Monday, 8 June 2020

Kyunki Saas bhi kabhi bahu actress Jaya bhattacharya goes to bald

Kyunki Saas bhi kabhi bahu actress Jaya bhattacharya goes to bald and donate money for cancer patients...





சினிமாவில் நடிகைகளுக்கு அவர்களது அழகு தான்‌ ரொம்பவும் முக்கியம். அதிலும் நடிகைகள் தங்கள் முடியை மிகவும் அழகான பராமரிப்பார்கள். 


ஆனால்‌ டிவி நடிகை ஜெயா பட்டாச்சார்யா அதை பற்றி கவலை படாமல் தன்னுடைய முடியை மொட்டை அடித்து கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக கொடுத்து இருக்கிறார்.


மேலும் அது பற்றி ஜெயா பட்டாச்சார்யா கூறியது என்னவென்றால் " நான் சில ஆண்டுகளுக்கு முன் என்‌ முடியை வெட்டினேன். அப்போது நான் மிகுந்த மனசோர்வும், தனிமையாகவும் என்னை உணர்ந்தேன். மேலும் எனது தோற்றத்தை பற்றி நான் எப்போதும் கவலை கொண்டது இல்லை. 




குறைவான முடியை நான் மிக நீண்ட நாட்கள் வைத்து இருந்தேன். அப்போது என்னை ஒரு மகனை போல எண்ணும் நடிகர் அங்கித் பாட்லா என் முடியை நீளமாக வளர்க்க சொன்னார். நானும் அவர் சொன்னது போல நீண்ட முடியை வளர்த்தேன்.

ஆனால் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயை பொறுத்த வரை பாதுகாப்பு மற்றும் சுகாதாரமே சிறந்தது. மேலும் என்‌ நீண்ட முடியை பராமரிப்பு செய்வது மிகவும் கடினம். நான் இப்போது என் 90 வயது தந்தை உடனும், இரண்டு வேலை ஆட்கள், நான்கு நாய்களுடன் வசித்து வருகிறேன். அது மட்டும் இல்லாம் வீட்டை விட்டு வெளியே போய்விட்டு வந்ததும் குளிக்க வேண்டி இருப்பதால் என்‌ முடியை பராமரிக்க முடியவில்லை. 

இதனால்  நான் என் அப்பாவுக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் போகிறது. நான் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய முடியாமல் போகிறது. அதனால் என் தலை முடியை மொட்டை அடிக்க முடிவு செய்தேன். என் வேலை ஆள் ஒருவரை என்‌ முடியை மொட்டை அடிக்க சொன்னேன். முடி இல்லை என்றால் மன அழுத்தம் இல்லை. 






நான் என்னை சுற்றி இருப்பவர்களுக்காக நல்ல நலமுடன் இருக்க வேண்டும். என்‌ தலை முடி எனக்கு அவசியமாக தேவைப்படும் சமயத்தில் என்னிடம் இரண்டு விக்குகள் இருக்கின்றன. அவை எனக்கு உதவி செய்யும்" என்று சிரித்து கொண்டே பதிலளித்தார் ஜெயா பட்டாச்சார்யா.


No comments:

Post a Comment