என்ன மாமா, உங்க ஆசைக்கு ஒரு அளவு இல்லையா?
ஏண்டி, இதுக்கே இப்படி சலிச்சுக்குற...
பின்ன என்ன மாமா? பெங்களூர்ல மாடர்னா சுத்திட்டு இருந்த என்னை கூட்டி வந்து இப்படி பண்ணிட்டு இருக்கியே?
இதுல என்னடி இருக்கு? இப்போ தான் நீ பார்க்க அழகா குடும்ப பாங்கா இருக்க?
ஆமா... என் ப்ரெண்ட்ஸ் யாராவது என்னை இந்த கோலத்தில பார்த்தா அவ்ளோ தான்...
இந்த அழகுக்கு என்னடி குறைச்சல், நீ இந்த கிராமத்தில இருந்து தானே சிட்டிக்கு போன, என்னமோ சிட்டிலயே பொறந்து வளந்தவ மாதிரி பேசுற...
ஆனா, என் அம்மா கூட எனக்கு இந்த மாதிரி ஜிமிக்கி கமல், மூக்குத்தி எல்லாம் போட்டு அழகு பார்த்தது இல்ல மாமா,
உங்கம்மா உன்னை இப்படி பாக்கணும்னு ஆசை இருந்தது, எங்கிட்ட் நிறைய தடவை சொல்லி இருக்கு...
அப்படியா... எங்கிட்ட சொன்னதே இல்லயே?
நீ தான் படிச்ச திமிருல உன் அம்மாவை மதிக்கிறதே இல்லயே?
ஸாரி மாமா, இனிமே நீ சொல்றதை கேட்டு நடந்துக்குறேன்... நீ என்ன சொன்னாலும் செய்யுறேன் மாமா,
நான் எனக்காக இது எல்லாம் செய்யல, உன் அம்மாவோட கடைசி ஆசை தான் இது எல்லாம்,
நிஜமாவா மாமா? என் அம்மாகாக நான் என்னை மாத்திக்குறேன்... மாமா...
உன் அம்மா போனதுக்கு அப்புறம் மாறி என்ன புண்ணியம்...
சரி தான் மாமா, ஆனா என்ன பண்றது... என் நிலமை அப்படி...
சரி, சரி... இன்னும் ஒரு விஷயம் தான் பாக்கி இருக்கு...
என்ன மாமா, அது?
நம்ம ஊர் கருப்பன் கோவில்ல உனக்கு மொட்டை போட்டு அலகு குத்தி விடணும்னு உன் சின்ன வயசுல இருந்து வேண்டுதல் வச்சு இருந்தா, உங்கிட்ட கூட சொல்லிட்டே இருக்குமே...
ஆமா மாமா... அதனால இப்ப நான் என் தலை முடியை மொட்டை போடணுமா?
ஆமா... அது ஒண்ணு தான் பாக்கி இருக்கு...
அய்யோ மாமா, அது மட்டும் என்னால முடியாது... மொட்டை போட்டா என்னால எப்படி என் ப்ரெண்ட்ஸ் முன்னாடி, பெங்களூரில இருக்க முடியும்?
உன் அம்மாவோட கடைசி ஆசை அது தான், எல்லாம் உயில்ல இருக்கு... இதை எல்லாம் நீ பண்ணினா தான் உனக்கு அந்த நாலு ஏக்கர் காட்டை வித்து நான்கு கோடி பணம் கிடைக்கும்...
என்ன மாம சொல்றீங்க? நாலு கோடியா...
ஆமா, உன் அம்மா எல்லாம் தெளிவா எழுதி வச்சு இருக்கா!
நாலு கோடியா? தலை முடி போனா போகுது... மொட்டை எப்போ அடிக்கணும்னு சொல்லுங்க மாமா... நான் ரெடி!
No comments:
Post a Comment