ஏய், சினேகா என்ன இது?
அவ நல்லா படிக்கணும், அதான் முக்கியம்... நீங்க விடுங்க...
இரவு உணவு முடிந்து மகிழ்ச்சியுடன் தன் அறைக்கு சென்றாள் ஸ்ருதி. சினேகாவும் அவர்கள் படுக்கையறைக்கு சென்றாள். அப்பா படுக்கையில் படுத்துக் கொண்டு போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
என்னங்க... நாம தூங்கலாமா??
ஏன் இப்படி பந்தயம் கட்டின சினேகா??
என்ன மாதிரி ??
தலையை மொட்டை அடிக்க பந்தயம்!!!
கவலைப்படாதீங்க, நான் அவள் தலையை மொட்டையடிக்க மாட்டேன், அவளுடைய தலை முடியை நடுத்தர நீளத்திற்கு வெட்டி மட்டும் விடுவேன்...
சரி பேபி, ஸ்ருதி நல்ல மார்க் எடுத்தா என்ன நடக்கும், நீ உன் தலை முடியை மொட்டை அடிக்க போகிறாயா??
கவலைப்படாதீங்க, நான் வெற்றி பெறுவேன்.
ஆனால், சினேகா உன் அழகு உன் தலை முடியில் தான் இருக்கு...
அது இல்லன்னா நீ எப்படி இருப்பேன்னு நினைச்சு கூட பார்க்க முடியல...
ஆமாம் செல்லம், எனக்கு அது தெரியும், ஆனால் அவளை விட்டால் என்ன செய்வது, அவள் நல்லா படிக்க மாட்டாள்.
ஆனால் சினேகா... இந்த பந்தயம்....
ஷ்ஷ்!!! கவலை வேண்டாம் நான் சமாளித்து விடுவேன் (சினேகா அவன் உதட்டில் முத்தமிட்டாள்) இருவரும் தூங்கினார்கள். சில வாரங்கள் கழித்து அடுத்த தேர்வு தொடங்கியது... ஸ்ருதி நன்றாக தயார் செய்து தேர்வு எழுதினாள். 2 நாட்கள் கழித்து அந்த தேர்வில் ரிசல்ட் கிடைத்து 1வது ரேங்க் பெற்று மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றாள்.
ஸ்ருதிக்காக காத்திருந்தாள் சினேகா. ஸ்ருதி வேகமாக தன் அறைக்குச் சென்று பூட்டி விட்டு உள்ளே இருந்தாள். சினேகா வந்து கதவைத் தட்டியும் ஸ்ருதி கதவைத் திறக்கவில்லை. இந்த முறையும்
1st ரேங்க் வரவில்லை என்று நினைத்த சினேகா, ஹேர்கட் பயத்தால் ஸ்ருதி கதவைத் திறக்கவில்லை என்று நினைத்தாள். ஆனால் ஸ்ருதி தன் அறைக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஸ்ருதி, வெளியே வா, உன் முடியை நான் எதுவும் செய்ய மாட்டேன். வெட்ட மாட்டேன்... வெளியே வாடி...
வேண்டாம் அம்மா, நான் உன்னை நம்ப மாட்டேன்... அப்பா வரட்டும்... நான் வெளியே வரேன்...
சரி... எனக்கு உன் ரிப்போர்ட் கார்டு கொடு
இல்லை அம்மா, நான் இப்போ காட்டமாட்டேன். அப்பா வரட்டும்... நான் காட்டுகிறேன்... என்று ஸ்ருதி சொல்ல, சினேகாவும் அவளை வற்புறுத்தவில்லை.
இரவு ஏழு மணிக்கு சினேகாவின் கணவன் வர, தன் ஆபிசில் இருந்து 2 நாட்கள் விடுப்பு கிடைத்ததால் மகிழ்ச்சியுடன் வந்தான். திடீரென்று கதவைத் திறந்த ஸ்ருதி தன் அப்பாவை நோக்கி ரிப்போர்ட் கார்டுடன் ஓடினாள். சினேகாவும் ஸ்ருதியை துரத்திக் கொண்டு விரைந்தாள். ஸ்ருதி தன்னுடைய ரிப்போர்ட்டை கார்டை கொடுக்க, அப்பா ரிப்போர்ட் கார்டைப் பார்த்தார்.
என்ன மார்க் எடுத்து இருக்கா?? சொல்லுங்க...
அவள் முதல் ரேங்க் வாங்கி இருக்கா...
சினேகா...
ஸ்ருதி புன்னகையுடன் என்னம்மா நீ தயாரா?நீங்கள் பந்தயத்தை மறக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
இல்லை!!!! நான் பந்தயத்தை மறக்கமாட்டேன். நான் ரெடி... நாம் பார்லருக்குப் போவோம்,
நான் என் தலையை மொட்டை அடித்துக் கொள்கிறேன்.
இப்போ யாரும் தலையை மொட்டை அடிக்க வேண்டியது இல்லை...
என்று அப்பா சொல்ல...
ஆனால் அப்பா இது பந்தயம்...
எனக்கு தெரியும், ஆனால் நான் தலையை மொட்டையடிக்க அனுமதிக்க மாட்டேன்.
சரி அப்பா, அம்மா மொட்டையடிக்க வேண்டாம்... ஆனால் அவள் ஆண்கள் சலூனில் ஹேர்கட் பண்ணனும்...
எனக்கு ஓகே என்றாள் சினேகா...
சரி, பரவாயில்லை... ஆனால் ஹேர்கட் மட்டும் தான்.
சரி அப்பா...
மாலை நேரத்தில் மூவரும் அருகில் உள்ள ஆண்கள் சலூனுக்கு சென்றனர். மாலை நேரம் என்றதால் கூட்டம் இல்லை. சலூனில் இரண்டு முடி திருத்தும் நாற்காலி மற்றும் ஒரு முடி திருத்தும் நபர் மட்டுமே இருக்க, ஸ்ருதியும் சினேகாவும் மட்டும் சலூனுக்குள் சென்றனர். அப்பா வெளியே காத்திருந்தார். பார்பர் இருவரையும் வரவேற்றார். ஸ்ருதியும் சினேகாவும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றனர்.
வாங்க, யாருக்கு முடி வெட்டணும்?
என் அம்மாவுக்கு மட்டும் முடி வெட்டணும். நீங்க ப்ரீயா என்று ஸ்ருதி கேட்க,
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, ஒரு பையன் தலை முடியை மொட்டையடிக்கக் காத்திருக்கிறான், அடுத்து உங்களுக்கு பண்ணலாம்...
சரி அண்ணா, நாங்க வெயிட் பண்றோம்...
சலூனுக்கு உள்ளே ஸ்ருதியும் சினேகாவும் காத்திருக்கிறார்கள். 19 அல்லது 20 வயதுள்ள ஒரு கல்லூரி மாணவன் சென்று நாற்காலியில் அமர்ந்தான். பார்பர் ஒரு வெள்ளைத் துணியை அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தலையில் தண்ணீர் தெளிக்கத் தொடங்குகிறார். பார்பர் முடியை நன்றாக மசாஜ் செய்தார். ஸ்ருதி தன் வாழ்க்கையில் முதல் முறையாக மொட்டையடிப்பதை நேரில் பார்க்கிறாள். சினேகா குனிந்து தன் முடியை பார்த்து, தான் முடியை வெட்டுவதையும், அண்டை வீட்டாரை எப்படி எதிர் கொள்வது என்பதையும் நினைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் ஸ்ருதி கண் இமைக்காமல் சிறுவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பார்பர் மொட்டையடிக்க ரேஸரை பிளேடு மற்றும் சீப்புடன் எடுத்தார். முதலில் பார்பர் அந்த பையனின் தலை முடியை சீவி, ரேசரில் பாதி பிளேட்டை ஏற்றி விட்டு தனது வேலையைத் தொடங்குகிறார். அந்த பையன் தலையை குனிந்து கொள்ள, பார்பர் நடுவில் இருந்து தலையை மொட்டையடிக்கத் தொடங்குகிறான். அந்த முடி வெள்ளைத் துணியில் விழுவதைப் பார்த்து உற்சாகமடைந்தாள் ஸ்ருதி. விரைவில் அந்த பையனுக்கு மொட்டை அடித்து முடித்தார் பார்பர்.
ஸ்ருதி அவனுடைய பாதி மொட்டையைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்தாள். அவனுடைய தலை முடி அவனைச் சுற்றியிருந்தது. வெள்ளைத் துணியில் சில முடிகள் தரையில் சில முடிகள் விழுந்து கிடந்தது. மீண்டும் பார்பர் அந்த பையனின் தலையில் தண்ணீர் தெளித்து, சில நிமிடங்களில் ஸ்கர்க் ஸ்கர்க் ஸ்கர்க் ஸ்கர்க் ஸ்கேவ் என்று சத்தம் வர, தன் வேலையை செய்ய ஆரம்பித்தார்.
பார்பர் அந்த பையனின் தலையை முழுவதுமாக சுத்தம் செய்து, பிசிறு பிசியாக முடி இருந்த இடங்களை சரி பார்த்து மொட்டையை மழுங்க சிரைத்தார்.
பின் வெள்ளைத் துணியை அகற்ற,
துணியில் இருந்த அவனது முடிகள் அனைத்தும் கீழே விழுந்தன. முடியை முழுவதுமாக கூட்டி விட்டு, அதை அந்த அறையின் மூலையில் ஒதுக்கி வைத்திருந்தார் பார்பர். ஸ்ருதி அந்த இடத்தை பார்த்தாள், அங்கு நிறைய முடிகள் குப்பையாக கொட்டப் பட்டு இருந்தது.
No comments:
Post a Comment