Mallu girl parvathi menon
மல்லு கேர்ள் பார்வதி மேனன் ஹேர் ஸ்டைலில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னவென்று அவருக்கு தான் தெரியும்.. "பூ" என்ற தமிழ் படம் மூலம் தான் பார்வதியை முதன்முதலாக பார்த்தேன். பூ படத்தில் தன் அழகை குறைத்து ஒரு அக்மார்க் கிராமத்து பெண்ணாக வாழ்ந்து இருந்தார்.
அந்த படம் பார்த்து விட்டு பட புரொமொஷனுக்காக ஒரு இண்டர்வியூ ஒரு பிரபலமான சேனலில் பார்வதியை பார்க்க மொத்தமாக மாறி போய் இருந்தார் பார்வதி..
படத்தில் கிராமத்து பெண்.. நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன் கேர்ள். அப்போது பிரேமம் படத்தில் வரும் அனுபமா போல குருவிக்கூடு ஹேர் ஸ்டைல் வைத்து இருந்தார்.. அதன் பின் தொடர்ச்சியாக பார்வதி என்ன் ஹேர் ஸ்டைல் என்று பாலோ பண்ணிக் கொண்டு இருக்கிறேன்.
மரியான், பெங்களூர் டேஸ் போன்ற படங்கள் எல்லாம் பார்வதிக்காக் மட்டுமே பார்த்த படங்கள். எனக்கு இப்போதும் ஒரு சந்தேகம் உண்டு.. மரியான் பாதி காட்சிகளில் பார்வதி ஹேர் கட் பண்ணியதால் விக் வைத்து கவர் பண்ணி நடித்தாரோ என்று இன்னமும் அந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் சந்தேகம் வருகிறது
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். அதே போல நீங்கள் ரசித்த ஹேர் கட் என்னவென்றும் முடிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்...