அதே சமயத்தில் லட்சுமி தான் வாங்கி வந்த மல்லிகை பூவை சித்ராவுக்கு கொடுக்க, பூவும் கத்தரியுமாக சித்ராவின் அருகில் வர தூக்கத்தில் கனவு கண்டு எழுந்த சித்ரா பயத்தில் கத்தி விட்டாள்.
அய்யோ... என் முடி... என் முடி... அதை கட் பண்ணாதீங்க என்று சித்ரா லட்சுமியை பார்த்து கத்த...
என்ன சித்ரா... இப்படி கத்தற... நான் ஆசையா உனக்காக பூ வாங்கிட்டு வந்தா நீ என்னை பார்த்து இப்படி பயப்படுற... ஏதாவது கெட்ட கனவு கண்டீயா...
அக்கா... இப்ப உங்களுக்கு என்ன வேணும்...
இல்ல திவ்யாவை பார்க்க வந்த... அவ எங்க...
அவ இன்னும் தூங்குறா... வேற என்ன...
இல்ல... இன்னிக்கு பக்கத்துல இருக்க அம்மன் கோவிலுக்கு போகலாம்னு இருந்த... அதான் உன்னையும் கூப்பிட்டு போகலாம்னு...
இல்ல அக்கா... நீங்க போய்ட்டு வாங்க... நான் கோவிலுக்கு போற நிலைமைல இல்ல...
நீ சோகத்தில இருக்கன்னு தெரியும்... ஏதோ நடந்தது நடந்து போச்சு... அதுக்காக அப்படியே இருக்க முடியுமா... நம்ம பிரச்சனையை கடவுள்கிட்ட சொன்னா... கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும்... அதான் உன்னை கூப்பிட்டேன்...
சித்ராவுக்கும் அது சரி என்று பட, இந்த வீட்டுக்கு வந்து ஒரு முறை தான் கோவிலுக்கு போய் இருக்கிறாள்... அதுவும் இப்போ லட்சுமியுடன் கோவிலுக்கு போக வேண்டுமா என்று சித்ரா யோசிக்க...
வா... சித்ரா... போகலாம் என்று லட்சுமி சொல்ல...
சரி போவோம்... எல்லாம் என் பொண்ணு திவ்யாக்காக என்று நினைத்த சித்ரா சரி என்று சொல்லி விட்டு கோவிலுக்கு போக ரெடியானாள்.
சித்ரா சிம்பிளாக ரெடியாகி கீழே வர, அப்போது ஒருவன் வாசல் கேட் அருகே நிற்க... சித்ரா யாரென்று விசாரித்தாள்.
என்னப்பா... யாரு நீ...?
இல்ல லட்சுமி அக்காவ பார்க்கணும்...
அவங்க குளிச்சிட்டு இருக்காங்க...
அப்போ இந்த கவரை மட்டும் அவங்ககிட்ட குடுத்துடுங்க... நான் அவங்ககிட்ட போன்ல பேசிக்கிறேன்... என்று சொன்னவன் ஒரு கவரை சித்ராவிடம் கொடுத்து விட்டு சென்றான். சித்ரா அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் செல்ல... அப்போது தான் லட்சுமி குளித்து விட்டு வர, அந்த கவரை லட்சுமியிடம் கொடுக்க, அதை பிரித்து பார்த்த லட்சுமி கொஞ்சம் அதிர்ச்சி ஆனாள்.
அந்த கவரில் ஒரு பெரிய அடர்த்தியான முடி கொத்தாக ரப்பர் பேண்ட் போட்டு கட்டப்பட்டு இருக்க... அதை சித்ரா பார்த்து இருந்தால் பிரச்சனை ஆகி இருக்கும் என்று நினைத்த லட்சுமி அதை பாதுக்காப்பாக வைத்தாள்.
என்ன சித்ரா ரெடி ஆகலையா...
ஏன் அக்கா... ரெடியாகி தானே வந்து இருக்கேன்...
ரொம்ப சிம்பிளா இருக்கு... சேலை கூட பரவாயில்லை... முகம் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாம டல்லா இருக்கு... அப்புறம் எப்போ பார்த்தாலும் இந்த கொண்டை தான் போடுவியா...
இனிமே நான் கொண்டை மட்டும் தான் போட போறேன்... என் பொண்ணு என் முடியை பார்த்து வெறுப்பாயிடுவா... இந்த நிலைமைல எனக்கு எதுக்கு அலங்காரம் எல்லாம்?
என்ன சித்ரா இது? திவ்யா உன்னை வெறுப்பாளா...அவ அப்படி நினைக்க மாட்டா... அப்புறம் இனிமே இப்படி நம்பிக்கை இல்லாம பேசாதே... ஹஸ்பண்ட் இல்லன்னா எந்த பொண்ணுக்கும் வாழ்க்கை இல்லையா... சரி வா... உன்னை கொஞ்சம் மாத்தணும்... என்று சொல்லி விட்டு பார்லருக்கு கூட்டி சென்றாள் லட்சுமி.
சித்ராவை கூட்டி சென்ற லட்சுமி... சேரில் உட்கார வைத்து... சித்ராவின் கொண்டையை பிரித்து விட்டாள். அதுவரை லட்சுமி அந்த அளவுட் அடர்த்தியான முடியை பார்த்தது இல்லை. ஜடை பின்னி விடும் முன்பு சித்ராவின் முடியை தன் கையாலேயே தடவி, அதன் அடர்த்தியை பார்த்தாள்.
அக்கா நேரம் ஆகிட்டு இருக்கு... கோவிலுக்கு போகலாம்... இதெல்லாம் எதுக்கு....
இன்னும் டைம் இருக்கு... என் கூட வர்ற நீ நல்லா அழகா இருக்க வேணாமா... இந்த அழகான முடியை இத்தனை நாளா கொண்டை போட்டு மறைச்சு வச்சுட்டு இருந்தையா...
லட்சுமி தன் முடியை பற்றி பாராட்டி பேசுவது சித்ராவுக்கு பிடித்து இருக்க... அவள் அமைதியாக இருந்தாள்.
முடி நல்லா அடர்த்தியா இருக்கு சித்ரா... ஆனா நுனியில மட்டும் டேமேஜ் ஆகி இருக்கு... கொஞ்சம் கட் பண்ணா நல்லா இருக்கும்...
அக்கா... அதெல்லாம் வேண்டாம்... ஜடை மட்டும் போடுங்க போதும்...
சரி... சரி பயப்படாத... என்று சொன்ன லட்சுமி... சித்ராவின் முடியை அழகாக ஜடை பின்னி, அலங்கரித்து, வாங்கி வந்த மல்லிகை பூவை வைக்க... சித்ரா அதை வேண்டாம் என்று மறுக்க... லட்சுமி எதுவும் பேசாமல் அவளுக்கு பூ வைக்கவில்லை. இந்த சிம்பிள் மேக்கப்பிலேயே அழகாக இருந்தாள் சித்ரா.கண்ணாடியில் பார்த்த சித்ரா தன் முடி அழகாக ஜடை பின்னி இருப்பதை பார்த்தாள். ரொம்ப நாட்களுக்கு பிறகு சித்ராவின் முடி அழகாக அவளுக்கே தெரிந்தது.
அக்கா... ரொம்ப நல்லா பின்னி இருக்கீங்க.. தேங்க்ஸ்...
சரி வா கோவிலுக்கு போகலாம் என்று இருவரும் கிளம்பினர். கோவிலில் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்க... உள்ளே போக முடியாமல் வெளியே நின்றே சாமி கும்பிட்டு விட்டு கொஞ்சம் நேரம் அங்கேயே அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
சித்ரா இங்க ஒரு அம்மா குறி சொல்வாங்க... அவங்களை பார்த்துட்டு போலாம் வா...
அதெல்லாம் வேண்டாம் அக்கா... திவ்யா தனியா இருப்பா... போலாம்...
அவங்க சொல்றது எல்லாம் சரியா இருக்குன்னு சொல்றாங்க... அதான் ஒரு தடவை பார்க்கலாம்னு நினைச்சேன்...
இல்லக்கா... எனக்கு அதெல்லாம் நம்பிக்கை இல்லை... நீங்க வேணும்னா பார்த்துட்டு வாங்க...
சரி வா... போலாம் என்று இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். சித்ராவுக்கு கோவிலுக்கு வந்தது ஏதோ ஒரு வகையில் நம்பிக்கையை கொடுத்தது. அவள் முகத்தில் அந்த நம்பிக்கை தெரிந்தது.
அடுத்த சில நாட்கள் கோபி அடிக்கடி மாலை திவ்யாவுக்கு நோட்ஸ் கொடுக்க வந்தான். சித்ராவும் அதை கவனித்து கொண்டு தான் இருந்தாள். தன் மகளின் படிப்பு விஷயம் என்பதால் சித்ரா கோபியையும் நன்றாக உபசரிக்க... சித்ராவும் கோபியுடன் நன்றாக பழகிவிட்டான். ஆனால் கோபியின் மனதில் சித்ராவின் அழகிய முடி மீது தான் கவனம் இருந்தது.
அவன் திவ்யாவுடன் பழகவே அவளுடைய அடர்த்தியான முடி தான் காரணம். கோபிக்கும் பெண்களின் முடியை ரசிக்க பிடிக்கும். ஆனால் திவ்யாவின் முடி மொட்டை அடித்தும், அவளுடைய மொட்டை தலையில் கூட ஒரு விதமான அழகாக தான் இருந்தாள்.
ஆனால் இப்போது கோபிக்கு திவ்யாவை விட, அவளுடைய அம்மா சித்ராவின் முடியை தொட்டு பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அவனுடைய அம்மா வீட்டிலேயே சின்ன பார்லர் வைத்து இருக்க, அங்கே வரும் பெண்களின் முடியை ரசித்து இருக்கிறான் கோபி. பார்லரில் பெண்கள் முடி வெட்டும் போது ஏதாவது காரணம் சொல்லி அவன் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்து கொண்டு முடி வெட்டுவதை பார்த்து ரசிப்பான். இடையே அவன் அம்மாவுக்கு தேவையான உதவிகளையும் செய்ய... அங்கு வந்த பெண்கள் அவனிடம் நன்றாக பழகி இருந்தனர்.
கோபி எப்படியாவது அந்த சேரில் உட்கார வைத்து ஒரு பெண்ணின் முடியை வெட்டி விட வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த சமயத்தில் தான் சித்ராவுடன் பழக்கம் ஏற்பட, எப்படியாவது சித்ராவின் முடியை வெட்ட வேண்டும் என்று நினைத்தான். அதன்படி முக்கியமான நோட்ஸ்களை திவ்யாவுக்கு கொடுக்காமல் வேண்டும் என்று வீட்டில் வைத்து விட்டு, அதனை சித்ராவை தன் வீட்டில் வந்து வாங்கி கொள்ள சொன்னான்.
அந்த சமயத்தில் தான் சித்ரா கோபியின் வீட்டுக்கு போனாள். கோபி சரியாக பிளான் செய்து அவன் மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் போது சித்ராவை அவனுடைய வீட்டுக்கு வர சொல்லி இருந்தான்.
Next 7 part
ReplyDelete