Tuesday 3 September 2024

வசந்தகாலம் - ஆறாம் பாகம்

வசந்த்: ஓ.. அப்படியா.


நந்தினி: நீங்க என்னோட தலைமுடியை மட்டும் ரசிக்கிறது எனக்கு தெரிஞ்சதுக்கு அப்புறமா தான் நான் என்னோட தலை முடியை  உங்ககிட்ட கொடுத்து என்னோட வீட்டுக்காரருக்கு வேலை கேட்கலாம்னு தோணுச்சு.


வசந்த்: உன்னோட தலைமுடியை வைச்சு என்கிட்ட பேரம் பேசுற… உனக்கு இது தப்பா தெரியலையா?


நந்தினி: என்னோட நிலைமைல இருந்து பாருங்க… இப்போதைக்கு உங்ககிட்ட எனக்கு இருக்கிற ஒரே பணயப் பொருள் என்னோட  தலைமுடி தான்… என்ன பண்றது… உதவாக்கரை புருசனை வச்சுக்கிட்டு நான் படுற கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்.


வசந்த்: சரி… எனக்கு கொஞ்சம் டைம் கொடு… ஒரு ரெண்டு வாரத்துல சொல்லுறேன்.


நந்தினி: சரிங்க ஸார். ரொம்ப தாங்க்ஸ்


வசந்த் சற்று குழப்பத்தில் இருந்தான். நந்தினி எப்படி இவனுடைய தலைமுடி ஆசையை கண்டு பிடித்தாள் என்று. மேலும் அவலாகவே வந்து அவளுடைய தலைமுடியையும் அவனுக்கு கொடுப்பதாக கூறியது வினோதமாக இருந்தது. நந்தினியின் இந்த நடவடிக்கையை அவன் எதிர்பார்க்கவில்லை. அவளுடைய நீளமான தலைமுடியை அனுபவிக்க ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என அவன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது தானாகவே வந்து வலையில் விழும் நந்தினியை அவன் ஒதுக்கி விட நினைக்கவில்லை. ஆயினும், அவளுடைய தைரியமும் தானாகவே முன் வந்த விதமும் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. 


இதன் பின்னணியை சற்று ஆராய்ந்து அவளுடைய நிலைமை உண்மையிலேயே மோசமாக இருந்தால், அவள் கணவனுக்கு ஒரு வேலையை கொடுத்து விட்டு அவள் தலைமுடியை எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தான். அவ்வப்போது  எதிரில் இருந்த நந்தினியை கவனித்தான். அவள் எப்பொழுதும் போல வேலை செய்து கொண்டிருந்தாள். அவனும் தன்னுடைய வேலையில் மூழ்கினான்.


உணவு இடைவேளையின் போது ரம்யாவை கவனித்தான். ஊருக்கு சென்று வந்ததில் இருந்து கொஞ்சம் சோகமாக இருந்தாள். முதலில் பயணக் களைப்பாக இருக்கும் என நினைத்தான். ஆனால் அவளுடைய சோர்வடைந்த நடவடிக்கைகளை கவனித்ததும்  வேறு ஏதோ என்று உறுதிப்படுத்திக் கொண்டான். காலை முதல் அவனை பார்த்தாலும் எதுவும் வந்து பேசவில்லை என்பது அவனுக்கு சற்று உறுத்தலாக இருந்தது. ஒருவேளை ஷைலஜாவின் தலைமுடியை அவன் தொட்டுப் பார்த்து விளையாடியதை அவள் ரம்யாவிடம் சொல்லியிருப்பாளோ, அதனால் கோவமாக இருக்கிறாளோ என யோசித்தான். அப்படி கோபித்துக் கொள்ள ரம்யாவும் தானும் காதலர்கள் இல்லையே எனவும் மனது கூறியது. வசந்த் தனக்கு ரம்யாமேல் உள்ள ஈர்ப்பை காதல் என உருவகப்படுத்திக் கொண்டாலும், அவளிடம் நேரடியாக கூறியதில்லை. 




மற்ற நேரங்களில் வெளிப்படையாகவும், தைரியமாகவும் அவளிடம் எதையும் இலகுவாக பேசிவிடும் வசந்த், இந்த காதல் ஆசையை மட்டும் சொல்வதற்கு தயங்கினான். அவள் அதை ஏற்க மறுத்து விடுவாளோ என ஒரு பயம் அவன் மனதில் இருந்தது. அவன் கண் முன்னாடி நிறைய விஷயங்கள் இருந்தது. தன்னுடைய தலைமுடியை தயங்காமல் அவனிடம் கொடுத்த ஷைலஜாவின் புதிய நட்பை எப்படி கையாள்வது என்பது ஒரு விசயம். தானாக தேடி வந்து தன்னுடைய தலை முடியை கொடுக்கும் நந்தினி ஒரு பக்கம். மனதில் ஆசையுடம் பார்த்துக் கொண்டிருக்கும் ரம்யா சற்று விலகி செல்வது போல தோன்றும் இந்த நிலைமை ஒரு பக்கம் என குழப்பத்தில் இருந்தான்.


கடைசியில் ரம்யாவிடம் பேசலாம் என்பதை முதல் மற்றும் முக்கிய விசயமாக எடுத்துக் கொண்டான். ஆனால் எப்படி ஆரம்பிப்பது என்பது தான் அவனுக்கு பிடிபடவில்லை. யாருடைய உதவியை நாடலாம் என யோசித்த போது ஷைலஜா நினைவிற்கு வந்தாள். அவளை விட ரம்யா விசயத்தில் அவனுக்கு உதவக் கூடியவர்கள் யாருமில்லை என தெரிந்தது. 

அன்று மாலை அவளிடம் பேசலாம் என முடிவெடுத்தான். ரம்யா அருகில் இல்லாத போது ஷைலஜாவிடம் சென்று இன்று மாலை அவளிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்று கூறி அவளை வீட்டிற்கு அழைத்தான். அவனுடைய வார்த்தைகளில் இருந்த தடுமாற்றம் அவனுக்கு ஏதோ குழப்பம் இருப்பதை அவளுக்கு உணர்த்தியது. மறு யோசனைக்கு இடம் கொடுக்காமல் சரியென்று ஒப்புக் கொண்டாள். பின்னர் அலுவலகம் முடிந்து செல்லும் போது வருவதாக கூறினாள். அன்று மாலை 5 மணிக்கே வசந்த் வீட்டிற்கு கிளம்பினான். ஆடிட்டர் கொடுத்த பைலை எடுத்துக் கொண்டு சென்றான். இன்றைய வேலை அவனுக்கு  சரியாக முடியாத நிலையில் வீட்டில் சென்றாவது முடிக்க வேண்டும் என நினைத்தான். செல்லும் வழியில் தன்னுடைய நண்பன் ஒருவனுக்கு போன் செய்தான்.  சில விவரங்களை அவனுக்கு கொடுத்து உதவி கேட்டான்.

மாலை அவன் வீட்டிற்கு ஷைலஜா அவன் வீட்டிற்கு வந்தாள். ரம்யா முதல் முறை வந்தபோது பார்த்தா அதே பார்வையை ஷைலஜாவும் பார்த்தாள். இப்போதும் தன்னுடைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளாததை நினைத்து கொஞ்சம் வெட்கமாக இருந்தது. ஆனால் இப்போது அவனுடைய மனது ரம்யாவை பற்றி மட்டுமே இருந்தது. அதனால் அவன் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் அங்கிருந்த இருக்கையில் ஷைலஜாவை உட்கார சொன்னான். அவள் செல்லும் போது அவளுடைய தலைமுடியை அவனுடைய கண்கள் ரசிக்க ஆரம்பித்தது. அவள் தலைமுடியை அனுபவிக்கும் நேரம் இது இல்லை என தன்னுடைய மனதை கடிந்து கொண்டான். பின்னர் இருவரும் எதிர் எதிரில் அமர்ந்தனர். வசந்த் ரம்யா பற்றிய பேச்சை எடுத்தான்.


வசந்த்: எனக்கு ரம்யா பத்தி கொஞ்சம் பேசணும்.

ஷைலஜா: ரம்யா பத்தியா என்ன?

வசந்த்: சொல்லுறேன்… அதுக்கும் முன்னாடி… நான் உங்களோட தலைமுடியை தொட்டுப்பார்த்தேன்-ல அதைப்பத்தி ரம்யாகிட்ட எதுவும் சொன்னீங்களா?

ஷைலஜா: ஆமா..

வசந்த்: அய்யோ… அவள் என்ன சொன்னா?

ஷைலஜா: கொஞ்சம் சிரிச்சாள்… அப்புறம் உன்னோட முடி பைத்தியம் எப்போதான் தீருமோன்னு சொன்னா…

வசந்த்: வேற என்ன சொன்னா?

ஷைலஜா: வேற எதுவும் இல்ல… ஏன்

வசந்த்: இன்னைக்கு காலையில இருந்து கொஞ்சம் நல்ல மூடுல இல்லனு நினைக்கிறேன்.

ஷைலஜா: ஆமா…

வசந்த்: அதான் ஏன்னு தெரியல…

ஷைலஜா: என்ன வசந்த்… திடீர்னு ரம்யா மேல இவ்ளோ அக்கறை

வசந்த்: அவ என்னோட காலேஜ் ஜூனியர்னு உங்ககிட்ட சொல்லி இருக்கேனே…

ஷைலஜா: அது தெரியும். ஆனால் அவள் கொஞ்சம் மூட் அவுட் ஆகியிருந்தா நீ எதுக்கு டெண்சன் ஆகுற…


வசந்த்: எப்படி ஆரம்பிக்குறதுன்னு தெரியல… இருந்தாலும் உங்களால எனக்கு உதவ முடியும்னு நினைக்கிறேன்.

ஷைலஜா: சரி சொல்லு.

வசந்த்: எனக்கு ரம்யா மேல ஒரு ஈர்ப்பு இருக்கு… இப்போ மட்டும் இல்ல காலேஜ்ல இருந்தே இருக்கு… ஆனா வெளிய சொல்லல… என்னோட மனசுல இருக்கிற ஆசையை அவகிட்ட சொல்லணும்.. ஆனா எப்படி எடுத்துக்குவான்னு தெரியல…

ஷைலஜா: அப்படி வா விசயத்துக்கு… அதுனாலதான் இந்த பதட்டமா?

வசந்த்: ஆமா…

ஷைலஜா: உனக்கு எப்படி சொல்றதுனு தெரியல… சரி சொல்லுறேன்.

வசந்த்: என்ன?

ஷைலஜா: அவளுக்கு வீட்டில மாப்பிள்ளை பார்த்தாச்சு..

வசந்த்: அய்யோ.. என்ன சொல்றீங்க?

ஷைலஜா: ஆமா.. நேத்து தான் அது அவளுக்கே தெரியும். அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அதுனால அவளோட அம்மாகூட சண்டை…

வசந்த்: எதுனால பிடிக்கலைன்னு சொன்னாலா?

ஷைலஜா: இல்லை… ஆனால் அவள் மனசுல வேற  யாரோ இருக்கிற மாதிரி எனக்கு தோணுது.

வசந்த்: ஏன் அப்படி சொல்லுறீங்க?

ஷைலஜா: இப்போ இல்ல.. ஒரு வருஷத்துக்கும் மேல அவளுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க அவளோட அம்மா… அப்பா இல்லாத பொண்ணு… அதுனால சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொன்னாங்க.. ஆனா இவ பார்க்கிற எல்லா மாப்பிள்ளையையும் ஏதாவது காரணம் சொல்லி வேணாம்னு சொல்லிட்டே இருந்தாள்.

வசந்த்: அப்புறம்?

ஷைலஜா: நான் அவளை நேரடியா ஒரு தடவை கேட்டேன். ஆனால் அவள் சொன்ன காரணங்கள் எதுவும் எனக்கு உண்மைன்னு சொல்ற மாதிரி இல்ல… அவ அப்பப்போ ஒரு பெட்டியை  திறந்து அதில் உள்ள கடிதங்களை படித்துப் பார்ப்பாள். ஆனால் நான் அவள் வீட்டிற்குள் நுழைந்ததும், அந்த பெட்டியை  மூடி எனக்கு தெரியாமல் வைத்துக் கொள்வாள்.

வசந்த்: காதல் கடிதங்களா? அது யாருன்னு உங்களுக்கு தெரியுமா?

ஷைலஜா: தெரியாது…

வசந்த்: அந்த கடிதங்களை நீங்க பார்த்திருக்கீங்களா?

ஷைலஜா: ஆமா… நிறைய கவர்கள் இருந்தது. ஆனால் எதையும் முழுசா பார்க்கிறததுக்குள்ள அந்த பெட்டியை மூடி வைச்சிருவாள்.
                               
வசந்த்: அப்போ என்னோட ஆசை அவ்ளோ தானா…

ஷைலஜா: அப்படியும் சொல்ல முடியாது… ஒருவேளை அது அவளோட கடநத கால காதலா இருக்கலாம். உன்கூட இருக்கிற நேரங்கள்ல அவ ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது.

வசந்த்: அப்படியா சொல்றீங்க…

ஷைலஜா:  இருக்கலாம். ஒரு வேளை அவள் அந்த கடந்த கால காதலை மறந்து உன்கிட்ட வந்தா நீ ஏத்துக்க தயாரா இருந்தா சொல்லு நான் உனக்கு உதவி பண்ணுறேன்.


வசந்த்: எனக்கு ரம்யாவை மனசார பிடிக்கும். அவளுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னா அவளோட கடந்த காதல் எனக்கு ஒரு பிரச்னையே இல்ல..

ஷைலஜா:  சூப்பர்… இது தான் ஒரு ஆம்பளைக்கு அழகு.

வசந்த்: இதெல்லாம் விடுங்க… எப்படி அவகிட்ட பேசப் போறீங்க…

ஷைலஜா: எனக்கும் தெரியல…  முதல்ல அந்த மாஜி காதலன் யாருன்னு தெரியணும்.

வசந்த்: அதெல்லாம் எதுக்கு?

ஷைலஜா: இது பொம்பளைங்க ஆர்வம்.,. உனக்கு புரியாது. அதை நான் அவகிட்ட பேசிக்கிறேன்… அதை பத்தி அவளா பேசினாத் தான் அதுக்கு அடுத்த கட்டத்துக்கு போயி உன்னை உள்ள கொண்டு வர முடியும்.

வசந்த்: சரி…. உங்க இஷ்டம்

ஷைலஜா:  அப்படியில்லைனா.. அவளுக்கு தெரியாம அந்த பெட்டியை திறந்து ஒரே ஒரு கடிதத்தையாவது படிக்கணும்… ஏதாவது ஐடியா கிடைக்கும்.

வசந்த்: அவளுக்கு தெரியாம எப்படி படிப்பீங்க?


ஷைலஜா: அவள் எங்க அந்த பெட்டியை வச்சிருக்கான்னு எனக்கு தெரியும்…  நேரம் கிடைக்கும் போது முயற்சி பண்ணுறேன்.. ஏற்கனவே  அந்த பெட்டியை ஒரு தடவை திறந்து பார்த்திருக்கேன்… ஆனா எதுக்கு அவளோட  தனிப்பட்ட கடிதங்களை படிக்கணும்னு எதையும் பார்க்கலை.

வசந்த்: ஓ… அது அவளுக்கு  தெரியுமா…

ஷைலஜா:  தெரியும்.. நானே அவகிட்ட சொன்னேன்.. ஆனா அந்த கடிதத்தை படிக்கலைன்னு சொன்னதால அவள் பெருசா எதுவும் கோவப்படலை…

வசந்த்: சரி..சரி…

ஷைலஜா: ஆனா அவகிட்ட ஒரு விஷயத்தை நான் சொல்லல…

வசந்த்: என்ன?

ஷைலஜா: அந்த பெட்டியில அவளை அழகழகா எடுத்த நிறைய போட்டோக்களை ஒரு ஆல்பமா போட்டு வச்சிருந்தாள். ஒரு வேளை அவள் காதலன் எடுத்ததாக இருக்கலாம். ஒரு நாலஞ்சு போட்டோவை பார்த்துட்டு மூடி வச்சுட்டேன்.

வசந்த்: தெய்வமே… இதை முதல்லயே… சொல்லக்கூடாதா…

ஷைலஜா:  என்ன ஆச்சு வசந்த்…

வசந்த்:  அந்த  லெட்டர் எல்லாம் ஒரு மட்டமான காகித கலர் கவர்ல இருந்ததா?

ஷைலஜா: ஆமா…

வசந்த்:  அப்போ அதெல்லாம் காதல்  கடிதம் இல்ல…

ஷைலஜா:  உனக்கு எப்படி தெரியும்…


வசந்த்: அதெல்லாம் அவளோட அம்மா அவளுக்கு எழுதுற லெட்டர்.. நானே அந்த கவரை வைச்சு எத்தனை தடவ அவளை கலாய்சு இருக்கேன்…

ஷைலஜா: அதெல்லாம் சரி… அப்போ அந்த போட்டோ எல்லாம்?

வசந்த்: நல்லா கேட்டீங்களே… அதெல்லாம் அவளை காலேஜ்ல நான் எடுத்த போட்டோ…

ஷைலஜா:  அடப்பாவி.. அப்போ அந்த மாஜி காதலன் நீதானா…

வசந்த்: ஹெல்லொ… நான் மாஜி இல்லைங்க… ஒரிஜினல்….

ஷைலஜா: புரியலையே..

வசந்த்: அவள் கல்யாணம் வேணாம்னு சொல்றது மட்டும் தான் இப்போ சரியா இருக்கு… மத்தபடி.. பழைய காதல் எல்லாம் ஒண்ணும் இல்ல… அதெல்லாம் அவளோட நடவடிக்கையை வச்சு நீங்களா யோசிச்ச கற்பனை.

ஷைலஜா:  இருக்கலாம்… ஒரு பொண்ணோட மூளை இப்படி எசக்கு பிசக்காத் தான் யோசிக்கும்… ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியலை.

வசந்த்: என்ன?

ஷைலஜா: முன்னெல்லாம் அவளோட அம்மாகிட்ட மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு மட்டும் தான் சொல்லுவா… இப்போலாம் அவங்க அனுப்புற போட்டோவை அவள் பார்க்கிரதே இல்லை… ஆனா பிடிக்கலைன்னு சொல்லி ரொம்ப சண்டை போடுறா…. அதுனாலதான் இது ஒரு வேளை காதலோன்னு நான் நினைச்சேன்.

வசந்த்: நல்லா நினைச்சீங்க…

ஷைலஜா: இப்போ தான் எனக்கு புரியுது… அவ மனசுல நீதான் இருக்கேன்னு…

வசந்த்: இதை எப்படி சொல்லுறீங்க…

ஷைலஜா: நீ இந்த ஆபீஸ்க்கு வந்ததுக்கு அப்புறம் தான் அவளுக்கு இந்த மாப்பிள்ளை பார்க்கிற விஷயத்துல அதிக கோவம் வருது… ஒருவேளை உன்னை மறுபடி பார்த்ததுக்கு அப்புறம் அவளுக்கு வேற யாரையும் பார்க்க பிடிக்கலைன்னு தோணுது.

வசந்த்: தெய்வமே.. இப்போ தான் உங்க வாயில என்னோட மனசு சந்தோஷப்படுற மாதிரி வார்த்தை வருது.

ஷைலஜா: நீ என்கிட்ட பேசினதுக்கு பதிலா அவகிட்ட பேசியிருக்கலாம்.
|
வசந்த்: எனக்கு இன்னும் அந்த தைரியம் வரலை… அது மட்டும் இல்ல.. அதுல இன்னொரு சிக்கல் இருக்கு.

ஷைலஜா:  என்ன சிக்கல்… அவ மனசுல நீ இருக்கிற மாதிரி தான் எனக்கு தோணுது. உனக்கும் அவளை பிடிச்சு இருக்கு… நீ கேட்கிற மாதிரி அவளுக்கு அடர்த்தியான, நீளமான   தலைமுடி  இருக்கு… வேற என்ன வேணும்?

வசந்த்: அதுல தான் ஒரு சிக்கல் இருக்கு.

ஷைலஜா: என்ன?

வசந்த்: நான் ஒரு Hair fetish. எனக்கு நீளமான தலை முடி எவ்ளோ பிடிக்குமோ அதே மாதிரி அந்த நீளமான தலை முடியை வெட்டி விடுறதும் பிடிக்கும்.

ஷைலஜா: அடப்பாவி.. இது வேறயா….

வசந்த்: ஆமா… இதெல்லாம் அவகிட்ட சொன்னா அதுக்கு அவ சம்மதிப்பாளான்னு தெரியல…

ஷைலஜா: அவளோட முடியை வெட்டுறதுக்கா?

வசந்த்: இல்ல… என்னோட மனசுல இந்த ஆசையெல்லாம் இருக்குன்னு சொன்னா அதை அவள் ஏத்துக்குவாளா?

ஷைலஜா: அது தெரியல..  அதை நீ தான் அவகிட்ட சொல்லி புரிய வைக்கணும்…

வசந்த்: நீங்க எனக்கு கொஞ்சம் உதவி பண்ணக் கூடாதா…

ஷைலஜா:  இதுல நான் என்ன உனக்கு உதவி பண்ணனும்… ஒரு வேளை அன்னைக்கு என்னோட தலை முடியை தொட்டுப் பார்க்க கேட்ட மாதிரி, என்னோட முடியை கட் பண்ணனும்னு சொல்லியிருந்தா நான் சரின்னு சொல்லியிருப்பேன். என்னோட முடியை என்ன பண்ணனும்னு நான் முடிவெடுக்கலாம்.

வசந்த்:  அய்யோ… தெரிஞ்சிருந்தா அன்னிக்கே கேட்டிருப்பேனே…

ஷைலஜா: ஆசை தான்…  இப்போ உனக்கு ரம்யா முக்கியமா.. இல்ல என்னோட தலைமுடி முக்கியமா?


வசந்த்: ரம்யா தான் முக்கியம்.. ஆனா இந்த தலை முடியை வெட்டனும்ங்கிர ஆசை இடையில  வருதே…

ஷைலஜா: சரி… நீ முதல்ல ரம்யாகிட்ட பேசு… அவள் சம்மதம் சொல்லிட்டா, நானே அவள் வீட்டுல உன்னை பத்தி பேசி சம்மதிக்க வைக்கிறேன்… இதெல்லாம் ஒழுங்கா நடந்தா என்னோட முடியை நீ கட் பண்ணிக்கோ… எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்ல

வசந்த்: வாவ்,…. சூப்பர்…  இதை நான் எதிர்பார்க்கலை…

ஷைலஜா: நான் ஏற்கனவே நிறையதடவை மொட்டை போட்டிருக்கேன். சும்மா முடியை வெட்டிக்கிற தெல்லாம் எனக்கு சாதாரணம்…  யாராவது கேட்டா கொஞ்சம் மாடர்னா இருக்கிறதுக்காக முடியை கட் பண்ணிக்கிட்டேன் னு சொல்லிருவேன்.

வசந்த்: சூப்பர்… இன்னொரு தடவை சொல்லுங்க…

ஷைலஜா:  யாராவது கேட்டா கொஞ்சம் மாடர்னா இருக்கிறதுக்காக என்னோட தலை முடியை கட் பண்ணிக்கிட்டேன் னு சொல்லிருவேன்.

வசந்த்: செம்ம… நீங்க படிச்ச பொண்ணுன்னு நிரூபிச்சுட்டீங்க…

ஷைலஜா:  ஹாஹா…

வசந்த்: நீங்க  எததுவரைக்கும் படிச்சு இருக்கீங்க…

ஷைலஜா:  மாஸ்டர்ஸ் டிகிரி

வசந்த்: வாவ்… அப்புறம் ஏன் இன்னும் இந்த சின்ன வேலையில இருக்கீங்க… உங்க பையனும் ரொம்ப தூரத்துல ஹாஸ்டல்ல இருக்கிறான்னு சொன்னீங்க…

ஷைலஜா:  இந்த வேலை என்னோட கணவரால எனக்கு வந்தது.


வசந்த்: என்ன சொல்றீங்க

ஷைலஜா: அவர் விபத்துல இறந்ததால எனக்கு இதே  அலுவலகத்துல வேலை கிடைச்சது. நீ இருக்கிற இதே மேனேஜரா அவர் இருந்தார். அவருக்கு அப்புறம் வந்த மேனேஜர் வேலையைவிட்டு போனதுக்கு அப்புறம் தான் நீ மேனஜரா இங்க வந்திருக்க… அவரோட ஞாபகம் இருக்கிறதாலத் தான் நான் வேற எங்கயும் போகல…. இதே வேலையை செய்துட்டு இருக்கேன்.





No comments:

Post a Comment