Monday, 18 April 2022

ஷார்ட் ஹேர் ஸ்டைலின் நன்மைகள்

இன்றைய அவசர கால உலகில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஷார்ட் ஹேர் கட் எதனால் அவசியம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.


1. நேரத்தைசேமிக்க





ஷார்ட் ஹேர் ஸ்டைல் பராமரிக்க, அல்லது குறைவான நேரத்தில் சீவி ஒழுங்கு படுத்த முடியும். ஷார்ட் ஹேர் ஸ்டைலின் முக்கிய நன்மை நேரத்தை மிச்சப்படுத்துவது ஆகும். இன்றைய பரபரப்பான வேலையில் பெண்கள் நீண்ட கூந்தலை பராமரிப்பது கடினமான வேலையாகும். நீளமான முடியை சரியாக பராமரிக்காமல் விட்டால் முடி உதிர்ந்து விடும். எனவே இன்றைய அவசர கால உலகில் ஷார்ட் ஹேர் கட் என்பது வசதியான ஒன்றாகும்.

2. உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

நீளமான முடியை நேர்த்தியாகவும், அழகாகவும் வைத்து இருக்க, நீங்கள் அதற்கான அழகு சாதன பொருட்களை பயன்படுத்த வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்தது. ஆனால் ஷார்ட் ஹேர் ஸ்டைல் என்றால் இந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை குறைத்து பணத்தையும் மிச்சப்படுத்தலாம்.

3. சம்மரில் ஷார்ட் ஹேர் கட்



ஏப்ரல், மே போன்ற வெயில் காலங்களில் ஷார்ட் ஹேர் ஸ்டைல் நீங்கள் வைத்து இருந்தால் மிகுந்த நன்மை உண்டாகும். கோடை காலங்களில் ஷார்ட் ஹேர் ஸ்டைல் வைத்து இருந்தால் உங்கள் முடி வெப்பத்தினால் பாதிப்படைவது குறையும். அந்த காலங்களில் வியர்வை அழுக்கு போன்றவற்றில் இருந்து உங்கள் முடியை சுலபமாக பாதுகாத்து கொள்ள முடியும்.

 4. பராமரிப்பு செய்ய



ஷார்ட் ஹேர் ஸ்டைல்  பராமரிக்க வசதியாக இருக்கும். குறிப்பாக ஐடி, மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நேரமின்மையால் தங்களின் நீண்ட கூந்தலை தினமும் தலைக்கு குளிப்பது, எண்ணெய் வைப்பது என்று பராமரிப்பது சாதாரண வேலை இல்லை. எனவே ஷார்ட் ஹேர் கட் அவர்களுக்கு சிறந்த வழி. ஏனேனில் ஷார்ட் ஹேர் ஸ்டைல் வைத்து இருந்தால் உலர்த்துவது, சீவுவது போன்ற வேலைகளை குறுகிய நேரத்தில் செய்ய முடியும்.

 5.தூசு, மாசுகளில் இருந்து பாதுகாக்க



நீண்ட கூந்தலை வைத்து கொண்டால் சுற்றுபுறங்களில் இருந்து வரும், தூசு, மாசு புகை புழுதியில் இருந்து உங்கள் நீளமான முடி விரைவில் சேதமடையும். முடி கடுமையாக சேதமடைந்தது,  முடி உதிர்ந்து மிக விரைவாக உதிர வாய்ப்புகள் அதிகம். எனவே சென்னை போன்ற மாநகரங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஷார்ட் ஹேர் கட் தான் ஒரே வழி.

எனவே உங்கள் முடியை ஆரோக்கியமானதாக வைத்து இருக்க விரும்பினால், உங்கள் முடியை ஷார்ட் ஹேர் ஸ்டைல் வைத்து கொள்ளுங்கள்.

இங்கு முக்கியமாக கவனிக்கபட வேண்டியது என்னவென்றால் ஷார்ட் ஹேர் ஸ்டைல் என்றால், ஆண்களை போல பாய் கட் அல்லது பாப் கட் பண்ண வேண்டும் என்று அர்த்தம் அல்ல. உங்களுக்கு முடிந்த அளவு, அல்லது பராமரிப்பு செய்ய சுலபமாக உள்ள அளவுக்கு உங்கள் முடியை நீளம் குறைவாக வெட்டுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.




No comments:

Post a Comment