எதுக்குடா உங்க அம்மா ஊருக்கு வர சொல்றாங்க?
அதுவா... எங்க குல தெய்வ கோவில்ல ஒரு பூஜை இருக்கு... அதுல நம்ம ரெண்டு பேரும் கலந்துக்கணும்...
என்னடா இது... இதுக்கெல்லாம ஊருக்கு போவாங்க...
இது முக்கியமான பூஜைடி... கண்டிப்பா போயே ஆகணும்...
டேய்... ஆபிஸ்ல முக்கியமான க்ளையண்ட் மீட்டிங் இருக்கு... அது உனக்கே தெரியும்...
அது நான் டீம் லீட் கிட்ட பேசிட்டேன்... அவன் பாத்துப்பான்...
உன்னை மாதிரி ஒரு கிராமத்தானை லவ் பண்ணி கட்டிக்கிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே...
என் ஊர், பேமிலி எல்லாம் பார்த்து தானே கல்யாணம் பண்ண, அப்புறம் இப்போ என்ன இப்படி பேசுற...
கோவில் பூஜைக்காக 500 கிமீ போகணுமா...
இது முக்கியமான பூஜைடி செல்லம்...
அப்படி என்ன பூஜை... உன் அம்மா எங்கிட்ட எதுவும் சொல்லலயே...
அதுவா... நமக்கு கல்யாணம் ஆனதும், புகுந்த வீட்டுக்கு வந்த மருமகள், எங்க சாமிக்கு மொட்டை போட்டு, பொங்கல் வச்சு, படைச்சு சாமி கும்பிடணும்... அது எங்க குடும்ப வழக்கம்...
என்னது, மொட்டையா... என்னால முடியாது...
ஒரு தடவ தாண்டி... அதுவும் மொட்டைல பார்க்க நீ ரொம்ப அழகா இருப்ப...
போடா பட்டிக்காட்டான்... மொட்டை போடணுமாம்... நான் என் முடியை ட்ரிம் கூட பண்ணது இல்ல... உன் அம்மாட்ட சொல்லிடு... நான் வர மாட்டேன்...
சொல்றதை முழுசா கேளுடி... இப்படி மொட்டை போட்டு முடி காணிக்கை கொடுக்குற மருமகளுக்கு எங்க குடும்ப வழக்கப்படி என் அம்மா பேருல இருக்க நாலு ஏக்கர் தென்னந்தோப்பை உன் பேருல எழுதி வைப்பாங்க...
அப்புறம் அந்த தென்னந்தோப்புக்கு நான் காவல் பார்த்துட்டு அங்கேயே இருக்கணுமா...
அதோட வேல்யூ எட்டு கோடி... உனக்கு வேணுமா, வேண்டாமா...
எட்டு கோடியா... மசிறு தானே... வளர்ந்துடும்... மொட்டை போட்டுக்குறேன்...
No comments:
Post a Comment