இப்போ வாணிக்கு என்ன பண்றதுன்னு தெரியல? வேற ஒரு லேடீஸ் பியூட்டி பார்லர் போகணும்னா ரொம்ப தூரம் போகணும், வண்டியும் எடுத்து வரல, சோ என்ன பண்றதுன்னு யோசிச்சா வாணி... இன்னிக்கு வேலை முடிஞ்சு பிரகாஷ் வீட்டுக்கு வரதுக்குள்ள எப்படியாவது தன்னோட நீளமான முடியை வெட்டியே ஆகணும்னு நினைச்சா வாணி.
வேற வழி இல்லைன்னு பக்கத்துல இருக்க சலூனுக்கு போக, அங்க கடைல ரெண்டு பேர் உட்கார்ந்து நாட்டு நடப்பைப் பேசிட்டு இருக்க, வாணி உள்ள போக, அவளைப் பார்த்து ஒருவன் மட்டும் எழுந்து நிற்க,
என்னங்க லேடீஸ்க்கு முடி வெட்ட முடியுமா?
இல்ல மேடம், இது ஆம்பளைகளுக்கான கடை... அது இல்லாம எனக்கு உங்களுக்கு ஹேர் கட் பண்ண தெரியாது மேடம் என்று சொல்ல, வாணி எதுவும் பேசாமல் கோபமாக வந்தாள்.
பின் கடைக்குச் சில அடிகள் தள்ளி வந்து நின்று கொண்டு என்ன செய்து தன்னுடைய முடியை வெட்டுவது என்று யோசித்தாள் வாணி.
அப்போ தான் பியூட்டிஷியன் பார்கவி சொன்னது நினைவு வந்தது. பேஷன், அழகு என்பது எல்லாம் நாமே கிரியேட் பண்றது தான்... என்னோட அழகு வெறும் முடி மட்டும் தானா? என்று நினைத்த வாணி, ஏதோ ஒரு முடிவு எடுத்தவள் போல வேகமாக மீண்டும் சலூனுக்கு போனாள்.
இப்போ சலூனில் பார்பர் ஒரு ஆணுக்கு முகச்சவரம் செய்து கொண்டு இருக்க, மீண்டும் சலூனுக்குள் கோபமாக வரும் வாணியை பார்த்துப் பயந்தான் பார்பர்.
அட்லீஸ்ட் மொட்டையாவது அடிக்க முடியுமா? என்று வாணி கேட்க, அந்த பார்பர் ஷாக் ஆகி என்ன மேடம் சொல்றீங்க? இவ்ளோ நீளமான முடியை நீங்க எதுக்காக மொட்டை அடிக்கணும்?
அதெல்லாம் உனக்கு எதுக்கு? மொட்டை அடிக்க முடியுமா? முடியாதா?
நான் இதுவரைக்கும் சின்னப் பசங்க, ஆம்பளைகளுக்கு தான் மொட்டை அடிச்சு இருக்கேன்... பொம்பளைகளுக்கு மொட்டை அடிச்சது இல்ல, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, உங்களுக்குப் பரவாயில்லைன்னா என்று பார்பர் இழுக்க,
சரி பரவாயில்லை... எனக்கு மொட்டை அடின்னு சொன்னா வாணி...
சரி மேடம், இந்த ஒரு ஷேவிங் மட்டும் முடிச்சிடறேன்... கொஞ்சம் ஒரு பத்து நிமிஷம் மட்டும் வெயிட் பண்ணுங்க? என்று பார்பர் சொல்ல, வாணி எதுவும் சொல்லாமல் பின்னால் இருந்த ஒரு நீளமான மர பெஞ்சில் பொய் உட்கார்ந்தாள்.
வாணி போட்டு இருந்த ஜடையை அவிழ்க்காமல் அப்படியே மொட்டை அடித்தால், முடி மொத்தமும் சிந்தாமல், சிதறாமல் இருக்கும் என்று நினைத்த பார்பர் ஒரு புதிய ரேஸரில் பிளேடை உடைத்து பாதி பிளேடை போட்டு விட்டு, சலூனுக்குள் ஓடும் பேன் காற்றில் மொட்டை அடிக்க ஆரம்பித்தான். பர்ஸ்ட் ஸ்ட்ரோக் வாணியின் தலையில் பட்டதும், ஈரமான தலையில் பேன் காற்று பட, அவள் உடலெங்கும் சிலிர்க்க, அந்த புது உணர்வை ரசித்தாள் வாணி.
எல்லோரும் சிரிக்க, வாணி வெட்கத்தில் வேகமாகக் கிளம்ப, பார்பர் கொஞ்சம் இருங்க மேடம் என்று சொல்ல, வாணி என்னவென்று அவனைப் பார்க்க, பார்பர் டேபிளில் இருந்த படிகாரக் கல்லைத் தண்ணீரில் நனைத்து வாணியின் மொட்டைத் தலையில் தடவி விட்டான்.படிகாரக் கல்லைத் தடவ தடவ வாணியின் தலை செம கூலாக இருந்தது.
தன் கணவன் பிரகாஷை எப்படி சமாளிக்க போகிறாள் வாணி?