Thursday, 30 December 2021

Telugu Actress Hamsa Nandhini head shaving for Cancer Treatment

Telugu Actress Hamsa Nandhini head shaving for Cancer Treatment

மிர்ச்சி, லெஜன்ட், லவுக்கியம், தமிழில் நான் ஈ, போன்ற படங்களில் நடித்த நடிகை ஹம்ச நந்தினி. பெரும்பாலும் சப்போர்ட்டிங் கேரக்டர்களிலும், கிளாமர் ரோல்களிலும் நடித்து வந்தவர் ஹம்ச நந்தினி.

சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து உள்ளார். 

"நான்கு வாரங்களுக்கு முன்பு ஏதோ ஒரு தவறு நடப்பதாக உணர்ந்து கொண்டேன். அதன் பின் என் வாழ்க்கை இனி ஒரு போதும் மாறாது என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டேன். பிறகு மருத்துவ ஆலோசன பெற, மருத்துவர் பயாப்ஸி செய்ய வேண்டும் என்றார்.

அதில் ஏற்கனவே நான் நினைத்தது போலவே இருந்தது. எனக்கு மார்பக புற்றுநோய் 3 ஆம் கட்டத்தில் இருக்கிறது. ஆனால் நான் தைரியமாக ஆபரேஷன் பண்ண வேண்டும் என்றேன். முடிவில் எனது புற்று நோய் கட்டி அகற்றப்பட்டது.







இது வரை எனக்கு ஹீமோதெரபி 9 முறை கொடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் 7 முறை ஹீமோ தெரபி எடுத்துக் கொள்ள வேண்டும். நான் என் வாழ்க்கையை மாற்றும் உரிமையை இந்த நோய்க்கு கொடுக்க மாட்டேன். நான் அதனுடன் போராடி என்னை மீட்டு எடுப்பேன்.



நான் முன்னை விட இன்னும் வலுவாக இருக்கிறேன். புன்னகையுடன் எதையும் வெல்லுவேன். மீண்டும் திரையில் வருவேன். 

இந்த நோயால் பாதிக்க பட்டு இருக்கும், என்னை போன்றவர்களை ஊக்குவிக்கவும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவுமே என் கதையை இங்கு பகிர்கிறேன். நல்ல மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகிறேன். 

எனக்கு ஆதரவளித்த திரையுலக பிரபலங்கள், குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் மிகவும் நன்றி. " என்று பதிவு செய்து உள்ளார். 

ஹம்ச நந்தினி நோயில் இருந்து மீண்டு வர, அவரது ரசிகர்கள் அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்.




1 comment:

  1. நானும் ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்

    ReplyDelete