பெண்களுக்கு உதட்டுக்கு மேல் வரும் மீசையை போக்க என்ன வழி?
பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேல் முடி வளர்வது போல உள்ளதா? அது உங்கள் முகத்தின் கெடுக்கிறதா? இதனை போக்க நீங்கள் நவீன அழகு நிலையங்களில் உங்களின் பணத்தையும், நேரத்தையும் செலவு செய்ய வேண்டியது உள்ளதா? ;எல்லாவற்றிற்கும் மேலாக அழகு நிலையம் செல்ல சோம்பேறித்தனமாக இருக்கிறதா? அப்படியானால் வீட்டிலேயே சில விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்.
எப்போதும் அழகு நிலையங்களுக்கு தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காண வேண்டும்.
அதிலும் இன்னும் சில மாதங்களில் ஆரம்பித்துவிடும்.பலருக்கு வெளியே செல்லவே மிகுந்த கடுப்பாக இருக்கும். ஆகவே அப்போது அழகு நிலையங்களுக்கு செல்லாமல், வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு எப்படி உதட்டின் மேலே வளரும் தேவையற்ற முடியை போக்குவது என்று பார்க்கலாம்.இதனால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் உதட்டின் மேலே உள்ள முடியை போக்கலாம்.
1) மஞ்சள் தூள்.
தொன்று தொட்டு தமிழர்களின் கிருமி பயன்பட்டு வரும் மஞ்சள் பெண்களின் உதட்டிற்கு மேல் வளரும் முடியை போக்குவதில் சிறந்த பொருளாக உள்ளது. கடைகளில் கிடைக்கும் மஞ்சளை பயன்படுத்தாமல் ஆயர்வேத அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மஞ்சளை வாங்கி போடி செயது அதை பசும்பாலில் கரைத்து பேஸ்ட் போல செய்து, உதட்டுக்கு மேலே பூசி, நன்கு காய வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் மாதத்திற்கு செய்து வந்தால், உதடுகளுக்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சி நாளடைவில் நின்றுவிடும்.
2)எலுமிச்சை
தேவையற்ற முடியை எலுமிச்சையை பயன்படுத்தி கூட நீக்கலாம். அதற்க்கு எலுமிச்சையை நன்கு பிழிந்து அந்த சாற்றுடன் வெள்ளை சர்க்கரை மற்றும் நீர் சேர்த்து கலந்து, அதனை உதட்டிற்கு மேலே தடவி அரைமணி நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்யும் போது சிறிது எரிச்சல் இருக்கும். அதை பொறுத்து கொள்ளத்தான் வேண்டும். அதிலும் இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
3)முட்டை
முட்டையின் வெள்ளை கருவில் சோள மாவு, அதனுடன் வெள்ளை சர்க்கரை சேர்த்து கெட்டியான பேஸ்ட போல கலந்து அதனை உதடுகளுக்கு மேலே பூச வேண்டும். இதை வாரம் இருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
4) கடலை மாவு
கடலை மாவில் பால் மற்றும் சிறிது மஞ்சள் சேர்த்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்தால், உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியானது குறைந்து விடும். அதிலும் இதனை வாரத்திற்கு 2 முறையாவது செய்ய வேண்டும்.
5)சர்க்கரை
ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு கிளறி, பின் அதில் 1ஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஊற்றி 1 நிமிடம் கிளறி இறக்கி, குளிர வைத்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி, அதன் மேல் காட்டன் துணியை வைத்து மேலும் கீழும் தேய்த்து, பின் அதனை கீழிருந்து மேலாக இழுக்க நல்ல மாற்றம் தெரியும்.
இது போன்ற சில முறைகளால் பெண்கள் தங்கள் உதட்டின் மேலே வளரும் பூனை முடிகளை அகற்றலாம். ஆனால் இந்த முறைகளில் மாற்றம் தெரிய சில ஆகும். ஆனால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் இருக்கும். முயற்சி செய்து பாருங்கள்.