என் ஞாபகம் சரியாக இருந்தால் அன்றைய தினம் சனிக்கிழமை. எனது 17 வயது தங்கையை அருகில் உள்ள சலூனில் இறக்கிவிட சொல்ல, நாங்கள் காலையில் எனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டோம். நாங்கள் பார்லரை அடைந்தபோது, சலூன் முன்பு ஒரு பெரிய போர்டை பார்த்தோம், அதில் 'இன்று விடுமுறை' என்று எழுதப்பட்டிருந்தது. அங்கிருந்து நான் என் அம்மாவை அழைத்து, இப்போது என்ன செய்வது என்று கேட்டேன். அம்மா சொன்னாள், “உன் சகோதரியை வேறு ஏதாவது திறந்திருக்கும் சலூனுக்கு கூட்டி போ, ஆனால் அவளுடைய முடியை கண்டிப்பாக வெட்டி கொண்டு தான் வீட்டுக்கு வர வேண்டும். அவளுடைய வயதுக்கு ஏற்ப அவளுடைய தலைமுடி மிகவும் நீளமாக வளர்ந்திருக்கிறது."என்று அம்மா சொல்ல, நான் சரி என்று பதிலளித்தேன்.
பிறகு நான் என் தங்கையிடம் நாம் வேறு சலூனுக்குப் போகிறோம் என்று சொன்னேன், அவள் எதிர்த்து, "எனக்கு இங்கேதான் முடி வெட்ட வேண்டும், இன்று விடுமுறை என்றால், நாம் போய் விட்டு நாளை வரலாம்." என்று என் தங்கை சொல்ல, நான் அவளிடம் அம்மா ஏற்கனவே உன் முடியை வெட்டுவதைத் தள்ளிப்போட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்தாக சொன்னேன்.
ஆனால் அவள், “எனக்கு இங்கே தான் முடி வெட்ட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் அவளிடம் வாக்குவாதம் செய்யாதே என்று அவளுக்கு அறிவுரை கூறிவிட்டு, “உன்னை முடி வெட்டாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றால், அம்மா உன் முடியை வெட்டுவது நிச்சயம்” என்று சொல்ல அவள் அமைதியாகிவிட்டாள்.
மறுபடியும் பைக்கை எடுத்து கொண்டு 6 மைல் தொலைவில் இருந்த மற்றொரு சலூனை அடைந்தோம். வாசலைப் பார்த்தேன், அது மூடப்படவில்லை என்று நிம்மதியடைந்தேன். சலூனுக்குள் நுழைந்ததும், இப்போது யாரும் வேலை செய்யப்போவதில்லை என்று ஒரு பார்பர் கூறினார். நான் அவர்களிடம் காரணம் கேட்க, நகரின் அனைத்து சலூன்களிலும் மூன்று நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்கள் கழித்து எனது சகோதரியை முடி வெட்ட அழைத்து வரச் சொன்னார்கள்.
நான் அங்கிருந்து வெளியேறி தங்கையிடம் கைப்பேசியைக் கொடுத்து விட்டு, அம்மாவைக் கூப்பிட்டு அம்மாவிடம் நிலைமையை விளக்கச் சொன்னேன், அவள் அதை எடுத்துக்கொண்டு அம்மாவிடம் பேசினாள். "இந்த மூன்று நாட்களில் ஊரில் உள்ள சலூன் எதுவும் சேவை செய்யப் போவதில்லை. நான் இப்போது என்ன செய்ய?" என்று என் தங்கை கேட்க, "அப்படியானால், நான் இப்போது உங்கள் தலைமுடியை வெட்ட வேண்டும்." என்று அம்மா பதிலளித்தாள்,
"இல்லை, இல்லை", என்று என் தங்கை உடனடியாக செல்லில் கத்தினாள், அதற்க்கு அம்மா "நீயே அப்போ முடிவு பண்ணு, உன் முடியை இன்னிக்கு வெட்ட வேணும், அதுக்கு என்ன பண்ணலாம்னு நீயே முடிவு பண்ணி முடியை வெட்டிட்டு வீட்டுக்கு வா"என்று கூறிவிட்டு அம்மா மறுபக்கத்திலிருந்து அழைப்பை துண்டித்தாள். என் தங்கையின் கண்கள் ஈரமாவதை நான் பார்த்தேன், நான் அவளை ஆறுதல்படுத்த முயற்சித்தேன்,
ஆனால் அவள் சத்தமாக அழ ஆரம்பித்தாள். நான் அவளுடைய கண்ணீரைத் துடைத்து அவளிடம் சொன்னேன், இன்னும் ஒரு வழி இருக்கிறது. என்று நான் சொல்ல "என்ன அது" என்று கேட்டாள். நான் அவளிடம், "நான் முடி வெட்டும் பார்பர் ஷாப்பில் உன் முடியை வெட்டலாமா?" என்றேன். அவள் என்னைப் பார்த்து, “ஆண்கள் சலூன் கடையில் என் முடியை எப்படி வெட்டுவது?” என்று கேட்டாள், நான் "ஆனால் பெண்களின் பியூட்டி பார்லரில் ஹேர்கட் செய்வதை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும், ஆனால் அம்மாவிடம் உன் முடியை வெட்டுவதை விட இது 100 மடங்கு சிறந்தது. இப்போது சொல், நீங்கள் ஆண்கள் சலூன் கடையில் முடி வெட்டுறியா?" என்று நான் கேட்க அவள் கொஞ்சம் தலையசைத்தாள்.
சலூன் கடைக்கு செல்லும் வழியில், அந்த கடையில் பெண்கள் யாராவது வேலை செய்கிறார்களா என்று கேட்டாள் என் தங்கை. நான் இல்லை என்று சொல்லி விட்டு, மேலும் சில பெண் வாடிக்கையாளர்கள் மட்டுமே இருப்பதாக அவளிடம் சொன்னேன். இதைக் கேட்டு அவள் சற்று மன உளைச்சலுக்கு ஆளானாள்.
கவலைப்படாதே, உன்னுடன் நான் இருக்கிறேன் என்று சொல்லி அவளைசமாதானப்படுத்தினேன். அவள் ஒரு பொய்யான புன்னகையை எனக்கு கொடுத்தாள். சுமார் 40 நிமிடங்களில் சலூன் கடையை அடைந்தோம். கடையில் ஆண்கள் சில பேர் முடி வெட்டிக் கொள்ள வரிசையில் காத்திருந்தனர். பார்பர் என்னைப் பார்த்து, "நீங்கள் வார இறுதி நாட்களில் வரமாட்டீர்கள் & நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி, மதிய உணவிற்கு முன் நீங்கள் தான் எனக்கு கடைசி வாடிக்கையாளர்; நான் வேறொரு வாடிக்கையாளருக்கு முடி வெட்ட போவதில்லை, என்று சொல்ல, நானும் சரி காத்து இருக்கிறேன் என்று அவனுக்கு பதில் சொன்னேன். என் தங்கையை பார்த்ததும் அவன் அவளுக்கு வணக்கம் சொன்னான், அவள் முறை வர ஒரு மணி நேரம் வரை காத்திருக்க சொன்னேன். நான் என் தங்கையை கூட்டிக் கொண்டு அருகில் இருந்த கடைக்கு சென்றேன்.
நான் பார்பரிடம் சொன்னேன், "நான் ஒரு டி குடித்து விட்டு வருகிறேன், அரை மணி நேரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்தோம். என் தங்கை சரியான நேரத்திற்கு வர முடியவில்லை என்றால் அவள் மதிய உணவு இடைவேளை வரை காத்திருக்க வேண்டும்.
நான் என் தங்கையை சலூன் கடைக்கு அருகில் உள்ள ஒரு பேக்கரிக்கு அழைத்துச் சென்றேன், ஆனால் அவள் சாப்பிட மறுத்துவிட்டாள், நான் சில தின்பண்டங்களை அவள் வாயில் திணித்தேன். நாங்கள் மீண்டும் சலூன் கடைக்குத் திரும்பினோம், இன்னும் ஒரு பையன் மட்டும் மீதம் இருப்பதைப் பார்த்தோம். கடைசியாக சில நிமிடங்களில் என் தங்கையின் முறை வந்தது, பார்பர் 'அடுத்து' என்று கத்தினார்.
நான் என் தங்கையை முடிதிருத்தும் நாற்காலிக்கு அழைத்துச் சென்று கவலைப்பட வேண்டாம் என்று சொன்னேன். அவள் மீண்டும் ஒரு பொய்யான சிரிப்பினை எனக்கு கொடுத்தாள். பார்பர் என் தங்கை மீது ஒரு வெள்ளை வேட்டியை போர்த்தி விட்டு, தலைமுடியை சீவ ஆரம்பித்தான். நாற்காலியின் கைப்பிடிகளுக்குக் கீழே என் தங்கையின் முடி விழுந்தது, தரையில் இருந்து சில அங்குலங்கள் மேலே இருக்க, என் அம்மா சொல்வது சரிதான்; பள்ளி வாழ்க்கையில் அவளுக்கு இவ்வளவு நீளமான முடி இருக்கக்கூடாது.
நான் பார்பரிடம் நகைச்சுவையாகச் சொன்னேன், அண்ணா, எங்கள் வீட்டு இளவரசி சலூன் கடையில் முதன்முதலில் ஹேர்கட் செய்கிறாள்" என்று சொல்ல, பார்பர் "நானும் முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு ஹேர்கட் செய்கிறேன்" என்று சொன்னதைக் கேட்டு என் தங்கை என்னை கோபமாகப் பார்த்தாள். சலூன் கடையில் ரெகுலராக பெண் வாடிக்கையாளர் வருகிறார்கள் என்று அவளிடம் பொய் சொல்லி இருந்ததற்காக என்னை முறைத்தாள்.
நான் உடனே பார்பரிடம் “உனக்கு பெண் வாடிக்கையாளர் யாரும் இல்லையா? இங்கு நான் கடைசியாக ஹேர்கட் செய்யும் போது ஒரு நடுத்தர வயதுப் பெண் இந்த சலூனில் முடி வெட்டுவதைக் கண்டேன்" என்று சொல்ல, "ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் அந்த பெண் இளவரசி அல்ல" என்று சிரித்துக்கொண்டே பார்பர் சொல்லி விட்டு, என்னிடம் "எவ்வளவு நீளம் முடியை வெட்ட வேண்டும்? " என்று கேட்டான்.
நான் "என்னை கேட்காதே, அவளையே கேட்டு, அவள் சொல்வதை போல வெட்டி விடு" என்று சொல்ல, என் தங்கை அவள் தோள்களின் நீளத்திற்கு தன முடியின் நீளத்தை குறைக்க விரும்புவதாக சொன்னாள். பார்பர் தலையசைத்தார், ஆனால் பார்பர் என்னை நோக்கி அவர் சிக்னல் காட்ட, பார்பர் இதற்கு முன் அந்த அளவு நீளம் வரை ஒரு பெண்ணுக்கு முடியை வெட்டியதில்லை. பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே முடியை வெட்டி பழகியதால், அப்படி வெட்ட மட்டுமே அவருக்கு தெரிந்து இருந்தது.
அதனால் என் தங்கை சொல்வது போல அவளின் முடியை வெட்ட முயற்சி செய்தால், அது தவறாகக்கூடும் என்று எனக்கு புரிந்தது. நான் அவனுடைய சிக்னலைப் புரிந்துகொண்டு என் தங்கையிடம், "தோள் வரை வெட்ட வேண்டுமா? அது ரொம்ப நீளமாக இருக்கும், கண்டிப்பாக அம்மா உன்னை திட்டுவாள், நீ ஏன் உன் முடியை பாய் கட் போல பண்ணைக் கூடாது? என்று கேட்க, அவள் "எனக்கு என் தலைமுடி நீளமாக இருப்பது தான் பிடிக்கும், அது மட்டுமில்லாமல் நான் என் முடியை தோள்பட்டை நீளத்தை விட குறைவாக வைத்ததில்லை" என்றாள்.
நான் அவளை மீண்டும் மூளை சலவை செய்தேன், “அப்படியானால் இது உனக்கு ஜாலியான அனுபவமாக இருக்கும், நீ இப்போது எவ்வளவு ஷார்ட்டாக உன் முடியை வெட்டுகிறாயோ, அவ்வளவு அழகாக இருப்பாய், இதற்கும் உன்னுடைய அடுத்த ஹேர்கட்டுக்கும் இடையே நாட்கள் அதிகமாக இருக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக உன் தேர்வுகள் வருவதால், நீங்கள் உன் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று நீட்டி முழக்கி பேச, அவள் இதையெல்லாம் அலட்சியப்படுத்தினாள்,
இறுதியாக நான் அவளை பாசத்தில் வீழ்த்த நினைத்தேன்., "உன்னை விட உன் அண்ணனுக்கு உன்னைத் தெரியும் என்று உனக்குத் தெரியும், அதனால் நான் முடிவெடுத்தால் அது உனக்கு சரியானதாக இருக்கும், நீ உன் அண்ணனை நம்புகிறாய் என்று நான் நம்புகிறேன். கடைசியாக நான் சொல்வது உன் முடி உனக்கு மோசமாக இருக்காது." என்று சொல்ல, அவள் இந்த முறை அவள் சம்மதம் என்று தலையசைத்தாள். நான் அவளை பாசத்தில் உணர்ச்சிப்பூர்வமாக அழுத்தும் போது அவளால் ‘இல்லை’ என்று சொல்ல முடியாது என்று எனக்குத் தெரியும்.
எனவே நான் பார்பரிடம் முதலில் அவளது தோள்பட்டை வரை முடியை வெட்டச் சொன்னேன். பார்பர் ஒரு ரப்பர் பேண்டை எடுத்து அவள் தலைமுடியை போனி டெயில் போட்டு விட்டு, பின்னர் டிராயரில் இருந்து ஒரு கத்தரிக்கோலை எடுத்தார். கண்ணாடியில் என் தங்கையின் முகத்தை என்னால் பார்க்க முடிந்தது. பார்பரின் கையில் இருந்த கத்தரிக்கோலைக் கண்டு அவள் பயந்தாள். பின்னர் பார்பர் கத்தரிக்கோலை ரப்பர் பேண்டின் அடிப்பகுதியில் வைத்து, பின்னர் sscrruunnchh என்ற ஓசையுடன் வெட்ட,அவளது முடி ஒரு பெரிய கொத்தாக அகற்றப்பட்டது. “நீ அழுதால் நான் உன்னை ஆறுதல்படுத்தப் போவதில்லை” என்று நான் சொன்னபோது என் தங்கை அழதொடங்கினாள்.
ஆனால் அவள் கண்ணீரை அடக்க முயன்றாள், இருந்தும் கண்ணீரால் அவள் கண்கள் ஈரமாகிவிட்டன, அவள் ஈரமான கண்ணீரை நான் பார்க்கவில்லை என்று பாசாங்கு செய்துவிட்டு, "அது தான் என் தங்கை" என்று கெத்தாக பார்பரிடம் சொன்னேன்,
பின்னர் நான் பார்பரிடம் அவளது தோள்பட்டை நீளமுள்ள முடியை பாய் கட் போல குறைக்க சொன்னேன். பார்பர் என் தங்கையின் பின்னால் இருந்து வேலை செய்யத் தொடங்கினார், கத்திரிக்கோலால் முடியை அடுத்தடுத்து வெட்டும் சத்தம் சலூன் முழுவதும் கேட்கிறது. ஸ்னிப், ஸ்னிப், ஸ்னிப்... ஸ்னிப், முடிகள் அவள் மடியில் விழுந்து, தரையில் விழ, அது அவளை மேலும் பயமுறுத்தியது. பின்பக்கத்தை முடித்த பிறகு அவர் இடது பக்கம் நகர்ந்தார், நான் அவரிடம் காதின் அருகில் இருக்கும் முடிகளை மிகக் குறுகிய நீளத்திற்கு வெட்டச் சொன்னேன். என் தங்கை அப்படி செய்ய வேண்டாம் என்று அதை எதிர்க்க, ஆனால் சம்மரில் இது உனக்கு வசதியாக இருக்கும் என்று நான் அவளிடம் சொன்னேன்.
அவள் எதுவும் சொல்லவில்லை, அதனால் நான் பார்பருக்கு சைகை செய்ய, அவள் இடது பக்கம் பார்ப்பதற்குள், நாற்காலியைச் சுற்றி அவளது முடியால் என் தங்கையின் மடியும், தரையும் கிட்டத்தட்ட நறுக்கப்பட்ட முடியால் நிரம்பியிருந்தன. கடைசியாக பார்பர் வலது பக்கம் நகர்ந்து இடதுபுறம் செய்ததையே செய்தார். பின் பார்பர் என்னிடம் கேட்டார், "முன்னால் என்ன செய்வது?" நான் அவளது தலையின் மற்ற பகுதியை விட சிறிது நீளமாக அவளது முடி முன்பக்கம் வைத்திருக்கச் சொன்னேன், அது முடிந்ததும், பார்பர் அவளது தலைமுடியை ஷேவிங் செய்ய வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அவள் 'இல்லை' என்று கத்தினாள்.
நான் தலையசைத்து, முதுகு மற்றும் காதின் இரு பக்கங்களைச் சிறிது சிறிதாகக் ஷேவிங் செய்யச் சொன்னேன். அந்த பகுதியை ஷேவிங் செய்வதன் மூலம் தங்கையின் முகம் அழகாக தெரியும்படி ஷேவிங் செய்ய சைகை செய்தேன். அவள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கடைசியில் அவளுடைய முடி வெட்டப்பட்டது. பார்பர் அவளை தூசி தட்டி, போர்த்தி இருந்த துணியை கழற்றினான். அவளுடைய நடு முதுகு வரை இருந்த முடி (உண்மையில் அதை விட நீளமானது) பாய் கட் போல வெட்டப்பட்டது. அவளது பெரிய அளவிலான முடிகளை கொத்தாக தரையில் பார்த்ததும் அவளால் கண்ணீரை அடக்க முடியவில்லை, பாய் கட் ஹேர் கட் பண்ணியதற்கு அவள் மகிழ்ச்சியடையவில்லை என்று நினைக்கிறேன்.
முடி வெட்டிய பிறகு நான் அவருக்கு பணம் கொடுத்துவிட்டு கடையை விட்டு வெளியேறினேன். கடைக்கு வெளியே என் தங்கை என்னிடம் "நான் நன்றாக இருக்கிறேனா?" என்று கேட்க, நான் அவளுக்கு ராஜதந்திரமாக பதிலளித்தேன், "நிச்சயமாக, என் தங்கை எனக்கு எப்போதும் அழகாக இருப்பாள்", என்று சொல்ல, தங்கை குறுக்கிட்டு, "உண்மையைச் சொல்லு, நீ என்னிடம் பொய் சொல்ல மாட்டாய் என்பதால் நான் உன்னை நம்புகிறேன், நான் என் நண்பர்களைக் கேட்டால், அவர்கள் எப்போதும் பொய் சொல்ல மாட்டார்கள். என்று அவள் அழும் குரலில் சொல்ல, நான் சொன்னேன், "நீ பார்க்க அவ்வளவு அழகாக இல்லை, ஆனால் ரொம்ப மோசமாகவும் இல்லை. இந்த ஹேர்ஸ்டைலுக்கு நீ ஓகே என்று நான் சொல்வேன்" என்று நான் மழுப்பலாக பதில் சொல்ல, அவள் எனக்கு நன்றி கூறிவிட்டு அமைதியாகிவிட்டாள்.
வீட்டிற்கு செல்லும் வழியில், நான் அவளுடன் அரட்டை அடிக்க முயற்சித்தேன், ஆனால் அவள் பேச மறுத்துவிட்டாள். நாங்கள் வீட்டிற்கு வந்ததும் அம்மா அவளைப் பார்த்தாள், அம்மாவுக்கு இன்னும் முடி வெட்டுவதில் திருப்தி இல்லை. அம்மா அவளிடம், "நீ இன்னும் கொஞ்சம் ஷார்ட்டாக வெட்ட வேண்டும், அப்போது தான் உனக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்" என்று அம்மா சொல்ல, தங்கை என்னை பார்த்துவிட்டு அம்மாவிடம் சொன்னாள், "இவன் தான் என் ஹேர்ஸ்டைலை எப்படி வெட்ட வேண்டும் என்று சொன்னான், அதனால் என்ன செய்திருக்க வேண்டும் என்று அவனுக்கே சொல்லி கொடு" என்று அவள் என்னை என் அம்மாவிடம் மாட்டி விட, நான் எதுவும் பேசாமல் நேராக என் அறைக்கு சென்றேன்.
இரவு உணவின் போது என் தங்கை என்னுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளுக்கு தனி அறை இருந்தாலும், அவள் வழக்கமாக என் அறையில் தூங்குவாள், அன்று இரவு அவள் தன் அறையில் தூங்க வேண்டும் என்று கோரினாள். அடுத்த நாள் ஸ்கூல் சென்றவள், மாலை வீட்டிற்கு வந்த உடன் ஷூவைத் கழட்டி விட்டு, வகுப்பில் உள்ள அனைவரும் அவளுடைய புதிய தோற்றத்தை ரசிக்கிறார்கள் என்று என்னிடம் சொல்ல, என் அறைக்கு வந்தாள். நான் அவளிடம் சொன்னேன், "உன் அண்ணன் உனக்கு நல்லதுதான் செய்வான் என்று சொன்னேன்"
Spr la
ReplyDelete