Monday, 30 August 2021
அனுஷ்கா சென்னையை விட்டு மதுரைக்கு வந்து தன்னுடைய தோழி ஒருத்தி வீட்டில் தங்கி இருந்தாள். தமிழகமே அமைச்சர் சவுந்திர பாண்டியனின் ஊழலை, அயோக்கியத் தனத்தை வெளிக் கொண்டு வந்ததற்காக அனுஷ்காவை பாராட்டிக் கொண்டாடிக் கொண்டு இருக்க, அவள் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய தோழி நிவேதா வீட்டில் தங்கி இருந்தாள்.
அவள் மனம் முழுவதும் தேவசேனா தான் நிறைந்து இருந்தாள். அந்த பேக்டரியிலிருந்து தேவசேனாவின் வரலாற்று புத்தகத்தை எடுத்து வந்து இருந்தாள். அதை முழுமையாகப் படிக்க, படிக்க அனுஷ்காவின் மனம் வேதனையில் வாடியது. அவளையும் அறியாமல் அனுஷ்கா கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது. அப்போது நிவேதா அனுஷ்காவுக்கு சாப்பாடு எடுத்து வந்தாள்.
ஏய், என்னடி ஊரே உன்னைக் கொண்டாடிட்டு இருக்கு! நீ இங்க உட்கார்ந்து அழுதுட்டு இருக்க?
இல்லடி... இந்த புக் படிச்சேன்... அதான் அழுகையா வருது...
அப்படி என்ன புக்டி? நிவேதா கேட்க, அனுஷ்கா சுருக்கமாகத் தேவசேனாவின் வரலாற்றைச் சொன்னாள்.
என்னடி சொல்ற? இந்த மதுரைல இப்படி நடந்து இருக்கா? இந்த ஊர்ல வளர்ந்த எனக்கே இதெல்லாம் தெரியாதே?
ம்ம்ம்ம்... அது பத்தி யாருக்கும் தெரியாம எல்லாமே திட்டமிட்டு மறைச்சு இருக்காங்க... கொஞ்சம் விட்ட கண்ணகியோட வரலாறே நமக்குத் தெரியாம போய்டும்...
சரி விடுடி... நீ சாப்டு நல்லா ரெஸ்ட் எடு... எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு... நான் வெளியே போய்ட்டு வரேன்... நிவேதா வெளியே செல்ல அனுஷ்கா சாப்பிட்டு விட்டுச் சிறிது நேரம் தூங்கினாள். சில மணி நேரம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அனுஷ்காவின் கனவிலும் தேவசேனாவே வர, அவள் கோவில் மைதானத்தில் நிராயுதமாக மொட்டை அடித்தது படமாகவே ஓடியது அனுஷ்காவின் கனவில். ஆனால் தேவசேனாவின் முகத்திற்கு பதிலாக, அனுஷ்காவின் முகம் தெரிய திடுக்கிட்டு எழுந்தாள் அனுஷ்கா.
என்ன இது? இப்படி கனவு வருது... தேவசேனா தன் மனதில் முழுமையாக இறங்கி விட்டாள் என்று யோசித்துக் கொண்டே உட்கார்ந்து இருந்தாள் அனுஷ்கா. சில நிமிடங்கள் கழித்து நிவேதா வர, அவளுடன் பேசிக் கொண்டு, பொழுதைக் கழித்தாள். அன்று இரவும் அதே கனவு வர, அனுஷ்கா என்ன செய்வது என்று புரியாமல் தவித்தாள். தொடர்ந்து நான்கு நாட்களாக இந்த கனவு தொடர, தேவசேனா தன்னையும் அவளைப் போல மொட்டை அடித்துக் கொள்ள கனவுமூலம் சொல்கிறாள் என்று நினைத்தாள் அனுஷ்கா.
அடுத்த நாள் நிவேதாவுடன் மதுரையைச் சுற்றி பார்த்தாள். மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் என்று எல்லாக் கோவில்களுக்கும் சென்று விட்டு, சிறிது நேரம் வைகை ஆற்றுக் கரையிலிருந்து விட்டு வந்தார்கள். அனுஷ்கா நிவேதாவின் வீட்டு தெருவுக்கு வந்ததும், மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்று ஒரு கடையில் நிறுத்தி விட்டு, நிவேதா கடைக்குச் செல்ல, அனுஷ்கா வண்டி அருகில் நின்று இருக்க, அப்போது அந்த கடையை ஒட்டி, ஒரு சலூன் ஒன்று இருந்ததை பார்த்த அனுஷ்கா, தன்னை அறியாமல் அந்த சலூனுக்குள் சென்றாள்.
வயதான பார்பர் ஒருவர் ஒரு பையனுக்கு முடி வெட்டிக் கொண்டு இருக்க, அனுஷ்கா உள்ளே வந்ததை பார்த்தவர் என்ன என்று கேட்டார்.
என்னங்கம்மா? என்ன வேணும்?
இல்ல, என்று அனுஷ்கா தயங்க...
பசங்களுக்கு வீட்ல முடி வெட்டணுமா?
இல்லண்ணா... அது வந்து... வந்து...
சொல்லுங்கம்மா...
இல்ல... மொட்டை அடிக்கணும்...
பையனுக்கா, பொண்ணுக்கா, குழந்தை வயசு என்னம்மா?
குழந்தைக்கு இல்லண்ணா?
பின்ன யாருக்கும்மா?
அது... அது வந்து... எனக்குத் தான் அண்ணா...
உங்களுக்கா... என்னம்மா ஏதாவது வேண்டுதலா?
ம்ம்ம்... ஆமா... வேண்டுதல் தான்... ஆனா மொட்டை மட்டும் இல்லாம எல்லா முடியையும் எடுக்கணும்...
என்னம்மா? புதுசு புதுசா சொல்றீங்க? இதெல்லாம் என்னால பண்ண முடியாது... என் பையனை வரச் சொல்றேன்... சரி வீடு எங்க இருக்கு? நான் உங்களை இந்தத் தெருவில பார்த்ததே இல்லையே?
அப்போது நிவேதா அனுஷ்காவை காணாமல் தேடிக் கொண்டு சலூனை பார்க்க, சலூனுள் அனுஷ்கா இருப்பதை பார்த்ததும், அனுஷ்காவை கூப்பிட்டாள்.
ஏய்... அனு என்னடி பண்ற? வா போலாம் நேரமாச்சு?
இவை என்னோட ப்ரெண்ட்...இவள் வீட்ல தான் தங்கி இருக்கேன்... என்று நிவேதாவைக் காட்டி சொன்னாள் அனுஷ்கா. நிவேதாவின் குழந்தைக்கும், அவள் கணவரும் பழக்கம் என்பதால் நிவேதாவை பார்த்த பார்பர் சினேகமாகச் சிரித்தார்.
வாங்கம்மா! உங்க ப்ரெண்ட்டா?
ஆமாண்ணா! சென்னைல இருந்து வந்திருக்கா!
சரிம்மா... இவங்க என்னமோ சொல்றாங்க... கொஞ்சம் பேசிட்டு சொல்லுமா என்ற பார்பர் இருவரையும் அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு வந்த நிவேதா அனுஷ்காவின் முகம் ஒரு மாதிரியாக இருப்பதை பார்த்து விட்டுக் கேட்டாள்.
என்னடி? என்னாச்சு? எதுக்கு சலூனுக்கு போன? அந்த அண்ணா ஏதோ சொல்லச் சொன்னாரே?
இல்லடி... எனக்குக் கொஞ்சம் டிப்ரெஷ்ன்னா இருக்கு... அதான்...
தெளிவா சொல்லுடி... எனக்குப் புரியல...
அது வந்து... தினமும் அந்த தேவசேனாவோட கனவு வருதுடி... அவள் எப்படி நிராயுதமா மொட்டை அடிச்சாலோ அதே கனவு வருதுடி... தேவசேனா எனக்குள்ள வந்துட்டா! அதான் நானும் அவளை மாதிரியே முழுசா மொட்டை அடிக்கலாம்னு இருக்கேன்...
என்னடி சொல்ற... அதெல்லாம் வேண்டாம்...
இல்லடி என்னால முடியல... நிம்மதியா கண்ணை மூடித் தூங்க முடியல... நெஞ்செல்லாம் ஒரு மாதிரி வலிக்குது... தேவசேனாவோட மறுபிறவின்னு நான் தான் நினைக்கிறேன்... அதனால தான் அமைச்சர் சவுந்திர பாண்டியனின் முடிவு என் கையால நடந்துருக்கு... அது தேவசேனாவோட சபதமா கூட இருக்கலாம். அந்த சபதம் நிறைவேறியதும் தேவசேனா தன் முடியை மொட்டை அடிக்கணும்னு நினைக்கிறா.! அதான் எனக்குக் கனவா வருது...
என்னடி என்னென்னமோ சொல்ற...
ஆமா நிவேதா... நான் எனக்கு மொட்டை அடிக்கணும்னு கூப்பிடத் தான் அந்த அண்ணாவை கூப்பிட்டேன்...
இப்போ நான் என்ன பண்ணனும்...? நிவேதா கேட்க...
நீ ஒண்ணும் பண்ண வேண்டாம்... அந்த பார்பரை ஈவ்னிங் மேலே மாடில இருக்க என் ரூமுக்கு வரச் சொல்லு... எனக்கு மொட்டை அடிக்கணும்னு சொல்லி வரச் சொல்லு...
சரிடி... பார்த்துக் கவனமா இரு அனு...
நிவேதா தெரு முக்கில் இருந்த சலூனுக்கு சென்று... அந்த அண்ணாவிடம் அனுஷ்காவுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று சொன்னாள்.
அம்மாடி... அந்த பொண்ணுக்கு என்னாச்சு? அவங்க மனசுல ஏதோ குழப்பமா இருக்கும் போல...
ஆமாண்ணா... அதெல்லாம் நீங்கக் கேட்க வேண்டாம்... வெளியே யாருக்கும் தெரியாம அவள் சொல்றதை செய்ங்க...
சரிம்மா... ஆனா நான் வரமாட்டேன்... இந்த வயசுல என்னால இதெல்லாம் பண்ண முடியாது... என் பையனை வரச் சொல்றேன்... அந்த பொண்ணுகிட்டயும் பையன் வருவான்னு தான் சொல்லி இருக்கேன்மா…
சரிண்ணா... ஈவ்னிங் ஒரு அஞ்சு மணிக்கு வரச் சொல்லுங்க என்று சொல்லி விட்டு நிவேதா வீட்டுக்குச் சென்றாள். பார்பரின் மகன் தான் மொட்டை அடிக்க வருவான் என்ற செய்தியை அனுஷ்காவிடம் சொல்ல அவள் தலையை மட்டும் ஆட்டிவிட்டு மாடிக்குச் சென்றுவிட்டாள்.
மாடிக்குச் சென்ற அனுஷ்கா சிறிது நேரம் தூங்கி எழுந்ததும்... தலைமுடியை கடைசியாகத் தடவிப் பார்த்தாள். இன்று முழுவதும் மதுரை வெயிலில் சுற்றியதால், காற்றில் பறந்து அவள் முடி எல்லாம் சிக்காக இருக்க, தலைக்குக் குளித்து விட்டு வந்து நிவேதாவின் மயில் கழுத்து நீலக்கலரில் இருந்த பட்டுப் புடவை ஒன்றை எடுத்துக் கட்டிக் கொண்டாள்.
சின்னதாக ஜிமிக்கி, நெற்றிச் சுட்டி, மூக்கில் மூக்குத்தி... ஒட்டியாணம் என்று அலங்கரித்துக் கொண்டாள். அனுஷ்காவை பார்க்க வந்த நிவேதா அனுஷ்காவை பார்த்து வாயடைத்துப் போனாள்.
அப்போது காலிங் பெல் அடிக்க, அனுஷ்கா நிவேதாவை பார்க்க, நிவேதா கீழே சென்றாள். பார்பர் மகன் அனுஷ்காவிற்க்கு மொட்டை அடிக்க வந்திருப்பதாகச் சொல்ல, நிவேதா அனுஷ்காவிடம் கூட்டிக் கொண்டு சென்றாள்.