Sunday, 15 August 2021

தேவசேனா - முதல் பாகம்

பண்டைய கால மதுரை. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இருந்த அழகான மதுரை. பாண்டிய மன்னனின் ஆட்சியில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். மாதம் மும்மாரி பொழிய, வைகையில் கரை புரண்டும் ஓடும் வெள்ளம் மக்களை வறுமை என்ற வாடையை அண்டவிடாமல் செய்தது அந்த அழகான மதுரை.

அந்த கண்ணகி வாழ்ந்த மதுரையில் தான் மாதவியும் இருந்தாள். அவள் பெயர் தேவசேனா. அழகென்றால் அப்படியொரு அழகு. அந்த அழகே பொறாமைப்படும் பேரழகி. ஆனால் அவள் இருந்ததோ தாசி குலத்தில். அவளின் கண் பார்வை தங்கள் மேல் படாதா என்று பல நாட்டு இளவரசர்கள் காத்துக் கிடந்தனர்.


மிகப் பெரும் செல்வந்தர்கள், கணவான்கள் என அனைவரும் தேவசேனாவின் வீட்டில் பலியாய் கிடந்தனர். மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனை தவிர, வயது வந்த அத்தனை ஆண்களும், தேவசேனாவை ஒரு முறையாவது கண்ணில் பார்க்க மாட்டோமா என்று ஏங்கினர். 

ஆனாலும் அவள் சம்மதம் இல்லாமல் ஒரு ஆணின் சுண்டு விரல் கூட அவள்மேல் பட முடியாது. எந்த அளவிற்க்கு தேவசேனா அழகியோ, அதே அளவிற்கு வீரத்திலும் சிறந்தவள். படுக்கையில் மட்டுமல்ல, வாள் வீச்சிலும் ஒரே சமயத்தில் பல ஆண்களை வெட்டிச் சாய்ப்பதில் வல்லவள் தேவசேனா.

பல நாட்டில் இருந்தும், இளவரசர்கள் தங்கள் அந்தபுரத்து நாயகியாக அழைப்பு விடுத்தும், தேவசேனா தான் பிறந்த மதுரையை விட்டுப் போகவில்லை. அதே போல அவள் தாசி குலத்தில் பிறந்து இருந்தாலும், ஒரு ஆணின் சுண்டு விரல் கூட இன்னும் அவள்மேல் படாமல், தன்னை தற்காத்துக் கொண்டு தான் இருந்தாள். ஆம் தேவசேனா 27 வயதிலும் இன்னும் கன்னிப் பெண்ணாகத் தான் இருந்தாள். இது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அவளிடம் ஆசைக்கு வந்து செல்லும் ஆண்களை, தன் பேச்சிலும், திறமையிலுமே அவர்களின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கி ஓடச் செய்து விடுவாள். ஆனால் தோற்று ஓடும் ஆண்கள் தங்களின் கையாலாகாத திறமையை மூடி மறைத்து, அவளை ஆண்டு அனுபவித்ததாகச் சொல்லித் திரிந்தார்கள்.

இந்த மதுரையை பொறுத்தவரை, கன்னிப் பெண் தேவசனா ஒரு தாசி. காசு இருக்கும் ஆண்களுக்கு அவள் ஒரு ஆசை நாயகி. ஆண், பெண், பெரியவர், சிறியவர் பேதமின்றி அனைவரும் அப்படிதான் தேவசேனாவை நினைத்தனர். தேவசேனாவை தாசி என்று அந்த மதுரையே நம்பியது.



இந்த சமயத்தில் தான் மதுரையை பஞ்சம் சூழ்ந்தது. மழை இல்லை. வைகை வரண்டது. மக்கள் வறுமைக்கு ஆளாகினர். சாப்பிட ஏதும் கிடைக்காமல், எலிக்கறி, முருங்கை கீரை மட்டுமே தின்று வாழ்ந்தனர் மக்கள். மக்களின் பசி ஆற்ற முடியாமல் பாண்டிய மன்னன் விழி பிதுங்கினான். 


வயல்கள் வரண்டு வெடிக்க, அங்கு எறும்புகள் சேர்த்து வைத்து இருந்த புற்று அரிசியைக் கூடத் தோண்டி தின்றனர் மக்கள். பெரும் செல்வந்தர்கள் எல்லாம் ரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டனர். கண் முன்னே கணவனும் மனைவியும், யார் முதலில் சாகப் போவது என்று ஒருவரை ஒருவர் பார்த்தப்படி படுத்துக் கிடந்தனர்.

இந்த சமயத்தில் தான் கொடும் பஞ்சத்தில் தன் மதுரை மக்கள், கஞ்சிக்கு வழியின்றி, கணக்கு இல்லாமல் கொத்து கொத்தாகச் சாவதை பார்த்து வேதனையால் துடித்தாள் தேவசேனா. தான் இதுவரை சேர்த்து வைத்து இருந்த செல்வம் அத்தனையும் விற்றாவது தன் மக்களை இந்த பஞ்சத்திலிருந்து காக்க வேண்டும் என்று நினைத்தாள்.

2020 இன்றைய சென்னை. ஒரு முக்கிய புலனாய்வு வார இதழின் அலுவலகம். ஒரு முக்கியமான மீட்டிங்கில் பரபரப்பாக இருக்கிறது அலுவலகம். காரணம் ஆளும் அரசின் தொழில் துறை மந்திரியின் ஊழலை மக்கள் முன் அம்பலப் படுத்த சரியான ஆதரங்களை திரட்ட என்ன செய்வது என்று பேசிக் கொண்டு இருந்தனர். ஆண் ரிப்போர்ட்டர்கள் பெரும்பாலானவர்கள் அமைச்சருக்குப் பயந்து, அந்த வேலையிலிருந்து விலக அனுஷ்கா முன் வந்தாள்.

சார், இந்த கேஸை நான் சேலஞ்ச்சா எடுத்துக்குறேன். ஆனா எனக்குக் கூடுதல் அவகாசம் தேவை என்று சொல்ல, எல்லோரும் அனுஷ்காவை ஆச்சர்யமாகப் பார்த்தனர். ஏனென்றால் அமைச்சர் சவுந்திர பாண்டியன் மேல் பல கேஸ்கள் உள்ளன. தனக்கு போட்டியாகத் தன் மாவட்டத்தில் வளர்ந்து வந்த சொந்த கட்சிக்காரனையே கூலிப்படையை வைத்துக் கொன்ற வழக்கு இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு அமைச்சரை, ஒரு ரிப்போர்ட்டர், அதுவும் ஒரு பெண் எதிர்த்து வேலை செய்வதா? என்று நினைத்தனர். ஆனால் அனுஷ்காவும் சாதாரண ஆள் இல்லை. அவள் இதுவரை எழுதிய கவர் ஸ்டோரி எல்லாமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவை. மக்கள் முன் பல ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவள். 

அனுஷ்கா ஆறடி இரண்டு அங்குலம், அதற்கேற்ப சரியான உடல்வாகு. தினமும் ஜிம் சென்று தன்னுடைய உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து இருந்தாள். இக்கட்டான சமயங்களில் ஒரே சமயத்தில் இரு ரவுடிகளை அடித்து வீழ்த்தும் திறமை உள்ளவள். தற்காப்பு கலை பயின்றவள்.


பார்மல் பேண்ட் சர்ட்டில் அவள் நடந்து வந்தால் எதிரில் வரும் ஆண்களே அவளுடைய கம்பீரத்தை பார்த்து வெட்கி தலை குனிவார்கள்.
கொஞ்சம் முரட்டுத்தனமான பெண் தான் அனுஷ்கா. ஆனால் அவள் முகமோ குழந்தை முகம். மொத்ததில் அனுஷ்கா ஒரு கவர்ச்சி பதுமை தான்.

அமைச்சர் சவுந்திர பாண்டியன் தன் அதிகார பலத்தையும், ரவுடிகளையும் துணைக்கு வைத்துக் கொண்டு பல இல்லீகல் வேலைகளைச் செய்து வந்தார். நகரில் முக்கிய கம்பெனிகளை அடியாட்களை வைத்து மிரட்டிப் பினாமி பெயரில் வாங்கினார். அப்படியொரு கம்பெனியை அனுஷ்கா கண்டுபிடித்தாள். 

அங்கு வேலை செய்த ஒருவனை பிடித்துப் பண ஆசை காட்டி, சில ஆதாரங்களை எடுத்து வரச் சொல்ல, அதைவிட இன்னும் சில ஆதாரம் வேண்டும் என்றாள் அனுஷ்கா. ஆனால் அவன் தன்னால் அந்த லாக்கரை ஒபன் செய்ய முடியாது என்றும், வேண்டுமானால் தான் கூட்டிச் சென்று, இடத்தைக் காண்பிக்கிறேன் என்று அனுஷ்காவிடம் சொல்ல அவளும் அவனை நம்பி அந்த கம்பெனிக்குப் புறப்பட்டாள்.

மதுரை மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள். ஒரு வேசி தேவசேனா கொடுக்கும் உணவைப் பிச்சை எடுத்துத் தின்று உயிர் வாழ வேண்டுமா என்று தேவசேனா கொடுத்த கஞ்சியை யாரும் குடிக்கவில்லை. மக்களின் மன நிலையை அறிந்த தேவசேனா தன் நிலையை எண்ணி வருந்தினாள். அவளைப் பேசும் கூட்டத்தில் அவளுடன் வந்து படுத்து அவளை அனுபவித்தாகச் சொல்லும் ஆண்களும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் விரல் கூடத் தேவசேனா மேல் படவில்லை என்ற உண்மையைச் சொன்னால் இந்த உலகமே சிரிக்கும் என்று அந்த உயிர் போகும் நிலையிலும் சொல்லவில்லை.

ஆண்களின் வரட்டு கவுரவம் ஜெயித்ததா? தன்னுடைய கன்னித் தன்மையை எப்படி நிருபித்தாள் தேவசேனா? அமைச்சரின் கம்பெனிக்குச் சென்ற அனுஷ்கா என்ன ஆனாள்?



1 comment:

  1. வணக்கம் நண்பா சிறிது இடைவிடாத பணி காரணமாக உங்கள் பதிவை இப்போதுதான் படித்தேன் நல்ல ஆரம்பமாக உள்ளது திகிலூட்டி எனது ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது இது போன்று உங்களின் அற்புதமான கதைகளை நீங்கள் தொடர்ந்து கொண்டே இருங்கள் நண்பா

    ReplyDelete