Wednesday, 13 May 2020

South Indian actress pooja hegde chopped her hair

Pooja hegde chopped her hair

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே தன்‌ அழகான முடியை கொஞ்சம் குறைத்து வெட்டி அழகு படுத்திக் கொண்டார்.





தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து இருந்த "முகமூடி" திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின் பெரிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு தேட, கிடைத்த சில வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டார்.



பூஜா ஹெக்டே முன்னாள் மிஸ்.இந்தியா அழகி ஆவார். தெலுங்கில் வெளியான சில படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற, அதை வைத்து சில ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார். பூஜா ஹெக்டே அக்‌ஷய்குமாருடன் ஜோடியாக நடித்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின் தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான "அல வைகுந்தபுரமுலோ" ஆந்திரா, தெலுங்கானாவில் பட்டையை கிளப்பியது.





இந்த சமயத்தில் தான் கொரோனா வைரஸ் இந்தியாவில் வந்தது. லாக் டவுனால் அனைத்தும் ஊரடங்கால் முடங்கியது. அதனால் செலிபிரிட்டிகள் வீட்டில் இருந்து கொண்டே தங்கள் ரசிகர்களுடன் இண்டர்நெட்டில் உரையாடினர். நடிகை பூஜா ஹெக்டே தன்‌ அழகான கூந்தலை கொஞ்சம் குறைத்து வெட்டி அழகுபடுத்திக் கொண்டு உள்ளார். அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்ட உடன், அந்த புகைப்படங்கள் வைரல் ஆயின. இந்த புதிய தோற்றத்தில் நடிகை பூஜா ஹெக்டே இன்னும் அழகாக இருக்கிறார் என அவரது ரசிகர்கள் மெய்சிலிர்க்கிறார்கள்.

தமிழ் VJ பார்வதி ஹேர் கட்




No comments:

Post a Comment