என்ன புலி, பெரிய யோசனைல இருக்க,
என்னங்க சிங்கம், உங்க வீட்டு வழக்கபடி புதுசா வந்த மருமக, குல தெய்வ கோவில்ல பொங்கல் வச்சு, மொட்டை அடிச்சு நேர்த்திக் கடன் பண்ணனுமாமே...
ஆமா புலி, இது என் அண்ணி யுவராணி கூட அப்படி தான் பண்ணுனாங்க...
ஹே... அதெல்லாம் ஒண்ணும் இல்ல புலி, ரெண்டு மாசத்துல முடி வளர்ந்துடும்...
இல்லங்க... என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் அடுத்த மாசம் வர்றாங்க... அவங்க வரும் போது நான் எப்படி அவங்கள மொட்டை தலையோட பேஸ் பண்றது...
இதெல்லாம் குடும்ப வழக்கம், பாரம்பரியமா வர்றது... கண்டிப்பா நீ நம்ம குல தெய்வ கோவிலில மொட்டை அடிச்சு தான் ஆகணும்...
இதை சொல்ல தான் உங்ககிட்ட கேட்டேனா... இதுல இருந்து தப்பிக்க வழி சொல்லுங்க... ஏதாவது பரிகாரம் இருக்கும் கேட்டு பாருங்க...
பரிகாரம் என்னனு எனக்கு தெரியல... அம்மாகிட்ட கேட்கவா...
அய்யோ வேண்டவே வேண்டாம்... அவங்க கிட்ட கேட்டா அவங்க எனக்கு அரை மணி நேரம் அட்வைஸ்ன்ற பேர்ல கிளாஸ் எடுப்பாங்க...
சரி அப்போ மொட்டை அடிச்சுக்கிறீயா?
வேற வழி, நான் பண்ண பெரிய தப்பு உங்கள கல்யாணம் பண்ணது...
ஏன் புலி அப்படி சொல்ற...
பின்ன, போலீஸ்னு நம்பி உங்களை கல்யாணம் பண்ணா, என்னை விட அரை அடி உயரம் கம்மியா இருக்கீங்க... என் ஹைட்டுக்கு ஏறி நின்னு வேலை செய்ய முடியல... இப்போ உங்களால என் முடியும் போக போகுது...
என்ன புலி இப்படி சொல்ற... இதெல்லாம் பண்ணலன்னா சாமி குத்தம் ஆயிடும்... அப்புறம் நம்ம குடும்பம் தழைக்காது...
குடும்பம் தழைக்க நல்லா என் கூட வேலை செய்யணும்... எனக்கு மொட்டை அடிச்சு விட்டா எப்படி புள்ள பொறக்கும்...
புலி இப்படி கோபமாக கேட்க, துரைசிங்கம் ஸ்டேஷனுக்கு ஓடுறான்...
No comments:
Post a Comment