சரி, கதையின் அடுத்த பாகத்தை கொஞ்சம் மகிழ்வுடன் தொடங்கலாம். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!!
அப்போது கவுதமி "சுனில், இப்போது மீண்டும் பந்தயம் வைக்கலாமா?? மற்ற சலூன்களும் மூடப்பட்டிருந்தால், இன்று எப்படியும் முடி வெட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்காது, அப்படி நடந்தால் நான் ஜெயித்ததாக அர்த்தம். நீ என் முடியை எதுவும் செய்யக் கூடாது என்றால் கவுதமி. கவுதமி தனது வழக்கமான தொனியில் கடந்த இரண்டு மணி நேரத்தில் பேசியது இதுவே முதல் முறை.
"நான் நேச்சுரல்ஸ் யுனிசெக்ஸுக்குச் செல்ல மட்டுமே நினைத்து இருந்தேன், நீ தான் பார்பர் ஷாப் போலாம்னு சொன்ன" என்று சுனில் மிரட்டலாகச் சொன்னான், "உனக்கு அதிர்ஷ்டம் இல்லை" என்று கவுதமி கிண்டலாக சொல்ல, "எந்த சலூன்களும் திறக்கப்படவில்லை என்றால், உனக்கு நானே பார்பர் ஆகி உன் முடியை வெட்டுவேன்" என்று சுனில் தனது புருவங்களை உயர்த்தி சொல்ல, கவுதமி கொஞ்சம் உள்ளுக்குள் பயந்தாள்.
பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்த கவுதமி, “நான் தலையை மொட்டையடிக்க விட மாட்டேன், அது பந்தயத்தில் கூட இல்லை. நடக்கவில்லை, உன் கனவில் நீ யாருடனோ பந்தயம் கட்டி இருக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே நடக்க, அவள் சொல்வதை பற்றி சுனில் பெரிதாக கண்டு கொள்ளவில்லை,
சுனில் தெளிவாக சொன்னான். நமக்குள்ள பந்தயம் என்னென்னா நம் வீட்டு விருந்தினர் சென்ற பிறகு இன்று உனக்கு முடி வெட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்தால், நீ உன் தலையை மொட்டையடிக்க வேண்டும் என்பது தான் பந்தயம்” அது மட்டுமில்லாமல் நான் உனக்கு பார்பராக இருக்கும் போது, நாம நிற்கிற இந்த இடம் கூட எனக்கு சலூன் தான், இன்னொரு முறை பந்தயம் பற்றி எனக்கு விளக்க வேண்டாம்” என்று சுனில் கோபமாக கத்தினான்.
சுனில் கவுதமியுடன் நடந்து கொண்டே சுற்றும் முற்றும் திரும்பி, திரும்பி, ஏதோ தேட, என்னடா தேடுற என்று கவுதமி கேட்க "ரேஸர் மற்றும் பிளேடுவிற்கும் ஒரு கடையை தேடுறேன்" என்று சுனில் சொல்ல கவுதமியின் இதயத் துடிப்பு எகிறியது. அவள் கைகள் குளிர்ந்தன, அவளது தொண்டை வலித்தது, அவளால் பேச முடியவில்லை, அவள் "சுனில் தயவு செய்து என் முடியை கட் பண்ண வேண்டாம்" என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
அவளுடைய முக்கிய கவலை இப்போது அவள் தலையை மொட்டையடிக்கும் சூழ்நிலையிலிருந்து தப்பிப்பது கூட இல்லை, இது வேறு இரண்டு விஷயங்களைப் பற்றியது,
ஒரு ஆண்கள் சலூனில் மொட்டை அடிப்பதை தவிர்ப்பதும், இரண்டாவதாக, சுனில் அவளுடைய தலைமுடியை மொட்டை அடிப்பதை, அவளின் மோசமான கனவுகளில் கூட விரும்பாத ஒரு சூழ்நிலை, இந்த இரண்டையும் தவிர்ப்பது தான் கவுதமியின் நோக்கமாக இருந்தது. அவர்கள் பேருந்து நிறுத்தத்தை அடைகிறார்கள்.
"நான் உன்னை கேலி செய்யவில்லை" என்ற சுனில், கவுதமியின் கண்களைப் பார்த்து சொல்ல, கவுதமி தன்னுடைய துப்பட்டாவை அவள் தோளின் மேல் ஒரு பக்கத்தில் வைத்து, அவள் தலை முடியை மார்பின் மேல் கொண்டு வர, அவள் கைகளை மடித்து, தலையை கீழே குனிந்து, நிலத்தைப் பார்த்து ஏதோ யோசனை செய்தாள். அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பது இப்போது யாருக்கும் தெரியாது.
ஒரு பஸ் வர, அவர்கள் இருவரும் அதில் ஏறுகிறார்கள், கவுதமி இரண்டாவது கடைசி இருக்கை ஜன்னல் பக்கத்தில் அமர்ந்தார், சுனில் கண்டக்டரிடமிருந்து டிக்கெட்டைப் பெற்று கடைசி சீட்டில் கவுதமியின் பின்னால் உட்கார, கவுதமி முன்னால் வந்து உட்கார கேட்கவும், சுனில் "குழப்பமடைய வேண்டாம், பார்பர் வழக்கமாக தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பின்னால் தான் உட்காருவார்கள்" என்று சொல்லி கேலியாக சிரித்தான்.. சுனில் அவள் தலைக்கு பின்னால் உள்ள முடியின் பகுதியைத் தொட, கவுதமி எதுவும் சொல்ல முடியவில்லை,
அவன் மெதுவாக அதை தடவி “உன் முடி மிகவும் மென்மையானது” என்று கூறி, அவளது தலை முடியை அவன் ஆள் காட்டி விரலைக் குத்தினான். சுனில் "என் விரல் உன் தலையை எட்டுவதற்கு முன் எவ்வளவு ஆழமாக செல்ல வேண்டும், உனக்கு இவ்வளவு முடி எப்படி வளர்ந்தது" என்று அவன் சிரிக்கிறான்.
கவுதமி இது எதற்கும் பதில் சொல்லாமல் இருக்க முயற்சி செய்கிறாள், ஆனால் அவள் எரிச்சலடைந்ததால் முன்னும் பின்னுமாக நகர்கிறாள்.
சுனில் தனது விரலை எடுத்து மூக்கின் அருகில் வைத்து முகர்ந்து பார்த்து விட்டு, அவளிடம் கேட்கிறான், "கடைசியாக நீ எப்போது தலை முடியைக் கழுவினாய்?" கொஞ்சம் வியர்வை நாற்றம் வருது என்று சொல்ல, "நான் நேற்று தான் கழுவினேன், எல்லா வியர்வையும் உன்னால் தான், என் இதயத் துடிப்பு சில மணி நேரங்களாக குறையவில்லை."
அவள் குரலின் தொனி இப்போது மெதுவாக கவலையாகவும், பதட்டமாகவும் மனச்சோர்வாகவும் மாறுகிறது. சுனில் அவளிடம் "என்ன நடந்தது?" அவள் "வேறு என்ன நடக்கும்?" சுனில் அவன் கைகளை அவள் கன்னத்தில் வைத்து, அவள் தலையை கீழே சாய்த்து, அதன் மேல் கட்டை விரலை மையமாக வைத்து தலையின் இரு புறமும் தலை முடியைக் கழுவுவது போல் விளையாட, அவனது விரல்கள் சுதந்திரமாக அவளது கூந்தலுக்குள் நுழைந்து விளையாட, எரிச்சலடைந்த கவுதமி அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு திரும்பி, நாம் இப்போது கீழே இறங்க வேண்டும் என்று சொல்ல அந்த நிறுத்தத்தில் இருவரும் இறங்கினர்.
அவர்கள் கீழே இறங்கி சலூனை நோக்கி வந்தனர், கவுதமி இப்போது கவுதமி தலையைச் சுற்றி சால்வை அணிந்து தலை முடியை நெற்றி வரை மறைத்து கொண்டு நடக்க, இப்போது அவள் விரும்பிய சலூன் திறந்து இருப்பதை பார்க்க முடிந்தது. சலூன் திறந்து இருப்பது சுனில் முகத்தில் புன்னகையை வரவழைத்ததுடன், அவன் புருவத்தை உயர்த்தி, தனக்கு அதிர்ஷ்டம் கிடைத்ததாக சைகை காண்பிக்க, கவுதமியின் இதயம் படபடக்கத் தொடங்குகிறது. அவளது ஒவ்வொரு அடியும் சலூன் நாற்காலி, கேப் மற்றும் நேரான ரேஸர் பிளேடுக்கு அருகில் ஒரு படி நெருக்கமாக கூட்டிச் செல்கிறது.
அவள் இப்போது அதிர்ஷ்டத்தை இழந்து விட்டாள், அவளுடைய பந்தயத்திலிருந்து தப்பிக்க அவளுக்கு வாய்ப்பு குறைவு. அவளுடைய கூந்தலுக்காக அவளுடைய உணர்வுகள் இப்போது தீவிரமடைந்துள்ளன, அவள் ஷார்ட் ஹேர் கட் முயற்சி செய்ய விரும்புகிறாள்,
சலூன் வாசலில் இருந்து சில படிகள் தொலைவில் இருக்கிறாள், இன்னும் சில அடிகள் நடந்தால், இனி அவள் விரும்பிய தோற்றத்திற்கு மாற, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆகும். கவுதமி தரையை பார்த்து நடக்கிறாள், சுனில் கதவைத் திறக்க, AC யின் மிகவும் குளிர்ந்த காற்று வரவேற்பறையிலிருந்து வெளியே வருகிறது. கவுதமி ஏற்கனவே பதட்டத்தில் மிகவும் குளிராக உணர்ந்தாள், அவள் கால்கள் உள்ளே நுழையும் போது அவளது முழங்கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக நடுங்கின.
வரவேற்பறையில் ஒரு அழகான இளம்பெண் அமர்ந்திருக்க, அவள் 5 அடி உயரமுள்ளவள், அவளது நடு முதுகு வரை நேரான கூந்தல், மையத்தில் இருபுறமும் முடியை சமமாக விட்டு காதுகளை மறைத்து விட்டு இருந்தாள்.
சுனில் ரிசப்ஷனிஸ்ட்டிடம் வர, அவள் அவனிடம்
"ஹேர் கட்டா, சார்?"
"எனக்காக அல்ல, என் அக்காவுக்கு, அவள் தலையை மொட்டையடித்துக் கொள்ள இங்கு வந்திருக்கிறாள்" என்று சொல்லி கவுதமியை காட்டினான்.
அந்த பெண் அவளுடைய நாற்காலியில் இருந்து எழுந்தாள், கவுதமியை பார்த்து அழகான கூந்தல் அவளுக்கு இருப்பதாக அந்த பெண் பாராட்டுகிறாள்.
வரவேற்பாளர் "நீங்கள் உங்கள் தலைமுடியை தானம் செய்கிறீர்களா?" கவுதமியை முன்திக் கொண்டு சுனில் பதில் சொன்னான்.
“இல்லை.மொட்டையடித்த பிறகு முடியை நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம், ”என்று அவர் கூறினான்.
அந்த பெண் சலூனுக்குள் சென்று கவுதமிக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று ஒரு பெண் ஸ்டைலிஸ்ட்டிடம் சொல்ல, ஸ்டைலிஸ்ட் "இந்த பெண்ணுக்கு என்னால் வேலை செய்ய முடியாது, அவளுடைய முடி ரொம்ப நீளமாகவும், அடர்த்தியாகவும் இருக்கு, ரொம்ப நேரம் நின்று வேலை செய்யணும், எனக்கு இப்போது அந்த அளவுக்கு நிற்க முடியாது, அவள் முடியை தானம் செய்யவும் இல்லை, அந்த பெண்ணின் கூட வந்தவன் அவளை கட்டாய படுத்தி மொட்டை அடிக்கிறான். அதனால் அவள் கண்டிப்பாக அழுவாள், நான் அவளுக்கு ஆறுதல் சொல்லி என் நேரத்தை வீணடிக்க முடியாது என்று சொல்ல, அதை வெளியே இருந்து இருவரும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.
=============================================================================
அப்போ மொட்டையா? சுனிலுக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? கவுதமி எப்படி தான் தப்பிக்க போகிறாள்?