மொட்டைக்காடு... ஏன் அந்த ஊருக்கு அப்படி பெயர் வந்தது என்று யாருக்கும் தெரியாது... அந்த ஊரின் தலையாரி (கூர்க்கா மாதிரி ) தான் ஊருக்கு பாதுகாப்பு, அவர் சிலம்பம், அடிமுறை என எல்லா தற்காப்பு கலைகளும் கற்றவர். ஊரில் பல இளைஞர்களுக்கு சிலம்பம் பயிற்சி அளித்தவர். ஆனால் அவருக்கு ஒரே பெண் குழந்தை. பெயர் முத்தம்மா, முத்தம்மா அழகானவள். தலையாரி பெண் தானே என்று நினைக்காமல் முத்தம்மாவிற்க்கும் தன்னுடைய திறமைகள் அனைத்தும் கற்றுக் கொடுத்து இருந்தார்.
முத்தம்மா அந்த ஊரிலேயே ஒருவரை திருமணம் செய்ய, அவளது கணவன் அந்த ஊரின் தலையாரியாக பொறுப்புக்கு வந்தான். ஆனால் முத்தம்மாவிற்க்கு வாரிசு இல்லை. முத்தம்மா அதை பற்றி கவலை படாமல் அந்த ஊரில் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுத்து வந்தாள். அந்த சமயத்தில் தான் பக்கத்து ஊர்க்காரர்களுடன் தகராறு வர, நடந்த சண்டையில் முத்தம்மாவின் அப்பாவும், கணவனும் கொல்லப் பட்டனர்.
ஊரின் வழக்கப்படி முத்தம்மா தலையாரியாக பொறுப்புக்கு வந்தாள். முத்தம்மா ஒன்றும் சாதாரணமானவள் அல்ல. நடந்த சண்டையில் பத்து ஆண்களை ஒற்றை ஆளாக எதிர்த்து சண்டையிட்டவள். அவளின் அந்த வீரத்தை பார்த்தே ஊர் மக்கள் அவளை தலையாரியாக பொறுப்புக்கு கொண்டு வந்தனர்.
மொட்டைக்காடு ரொம்பவே கட்டுபாடான ஊர். ஊர் மக்கள் ஊரை விட்டு வெளியே போனால் அன்று இரவுக்குள் வீடு வந்து சேர வேண்டும். இல்லையெனில் அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அந்த ஊரின் மத்தியில் எல்லோர் முன்பும் நிராயுதமாக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு, தன்னுடைய தலையை மொட்டை அடித்துக் கொண்டு தான் வர வேண்டும். அதனால் பெண்கள் யாரும் ஊரை விட்டு வெளியே போவதே இல்லை.
ஆனால் சில ஆண்கள் அப்படி வெளியே போய்விட்டு இரவு திருட்டு தனமாக ஊருக்கு நுழைய பார்க்க, முத்தம்மாவிடம் மாட்டிக் கொள்வார்கள். அடுத்த நாளே முத்தம்மா அந்த ஆணுக்கு ஊர் மக்கள் முன்னால் மொட்டை அடிக்க வைத்து விடுவாள். அதன் பின் அந்த ஆணுக்கு அந்த ஊரில் மரியாதை இருக்காது. அந்த பயத்தால் யாரும் ஊரை விட்டு வெளியே போவது இல்லை.
அந்த சமயத்தில் தான் மொட்டைக்காடு கிராமம் அன்று ஏனோ புதியதாய் இருந்தது. எந்த சத்தம் எந்த ஆரவாரமும் இல்லை. ஊரே நிசப்தமாய் இருந்தது. ஊரின் உள்ள அனைத்து ஜனங்களும் ஊர் திடலில் கூடியிருந்தனர். ஒருவருக்கொருவர் எதையோ பேசி அலசி கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாட்டு வண்டி சப்தம் கேட்கவே அனைவரும் திரும்பி பார்த்து அமைதியாயினர். சிலர் வழி விட ஒருவன் வேகமாக அங்கிருந்த மரத்தடி நோக்கி ஓடி ஜமுக்காளத்தை விரித்து போட்டான்.
மாட்டு வண்டியில் இருந்து முத்தம்மா இறங்கி வந்தாள். வேகமாக நடந்து வந்தவள் தன் எதிரே ஒருவன் வழி மறித்து நிற்கவே சேலையை முழங்காலுக்கு மேலே தூக்கி விட்டு அவனை எட்டி உதைத்தாள். அம்மா என கத்தி கொண்டு சில அடி தூரம் போய் விழுந்தான். அவன் அருகே சென்று மென்று கொண்டிருந்த வெற்றிலையை காரி உமிழ்ந்தாள்.
பொறம்போக்கு வழி விட்டு நிக்க வேண்டியது தானே
அவன் இடுப்பை பிடித்து கொண்டு எச்சில் வழிந்த முகத்தோடு அவளை பயங்கொண்டு பார்த்தான்.
எந்திரிச்சு போடா நாயே
சொல்லி விட்டு மரத்தடி அருகே சென்று ஜமுகாளத்தில் அமர்ந்து எல்லோரையும் பார்த்து விட்டு வெற்றியலையை துப்பி விட்டு நீரை கொண்டு கொப்பளித்து நீரை மரத்தில் துப்பினாள்.
நானா வாய் திறக்க வரை எல்லரும் வேடிக்கை பார்த்துகிட்டு இருப்பிங்களா
ஒருவன் துண்டை எடுத்து கக்கத்தில் வைத்து கொண்டு அவளின் முன் ஓடி வந்து நின்றான்.
அம்மா நம் முருகன் கோயில் பூசாரி மவன் பக்கத்து ஊரு பொண்ண இழுத்துகிட்டு ஓடிட்டான். பொண்ணு ஊர்காரங்க நம்ம ஊர் காரங்களை அடிச்சு அனுப்பி இருக்காங்க. நம்ம ஊர் பொண்ணு ஒண்ணு அவங்க ஊர்ல மாட்டிகிட்டு இருக்குங்க.
ஏன்டா பிரச்சனை இருக்குனு தெரியுதில்ல... அப்புறம் அந்த ஊர் பக்கம் அந்த பொண்ணு ஏண்டா போகணும். எவண்டா அவள பெத்த மகராசன்.
ஒருத்தன் அழுதுகிட்டே முன்வந்தான்.
என் பொன்னு தாங்க
அட நாரபயலே நீயா, ஏன்டா அவள அங்க அனுப்பின
வயக்காட்டு வேலை இருக்குன்னு போனவளே இப்படி பிடிச்சு வச்சுட்டு வம்பு பண்றாங்கம்மா... நீங்க தான் என் பொண்ணை காப்பத்தணும்...
வேர நிலவரம் என்னனு தெரிஞ்சதா
அந்த பொண்ண பஞ்சாயத்தில கட்டி போட்டு வெச்சருக்கங்களாம்... நம்மூரு இளவட்ட பசங்க அந்த ஊருக்கு யாருக்கும் தெரியாம உள்ள போய் பார்த்திருக்கங்க... நீங்க தான் அந்த பொண்ண காப்பத்தனும்.
எங்க இருக்கானு பார்க்க தெரிஞ்ச நாதரிகளுக்கு அவளை காப்பாத்த தெரியல பார்த்தியா... எல்லாம் குடிக்க தான் லாயக்கு... அவளை நம்ம ஊருக்குள்ள வந்து இழுத்துகிட்டு போனான் பாரு அவன் ஆம்பிளை.
கூட்டத்தில் ஒருவன் ஓடி வந்து பக்கத்து ஊரில் இருந்து ஒரு அஞ்சாரு பேறு கத்தி கம்போடு வராங்க என்றான்.
சில இளவட்டங்களும் சில பெருசுகளும் வரிந்து கட்டி எழுந்தன. ஒருத்தனை விடக்கூடாது... எல்லார் தலையும் இங்கேயே வெட்டி வீசனும் என்று பொறுமினர்.
அமைதியாய் இருங்க... அவங்க எதுக்கு வராங்கனு பார்ப்போம். எவனாவது வெட்டுவேன் குத்துவேன்னு இறங்குனீங்க... வக்காளி கொன்னுடுவேன்.
அதற்குள் அந்த முரடர்கள் வந்து சேர்ந்தனர். எல்லோரும் அவர்களை பார்த்து அமைதியாயினர். அவர்களும் பஞ்சாயத்தில் கூடி இருந்த மக்களை ஒருவாறு முறைத்தனர். எல்லோரையும் சுற்றி பார்த்து விட்டு
ஏண்டா, உங்க ஊரு பொண்ண கட்டி வெச்சிருக்கிறோம்... எவனாவது வந்து கேப்பீங்கன்னு பார்த்தா எவனும் வரல. இங்க ஒரு பொம்பளை முன்னாடி வந்து நின்னுட்டு புலம்பிட்டு இருக்கீங்க. அவகிட்ட சொல்லி ஆளுக்கொரு சேலையை வாங்கி கட்டிக்க வேண்டியது தானே.
ஏலேய், இங்க எதுக்குடா வந்தீங்க. கிளம்புடா இங்கிருந்து என்று முத்தம்மா கத்த...
நீ சொன்னா போயிடனுமா... இங்க யாராச்சும் ஆம்பிளை இருந்தா வரசொல்லு பார்க்கலாம். சுற்றி பார்த்து விட்டு எவனுமே இல்லையா... உன் புடவைய கிழிச்சு கொடு கோவணம் கட்டிக்க சொல்லலாம். அப்ப வாச்சும் ஆம்பிளை யாராச்சும் இருக்கங்களான்னு பார்க்கலாம்.
என்றவன் சுற்றி பார்த்து சிரிக்க, தீடீரென்று அம்மா.......னு கத்தி கொண்டே தூர போய் விழுந்தான்.
அவனுடன் வந்தவர்கள் என்ன ஏதென்று திரும்பி பார்க்க, முட்டிக்கு மேல் ஏற்றி கட்டிய சேலையில் உலக்கையை போன்ற கால்களை அவர்களுக்கு காட்டிக் கொண்டு நின்றாள் நம் கதையின் நாயகி முத்தம்மா ...
Bro ethu earkanave ketta kathai mathre eruku bro name devasena story
ReplyDeleteYes he is only posting old stories by changing something now a days.. ☹️😣
Delete