Friday, 12 April 2024

மீனா பொண்ணு

என்னங்க, உங்க அம்மா நம்ம குல தெய்வ கோவில்ல ஏதோ வேண்டுதல் இருக்குன்னு சொல்றாங்க...

ஆமாடி...

என்ன வேண்டுதல்... அத்தை ஏதோ எங்கிட்ட மறைக்கிறாங்க...

என்னடி சொல்ற...


ஆமாங்க.... அவங்க வேண்டுதல்னு மட்டும் தான் சொன்னாங்க... என்ன வேண்டுதல்... என்ன நேர்த்திக் கடன் செலுத்தணும்னு சொல்லவே இல்ல... என்னவோ சொல்லாம மறைக்கிறாங்க...


அது ஒண்ணும் இல்லடி... நம்ம ரெண்டு பேருக்கும் ரொம்ப நாளா குழந்தை இல்லாம இருந்து...  நம்ம பையன் உன் வயித்துல உருவான... நம்ம சாமிக்கு நாம மூணு பேரும் குடும்பமா மொட்டை போட்டு முடி காணிக்கை கொடுக்கணும்னு அம்மா வேண்டி இருக்காங்க...

என்னது... மொட்டையா... நானும் உங்க கூட மொட்டை அடிக்கணும்மா...

ஆமா செல்லம்... அது தானே வேண்டுதல்...



அத்தைக்கு வேற எதுவும் தெரியாதா? நீங்க ரெண்டு பேரும் மொட்டை போட்டுக்கோங்க... என்னால முடியாது...

அப்படி எல்லாம் சொல்ல கூடாதுடி... சாமி குத்தம் ஆகிடும்...

அப்போ என்னை மொட்டை அடிக்கணும்னு குடும்பமே சேர்ந்து பிளான் பண்ணி இருக்கீங்க...

அப்படி எல்லாம் இல்லடி செல்லம்... 


நான் என் முடியை மொட்டை போட்டா, என் அழகு எல்லாம் என்ன ஆகுறது...
மறுபடியும் முடி வளர எவ்ளோ மாசம் ஆகும் தெரியுமா?


இது தான் உன் பிரச்சனையா... மொட்டை அடிச்சதும் ஒரு மாசத்துல முடி வளரும்... அப்புறம் உனக்கு பிடிச்ச மாதிரி ட்ரெண்டியா ஹேர் கட் பண்ணிக்கோ... செம மாடர்னா இருப்ப..

என்ன சொல்றீங்க...

ஆமாடி செல்லம்...


அட... இது நல்ல ஐடியாவே இருக்கே... ஆனா அதுக்கு மாடர்னா ட்ரஸ்ஸூம் பண்ணனுமே...

அதுக்கு என்ன? உனக்கு பிடிச்ச மாதிரி வாங்கிட்டா போச்சு...

சரிங்க.... அப்போ நான் மொட்டை போட்டுக்குறேன்... 

அப்போ குல தெய்வ கோவில்ல வேண்டுதலை சிறப்பா செஞ்சிடலாம்...




நண்பர்களே, என்னுடைய ஒரு சிறு தவறால், கவனக்குறைவால் நான் எழுதி வைத்து இருந்த ஒரு கதையின் மூன்று பாகங்கள் டெலிட் ஆகிவிட்டது, அதை அதே போல திரும்ப எழுத முடியும் என்று தோணவில்லை, அதே சமயம் ஆபிஸிலும் நிறைய பிரச்சனைகள் ஓடிக் கொண்டு இருக்கிறது, ஏகப்பட்ட வேலைகளை நானே பார்க்க வேண்டியதாக இருக்கிறது, மனம் ஒன்றி கதை எழுத உட்கார முடியவில்லை, குடும்பத்திலும் சில குழப்பங்கள், என்னால் சரியாக கதை எழுத முடியவில்லை, எப்போதும் ஒரு சில பாகங்கள் கதையை எழுதி ரெடியாக வைத்து இருப்பேன், இப்போது அந்த அளவிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை, அதனால ஒரு சின்ன வேண்டுகோள், நண்பர் விக்னேஷ் தமிழ் கதை எழுதுவதை பார்த்து தான் நானும் கதை எழுதலாம் என்று பிளாக் ஆரம்பித்தேன், கடந்த சில வருடங்களாக ரெஜிஸ்ட்டர் வெப்சைட் மூலமாக தொடர்ந்து கதைகளை எழுதி வருகிறோம், அது என்னுடைய ரெகுலர் நண்பர்களுக்கு தெரியும். தற்போது நண்பர் விக்னேஷ் தமிழ் வெப்சைட் மூடிவிட்டார், அதனால் சில வாரங்களுக்கு அவருடைய கதைகளை பதிவு செய்யலாமா, என்னிடம் அவருடைய கதைகள் பேக்கப் இருக்கிறது என்று நினைக்கிறேன், அதை நம்முடைய வெப்சைட்டில் பதிவு செய்யலாமா வேண்டாமா, முடிந்தால் அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் அவரிடம் கேட்டு சொல்லவும், நன்றி

No comments:

Post a Comment