அது ரொம்ப கஷ்டமான்னா ட்ரீட்மெண்ட், அதை பண்ணா சைடு எபெக்ட்ல வெயிட் லாஸ், ஹேர் லாஸ்ன்னு நிறைய பிரச்சனைகள் இருக்கு... சின்ன பொண்ணு எப்படி தாங்குவா? நினைச்சாலே பயமா இருக்கு...
சரிம்மா, எல்லாம் நல்ல படியா நடக்கும்... நாம நாளைக்கே கோவை கிளம்பலாம்... போய் வைஷூகிட்ட நீங்க பேசுங்க... அவ நீங்க சொன்னா கேட்பா....
ஆமா மதன்... நாம கண்டிப்பா கோவைக்கு கிளம்பணும்.. காலைலே நேரத்தில் கிளம்பலாம்.
ஓகேம்மா....
அடுத்த நாள் காலை கோவை வந்து கீதா அத்தை வீட்டுக்கு சென்றோம். கீதா அத்தை நாங்கள் இருவரும் வருவோம் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அம்மாவை பார்த்ததும் தன்னை மீறி கட்டிக் கொண்டு அழுதாள் கீதா அத்தை.
அக்கா, நான் தான் வந்துட்டேன்ல.. கவலைப்படாதீங்க... வைஷூ எங்க நான் அவகிட்ட பேசுறேன்...
அவை ரூம்ல இருக்கா, இப்போ யார் கூடவும் பேசறது இல்லை.. நீ வேணா போய் பேசி பாரு...
அம்மாவும், நானும் மாடிக்கு போக, வைஷூ பெட்டில் படுத்துக் கொண்டு இருந்தாள்.
வைஷூ... எப்படிம்மா இருக்க?
அத்தை... என்னால முடியல அத்தை... நான் லேஸர் சிகிச்சைக்கு எல்லாம் போக மாட்டேன்.. அதை பத்தி நெட்ல என்னவெல்லாம் போட்டு இருக்கு தெரியுமா?
அதெல்லாம் ஒண்ணு இல்லை வைஷூ... லேசர் சிகிச்சைல சைட் எபக்ட் இருக்கு தான்... ஆனா முறையான உணவு முறை, மாத்திரைகள் மூலமா சரி பண்ணிக்கலாம்.. மீறி போனா உன்னோட முடி தான் போகும்... அதுக்கும் கொஞ்ச நாளுக்கு விக் வச்சுக்கலாம்...
ப்ளீஸ் அத்தை... என்னை கம்பெல் பண்ணாதீங்க...
இங்க பாரு வைஷூ... உன்னை விட இந்த நோயால கஷ்டபடுறவங்க நிறைய இருக்காங்க... நல்ல ட்ரீட்மெண்ட் கிடைக்காம எவ்ளோ பேர் இருக்காங்க.. ஆனா அதையும் மீறி இந்த நோயை ஒரு சவாலா எடுத்துட்டு மீண்டு வந்தவங்க நிறைய பேர் இருக்காங்க... நடிகை மம்தா, கவுதமி, ஹிந்தில சோனாலி பிந்த்ரே இவங்க எல்லாம் மீண்டு வந்தவங்க தான்... உன்னால முடியும்... நாம நாளைக்கு ஹாஸ்பிடல் போறோம்..ட்ரீட்மெண்ட் முடியற வரை நான் உன் கூட இருக்கேன்.. போதுமா?
சரி அத்தை என்று வைஷூ சொல்ல, அடுத்த நாள் நான், அம்மா, வைஷூ, கீதா அத்தை நால்வரும் ஹாஸ்பிடல் போனோம்.. டாக்டர் ட்ரீட்மெண்டை பற்றி விளக்கி விட்டு, வைஷூவை ட்ரீட்மெண்ட்க்கு முன் தலையை மொட்டை அடித்து விட சொல்ல, வைஷூ அங்கேயே அழுதாள். அம்மா அவளுக்கு ஆறுதல் சொல்லி கூட்டி வந்தாள். வரும்போது சாந்தா மேடமின் ஹாஸ்பிடல் போக சொன்னாள் அம்மா. அங்கு சென்று ஒரு கவுன்சிலிங் வைஷூவுக்கு கொடுக்க, அவள் இப்போது கொஞ்சம் பயம், பதட்டம் இல்லாமல் இருந்தாள்.
பின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுத்தோம். அடுத்த நாள் வைஷூவுக்கு லேசர் ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும்.. அதற்க்கு முன் அவள் தலை முடியை மொட்டை அடிக்க வேண்டும். ஆனால் அவள் மறுக்க, அப்படியே லேசர் ட்ரீட்மெண்ட் எடுக்கவும், அதனால் அவளுக்கு முடி முழுவதும் கொட்ட ஆரம்பித்தது.
அங்கங்கே பாதி முடி கொட்டி, சொட்டையாக தெரிய, அவள் வெளியே வரவே கூச்சப்பட்டாள். வர முடியாது என அடம்பிடிக்க, நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தோம். அன்று மாலை அம்மா என்னை மாடிக்கு கூட்டிச் சென்றாள்.
மதன்.. அம்மா சொல்றதை கேட்பியா?
சொல்லுங்கம்மா,
நான் என் தலை முடியை மொட்டை அடிக்கலாம்னு இருக்கேன்... உனக்கு எதுவும் ப்ராப்ளமா?
ஏன் மா மொட்டை? உங்க தலை முடி ட்ரிம் கூட பண்ண மாட்டிங்களே...
ஆமா மதன்.. பட் இப்போ வைஷூவோட நிலைமையை பார்த்தா எனக்கு பயமா இருக்கு, அவளை ட்ரீட்மெண்ட் எடுக்க வைக்க, அவளை மொட்டை அடிக்க வைக்கணும், அதுக்கு நான் அவை முன்னாடி என் தலை முடியை மொட்டை அடிச்சு, அவளுடைய பயத்தை போக்கணும், அப்படியே அந்த முடியை அவளுக்கு விக் வைக்க ஏற்பாடு பண்ணலாம்...
சூப்பர்மா, உங்களுக்கு மட்டும் தான் இதெல்லாம் தோணும்.. உங்க சொந்தகளுக்கு உதவுறதுல உங்களை மிஞ்ச முடியாது மா...
இல்ல மதன்... வைஷூ என்னோட குழந்தை மாதிரிடா, உனக்கு அப்பிறம் நான் அவளை தான் தூக்கி கொஞ்சி வளர்த்தேன்... அவளை தான் உனக்கு கட்டி வைக்கலாம்னு இருக்கேன்...
என்னம்மா சொல்றீங்க...
ஆமாடா, வைஷூ தான் என் மருமகள்.. அவளுக்காக என் தலை முடியை கொடுக்க மாட்டேனா?
சரிம்மா, இப்போ என்ன பண்ணலாம்... ஏதாவது பார்லர்ல மொட்டை அடிக்க புக் பண்ணவா?
இல்ல மதன்... உன் அத்தைக்கு தெரிஞ்சா விடமாட்டா, அவளுக்கு என் மேலயும் பாசம் அதிகம்... நீ போய் உன் ரேசர் செட் எடுத்துவா, இப்போ இங்கயே மொட்டை அடிக்கலாம்....
நான் அம்மா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், எனக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது என்று நினைத்து கீழே வீட்டுக்கு போய் என்னுடைய ஷேவிங் கிட்டை எடுத்து வந்தேன்..
அம்மா ரெடியாக ஒரு திண்டில் உட்கார்ந்து இருக்க, நான் மேலே சின்டெக்ஸில் இருந்து தண்ணீர் எடுத்து, அம்மாவின் முடியை நனைத்து விட்டு, முடியை நன்றாக மசாஜ் செய்து விட்டேன். அம்மாவின் முடியை இரண்டாக பிரித்து இரு பக்கமும் ரப்பர் பேண்ட் போட்டு விட்டு
பின் நான் வைத்து இருந்த ரேசரை எடுத்து அம்மாவின் அடர்த்தியான முடியை நடு வகிட்டில் இருந்து அம்மாவின் வலது பக்கம் சிரைத்து விட்டேன்.
வலது பக்கம் முடி சிரைக்கப்பட, பாதி முடி தொங்கிக் கொண்டு இருக்க, கீதா அத்தை எங்களை தேடிக் கொண்டு மாடிக்கு வந்தாள்..
டேய், மதன் என்னடா பண்ற... ஏண்டா அவளுக்கு மொட்டை அடிக்கிற....
நான் கண்டு கொள்ளாமல் மொட்டை அடிக்க, மீண்டும் கீதா அத்தை கத்த,
அக்கா, எதுக்கு இப்போ கத்துற? முடி தானே போகுது... திரும்ப அதே மாதிரி வளர போகுது...
இப்போ ஏன்டி இது பண்ற? வைஷூ மொட்டை அடிக்க மாட்டேன்னு சொல்றா... நீ என்னடான்னா இங்க நல்லா இருக்க உன் முடியை மொட்டை அடிச்சுட்டு இருக்க...
நானே என் தலை முடியை மொட்டை அடிச்சப்புறம்... உன் பொண்ணு எப்படி மொட்டை அடிக்காம இருப்பா... அவளுக்கு துணையா நான் இருப்பேன்னு சொன்னேன்ல... அதான் மொட்டை அடிக்க்கிறேன்...
அய்யோ பிரகதி... என் மகளுகாக நீ உன் அழகை மொட்டை அடிக்கணுமா... உனக்கு பெரிய மனசுடி... நீ எப்பவும் உசந்தவன்னு காமிச்சுட்ட பிரகதி.... எனக்கு கூட மொட்டை அடிச்சு என் பொண்ணுக்கு துணையா இருக்க தோணலயே?
அக்கா சும்மா புலம்பாதே.. வைஷூவை நானும் தான் தூக்கி வளர்த்து இருக்கேன்.. எனக்கு அவ மேல பாசம் இருக்கு... அவ தான் என் மருமகள், அவளுக்காக நான் இது கூட பண்ண மாட்டானா?
நான் என்ன சொல்றதுன்னு தெரியல பிரகதி என்று சொல்லி, அத்தை அம்மாவின் அருகில் வந்து அவளை கட்டிக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டாள்.
நான் தொடர்ந்து அம்மாவின் முடியை மொட்டை அடிக்க, எனக்கு ஆரம்பத்தில் இருந்த ஒரு விதமான உணர்வு, இப்போது இல்லாமல் அம்மாவின் மனதை புரிந்து கொண்டு அவள் மேல் இருந்த மரியாதை மேலும் அதிகமாக அம்மாவின் முடியை மொட்டை அடித்து முடித்தேன்...
அம்மாவின் தலையில் ஒட்டி இருந்த நுண்ணிய முடிகளை, தண்ணீர் விட்டு கழுவி விட்டு, மீண்டும் ஒரு முறை ரிவர்ஸ் ஷேவ் செய்ய, பிசிறு விட்டு இருந்த முடிகள் எல்லாம் சுத்தமாக வழித்துவிட்டேன். எல்லாம் முடித்து, மொட்டை அடிக்க பட்ட, அம்மாவின் முடியை எடுத்து ஒரு கவரில் போட்டு பத்திரப்படுத்தினேன்.
அதன் பின் மூவரும் கீழே செல்ல, வைஷூ அப்போது தான் தூங்கி எழுந்து வந்து, அம்மாவின் முடி இல்லாத மொட்டை தலையை பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்..
என்னடி வைஷூ? இப்படி திகைச்சு போய் நிக்குற...
இல்ல அத்தை.... இப்போ நீங்க ஏன் மொட்டை அடிச்சு இருக்கீங்க....
இது சாதாரண முடி தாண்டி... ரெண்டு மாசத்தில வளர்ந்துடும், அதுக்கு அப்புறம் பாய் கட், பாப் கட் இப்படி ட்ரெண்டிங்கா ஹேர் ஸ்டைல் வச்சுக்கலாம்.. புரியுதா?
புரியுது அத்தை...?
அப்போ நீயும் என்னை மாதிரி மொட்டை அடிச்சுக்கோ... நாளைக்கே உனக்கு என்னோட முடியை வச்சு விக் ரெடி ஆகிடும்... உனக்கு வேணும்னா விக் வச்சுக்கோ... இல்லன்னா அத்தை மாதிரி ஜாலியா மொட்டை தலையோட இரு...
என்ன அத்தை... நான் உங்களுக்கு சப்போர்ட்டாவா? நீங்க தான் என்னை தைரியபடுத்த மொட்டை அடிச்சுட்டு வந்து இருக்கீங்க... உங்களுக்காக நானும் மொட்டை அடிச்சுக்கிறேன் அத்தை...
அப்போ சீக்கிரம் மாடிக்கு வா.. மொட்டை அடிக்கலாம்...
மாடிக்கா?
ஆமா... அங்க தான் மதன் எனக்கு மொட்டை அடிச்சு விட்டான்...
மதனா உங்களுக்கு மொட்டை அடிச்சு விட்டான்.. அப்போ அவன் சென்னைல ஐடி ல வேலை பாக்குறான்னு சொன்னீங்க.. இந்த வேலை தான் பாக்குறானா மதன்..!
ஏய்.. என்னையா கிண்டல் பண்ற... இரு உன்னை என்ன பண்றேன்னு பாரு... நான் வைஷீவை துரத்த அவள் என் அம்மாவின் பின்னால் நின்று கொள்ள...
சரி... போதும்.. வைஷூ நீ மாடிக்கு போ.. மதன் நீயும் போய் அவளுக்கு மொட்டை அடிச்சு விடு.. அவ மனசு வருத்தபடாம பேசுடா...
ம்ம்ம்ம் சரிம்மா..
நானும், வைஷூவும் மாடிக்கு போக, அவள் என்னுடன் கொஞ்சம் பதட்டதுடன் வந்தாள். நான் அவளின் அப்போதைய பதட்டத்தை புரிந்து கொண்டேன்..
வைஷூ... நீ உன் ஸ்கார்ப்பை கழட்டிட்டு, அந்த ஸ்டூல்ல உட்காரு...
ம்ம்ம்.. சரி மதன்...
ஏய்... இனிமேல் என் பேர் சொல்லாத... மாமான்னு தான் கூப்பிடணும்...
ச்சீ போ... ஆசைய பாரு... மாமாவாம்.. மாமா
ஏண்டி... கட்டிக்க போறவனை மாமான்னு சொல்லாம வேற என்ன சொல்லுவாங்க...
என்னது..கட்டிக்க போறியா..?
ஆமா வைஷூ.. உன்னை எனக்கு சின்ன வயசுல இருந்தே பிடிக்கும்... நான் காதல்ன்னா என்னனு தெரிஞ்சதுல இருந்து உன்னை தான் லவ் பண்றேன்... ஆனா உங்கிட்ட சொல்ல முடியல...
இப்போ நான் இருக்க நிலைமைல லவ்வெல்லாம் நினைச்சு கூட பார்க்க முடியாது....
இல்ல வைஷூ.. இது தான் சரியான தருணம்... உன் வாழ்க்கைல எப்பவும் ஒரு நல்ல நண்பனா, லவ்வரா.. புருஷனா நான் இருப்பேன்... உன்னோட கஷ்டம் என்னனு எனக்கு புரியும்... ஏன்னா நாம ரெண்டு பேரும் சிங்கிள் பேரண்டால வளர்ந்தவங்க... அவங்களுக்கு துணை இல்லாம எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னு உனக்கும் தெரியும்... எனக்கும் தெரியும்... சோ நான் உன்னை நல்லா பார்த்துக்குவேன்..
நிஜமாவா.... சொல்ற?
ஆமா வைஷூ... நிஜமா தான்... அம்மாவும் அத்தைக்குக்கும் கூட ஓகே... உனக்கு ஒகேவா?
ம்ம்ம்ம்.. என்று சொல்லி கொண்டு என்னைக் கட்டிக் கொண்டாள் வைஷூ... நானும் அவளைக் கட்டிக் கொண்டு மெதுவாக முத்தமிட்டு... அவளை விலக்கி விட்டு, வைஷூவின் ஸ்கார்ப்பை எடுத்து விட்டு, பாதி கொட்டி இருந்த முடியை மொட்டை அடித்து விட்டேன்.. பின் அவள் தலையை சுத்தமாக துடைத்து விட்டு, சிறிது நேரம் மாடியிலேயே பேசிக் கொண்டு இருந்தோம்...
அடுத்த நாள் நானும், வைஷூவும் மட்டும் காரில் ஹாஸ்பிடல் சென்று லேசர் ட்ரீட்மெண்ட் முடித்து விட்டு வந்தோம்.. என் அம்மாவின் முடியை விக் ஆக ரெடி செய்து வர, அது வேண்டாம் என்று சொல்லி, மொட்டை தலைக்கு ஸ்கார்ப் கூட சுற்றாமல் தைரியமாக வந்தாள் என் வைஷூ.
அடுத்த சில மாதங்களில் வைஷூ குணமாக, எனக்கும் வைஷூக்கும் எங்கள் சொந்த ஊரில் திருமணம் நடந்தது. பின் சென்னை வந்து சேர்ந்தோம்.. நான், வைஷூ, அம்மா, கீதா அத்தை நால்வரும் ஒரே வீட்டில் இருக்கிறோம்.. இப்போது என் அம்மா எப்போதும் பாய்கட் தான் வைத்து கொள்கிறாள்.
நானும் அப்பப்போ மூவருக்கும் நேப் ஷேவ், அக்கூல் ஷேவ் செய்து விடுவேன்.. கீதா அத்தை கூட இப்போது ரொம்பவே மாடர்னாக மாறிவிட்டாள்..
முற்றும்....
====================================================================
கைஸ்... இந்த போஸ்ட்ல கேன்சர் பேஷண்ட்டோட வலியை, வேதனையை முடிஞ்ச அளவு பதிவு பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் அவர்களை பற்றி முழுமையாக பதிவு செய்யவில்லை என்றே நினைக்கிறேன். நான் நினைத்தது முழுமையாக வார்த்தைகளில் கொண்டு வரமுடியவில்லை. மன்னிக்கவும். அடுத்த கதை எழுத ஆரம்பித்துவிட்டேன். அது நாளையே முதல் பாகம் வெளியாகும். அந்த கதை முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி..!