அடுத்த நாள் மாலை இருவரும் பழனிக்கு பஸ்ஸில் கிளம்பினார்கள். பவித்ராவின் மாமா வீட்டுக்கு போய்விட்டார்கள். பவித்ராவின் அத்தை, மாமா இருவரையும் வரவேற்றார்கள்.
வாங்க வாங்க அண்ணி.. வா பவித்ரா.. எப்டி இருக்க பவித்ரா... படிப்பு எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சா...
ஆமா அத்தை... முடிஞ்சிருச்சு... கேம்பஸ் இண்டர்வியூலயே நல்ல கம்பெனில வேலையும் கிடைச்சிருச்சு...
ரொம்ப சந்தோஷம் பவித்ரா... இதுனால தானே இத்தனை வருஷமா வரமால் இருந்த... இப்போயாச்சு வந்தீங்களே...
பவித்ராவின் அம்மா என்ன பண்றது
அண்ணி... எனக்கும் வேலை சரியா இருந்துச்சு... அவளுக்கும் காலேஜ் இருந்துச்சு. அதனால் வரவே நேரம் இல்ல... இப்போ தான் பழனி முருகனை பார்க்க குடுத்து வச்சுருக்கு
அப்போது பவித்ராவின் மாமாவும் மாமா பையனும் (சிவா) வீட்டுக்கு வந்தார்கள்.
வாங்க வாங்க... என்ன மருமகளே நல்லா இருக்கீங்களா.
பவித்ரா அம்மா நல்லா இருக்கோம் அண்ணா... நீ எப்படி இருக்க என்று தன் அண்ணனை கேட்க அவரும் நல்லா இருக்கேன் என்றார்.
சிவாவும் வாங்க அத்தை.. நல்லா இருக்கீங்களா.. வா பவித்ரா... என்று சகஜமாக பேசினான். எல்லாரும் சந்தோஷமாக பேசிவிட்டு சாப்பிட்டார்கள்.
அப்போது இரவு ஆகி விட, ரொம்ப நாள் கதை எல்லாம் பேச ஆரம்பிச்சாங்க... பவித்ராவும் சிவாவும் ஒரு பக்கம் பேசிட்டு இருக்க, பவித்ராவின் அம்மாவும், அத்தையும் ஒரு பக்கம் பேசிட்டு இருந்தார்கள்.
பவித்ரா அம்மா அண்ணி.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லல... நாளைக்கு பழனில நானும் பவித்ராவும் முடி எடுக்க போறோம்...
என்ன சொல்றீங்க? அப்படியா.. பவித்ரா தன் முடியை வெட்டவே விடமாட்டாளே... மொட்டை போட சம்மதிச்சிட்டாளா...
ஆமா அண்ணி, நல்ல படியா காலேஜ் முடிஞ்சுருச்சு... வேலையும் கிடைச்சிருச்சு... ரொம்ப நாள் வேண்டுதல்... வேலைக்கு சேர இன்னும் நாலு மாசம் ஆகும்... அதான் இப்போ நிறைவேத்திடலாம்...
ரொம்ப சந்தோஷம்.. எனக்கும் ரொம்ப நாள் வேண்டுதல் இருக்கு... நானும் சிவாவும் நாளைக்கு அப்படியே மொட்டை போடலாம்னு தான் இருக்கோம்.. இவளும் பூ முடி குடுக்கணும்னு சொன்னா.. கையோட அதையும் முடிச்சிடலாம். என்று பவித்ராவின் மாமாவும் சொன்னார்.
சரிண்ணா தூங்கலாம்... அப்போதான் நாளைக்கு சீக்கிரமா கிளம்பி போக முடியும். எல்லோரும் தூங்க, பவித்ராவும் சிவாவும் மாடில பேசிட்டு இருந்தாங்க
எப்டி இருக்க சிவா, காலேஜ் எப்டி போகுது.
யா நல்லா போகுது.. இப்பதான் ஃபைனல் இயர். நீ கேம்பஸ்ல செலக்ட் ஆயிட்டனு சொன்னாங்க.. எப்போ ஜாயின்னிங்
இன்னும் 4 மாசம் கழிச்சு ஜாயின் பண்ணனும். ஆமா என்ன நீ காலேஜ் போறேன்னு சொல்ற... ஆனா இவ்ளோ முடியும் தாடி எல்லாம் வளர்த்துருக்க? நல்லா ஷார்ட்டா வெட்டி, க்ளீன் ஷேவ்ல இருந்தா தானே நல்லா இருக்கும்...
இது வேண்டுதல். 6 மாசமா வளர்த்துருக்கேன். எனக்கு ஆறு மாசம் முன்னாடி கடுமையான காய்ச்சல். அப்போ அம்மா தான் சாமிகிட்ட வேண்டிகிட்டாங்க... காய்ச்சல் நல்லா குணமாகிட்டா மொட்டை போடுறோம்னு... அப்போ இருந்து முடி வெட்டாம வளர்த்துருக்கேன். நாளைக்கு நானும் அப்பாவும் மொட்டை போட போறோம். அம்மா பூ முடி குடுக்க போறாங்க.
பவித்ராவுக்கு இதை கேட்டதும் சந்தோஷம் தாங்கல. என்ன சொல்ற... நிஜமாவா... அப்போ உனக்கு ஒண்ணு தெரியுமா.. நானும் அம்மாவும் நாளைக்கு மொட்டை போறோம்...
அய்யோ... என்ன சொல்ற... நீ ஒரு பொண்ண இருந்துட்டு எப்படி மொட்டை அடிக்க போற? அதுவும் இந்த வயசுல...
ஆமா, சாமி விஷயம்ல.. அப்படி அம்மா வேண்டிகிட்டாங்க... அதனால செஞ்சுதான் ஆகணும்
மொட்டை போடப்போறோம்னு பயமா இல்லயா?
கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு... எப்டி மொட்டை தலையோட நாளைக்கு பப்ளிக்ல போகப்போறேன்னு தெரியல... புதுசா ஜாயின் பண்ற கம்பெனில ஷார்ட் ஹேர்ல தான் போகணும்.. என்ன பண்றது...
உனக்கு எவ்ளோ நீளமான முடி... நாளைக்கு மொழு மொழு னு இருப்ப... இருவரும் பேசி கொண்டு இருக்க,
அப்போது பவித்ரா அம்மா மாடிக்கு வந்து இருவரையும் தூங்க கூப்பிட
எல்லாரும் படுத்துவிட... ஆனா பவித்ராவுக்கு தூக்கமே வரவில்லை.
அவள் மனசு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. நாளைக்கு தன்னோட நீண்ட நாள் ஆசையான மொட்டை அடிக்க போறோம்னு ஒரு சந்தோஷம்.. அதோடு சிவாவும் மொட்டை அடிக்க போறானு டபுள் சந்தோஷம்... பவித்ரா தூங்காமால் எந்திருச்சு கண்ணாடி முன்னால் போய் நின்றாள்.
பவித்ரா பின்னி இருந்த ஜடையை அவிழ்த்து விட்டு, நிறைய தேங்காய் எண்ணெய் விட்டு உச்சியில் இருந்து மசாஜ் பண்ண ஆரம்பித்தாள்.பின் சீப்பை எடுத்து எண்ணெய் வைத்த முடியை, பின்னால் தூக்கி விட்டு, முடி தலையில் படியுமாறு அழுத்தி சீவினாள். இன்னும் விதவிதமாக தன் முடியை ஆசை தீர சீவி பார்த்துக் கொண்டாள் பவித்ரா. கடைசியாக நடு வகிடு எடுத்து ரெட்டை ஜடை போட்டுக் கொண்டு வந்து தன் அம்மாவின் அருகில் படுத்துக் கொண்டாள்.
அதிகாலையிலேயே பவியின் அம்மா அவளை எழுப்பி விட, அப்போது தான் பவித்ரா ரெட்டை ஜடை பின்னி இருப்பதை பார்த்தாள்.
என்னடி நைட் தூங்கும் போது ஒத்தை ஜடை தானே போட்டு இருந்த... இப்ப என்ன ரெட்டை ஜடை போட்டு இருக்க...
சும்மா தான்மா... இன்னிக்கு மொட்டை அடிக்க போறோம்ல... அதான் லாஸ்ட்டா ஒரு முறை ரெட்டை ஜடை போட்டு பார்த்தேன்...
சரி பவி, நல்லா முடியை தேய்ச்சு குளி, கொஞ்சம் கூட அழுக்கோ, சிக்கோ இருக்க கூடாது... சாமிக்கு காணிக்கையா குடுக்குற முடி... சுத்தமா இருக்கணும்... என்ன...
சரிம்மா, என்று சொல்லி பவித்ரா குளிக்க போக, பின் ஒவ்வொருவராக குளித்து ரெடி ஆனார்கள்.
பின் பவித்ரா, அவளுடைய அம்மா, மாமா, அத்தை, சிவா என எல்லோரும் கோவிலுக்கு செல்ல, மலை அடிவாரத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறு குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என எல்லோரும் மொட்டை போட்டுக் கொண்டு இருக்க, பவித்ரா எல்லோருடைய மொட்டை மண்டையையும் பார்த்து ரசித்தாள்.
சில கிராமத்து பள்ளி செல்லும் பெண்கள் மொட்டை அடித்து இருந்தார்கள். ஆனால் பவித்ரா வயதுடைய காலேஜ் பெண்கள் யாரும் மொட்டை அடித்ததாக தெரியவில்லை.
பின் சிவா போய் மொட்டை டோக்கன் வாங்கி வர, எல்லோரும் மொட்டை அடிக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கேயும் பழனி முருகனின் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்க, லைனில் நின்றனர். லைனில் நின்ற பவித்ரா தன் மொபைலில் தன் தோழி ஸ்ருதிக்கு மெசேஜ் பண்ணினாள்.
*******************************************************************
அடுத்து பவித்ராவின் மொட்டை தான்! அடுத்த பக்கம் விரைவில் வெளியாகும், காத்திருங்கள். இடையே உங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment