இவனை நம்பி காதலிச்சு, வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணி இப்படி ஆகி போச்சே...
இப்ப நான் என்ன பண்ணுவேன்... இந்த சாங்கியத்தில இருந்து நான் எப்படி தப்பிக்க போறேன்...
இந்த மாமியார் வேற... இப்பவே இந்த சடங்கை பண்ணனும்னு ஒத்த கால்ல நிக்குறா...
இன்னிக்கு மட்டும் அவன் வரட்டும்... அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்... இல்லன்னா ஒரு வாரத்துக்கு நைட்டுக்கு பட்டினி போட்டுட வேண்டியது தான்...
என்னங்க... உங்கம்மா என்ன சொல்றாங்க தெரியுமா... புதுசா கல்யாணம் ஆகி வந்த மருமக உங்க குல தெய்வ கோவில்ல மொட்டை அடிக்கணுமாம்...
நிஜமாவா... இதை பண்ணாம இருக்க ஏதாவது பரிகாரம் இருக்கா...
என்னங்க சொல்றீங்க... நான் எப்படிங்க மொட்டை அடிப்பேன்... அதுவும் கல்யாணம் ஆகி இன்னும் ஒரு மாசம் கூட முழுசா முடியல...
அதுக்குள்ள மொட்டை அடிக்க சொன்னா எப்படிங்க...
இது எல்லாம் காதலிக்கும் போது சொல்ல மாட்டீங்களா...
உங்களுக்காக என் தலையை மொட்டை அடிச்சு தொலையுறேன்... இது நான் உங்களை காதலிச்சதுக்கு... எங்க வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணதுக்கான தண்டனைன்னு நினைச்சுக்கிறேன்...