ஆனால் எங்கோ இதே ஜடையை பார்த்தது போல தோன்றவே அந்த பெண் யார் என்பதை கவனித்தான். அவள் ஷைலஜா தான். ஷைலஜா சாமி கும்பிட்டு விட்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள். வசந்த் அவளை கவனித்துக் கொண்டிருந்தான். தற்செயலாக ஷைலஜாவும் அவனை கவனித்தாள். அங்கிருந்து பார்த்து சிரித்தாள். பின்னர் எழுந்து வசந்த்தை நோக்கி நடந்து வந்தாள். அவள் அருகில் வருவதை வசந்த் எதிர்பார்க்கவில்லை.
ஷைலஜா: என்ன வசந்த் ஸார்… கோவிலுக்கு எல்லாம் வருவீங்களா?
வசந்த்: சொல்லுங்க மேடம்… ஏன் நான் கோவிலுக்கு வரக்கூடாதா…
ஷைலஜா: அதுக்கு இல்ல… சும்மா கேட்டேன் ஸார்….
வசந்த்: ஆபீஸ்ல ஸார்னு சொன்னா பரவாயில்ல… வெளியேவும் அப்படியே கூப்பிடானுமா மேடம்…
ஷைலஜா: நீங்க கூடதான் என்னை மேடம்னு கூப்பிடுறீங்க ஸார்…
வசந்த்: நான் கூப்பிடலாம்.. நீங்க என்னை விட மூத்தவங்க…
ஷைலஜா: அட…. அப்போ நான் உங்களை ஸார்னு கூப்பிட்டா என்ன?
வசந்த்: சும்மாவே எனக்கு பொண்ணு அமையல… இதுல நீங்க வேற வெளியிடத்தில ஸார்னு கூப்பிட்டு அப்புறம் என்னை வயசான ஆள்ன்னு நினைக்கப் போறாங்க…
ஷைலஜா: அது சரி… இப்போ என்ன கோவிலுக்கு பொண்ணுங்களை சைட் அடிக்க வந்தீங்களா ஸார்?
வசந்த்: எங்க மேடம் கோவிலுக்கு உங்களை மாதிரி கல்யாணம் ஆனவங்க தான் நிறைய வர்றாங்க… அப்புறம் எங்க சைட் அடிக்கிறது.
ஷைலஜா: பார்த்தீங்களா. ஸார்..என்னை கலாய்க்கிறீங்க…
வசந்த்: முதல்ல ஸார்ன்னு சொல்றத நிறுத்துங்க…
ஷைலஜா: சரி… நீங்களும் என்னை மேடம் சொல்றதை நிறுத்துங்க… நானும் மாத்திக்கிறேன்.
வசந்த்: சரி.. நானும் உங்களை மேடம்னு சொல்ல மாட்டேன்… ஆனா உங்க வயசுக்கு மரியாதை கொடுத்து வாங்க போங்கனு கூப்பிடுறேன்… போதுமா?
ஷைலஜா: வெரி குட். நானும் வெளிய பார்த்தா உன்னை வசந்த்னு பேர் சொல்லி கூப்பிடுறேன்.
வசந்த்: அப்பா.. அது போதும்…
ஷைலஜா: சாமி கும்பிட்டு கிளம்பியாச்சா… இல்ல இன்னும் சைட் அடிக்கணுமா…
வசந்த்: இன்னைக்கு அவ்ளோதாங்க… கிளம்பனும்..
ஷைலஜா: அடுத்து என்ன ப்ளான்.
வசந்த்: நேரா வீட்டுக்கு போய் சமைக்க வேண்டியதுதான்.
ஷைலஜா: ஹாஹா… நீயே சமைக்க போறீங்களா?
வசந்த்: ஆமா.. எப்பொவும் எனக்கு நான் தான் சமைக்கிறேன். அதுக்கு ஏன் சிரிக்கிறீங்க…
ஷைலஜா: இல்ல.. அன்னைக்கு நீ போட்டு குடுத்த காஃபீ பத்தி ரம்யா சொன்னாள்.. அதுக்கு அப்புறம் உன்னோட சமையலுக்கு பயந்து அவளே சமைச்சதையும் சொன்னாள். அதை நினைச்சு கொஞ்சம் சிரிப்பு வந்துச்சு…
வசந்த்: சொல்லிட்டாளா?
ஷைலஜா: ஆமா…
வசந்த்: அதுக்கு தான் சீக்கிரமா கல்யாணம் பண்ணி பொண்டாட்டி கையாள சாப்பிடலாம்னு பார்க்கிறேன்.. இன்னும் ஒண்ணும் அமைய மாட்டேன்ங்கிறது…
ஷைலஜா: நான் அன்னைக்கே சொன்னேன் என்னோட வீட்டுக்கு ஒரு தடவை வான்னு… இப்போ ஃப்ரீயா இருந்தா வாயேன்…
வசந்த்: எனக்கு ஒண்ணும் பிரச்னை இல்ல… இனிமேல் போயி எப்போ சமைச்சு சாப்பிடறதுன்னு பார்க்கிறேன்.
ஷைலஜா: நான் ஏற்கனவே குருமாவும், மாவும் ரெடி பண்ணி வைச்சுட்டுத் தான் கோவிலுக்கு வந்தேன். சப்பாத்தி போட்டா வேலை முடிஞ்சுடும்…
வசந்த்: அப்போ சரி… நீங்க கிளம்புங்க… நான் பின்னாடி வறேன்…
ஷைலஜா: ஓ… நீ கார்ல வரணும்ல… சரி வா…
வசந்த்: இல்லை.. நான் பஸ்ல வரணும்…
ஷைலஜா: பஸ்லயா.. ஏன் கார் என்னாச்சு…
வசந்த்: தினமும் கார்ல தான வறேன்… பைக் இல்லாததால சும்மாதான இருக்கோம்னு பஸ்ல வந்தேன்.
ஷைலஜா: உனக்கு ஆட்சேபணை இல்லைனா என்னோட ஸ்கூட்டில போலாம்…
வசந்த்: அய்யோ..
ஷைலஜா: பயப்படாத… நான் நல்லாவே வண்டி ஓட்டுவேன்…
வசந்த்: சரி வறேன்… எனக்கு இன்னும் கல்யாணம் அகல… எங்கயாவது கவுத்தி விட்றாதீங்க..
ஷைலஜா: முயற்சி பண்றேன்… வா..
கோவிலுக்கு வெளியே வந்ததும் ஷைலஜா அவளுடைய ஸ்கூட்டியை பார்கிங் ஏரியாவில் இருந்து எடுத்தாள். கோவிலில் இருந்து வழியே வரும் வரை அவள் பின்னால் அவளுடைய ஜடையை ரசித்துக் கொண்டே வந்தான். ரம்யா போல தொடை வரை இல்லாவிட்டாலும் குண்டி வரை நீளமான அடர்த்தியான ஜடையாக இருந்தது. கண்டிப்பாக அவளுடைய கணவன் இந்த தலை முடியை நன்றாக அனுபவித்து இருப்பான் என நினைத்துக் கொண்டான். போகும் வழியில் எப்படியும் அவளுடைய முடியை தொட்டுப் பார்க்கலாம் என மனதிற்குள் சந்தோசப்பட்டான்.
ஷைலஜா வண்டியில் ஏறி அமர்ந்ததும் தன்னுடைய ஜடையை எடுத்து முன்னால் போட்டுக்கொண்டு அவனைப்பார்த்து வண்டியில் ஏறி உட்கார சொன்னாள். வசந்த் ஒரு நொடியில் ஏமாந்து விட்டான். பின்னர் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். வழியில் இருவரும் சில அலுவலக கதைகளை பேசிக் கொண்டு வந்தனர். வசந்த் பேசுவது போல அவ்வப்போது அவள் அருகே சென்று காதுகள் அருகே பேசினான். வண்டி ஒட்டிக் கொண்டே பேசுவதால் சத்தம் சரியாக கேட்காது என்பதால் அவளும் அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. வசந்த் ஷைலஜா அருகில் செல்லும்போது எல்லாம் அவளுடைய தலைமுடியின் வாசனையை நுகர்ந்து பார்த்தான். நல்ல மணமாக இருந்தது. என்ன ஷாம்பூ உபயோகிப்பாள் என யோசித்தான். பேச்சின் இடையில் ஷைலஜா தன்னுடைய ஜடையை எடுத்து பின்புறம் போட்டாள். வசந்த் குஷியாகி விட்டான். வீடு வந்து சேரும் வரை அவளுக்கு தெரியாமல் அவளுடைய ஜடையை கையில் பிடித்துப்பார்த்து அனுபவித்துக் கொண்டே வந்தான்.
இருவரும் ஷைலஜாவின் வீட்டை அடைந்தனர். வீட்டின் உள்ளே நுழைந்த போது அவளுடைய வீட்டை சுற்றி பார்த்தான். ஓரளவு பரவாயில்லாத இடமாக இருந்தது. ஆனால் வீட்டை மிகவும் அழகாக வைத்திருந்தாள். மிகவும் கலைநயமிக்க இடமாக தோன்றியது. ஆங்காங்கே ஓவியங்களும் கைவினை பொருட்களும் இருந்தது. தேவையில்லாத பொருட்கள் என சொல்வது போல எதுவும் இல்லை. ஒரு நிமிடம் தன்னுடைய வீட்டை நினைத்துப் பார்த்தான். வீட்டை கண்டபடி வைத்திருப்பது அவனுக்கு வெட்கமாக தோன்றியது. அவனை அங்கே அமர சொல்லிவிட்டு ஷைலஜா உடை மாற்ற உள்ளே சென்றாள். வசந்த் மெல்ல அந்த ஹாலில் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். ஷைலஜாவின் மகன் சில புகைப்படங்களில் புன்னகைத்துக் கொண்டிருந்தான். அடுத்த ஒரு புகைப்படத்தில் ஷைலஜாவும் அவள் கணவனும் புன்னகையுடன் திருமணக் கோலத்தில் நின்று கொண்டிருந்தனர். ஷைலஜா அந்த புகைப்படத்தில் மிகவும் இளமையாகவும் அழகாகவும் இருந்தாள். வசந்த் தன்னை மறந்து அவளை சைட் அடித்துக் கொண்டிருந்தான். அப்போது ஷைலஜா வெளியே வந்தாள். வசந்த் பின்னால் இருந்து “என்ன வசந்த் என்னோட பழைய போட்டோவை பார்த்து சைட் அடிக்கிறயா?” என குரல் கொடுத்தாள். வசந்த் சற்று வழிந்து கொண்டு திரும்பினான்.
மெல்ல அடுத்த புகைப்படத்தை நோக்கினான். இப்போது இருப்பதை விட ஒரு அடிக்கு மேல் நீளமாக இருந்தது அவளுடைய முடி. இப்போது ரம்யா வைத்திருக்கும் அளவு என்று சொல்லலாம்.
எப்படியும் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என நினைத்தான். தன்னை ஏன் பத்து வருடங்களுக்கு மேல் தாமதமாக கடவுள் பிறக்க வைத்தார் என அவர்மேல் மனத்தில் கோவம் கொண்டான். ஒருவேளை முன்னதாக பிறந்திருந்தால் அவளுடைய வசீகாரத்திற்கும், அழகான தலைமுடிக்கும் மயங்கி அப்போதே இவளை திருமணம் செய்திருக்கலாம் என நினைத்தான்.
அவளுடைய கணவன் அவளுக்கு ஏற்ற ஜோடி என்றே தோன்றியது. ஆனால் அவளுடன் சேர்ந்து வாழ அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை.
அவளுடைய மகன் இப்போது கிட்டதட்ட அவளுடைய கணவனின் சாயலில் இருப்பது போலவே தோன்றியது. பின்னர் அடுத்த புகைப்படத்தை பார்த்தான். அவளுடைய மொத்த தலை முடியையும் விரித்து விட்டு முன்னால் எடுத்து போட்டு ஒரு மூங்கில் சேரில் உட்கார்ந்திருக்க அவள் கணவன் பின்னால் நின்றிருந்தான். பார்க்கவே மிக அழகாக இருந்தது. ஷைலஜா அங்கு வந்தாள்.
“என்ன வசந்த்.. சைட் அடிச்சது போது.. சாப்பிடலாமா…” என்றாள்.
வசந்த்தும் சரி என்றவுடன் இருவரும் சாப்பிட சென்றனர். சாப்பிட்டு முடித்ததும் வசந்த் தயக்கமாக கேட்டான்.
No comments:
Post a Comment