Friday, 14 August 2020

ரெட்டை ரோஜா - முதல் பாகம்


ஹாசினி, ஹரிணி இருவரும் இரட்டை பிறவிகள். இருவரும் ஒரே உயரம், முக அமைப்பு, ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள். ஜீ தமிழ் ரெட்டை ரோஜாவில் வரும் ஷிவானியை போல அழகாக இருப்பார்கள் ஹாசினி, ஹரிணி இருவரும். இருவரும் ஒரே மாதிரியான உடைதான் அணிவார்கள். அந்த ஒரு விஷயத்தில் மட்டும் தான் அவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். அதுவும் அவர்களின் அப்பா, அம்மா ஆசைக்காக ஒரே மாதிரியான ட்ரஸ் வாங்கிக் கொண்டு ஒரே மாதிரி மேக்கப் செய்து கொள்வார்கள். ஆனால் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட இருவரும் சண்டை போடுவார்கள். ஆனால் ஒருவர் தப்பு செய்து மாட்டிக் கொண்டால் அதில் இருந்து தப்பிக்க அவள் தான் தப்பு செய்தால் என்று வேண்டும் என்றே மாற்றி மாற்றி சொல்லி இருவரும் தப்பித்துக் கொள்வார்கள்.




மூன்று நிமிஷம் முன்னாடி பிறந்ததால ஹாசினி தான் பெரியவள். அவளுக்கு தான் அவள் அப்பா, அம்மா முக்கியத்துவம் தருவார்கள். அவள் சொல்வதை ஹரிணியும் கேட்க வேண்டும். அது தான் அவர்கள் குடும்பத்தின் ரூல்ஸ். ஆனால் ஹாசினி சில சமயம் ஹரிணிக்காக விட்டுக் கொடுப்பாள். அதிலும் கொஞ்சம் சுய நலம் இருக்கும். இருவரும் ஒரே ஸ்கூலில் படித்தார்கள். இருவருமே பள்ளி இறுதியாண்டில் நல்ல மதிப்பெண் எடுக்க அவர்கள் பெற்றோரும், ஆசிரியகளும் மிகுந்த பெருமை கொண்டனர். பின் கல்லூரி படிப்புக்கு இருவரும் வேறு வேறு படிப்பை தேர்ந்து எடுக்க, படிப்பு விஷயம் என்பதால் முதல் முறையாக இருவரும் வேறு வேறு காலேஜில் படிக்க பெற்றோர் சம்மதம் சொன்னார்கள்.


ஒரு ஸ்கூட்டி வாங்கி இருவரும் காலேஜ் சென்றனர். ஹரிணியின் காலேஜ் தூரம் என்பதால் ஹரிணி, ஹாசினியை காலேஜில் விட்டு விட்டு, தன் காலேஜ் செல்ல வேண்டும். அதே போல காலேஜ் முடிந்து வரும் போது ஹாசினியை கூட்டிக் கொண்டு வர வேண்டும். இப்ப்டியே பல நாட்கள் சென்றதும், ஹாசினிக்கு தான் பைக்கை ஓட்ட வேண்டும் என்று ஆசையில் கேட்க, ஹரிணி தர முடியாது என்று சொல்ல இருவருக்கும் பெரிய சண்டை வந்தது. 

அம்மா, ஸ்கூட்டி ரெண்டு பேருக்கும் தானே வாங்கி தந்துச்சு... இவ  எனக்கு தரவே மாட்டேங்க்குறா அம்மா...

அம்மா, டெய்லியும் நான் தான் ஓட்டுறேன்னு இவ  இதுவரை பைக்கை ஒரு தடவை கூட துடைச்சது கூட இல்லை... சன்டே நீங்களே பார்த்தீங்களே... நான் கஷ்டப்பட்டு கழுவிட்டு இருக்கும்  போது இவ  வேடிக்கை பார்த்துட்டு இருந்தா...

ஏண்டி.. அப்போ நீயும் ஹெல்ப் பண்ணனும் ல...


அம்மா, நான் ஹெல்ப் பண்றேன்னு தான் சொன்னேன்.. அப்போ இவ தான் நானே பண்ணிக்குறேன்னு சொன்னா, அதான் நான் விட்டுட்டேன்...

பொய் சொல்றாம்மா ஹாசினி... பக்கெட்ல கொஞ்சம் தண்ணீ பிடிச்சிட்டு வர சொன்னதுக்கு முடியாதுன்னு சொன்னாமா ஹாசினி...

".............................."

அது மட்டும் இல்ல அம்மா, பைக்கை நீதானே ஓட்டுற.. அப்போ நீதான் அதை கழுவி சுத்தமா வைக்கணும்.. நானெல்லாம் பண்ண மாட்டேன்னு சொன்னா அம்மா....

ஏண்டி அப்படி சொன்ன....

அம்மா ஹரிணி பொய் சொல்றாம்மா...

என்ன பொய் சொல்றா? நீ சொன்னதை நானும் தான் கேட்டுட்டு இருந்தேன்... நீ தான் ஹரிணி பொய் சொல்ற? 

அம்மா...  அதெல்லாம் எனக்கு தெரியாது... இப்ப நான் பைக்கை ஓட்டணும்.. தர முடியுமா... முடியாதா?

அம்மா, நான் தர மாட்டேன்... நெக்ஸ்ட் வீக் பைக்கை அவளை துடைக்க சொல்லிட்டு.. அப்புறம் எடுத்து ஓட்ட சொல்லு அம்மா... என்று ஹரிணி சொன்னாள். 

எனக்கு இந்த பைக்கே வேண்டாம்... இனிமே நான் பஸ்லயே காலேஜ் போய்க்கிறேன் என்றாள் ஹாசினி. சொன்னது போலவே ஹாசினி அடுத்த ஒரு மாதமும் காலேஜ்க்கு பைக்கில் ஹரிணியுடன் போகாமல், பஸ்ஸிலேயே போய் விட்டு பஸ்ஸிலேயே வந்தாள். ஹரிணியும் பல முறை பைக்கில் வர கூப்பிட்டு பார்க்க, ஹாசிணி பைக்கை பார்க்க கூட இல்லை. ஆனால் இருவரும் எப்பொழுதும் போல ஒன்றாக விளையாடினார்கள். டிவி பார்த்தார்கள். ஒரே ரூமில் தூங்கினார்கள். 

ஒரு முறை மாமா வீட்டு விஷேசத்திற்க்கு எல்லோரும் போக, ஹாசினியின் பெற்றோர் அவர்கள் பைக்கில் முன்னே செல்ல, ஹாசினி அப்போதும் ஹரிணியுடன் பைக்கில் போகாமல் பஸ்ஸில் தான் போனாள். விஷேசம் முடிந்து வரும் போது ஹாசினியின் அம்மா ஹரிணியுடன் பைக்கில் உட்கார்ந்து கொள்ள, ஹாசினி தன் அப்பாவின் பைக்கில் உட்கார்ந்து கொண்டாள்.


ஹரிணி தனக்கு தான் பைக், உனக்கு இல்லை என்று சொன்ன ஒரு வார்த்தை ஹாசினியின் மனதுக்குள் குத்திக் கொண்டு இருந்தது. என்ன இருந்தாலும் நான் தான் அக்கா, நான் தான் முதலில், அதன் பின் தான் ஹரிணி என்றும், தன்னை விட சின்னவளிடம் ( இரண்டு நிமிடம் சின்னவள் ) தோற்று போய் விட்டோம் என்று நினைத்தாள் ஹாசினி..

பின் ஹாசினியின் அம்மா, அவள் கணவரிடம் பேசி ஹாசினிக்கும் ஒரு ஸ்கூட்டி வாங்கி தர, அந்த புதிய ஸ்கூட்டியில் தான் ஹாசினி காலேஜ் சென்றாள். தன்னுடைய ஸ்கூட்டியை ரொம்பவும் கவனமாக பார்த்துக் கொண்டாள். தினமும் துடைத்து சுத்தமாக வைத்தாள். வெள்ளிக் கிழமை கோவிலுக்கு சென்று வண்டிக்கு பூஜை செய்து மாலை போட்டு வந்தாள் ஹாசினி. ஹரிணியும், அவள் அம்மாவும் அதை பார்த்து சிரித்தனர்.

அப்போது தான் ஹாசினியின் காலேஜில் ஒரு NGO அமைப்பு கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் படும் சிரமங்களையும், கேன்சர் போன்ற கொடிய நோய் வராமல் இருக்க வரும் முன் காக்க, என்னேன்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்கள். கேன்சர் நோய் வந்த பின் அதற்கான மருத்துவ முறைகள் என்ன, அதனால் என்ன பக்க விளைவுகள் வரும் என்றும் விளக்கமாக சொன்னார்கள்.  அது போல தங்கள் வீட்டு பெண்களுக்கு நோய் இருக்கிறதா என்று பரிசோதித்து கொள்ளும் சில எளிய வழிமுறைகளையும் சொன்னார்கள்.

அதன் பின் தான் தாங்கள் விரும்பும் பெண்கள் தங்கள் முடியை கட் பண்ணியோ அல்லது முழுவதுமாக மொட்டை அடித்து கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு விக் தயாரிக்க தானமாக தரலாம் என்ற விஷயத்தை சொல்ல, நிறைய பெண்கள் தங்கள் முடியை கட் பண்ணியும், சில பெண்கள் துணிச்சலாக தங்கள் முடியை மொட்டை அடித்தும் தானமாக தந்தனர். ஹரிணியின் க்ளோஸ் ப்ரெண்ட் ஒருத்தி மொட்டை அடித்து தன் நீண்ட முடியை தானமாக தந்தாள். மொட்டை அடித்த பின் இன்னும் அழகாக இருந்தாள் அந்த பெண்.


அன்று மாலை வீட்டுக்கு வந்த ஹாசிணி தன் அம்மா, அப்பா மற்றும் ஹரிணியிடம் இன்று காலேஜில் நடந்த கேன்சர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பற்றி சொல்லி, தன் அம்மாவுக்கு ப்ரெஸ்ட் கேன்சர் பற்றி விளக்கி, அதை எப்படி சுய பரிசோதனை செய்து கொள்வது என்றும் சொன்னாள் ஹாசினி. ஹாசினியின் அம்மாவும் அடுத்த நாள் தனியே ஹாசினி சொன்னது போல சுய பரிசோதனை செய்து பார்த்து விட்டு தனக்கு அது போல அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சொன்னாள்.

அதன் பின்னும் ஹாசினிக்கு  தான் எதையாவாது செய்ய வேண்டும் என்று தோன்றிக் கொண்டு இருக்க, என்ன செய்வது என்று புரியாமல் இருந்தாள் ஹாசினி. க்ளாஸில் இருக்கும் போதும் அதே யோசனையாக தான் இருந்தாள் ஹாசினி. ஒரு நாள் காலேஜில் அந்த  NGO அமைப்பை சேர்ந்தவரை பார்த்தாள் ஹாசினி. 

ஹலோ மேடம்.. நல்லா இருக்கீங்களா? 

நல்லா இருக்கேன்மா... நீங்க?

என்னோட பேரு ஹாசினி. நான் செகண்ட் இயர் படிக்கிறேன். உங்க இவெண்ட்க்கு பிறகு எனக்கு ஒரே டிஸ்டர்ப்பா இருக்கு.. எப்பவும் கேன்சர் நோயாளிகளை பத்தியே, அவங்க படுற கஷ்டம் இதெல்லாம் தான் என் மனசுல ஓடிட்டு இருக்கு...

இதெல்லாம் கொஞ்ச நாளில் சரியாய்டும்.. உங்களுக்கு ரொம்ப இளகின மனசு.. அதான் டிஸ்டர்ப் ஆகிட்டீங்க...

ஆமா மேடம்...

ஒண்ணு பண்ணுங்களேன்.. நீங்க உங்க ஃப்ரீ டைம்ல NGO அமைப்புல வாலண்டியரா ஒர்க் பண்ண முடியுமான்னு பாருங்க... அப்படி இல்லன்னா நீங்க உங்க ஹேர் தானமா கொடுக்கலாம்... அன்னிக்கு இவெண்ட்ல நாங்க கொஞ்சம் பேருகிட்ட தான் ஹேர் டொனேட்டா வாங்கினோம்மா....

ஒகே மேடம்... அதுக்கு நான் என்ன பண்ணணும்... 

நீங்க இந்த பியூட்டி பார்லர் போய் ஹேர் டொனேட் பண்ணனும்னு சொல்லுங்க... உங்க ஹேர் எந்த அளவுக்கு கட் பண்ண சொல்றீங்களோ அந்த அளவுக்கு மட்டும் கட் பண்ணிட்டு அதை கேன்சர் பேஷண்ட்கிட்ட விக்கா சேர்த்துடுவாங்க...

ஓ தேங்க்ஸ் மேடம்... என்று சொல்லி விட்டு வீட்டுக்கு போய் சேர்ந்தாள் ஹாசினி. அதன் பின் தான் NGOவை சேர்ந்த பெண்ணிடம் பேசியதை சொன்னாள் ஹாசினி. 


அம்மா, அவங்க சொன்ன மாதிரி நான் என் முடியை டொனேட் பண்ணனும்னு நினைக்கிறேன்.. நீங்க என்ன சொல்றீங்க அம்மா?

தாராளாமா பண்ணுடி.. உன்னாலே ஒருத்தர்க்கு நல்லது நடக்குதுன்னா பண்ணு ஹாசினி...

சரிம்மா...

நானும் கூட வரவா? இல்ல நீ மட்டும் போறியா?

நான் மட்டும் தான் போறேன்மா?

சரிடி ஹாசினி... ஹரிணி வந்தா அவளை உன் கூட துணைக்கு கூட்டிடு போடி...

அவை சொன்னா கேட்கமாட்டா மா.. நான் எல்லாம் அவகிட்ட சொல்ல மாட்டேன்...

என்னடி  என்கிட்ட சொல்ல மாட்டே... என்று கேட்டுக் கொண்டே அப்போது தான் வீட்டுக்குள் வந்தாள் ஹரிணி.

ஒண்ணும் இல்லடி - ஹாசினி...

அம்மா, என்னம்மா சொன்னா...? என்னை பத்தி என்ன பேசிட்டு இருந்தா? சொல்லு அம்மா...

ஒண்ணும் இல்லைடி... இவ  காலேஜ்ல ஹேர் டொனேட் பண்ணாங்களா... அது மாதிரி இவளும் ஹேர் கட் பண்ண போறாளாம்... 

அதற்க்குள் குறுக்கிட்ட ஹரிணி... 
அம்மா, அவ  முடி கட் பண்ணட்டும்... இல்ல மொட்டை கூட அடிச்சிகிட்டடு... ஆனா என் தலைல கை வச்சுறாதே.. இப்பவே சொல்லிட்டேன்.. 

சரிடி.. அதெல்லாம் இல்லை... அவ மட்டும் தான் போறா... கூட மட்டும் அவ  துணைக்கு போய்ட்டு வா...! அது போதும்...

சரி சரி நீ சொன்னதால போறேன்... எங்கடி போகணும்..‌ எப்ப போகணும்...

நாளைக்கு காலைல 11 மணிக்கு அப்பாயிண்மெண்ட்  வாங்கி இருக்கேன்..‌ டவுன் ஹால் பக்கத்துல இருக்க அந்த பேமேஸ் சலூன் தான் கேன்சர் பேஷண்ட்க்கு ஹேர் டொனேட் கலெக்ட் பண்றாங்களாம்...

என்னடி சொல்ற? நிஜமாவா?

ஆமா...! ஏன்?

ஏய்.. அந்த சலூன்ல ஹேர் கட் பண்ண எவ்ளோ காசு தெர்யுமா? 
அம்மா, ப்ளீஸ்மா எனக்கு ஒரு 2000 குடும்மா... இவ  கூட போறது தான் போறேன்.. அப்படியே எனக்கும் ஸ்டைல்லா ஹேர் கட் பண்ணிக்கிறேன்..‌ 

ஏய்.. என்னடி சொல்ற.. என்கிட்ட எங்கடி 2000 ரூவா காசு... ஒத்தை பைசா கிடையாது... அவ்ளோ தான் சொல்லிட்டேன்..‌ ஓடி போய்டுங்க...


அன்று இரவு இருவரும் ஒரே பெட்டில் தூங்க ரெடி ஆகினர்...

ஏண்டி ஹாசினி.. உனக்கு ஏன் இப்படி ஒரு ஆசை... தீடிர்னு..

இல்லடி... அன்னிக்கு எங்க காலேஜ் ஈவெண்ட்ல ஒரு லேடி கேன்சர் பேஷண்ட்ஸ் பத்தி ஒரு ஸ்பீச் கொடுத்தாங்க... அதுக்கு அப்புறம் தான் கேன்சர் பேஷண்ட்ஸ் எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு நான் புரிஞ்சுகிட்டேன்... அதான் நான் அவங்களுக்கு என்னால முடிஞ்ச ஒரு உதவியா என்னோட முடியை மொட்டை அடிச்சு ஹேர் டொனேட் பண்ணனும்னு நினைச்சேன்...

என்னடி சொல்ற... மொட்டை அடிக்க போறீயா... அம்மா சொல்லவே இல்லை...


நான் அம்மாகிட்டயே சொல்லல.. அம்மா எப்படி உன்கிட்ட சொல்லும்..

ஹாசினி... நான் என்னம்மோன்னு நினைச்சேன்... ஆனா நீ கிரேட் டி ஹாசினி... 

சரி தூங்கு... நாளைக்கு பார்க்கலாம்...

அடுத்த நாள் காலை பார்லரில் பதினொரு மணிக்கு தான் அப்பாயின்மெண்ட். ஹரிணியை எழுப்பி விட்டு, ஹாசினி குளிக்க சென்றாள். ஹரிணி எழுந்து காபி சாப்பிட்டு விட்டு காத்திருக்க, ஹாசினி குளித்து விட்டு வந்தாள். ஹரிணியும் குளித்து விட்டு வந்து ரெடி ஆக இரண்டு பேரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள்.

அடுத்த பாகம் விரைவில் காத்திருங்கள்...!



1 comment:

  1. NYC story bro pls post next part I am waiting for Ur post bro..

    ReplyDelete