இன்றைய கால மாடர்ன் மங்கைகள் தங்கள் தலை முடியை நீளமாக வளர்க்க விரும்புவதில்லை. மாறாக ஷார்ட் ஹேர் ஸ்டைல் வைக்கவே விரும்புகின்றனர். நீளமான முடியை விட, ஷார்ட் ஹேர் கட் ஸ்டைல் வைக்கும் போது பல ஸ்டைல்களில் தங்கள் தலை முடியை மாற்றி அமைக்கலாம்.
ஷார்ட் ஹேர் ஸ்டைலில் ஆயிரக்கணக்கான ஹேர் ஸ்டைல் மாடல்கள் உள்ளன. மேலும் இன்றைய மாடர்ன் மங்கைகள் தங்கள் தோற்றத்தில் அடிக்கடி மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இந்த ஷார்ட் ஹேர் கட் ஸ்டைல் வைப்பதன் மூலம் பயனடையும் ஏழு நன்மைகள் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1. ஷார்ட் ஹேர் கட் ஸ்டைல் பல பெண்களுக்கு ஒரு வரம். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷார்ட் ஹேர் ஸ்டைல் தங்கள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும். உங்கள் முடியின் பராமரிப்பு, மற்றும் ஜடை பின்னுதல் போன்ற நேரத்தை மிச்சப்படுத்தி, உங்கள் முக்கிய வேலைகளில் கூடுதல் நேரத்தை செலவிடலாம்.
ஷார்ட் ஹேர் ஸ்டைல் எவ்வளவு வசதியானது என்று பெண்களுக்கு மட்டுமே தெரியும்.
2. காலையில் அவசரமாக பள்ளி, கல்லூரி, அல்லது பணிக்கு செல்ல வேண்டியவர்களுக்கு ஷார்ட் ஹேர் ஸ்டைல் மிகவும் வசதியாக இருக்கும். தேங்காய் எண்ணெய் தேய்த்தல், ஜடை பின்னுதல் போன்ற வேலைகள் இல்லை. ஒரு சிறு ரப்பர் பேண்ட் அல்லது க்ளிப் மட்டுமே உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்.
3. உங்கள் முடி அளவாக இருந்தால் குறைவாக உதிரும். ஷார்ட் ஹேர் ஸ்டைல் வைத்து சீப்பால் சீவும் போது கூந்தல் சீப்பில் அதிகம் சிக்காது. ஷார்ட் ஹேர் ஸ்டைல் வைத்து அதற்க்கு எண்ணெய் வைப்பது மிகவும் சுலபம். அதனால் முடி பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கிறது.
4. ஒரு விஷயம் முக்கியமானது. ஷார்ட் ஹேர் ஸ்டைல் உங்களை மிக அழகாக காட்டுகிறது. நீங்கள் உங்கள் வயதை மறைக்க வேண்டும் என்று விரும்பினால், உங்கள் முடியை உங்களுக்கு தகுந்த ஷார்ட் ஹேர் ஸ்டைலை முயற்சி செய்து பாருங்கள்.
5. ஷார்ட் ஹேர் ஸ்டைலை பராமரிப்பு செய்ய தேவையான சில பொருட்கள் குறைந்த விலையிலேயே வாங்கி உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.
6. ஷார்ட் ஹேர் ஸ்டைல் நீங்கள் விரும்பவில்லை என்றாலும், உங்களை சூப்பர் ஸ்மார்ட்டாக காட்டுகின்றன. உங்கள் நீளமான முடியை சரியாக பராமரிப்பு செய்யாவிட்டால், உங்கள் தோற்றம் பாழாகிவிட அதிக நேரம் எடுக்காது.
7. ஷார்ட் ஹேர் ஸ்டைல் வைத்து இருந்தால் பார்லர் செலவு இல்லை. உங்கள் தலை முடியை மாற்றி அமைக்க, ஹேர் டை அடிக்க, அல்லது வேறு எந்த வேலைக்கும் ஷார்ட் ஹேராக இருப்பதால் அதற்கான கட்டணமும் பாதியாக குறையும்.
இந்த ஏழு நன்மைகள் முக்கியமான விஷயமாக பார்க்கபடுகிறது. எனவே நண்பர்கள் உங்கள் காதலி, அல்லது மனைவிக்கு இந்த காரணங்களை சொல்லி, அவர்களின் நீளமான முடியை உங்கள் விருப்பபடி மாற்றி அமைக்கலாம்.