ஹலோ பிரண்ட்ஸ்... உங்களுடைய ஆதரவினால் என்னுடைய பிளாக்கை வெப்சைட்டாக மாற்றி இருக்கிறேன்... ஒவ்வொரு கதைக்கும் உங்கள் வரவேற்பு எனக்கு புதிய உற்சாகத்தை தருகிறது.
இருந்தாலும் என்னுடைய பெர்சனல் வாழ்க்கையில் சில கடமைகள் இருப்பதால் போதிய நேரம் கிடைப்பது இல்லை. கிடைக்கும் நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கதையை மனதில் வைத்துக் கொண்டே மொபைலில் டைப் செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது...
அதுவும் இல்லாமல் நாம் எழுதுவது ஒன்றும் த்ரில்லர் கதை அல்ல... என்ன நடக்க போகிறது என்பது நமக்கு முன்பே தெரியும்.. கதையின் நாயகிக்கு நாயகன் மொட்டை அடிப்பது என்பது தான் கதை.. அதற்க்கு சரியான ஒரு ஒன்லைன் கிடைக்க வேண்டும்.. அதை கொஞ்ச கொஞ்சமாக யோசித்து ஒரு பெரிய கதையாக யோசித்து, வார்த்தைகளில் கொண்டு வரும் போது, படிக்கும் நண்பர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு கொண்டு வர வேண்டும்.. இத்தனை சிரமம் இருக்கிறது..
எம்ஜியார் படங்களில் பெரும்பாலான படங்களில் நம்பியார் அவர்கள் தான் வில்லனாக இருப்பார். நம்பியார் தவறு செய்யும் போது எப்படியும் எம்ஜியார் வந்து தடுத்துவிடுவார் என்பது மக்களுக்கு தெரியும்.. இருந்தாலும் ஒரு பயத்தை மக்கள் மனதில் கொண்டு வந்து வைத்தது நம்பியாரின் வெற்றி தான்.. அது போல இந்த காலத்தில் நம் வாசகர்களை, நண்பர்களை நாம் ஏமாற்ற முடியாது..
அதற்காக கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.. லாஜிக், நேரம், காலம், காரணம் சூழ்நிலை போன்றவை சரியாக அமைத்து வார்த்தைகளில் வர்ணிக்க வேண்டும்.. நானும் சாதாரணமாக தான் கதைகள் எழுத ஆரம்பித்தேன்... எனது முதல் சில கதைகளுக்கு பிறகு என்ன எழுதுவது, எதை வைத்து எழுதுவது என்று தெரியவில்லை...
அந்த சமயத்தில் தான் லாக் டவுன் வர, கொரோனா வைரஸ் கதையை டைம் எடுத்துக் கொண்டு என் மனதில் இருப்பதை கற்பனையாக எழுத, அந்த கதைக்கு பெரிய ஆதரவு கிடைக்க அடுத்த பாகம் எழுத ஒரு ஊக்கம் கிடைத்தது...
அதே சமயம் என் பேஸ்புக் தோழி ஒருவர் அவருடைய கதையை என் வெப்சைட்டில் போட அனுமதி தர, அதை கொஞ்சம் என் எண்ணப்படி அவரது அனுமதியுடன் மாற்றி எழுதினேன்.. அது தான் மூக்குத்தி முத்தழகு... இப்போது அதன் நான்காவது பாகம் எழுதிக் கொண்டு இருக்கிறேன்..
நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்... நீங்கள் நம்முடைய வெப்சைட்டை லேப்டாப், அல்லது உங்கள் பர்சனல் கம்ப்யூட்டரில் படிப்பவர்கள் முடிந்த அளவு உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்கள்... அடுத்து செல்போனில் படிக்கும் நண்பர்கள் வெப்சைட்டை மொபல் வெர்சனில் இருந்து, வெப் வெர்சனுக்கு மாற்றி படியுங்கள்..
உங்களுக்கு அது ஒரு கலர்புல் அனுபவமாக இருக்கும்...
அடுத்து தொடர்ந்து தங்களின் அடையாளத்துடன் தங்கள் கருத்துகளை சொல்லும் கவின், ரசிகன், கார்த்திக், மற்றும் பெயர் சொல்லாத ஒரு நண்பருக்கும் பெரிய நன்றிகள்....
என் பேஸ்புக் தோழிக்கும் நன்றி.. அவள் இப்போது சில சொந்த பிரச்சனைகளால் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறாள்.. அவளது சொந்த பிரச்சனைகள் முடிந்து விரைவாக வர இறைவனை நம்புகிறேன்... என்னை ஊக்கப் படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல....