்னுடைய நண்பனை சந்தித்து விட்டு நந்தினிக்கு போன் செய்தான் வசந்த். வசந்த் அழைப்பதை பார்த்த நந்தினிக்கு கைகள் நடுங்கியது. அருகில் இருந்த பார்த்திபன் கண்களை அசைக்க போனை எடுத்தாள்.


நந்தினி: ஹலோ..

வசந்த்: ஹலோ… கூந்தல்ராணி…

நந்தினி: சொல்லுங்க ஸார்.

வசந்த்: எங்க இருக்கீங்க?

நந்தினி: நீங்க சொன்ன இடத்துல தான்.

வசந்த்: நல்லது. உங்க ராஜதந்திரி பக்கத்துல  இருக்காரா?

நந்தினி: இருக்கார் ஸார்.

வசந்த்: வேற யார் அங்க இருக்கா?

நந்தினி: வேற யாரும் இல்ல ஸார்.

வசந்த்: நீங்க சொல்லுற “ஸார்”-ல மரியாதையை விட பயம் அதிகமா தெரியுதே.

நந்தினி: ப்ளீஸ் ஸார். என்னைய மன்னிச்சிடுங்க.

வசந்த்: கண்டிப்பா… அதுக்கு தான உங்களை வரச் சொல்லியிருக்கேன்.



வசந்த் சிறிது  நேரத்தில் அந்த குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தான். அங்கு தன்னுடைய வண்டியை பார்க் செய்து விட்டு அருகிலிருந்த ஒருவனிடம், நந்தினியின் வீடு என்பதை  பற்றி விசாரித்தான். அவன் வஸந்தை மேலும் கீழும் பார்த்தான். பின்னர் அவனிடம் “நீங்க யாரு?” என்றான். வசந்த் பதில் சொல்லவில்லை. பின்னர் அவன் “ஒரு இருவது ரூபா இருக்குமா?” என்றான். வசந்த் அமைதியாக அவனை பார்த்தான். பின்னர் அவன் “ஒரு பத்து ரூவா கொடுங்க ஸார். நீங்க என்னோட வீட்டுக்குத் தான் வழி கேட்குறீங்க” என்றான். வசந்த் சற்று அதிர்ச்சியானான். 

பின்னர் அவனுடன் ஐந்து நிமிடங்கள் பேசி விட்டு நந்தினியின் வீட்டிற்கு சென்றான். வசந்த் கதவை தட்டியதும் நந்தினி வந்து கதவை திறந்தாள். இன்னமும் உடையை மாற்றாமல் அலுவலகத்தில் இருந்த புடவையிலேயே இருந்தாள். ஆனால் தன்னுடைய ஜடையை மட்டும் கொண்டையாக போட்டு இருந்தாள். அவள் கதவை திறந்ததும் உள்ளே வந்த வசந்த் அவளுடைய அடர்த்தியான கொண்டையை கவனித்தான். அவனுடைய கண்கள் அவளுடைய தலைமுடி மீது மட்டுமே இருப்பதை நந்தினி கவனித்தாள். உள்ளே வந்ததும் அவள் கதவை சாத்தும் போது வசந்த் அவள் கொண்டையை பிடித்து தடவினான். நந்தினிக்கு சற்று கூச்சமாக இருந்தது. ஆனாலும் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை கைதியாக இருந்தாள். பின்னர் இருவரும் உள்ளே நுழைந்தனர். 



அங்கே ஹாலில் பார்த்திபன் அமர்ந்திருந்தார். வசந்த் வருவதை பார்த்ததும், அவன் கண்களை நேரில் பார்க்க முடியாமல் எழுந்து நின்றார். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே  அமர்ந்தனர். வசந்த் இருவரையும்  பார்த்து புன்னகைத்தான். பார்த்திபன் பதிலுக்கு லேசான புன்னகையை உதிர்த்தார். நந்தினி தர்ம சங்கடத்துடன் பார்த்தாள். அவளுடைய பார்வை மன்னிப்பு கேட்டு ஏங்கியது. வசந்த்திற்கு அவளை பார்க்க சற்று பாவமாக இருந்தது. பார்த்திபன் முகத்திலும் மாட்டிக்  கொண்ட குற்ற உணர்வு இருந்தது. அப்போது வசந்த் பேச ஆரம்பித்தான்.





No comments:

Post a Comment