அப்போ நான் 2வது படித்து கொண்டிருந்தேன்
எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, நான் மூன்று பேர் மட்டுமே. ஒரு நாள் என் அப்பா பள்ளிக்கு 3நாள் லீவ் சொல்லி விட்டு திருச்சியில் ஒரு திருமணத்திற்கு சென்றோம். நெருங்கிய சொந்தம் என்றதால் இரு தினங்களுக்கு முன்னரே சென்றுவிட்டோம். திருமணம் முடிந்த மறுநாள் காலை 7 மணி நான் என் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தேன். என் அப்பா என்னை அழைத்தார்.
டேய் தம்பி... வா நம்ம பக்கத்துல சமயபுரம் கோவிலுக்கு போய்ட்டு வருவோம்..
போங்க அப்பா.. நான் வரல. அம்மாவை மட்டும் கூட்டிட்டு போங்க...
அம்மா வரலையாம்... நம்ம ரெண்டு பேர் மட்டும் போவோம்னு என்னை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்..
எனக்கு கோயிலுக்கு போகவே பிடிக்காது. பஸ்ஸில் ஏறி சமயபுரம் சென்றோம்.கோயில் அருகில் சென்று...
அப்பா என்னிடம்... தம்பி, நான் மொட்ட போட போறன்... நீயும் மொட்டை போட்டுக்கரியா என்று கேட்க...(அப்பாக்கு மொட்டை என்றால் ரொம்ப பிடிக்கும் போல... அடிக்கடி மொட்டை அடிப்பார்)
முடியாது... நான் மொட்டை எல்லாம் அடிக்க மாட்டேன் என்று கோபமாக சொல்ல... அப்பா நான் கோபமாக இருப்பதை புரிந்து கொண்டார்.
மொட்டை போடும் இடத்திற்கு சென்று ஒரு டிக்கெட் மட்டும் வாங்கி விட்டு உள்ளே சென்றோம்.
அங்கே நிறைய கூட்டம் நாங்கள் ஒரு வரிசையில் நின்றோம். எனக்கு முன்னால் ஒரு ஆண், பெண் கையில் குழந்தையுடன் நின்றாள். அவளுக்கு நல்ல அடர்த்தியான நீளமான கூந்தல் இடுப்புக்கு கீழ் பகுதி வரை இருந்தது. திரும்பிய போது அவள் முகத்தை பார்த்தேன். மா நிறம். நல்ல கலையான முகம்.
நான் கூட்ட நெரிசலில் அவள் மீது தெரியாமல் இடித்து விட்டேன். கோபத்தோடு திரும்பிய அவள் என்னை பார்த்தும், கோபத்தை விட்டு விட்டு சிரிப்பை உதிர்த்தாள். ஆனால் நான் கோபமாக அவளை முறைத்தேன். அவள் மீண்டும் சிரித்தாள். அருகில் அவள் கணவன் என் அப்பாவைப் பார்த்து சிரித்தான். அவள் என்னைப் பார்த்து
ஹாய் குட்டி உன் பேர் என்ன?
சொல்ல முடியாது போடி... என்று கோபமாக கத்த...
அவள் கணவன் என் வெட்டி கோபத்தை பார்த்து சிரித்தான். என் அப்பா அப்படி எல்லாம் பேசக்கூடாது என்று என்னை அதட்டினார். நான் அழத் தொடங்கினேன்.
அப்பா மீண்டும் அதட்ட... அந்த பெண் குழந்தையை திட்டாதீங்க... அண்ணா என்றாள்.
அவள் குழந்தையை கணவனிடம் கொடுத்து விட்டு என்னை தூக்கி கொண்டாள்.
அவள் நீயும் மொட்டை போட போறியா... என்று என்னை கேட்க... நான் அவளிடம்...இல்லை... இல்லை... அப்பா மட்டும் தான் மொட்டை... என்று வேகமாக கூறினேன்.
அவள் அப்பா கூட நீயும் மொட்டை அடிக்கலாம்ல என்று என்னிடம் சொல்ல... நான் மீண்டும் மொட்டை பயத்தில் அழ... அவள் உடனே ஒரு மிட்டாய் ஒன்றை தந்தாள்.
நான் நீ வேண்ணா மொட்டை அடிச்சிக்க என்றேன். அவள் சிரித்து விட்டு சரி ஒகே... என்னோட சேர்ந்து நீயும் மொட்டை அடிச்சிக்கிறியா என்றாள்..
வேண்டாம்... நான் மொட்டை அடிக்க மாட்டேன் போ... என்றேன்
வரிசை முன்னே செல்ல, செல்ல அவள் என்னுடன் பேசிக்கொண்டே இருக்க எனக்கு அவளை ரொம்ப பிடித்தது. என் அப்பா அவள் கணவனிடம் பேச ஆரம்பித்தார்.
அப்பா... என்ன தம்பி குழந்தைக்கு முதல் மொட்டையா... என்று கேட்க... அவளுடைய கணவன்... ஆமா அண்ணா... மூனு பேருக்கும் தான்... என்றார்.
அப்போ உன் சம்சாரமும் மொட்டை அடிக்கா என்று ஆச்சர்யமாக பார்த்து கேட்டார்.
ஆமா அண்ணா... பிரசவ நேரத்துல கொஞ்சம் பிரச்சனையாகிட்டு... அதான் நான் அவளுக்காக வேண்டிகிட்டேன்... நல்ல படியா ரெண்டு பேரும் வீடு வந்து சேந்துட்டா... சமயபுரம் மாரியம்மனுக்கு குடும்பத்தோட வந்து முடி காணிக்கை கொடுப்பதா வேண்டியிருந்தேன். சரி வேண்டுதலை குடுத்துடலாமான்னு அவள் கிட்ட கேட்டேன்... அவளும் சரின்னு சொன்னா... அவளுக்கு அவளோட முடியை மொட்டை அடிக்க விருப்பமில்லை தான்... சரி குழந்தைக்காக முடியை மொட்டை அடிக்க ஒத்துகிட்டா...
வரிசை முடிந்து ஒரு நாசுவன் முன் நாங்கள் வர, முதலில் அவள் கணவன் அமர்ந்தான். 5 நிமிடத்தில் மொட்டையாக எழுந்தான். அடுத்தது அவள் தன் குழந்தையை மடியில் வைத்து அமர்ந்தாள்.
நாசுவன் புள்ளைக்கு மொட்டயாம்மா... என்று கேட்க... அவள் ஆமா அண்ணா... கொஞ்சம் பார்த்து பொறுமையா செய்ங்க அண்ணா... என்று சொல்ல...
நாசுவன் சரிம்மா... என்று சொல்லி விட்டு குழந்தையின் தலை முடியை மெதுவாக ஷேவிங் செய்து விட... அடுத்த 15 நிமிடத்தில் குழந்தைக்கு மொட்டை அடித்து விட்டனர். இப்போது குழந்தையை கணவனிடம் கொடுத்து விட்டு அவள் மட்டும் அமர்ந்திருந்தாள்...
அவர்களுக்கு அருகில் என் அப்பா இன்னொரு நாசுவன் முன் தலையை குனிந்து உட்கார்ந்து இருக்க... நான் அவளுடைய முடியை மொட்டை அடிப்பதையே பார்த்துக் கொண்டு இருக்க... எனக்கும் அவள் மொட்டை அடிப்பதை பார்த்து... நானும் மொட்டை அடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.பின் அவள் நாசுவன் முன்னால் உட்கார்ந்து கொண்டு வாடா வந்து மடில உட்காரு என்று சொல்ல... நானும் அவள் மடியில் உட்கார்ந்து கொள்ள, நாசுவன் என் தலையை குனிய வைத்து, தண்ணீரை அள்ளி தெளித்து தேய்த்து விட்டான். பின் அவனிடம் இருந்த ஒரு அரை பிளேடை போட்டு விட்டு, என் முடியை மழிக்க ஆரம்பிக்க, அவள் என் தலையை ஆதரவாக பிடித்துக் கொண்டாள்.
No comments:
Post a Comment