பாய்கட் ஹேர் ஸ்டைலில் ஒல்லியாக மிக இளமையாக காட்சி தருகிறார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். தமிழ் சினிமாவில் 80 களில் கலக்கிய நடிகைகள் இப்போதும் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார்கள்.
18 வயதிலேயே திருமணம் செய்து தன் திருமண வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சினிமாவில் 2006 வருடம் தான் அறிமுகமானார்.அதன் பின் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ், மலையாளம், ஹிந்தி என மூன்று மொழிகளில் நடித்துள்ளார். அது தவிர தமிழில் இயக்குனராக 4 படங்களை இயக்கியும் உள்ளார்.
எப்போதும் டிவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை போஸ்ட் செய்து இருக்கிறார். அதில் அவர் தலை முடியை பாய்கட் ஹேர் ஸ்டைலில் வைத்துக் கொண்டு ஒல்லியாக மிக அழகாக இருக்கிறார்.. லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் "யுத்தம் செய்" படத்தில் துணிச்சலாக மொட்டை அடித்துக் கொண்டு நடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
No comments:
Post a Comment