Monday, 6 May 2024

ராதாவும் கோகிலாவும்

இந்த கதை நண்பர் விக்னேஷ் தமிழ் அவர்களுடையது. நண்பர் விக்னேஷ் அவர்களின் ஒப்புதலுடன் நம்முடைய தளத்தில் பதிவு செய்கிறேன்.

ராதாவும் கோகிலாவும் பூசாரி அழைத்ததும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். அந்த ஊரில் உள்ள பெண்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருந்தது. ஐந்து வயதுக்கு பின் எந்த பெண் குழந்தையும் முடியை வெட்டிக்கொள்ள அனுமதி இல்லைஅதனாலேயே அங்கு உள்ள பெண்கள் அனைவருக்கும் நீண்ட கூந்தல் இருக்கும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை  ஊரில் உள்ள இரண்டு பெண்களைதேர்ந்தெடுத்து அழைத்து வந்து கோவிலில் அவர்களுடைய தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். ஊரின் நன்மைக்காக இவ்வாறு செய்வார்கள். இந்த முறை தலைமுடியை காணிக்கை கொடுக்க தேர்ந்தெடுத்திருப்பது ராதாவும் கோகிலாவும்.



பூசாரி: ராதா, கோகிலா.. இரண்டு பேரும் உங்க தலைமுடியை கடவுளுக்கு காணிக்கையாக கொடுக்க தயாரா இருக்கீங்களா?

கோகிலா: நாங்க தயாரா இருக்கோம் ஐயா.

ராதா: ஐயா, நீங்க எப்போனு சொன்னீங்கனா அப்போவே எங்க முடியை கொடுத்திடுவோம்.

பூசாரி: சந்தோசம்மா. நீங்க ரெண்டு பெரும் கொஞ்சம் உங்களோட முடியை என்கிட்ட காட்டுங்க. உங்க முடி கடவுளுக்கு காணிக்கை கொடுக்க சரியா இருக்கானு பார்க்கணும்.

ராதாவும் கோகிலாவும் திரும்பி நின்று தங்கள் கொண்டையை அவிழ்த்துவிட்டனர். அடர்த்தியான அவர்களுடைய தலைமுடி சரிந்து தொங்கியது. இருவரின் தலைமுடியும் வழுவழுவென நீளமாக தொடைவரை இருந்தது.


பூசாரி கோகிலாவின் தலைமுடியில் இருந்து ஒரு கற்றையை பிடித்து பார்த்தார். அவளுடைய கூந்தல் அடர்த்தியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக தோன்றியது. இவ்வளவு அடர்த்தியான முடியை காணிக்கையாக கொடுத்தால் கடவுளுக்கு மகிழ்ச்சியை அழிக்கும், அதனால் ஊர் செழிப்பாக இருக்கும் என்று நினைத்தார்.

பூசாரி: ஒரு வருஷமா நீங்க ரெண்டு பெரும் உங்க தலைமுடியை வெட்டினீங்களா?

கோகிலா  & ராதா: இல்லைங்க ஐயா.



பூசாரிநல்லது. நாளைக்கு நல்லபடியா காலைல தலைக்கு குளிச்சு, உங்க முடியை சுத்தமா வச்சுக்கோங்க. கடவுளுக்கு காணிக்கையா கொடுக்கப்போற தலைமுடி சுத்தமா இருக்கணும். இப்போ ரெண்டு பெரும் போயிட்டு வாங்க.
அன்று இரவு கோகிலாவும் ராதாவும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடிலில் தனியாக இருந்தனர். இருவரும் தங்கள் தலைமுடியை கடைசியாக வாரிக்கொண்டனர்.

கோகிலா: ராதா, இவ்வளவு நாளா நீளமான தலைமுடியோட இருந்திட்டு நாளைக்கு மொட்டை அடிக்கணும்னு நினைக்கும்போது பயமா இருக்கு.

ராதா: எனக்கும் அப்டித்தான் இருக்கு. ஆனா நாம நம்மாளோட தலைமுடியை சாமிக்கு காணிக்கையா கொடுக்கப்போறோம். அதனால நம்ம ஊருக்கு நல்லது நடக்கும்.

கோகிலா: நீ சொல்றதும் சரிதான். சாமிக்கு கொடுக்கிற முடியை சந்தோசமா கொடுக்கணும். என்னுடைய பயமெல்லாம் அவங்க முடியை வெட்டுறவிதம்தான்.

ராதா: உண்மைதான். போனமுறை உமாவோட முடியை வெட்டும்போது நான் பயந்துட்டேன். அவங்க உமாவோட முடியை வெட்றாங்களா இல்ல தலைய வெட்றாங்களா -னு.

கோகிலா: நம்ம ஊரில உள்ள எல்லா பொண்ணுங்களுக்கும் தெரியும் என்னைக்காவது அவங்க தலைமுடியை மொத்தமா வெட்டி கடவுளுக்கு கொடுக்கணும்-னு. அதனால நாம எப்பவும் தயாரா இருக்கணும். நம்மாளோட தலைமுடி நமக்கு சொந்தம் இல்ல.



ராதா: இன்னைக்கு நம்ம தூங்கும்போது நல்லா நம்ம தலைமுடியை பிடிச்சுகிட்டு தூங்கணும். நாளைக்கு பூஜைக்கு அப்புறம் நம்ம தலைமுடி நம்மகிட்ட இருக்காது.


மறுநாள் காலையில் பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தது. ராதாவும் கோகிலாவும் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டனர். தலைமுடியை காணிக்கை கொடுப்பதற்கு தயாராக சேலை அணியாமல் வந்து இருந்தனர். பூசாரி முன் அவர்கள் இருவரும் கொண்டுவரப்பட்டனர்.

பூசாரியின் அருகில் ஒருவன் தலைமுடியை வெட்டுவதற்காக பெரிய கத்தியை வைத்திருந்தான். காணிக்கை முடியை வெட்டும் கத்தியை பார்த்தவுடன் கோகிலாவும் ராதாவும் பயந்தனர். பின்னர் பூசாரி இருவரையும் மந்திரங்கள் சொல்லி ஆசீர்வதித்தார். இருவரையும் நோட்டம்விட்டு பின்னர் கோகிலாவை அழைத்து மண்டியிடச்சொன்னார்.

கனத்தமனதுடன் தன் தலைமுடியை ஒருமுறை பார்த்துவிட்டு மண்டியிட்டாள். அருகில் இருந்த ஒருவன் கோகிலாவின் தலைமுடியை முன்புறம் எடுத்து விட்டான். மெல்ல அவளுடைய முடியை ஒன்றாக சேர்த்து வெட்டுவதற்கு வசதியாக இழுத்துப்பிடித்தான்.

கோகிலாவிற்கு  தலைமுடியை இழுப்பது கொஞ்சம் வழியாக இருந்தது. அருகில் இருந்தவன் கத்தியை உயரப்பிடித்து கோகிலாவின் தலைமுடியை வெட்டுவதற்கு அயுத்தமானான்.

கத்தி தன்னுடைய தலைமுடியை வெட்டுமா அல்லது கழுத்தை வெட்டுமா என பயந்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியை கீழ்நோக்கி வீசினான். கத்தி தலையிய ஒட்டி கோகிலாவின் முடியை வெட்டியது. கோகிலாவின் நீண்ட தலைமுடி இழுத்துப்பிடித்துக்கொண்டிருந்தவனின் கைகளில் இருந்தது.



இப்பொழுது ராதா மண்டியிட்டாள்அவளுடைய முடியை ஒன்றாக சேர்த்து வெட்டுவதற்கு வசதியாக இழுத்துப்பிடித்தான். நொடிப்பொழுதில் ராதாவின் தலைமுடியை கத்தி வெட்டியிருந்தது.



கோகிலாவும் ராதாவும் எழுந்து பூசாரியை வணங்கினர். இருவரும் நீளமான தலைமுடியை இழந்து கழுத்து அளவு முடியுடன் நின்றனர். பூசாரி இருவரையும் புன்னகையுடன் பார்த்தார்.””கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும்என்றார். அருகில் இருந்த ஒருவனை அழைத்து கோகிலாவிற்கும் ராதாவிற்கும் மொட்டை அடிக்கும்படி கூறினார்.

கோகிலாவும், ராதாவும்  அருகில் ஒரு இடத்தில் அமர்ந்தனர். இருவரின் கழுத்தை சுற்றியும் மொட்டையடிப்பதற்கு வசதியாக துணி சுற்றப்பட்டது. கோகிலாவும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

கோகிலா ராதா இருவரின் தலையிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டது. சவரக்கத்தியை எடுத்து இருவாரைய்ந் தலையையும் மொட்டை அடிக்க துவங்கினார். இருவரின் தலைமுடியும் சிரைக்கப்பட்டு கீழே விழ ஆரம்பித்தது. ஆசையாக வளர்த்த தலைமுடி காணிக்கையாக விழுந்துகொண்டிருந்தது.


சிறிது நேரத்தில் இருவரின் தலையும் மொட்டையடிக்கப்பட்டு வழுவழுவென்று காட்சியளித்தது. கோகிலாவும் ராதாவும் பாவமாக இருந்தனர்.



இந்தமுறை கோகிலாவும் ராதாவும் தங்கள் தலைமுடியை காணிக்கையாக கொடுத்துவிட்டனர். அடுத்தமுறை முடியை இழக்கப்போகும் பெண்கள் யாரென்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து பூஜைக்கு சென்றனர்.





No comments:

Post a Comment