Saturday, 10 September 2022

பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்ற வீட்டுக்குறிப்பு

 பெண்மையின் அழகை கெடுக்கும் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்ற எளிய முறை:

பெண்மையின் அழகை கெடுக்கக்கூடிய முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களால் சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். இதை சரிசெய்ய அவர்கள் கடைகளில் கிடைக்கக்கூடிய ஆங்கில மருந்துகளையே நாடுவார்கள்.  இந்த மருந்து சிலருக்கு பக்கவிளைவுகளை சருமத்தில் ஏற்படுத்திவிடக் கூடிய வாய்ப்பு அதிகம். அப்படி இல்லாமல் பெண்கள் வீட்டிலேயே ரோமங்களை அகற்றி முக அழகை மேம்படுத்திக்கொள்ள வீட்டு குறிப்புகளை தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

எலுமிச்சை பழம்:

தேவையான பொருட்கள்:

1. சர்க்கரை ஒரு டீஸ்பூன்

2. முழு எலுமிச்சம்பழம் ஒன்று

செய்முறை: எலுமிச்சம்பழத்தை நன்றாக சாறு பிழிந்து அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கி அதை முகம் முழுவதும் தடவி விட வேண்டும். அது நன்றாக காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்றாக கழுவினால் போதும் முகத்தில் உள்ள ரோமங்கள் அனைத்தும் உதிர்ந்து முகம் பொலிவு பெறும்.



கோதுமை:

தேவையான பொருட்கள்:

1. மஞ்சள் ஒரு சிட்டிகை

2. பால் ஒரு டீஸ்பூன்

3. கோதுமை மாவு ஒரு டீஸ்பூன்

செய்முறை; இந்த மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு நன்றாக காய்ந்தவுடன் அரை மணி நேரத்திற்குப் பிறகு முகத்தை நன்றாக கழுவி விட வேண்டும். இதனால் மேல் உதட்டில் உள்ள முடிகள் கூட உதிர்ந்து விடும். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்யலாம்.

கடலை மாவு:

தேவையான பொருட்கள்:

1. மஞ்சள் ஒரு சிட்டிகை

2. கடலை மாவு ஒரு டீஸ்பூன்

3. தண்ணீர் தேவையான அளவு

செய்முறை: இந்த மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி கொள்வதனால் தேவையற்ற ரோமங்கள் அகன்று விடுவதுடன் முகம் பொலிவு பெறும்.

முட்டை:

தேவையான பொருட்கள்:

1. ஒரு முட்டையின் வெள்ளைக் கரு

2. சோள மாவு ஒரு டீஸ்பூன்

3. சர்க்கரை ஒரு டீஸ்பூன்

செய்முறை: இந்த மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால் நாளடைவில் முகம் பொலிவு பெறுவதுடன் தேவையற்ற ரோமங்கள் முகத்தை விட்டு அகன்றுவிடும்.

மஞ்சள்:

தேவையான பொருட்கள்:

1. பால் ஒரு டீஸ்பூன்

2. மஞ்சள் ஒரு டீஸ்பூன்

செய்முறை: இதை இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் பூசி பிறகு அது காய்ந்தவுடன் முகத்தை கழுவி விட வேண்டும் இப்படி செய்தால் முகத்தில் உள்ள முடி உதிர்வதுடன் முகப்பருக்களும் அகன்றுவிடும்.

இந்தக் குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் கருத்துக் கூறுங்கள்.




No comments:

Post a Comment