Saturday, 20 November 2021

சுதா ஆண்டி

என் அம்மா சுதா, பார்க்க மிக அழகாக இருப்பாள். அவளது அழகு அவளுடைய இடுப்புக்கு கீழ் வரை தொங்கும் நீண்ட அடர்த்தியான, அலை அலையான முடியில் தான் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். என் அம்மா சுதா அவளுடைய தலை முடியை அவிழ்த்து விரித்து விட்டால் அவள் முதுகு முழுவதும் மறைந்து விடும். என் அம்மா ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ளவர். 

நாங்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருக்க, அந்த வீட்டின் ஓனர் மகன் மகேஷ் ரொம்பவே விளையாட்டு பிள்ளை. அவன் நினைத்ததை செய்தே ஆக வேண்டும் என்று நினைக்கும் பிடிவாதாக்காரன். அவன் பள்ளி படிப்பு முடித்து விட்டு ஏதோ பேஷன் டிசைனிங் படிக்கிறான்.

அவனே அவனுக்கு விதவிதமாக உடைகளை தேய்த்து போட்டுக் கொள்வான். என் அம்மாவிடம் மகேஷ் ஆண்டி ஆண்டி என்று பாசமாக பழகுவான். சில சமயங்களில் அவனுடைய நடவடிக்கைகள் இம்சை கொடுப்பதாக இருக்கும்.

மகேஷ் என்ன தான் குறும்புக்காரனாக இருந்தாலும், அவனது சேட்டைகளை மற்றவர்கள் சில காரணங்களுக்காக பொறுத்து கொள்ள வேண்டியதாக இருந்தது. என் அம்மாவும் மகேஷ் என்ன செய்தாலும் சிரிப்புடன் கடந்து விடுவாள்.


ஒரு நாள் என் அம்மா சுதா ஹாலில் டிவி சீரியல் பார்த்து கொண்டு, தன் நீளமான முடிக்கு தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு இருந்தாள். என் அம்மாவின் அழகே அவளது நீளமான முடிதான். எங்கள் ஏரியாவில் அம்மாவின் முடி ரொம்பவே பேமஸ். என் அம்மாவின் பெயர் தெரியாதவர்கள் கூட முடியை வைத்து அடையாளம் சொல்வார்கள். அம்மா தேங்காய் எண்ணெய் தடவி, முடியை சீப்பால் சீவிக் கொண்டு இருக்கும் போது, மகேஷ வீட்டுக்கு வந்தான். அவன் பேஷன் டிசைனிங் கோர்ஸ் போய் விட்டு, ரொம்பவும் டயர்டாக வந்து சேர்ந்தான். 


சுதா ஆண்டி, கொஞ்சம் ஐஸ் வாட்டர் கொடுங்க என்று கேட்க, அவளும் சீவிக் கொண்டு இருந்த சீப்பை, அப்படியே தலை முடியில் சொருகி விட்டு, கிச்சன் போய் ஐஸ் வாட்டர் எடுத்து வந்து கொடுத்தாள். மகேஷ் ஐஸ் வாட்டர் குடித்து விட்டு, பாட்டிலை அம்மாவிடம் கொடுத்தான். அம்மா பாட்டிலை கொண்டு போய் பிரிட்ஜில் வைக்க, பின்னாலேயே சென்ற மகேஷ் அம்மாவின் முடியில் இருந்த சீப்பை பார்த்தான்.


அப்படியே அம்மாவின் முடியில் இருந்த சீப்பை எடுத்து மெதுவாக, அம்மாவின் முடியை சீவி விட்டான். அங்கங்கே அம்மாவின் முடியில் சிக்கு இருக்க, அதை லாவகமாக எடுத்து விட்டான். 


சுதா ஆண்டி, உங்க முடி நல்ல அடர்த்தி, ரொம்ப நீளம்... எப்படி மெயின்டெய்ன் பண்றீங்க? 

கொஞ்சம் கஷ்டம் தான் மகேஷ்... இருந்தாலும் பரவாயில்லை... நீ உன் வேலையை பாரு... நானே சீவிக்கிறேன்...

இட்ஸ் ஓகே ஆண்டி... இந்த ஒரு தடவை நானே பின்னி விடுறேன்...

சரி பண்ணு மகேஷ்...

ஆண்டி உங்க முடி நல்லாவே இருக்கு, பட் நுனியில கொஞ்சம் ப்ராப்ளம் இருக்கு...


என்ன ப்ராப்ளம் மகேஷ்...

உங்க முடியின் நுனி, அடிப்பகுதி வெடிப்பு வெடிப்பா இருக்கு... சோ அதை கொஞ்சம் ட்ரிம் பண்ணலாம் ஆண்டி...

இல்ல மகேஷ்... எனக்கு அதெல்லாம் நேரமில்லை... நான் இதுக்காக எல்லாம் பார்லர் போக முடியாது... 

பார்லர் எதுக்கு ஆண்டி... அதான் நான் இருக்கேனே... நான் இப்போ பேஷன் டிசைனிங் கோர்ஸ் போய்ட்டு இருக்கேன்ல... 

அங்க முடி வெட்ட எல்லாமா சொல்லி தராங்க...

ஆமா ஆண்டி... ரெண்டு வாரமா இந்த சப்ஜெக்ட் தான் போய்ட்டு இருக்கு...

ஓ... சரி... இப்ப நான் என்ன பண்ணனும்...

இல்ல உங்க முடியை வெட்டினா நல்லா இருக்கும்னு சொன்னேன்...

என் முடியை வெட்டி நீ ட்ரையல் பாக்குற... அப்படி தானே...

இல்ல ஆண்டி... கிளாஸ்லயே நான் தான் நல்லா பண்ணேன்...

சரி... கொஞ்சமா ட்ரிம் மட்டும் பண்ணு... அதுவும் ஒரு இஞ்ச் அளவுக்கு மட்டும்... 

ஆண்டி... அவ்ளோ ஹேர் ஜடை பின்ன கஷ்டமா இருக்காதா...

கஷ்டம் தான்... என்ன பண்ண... 

இல்ல ஆண்டி... உங்க அழகுக்கு இந்த நீளமான முடி உங்களை வில்லேஜ் லேடி மாதிரி காமிக்குது...

அதனால என்ன... நல்லா தானே இருக்கு...

இல்ல ஆண்டி... மிட் பேக் வரை ஹேர் கட் பண்ணி... "U" ஷேப்ல கட் பண்ணினா செம அழகா இருப்பீங்க ஆண்டி...

அதெல்லாம் வேண்டாம் மகேஷ்... நீ கொஞ்சம் ட்ரிம் மட்டும் பண்ணா போதும்...

சரி ஆண்டி... அப்புறம் உங்க இஷ்டம்...

மகேஷ் அம்மாவின் முடியை அழகாக மேலிருந்து நுனி வரை சீவி தடவினான். பின் நெற்றியில் இருந்து வகிடு எடுத்து இரு பக்கமும் பிரித்து சீவி விட்டான் மகேஷ். சுதா அம்மாவின் முடி நல்ல அடர்த்தி... அதனால் அவன் கை கொள்ளாமல்  முடி இருந்தது. அந்த அனுபவமே அவனுக்கு புதுமையாக இருந்தது. 




சில நிமிடங்களில் மொத்த முடியும் சிக்கலில்லமால் இருக்க, சுதா அம்மாவை ட்ர்ஸ்ஸிங் டேபிளில் கண்ணாடி முன் உட்கார வைத்தான். பின் ஒரு ரப்பர் பேண்ட் எடுத்து நுனியில் போட்டு இருக்கமாக கட்டினான். இன்னொரு ரப்பர் பேண்ட் எடுத்து அதன் மேலே போட்டு, நுனியில் ட்ரிம் செய்ய வேண்டிய இடத்தை காட்டினான். 

ஆண்டி... இங்க கட் பண்ணா போதும்ல... 

ம்ம்ம்... போதும்ம்...

சரிங்க ஆண்டி... 

சொல்லி விட்டு மகேஷ் சுதா ஆண்டியின் முடியை கத்தரியால் மெதுவாக வெட்டினான். இப்போது சுதா ஆண்டியின் முடி ட்ரிம் செய்யப்பட்டு ஒரே அளவாக அளவாக கோடு போட்டது போல இருந்தது. ஆனால் மகேஷ் அதோடு விடாமல் சுதா ஆண்டியின் முடியை கோதி விட்டு நடு முதுகின் அருகில் ஒரு மார்க் வைத்து பிடித்துக் கொண்டு இருந்தான்.சுதா ஆண்டியின் கவனத்தை திசை திருப்ப, பேச்சை கொடுத்து கொண்டே, மெதுவாக கத்தரியை எடுத்து நடு முதுகில் சுதா ஆண்டியின் முடியை வெட்டினான் மகேஷ்.

அடர்த்தியான பாதி முடியை வெட்டி முடித்ததும் தான் தன்னுடைய முடியை வெட்டுவதை உணர்ந்தாள் சுதா ஆண்டி. 


மகேஷ், என்ன பண்ற... முடியை வெட்ட வேண்டாம்னு சொன்னா இப்படி பண்ணிட்டியே...

இல்ல ஆண்டி... நல்லா இருக்கும்... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...

விடு மகேஷ்... சொல்லி விட்டு சுதா ஆண்டி தன் முடியை முன்னால் இழுத்து பார்க்க, பாதி முடி வெட்டப்பட்டு, பாதி முடி ரப்பர் பேண்டில் தொங்கிக் கொண்டு இருந்தது. 

உன்னை முடியை வெட்ட வேண்டாம்னு சொன்னா, என்ன பண்ணி வச்சு இருக்க... உன் அம்மாகிட்ட சொன்னா தான் நீ அடங்குவ...

இல்ல ஆண்டி வேண்டாம்... இப்படி பாதி முடியோட நீங்க வெளியே போனா நல்லா இருக்காது... ப்ளீஸ் ஆண்டி... அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்... நானே சரி பண்ணி தரேன்...

நீ ஒண்ணும் பண்ண வேண்டா... நான் பார்லர் போயே பண்ணிக்கிறேன்... 

ஆண்டி... என்னை நம்புங்க... நானே பண்றேன்... நீங்க முன்னை விட இன்னும் அழகா இருப்பீங்க... என்று சொல்லி மகேஷ் விடாமல் வலுக்கட்டாயமாக சுதா ஆண்டியை கண்ணாடி முன் உட்கார வைத்து, மீண்டும் பாதியில் இருந்து அவள் முடியை வெட்டினான்.

அதன்பின் அவள் முடியை "U" ஷேப்பில் அழகாக வளைந்து இருக்குமாறு ட்ரிம் செய்தான் மகேஷ்.

கொஞ்சமாக சுதா ஆண்டியின் முடியை தண்ணீரில் நனைத்து விட்டு இன்னும் நுணுக்கமாக ட்ரிம் செய்தான். அவனுக்கு திருப்தியாகும் வரை கண்ணாடியில் சுதாவின் முடியை, அவளின் லுக்கை பார்த்துக் கொண்டே வெட்டி முடித்தான் மகேஷ்.

பின் எல்லாம் முடிந்ததும் சுதா ஆண்டியை கண்ணாடி முன் நிற்க சொல்லி, இப்போது அவள் முடியை இன்னொரு கண்ணாடியில் அவளுக்கு காட்டினான். முன்பு அவள் முடி நீளமாக இருந்தாலும் இத்தனை அழகாக அழகுபடுத்தி இருக்கவில்லை. 

அதே போல அவளுடையை அழகும் முன்னை விட இப்போது தான் இன்னும் அதிகமாக இருப்பதை புரிந்து கொண்டாள் சுதா ஆண்டி.


சூப்பர்டா மகேஷ்... நல்லா அழகா இருக்கு...

நான் தான் சொன்னேனே ஆண்டி...

இல்லடா, நீ எப்பவும் போல சேட்டை பண்ணி என் முடியை வெட்டினேனு நினைச்சேன்... ஆனா சூப்பரா பண்ணிட்ட...

தேங்க்ஸ் ஆண்டி... நீங்க தான் என்னோட முதல் கிளையண்ட்... அதுவும் ராசியான கிளையண்ட்... 

ம்ம்ம்ம்... அப்போ இனிமே எனக்கு ப்ரீயாவே எல்லாம் பண்ணலாம்... 

ஷ்யூர் ஆண்டி... நான் பார்லர் ஸ்டார்ட் பண்ணதும் எப்பவும் உங்களுக்கு ப்ரீ தான்...

இருவரும் ஜாலியாக சிரித்துக் பேசிக் கொண்டு இருக்க, அப்பொழுது தான் நான் வீட்டுக்கு போனேன். என் அம்மாவின் நீளமான முடி வெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி ஆனேன். ஆனாலும் அம்மா முன்பை விட அழகாக இருந்ததால் அவள் அழகை ரசித்து பார்த்தேன்.


 



===================================================================

இந்த வார இறுதிக்கான கதை வேகமாக முடிக்க வேண்டியதால் நண்பரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு பக்க கதைகளும் எழுத முயற்சித்து இருக்கிறேன். உங்களின் எதிரிபார்ப்பை ஒரு பக்கத்தில் முழுமையாகக் கொடுப்பது என்பதும், குறைந்த பட்சமாவது லாஜிக்குடன் எழுதுவது சிரமமே... உங்களின் கருத்துக்களை அறியா ஆவலுடன் காத்திருக்கும் வில்லேஜ் பார்பர்...







4 comments:

  1. என் மனதை கவரும் வகையில் உள்ளது

    ReplyDelete
  2. BRO SUDHA AUNTY MOTTAI NXT PART

    ReplyDelete
    Replies
    1. சாரி அந்த கதை ஒரு பக்க கதை மட்டுமே! அதை தொடரும் எண்ணமே இல்லை நண்பா!

      Delete