Monday, 6 April 2020

அழகர் திருவிழா

நான் தேன்மொழி. எங்க ஊர் மதுரை பக்கம் ஒரு கிராமம். நான் என் மாமன் மகன் மொக்கராசுவை க ல்யாணம் செஞ்சு 4 வருஷம் ஆச்சு. எங்களுக்கு குழந்தை இல்ல.. நீங்க சிட்டில பண்ற மாதிரி டாக்டர்கிட்ட போய் டெஸ்ட் எல்லாம் நான் கிராமத்துல பண்ண முடியாது. அத பத்தி பேசினாவே எங்க மாமன் என்னை வெட்டி போட்டுடும். அவரும் ஒண்ணும் நோஞ்சான் கிடையாது. ஜல்லிக்கட்டுல பாஞ்சு பாஞ்சு மாட்ட அடக்குற மனுஷன். சில பொம்பளைகளும் என் மாமன் மேல கண்ணாத்தான் இருக்காளுக. எனக்குத்தான் என் கிரகம் சரியில்லாம குழந்தை பிறக்கலன்னு ஜோசியர் சொன்னார். வர்ற அழகர் திருவிழால முடி கொடுத்து வேண்டிட்டா கண்டிப்பா குழந்தை பிறக்கும்னு ஜோசியர் சொன்னார்.


ஆனாலும்  எனக்கு மொட்டை அடிக்க தயக்கமாதான் இருந்துச்சு. என் மாமனும் அத பத்தி என்கிட்ட பேசல. நிறைய யோசனைக்கு பிறகு சரி இந்த முறை அழகர் திருவிழால முடி எடுக்கிறதுன்னு முடிவு பண்ணி அத என் மாமன்கிட்ட கூட சொல்லல. என் மனசுக்குள்ளேயே வச்சிட்டேன்.



மொட்டை அடிச்சு எல்லார் முன்னாடியும் இருக்கிறது எப்படின்னு யோசிச்சேன். அதனால யாருக்கும் தெரியாம, அதிகாலைல கிளம்பி போய் வைகை ஆத்துல மொட்டை அடிச்சுட்டு அழகர கும்பிட்டுட்டு வந்துடலாம்னு ஐடியா  பண்ணேன். 

அதே மாதிரி அழகர் திருவிழா நாளும் வர சொந்த பந்தங்களுக்கு முன்னாடி எழுந்து, குளிச்சு ரெடியாகி, நல்ல சேலையா உடுத்திட்டு, மொத பஸ்ஸ பிடிச்சு வைகை ஆத்து பாலத்துக்கு போய் சேர்ந்தேன். இன்னும் இருட்டு விலகாத  அதிகாலை வேளையில, கொஞ்சமான குளிரில் நடுங்கிட்டு கூட்டத்துக்குள்  நடந்து சென்றேன். 


ஒரு லைட் பிங்க் கலர் சேரில, என் நீளமான முடியை மொத்தமா ஜடை பின்னாம, தொங்க விட்டுட்டு மொட்டை அடிக்கிற இடத்தை தேடிட்டு இருந்தேன். வைகை ஆத்துல அழகர் திருவிழாவுக்காக டேம்ல இருந்து தண்ணீ திறந்து விட்டு இருந்தாங்க.. அதனால அங்கங்க சேறும் சகதியுமா தான் இருந்தது. கொஞ்ச தூரம் தள்ளி ஒரு மேட்டுல கூட்டமா இருக்க, நான் அந்த இடத்துக்கு மெதுவாக சென்றேன்.

அங்கதான் நாசுவன்கள் நிறைய பேர் மொட்டை அடிச்சுட்டு இருந்தாங்க.. நானும் அங்க கூட்டத்தில போய் நின்னேன். மொட்டை அடிக்க கூச்சப்பட்டு வந்தா, இங்க இவ்ளோ பேர் முன்னாடி மொட்டை அடிக்க வேண்டியதா இருக்கேன்னு யோசிக்கும் போதே, ஒருத்தர் என்னை பார்த்து மொட்டையம்மா என்று கேட்க, நானும் ஆமா என்று தலை  அசைத்தேன். 

வாம்மா, வந்து இங்க உட்காரு..

நான் போய் அந்த பார்பர் முன் கொஞ்சம் நனைந்து இருந்த தரையில் உட்கார, பார்பர் என் தலையில் தண்ணீர் ஊற்றி நன்றாக ஈரமாக்கி விட்டான். 

அண்ணா, கொஞ்சமா தண்ணி ஊத்துங்க, 

உன் முடி ரொம்ப அடர்த்தியா இருக்கு.. அதனால தான் தண்ணி ஊத்த வேண்டி இருக்கு..

சரிண்ணா, கொஞ்சம் சீக்கிரம்‌ முடிச்சு விடுங்க...

ம்ம்ம்ம்..

 நானும் மொட்டை அடிக்க வசதியாக என் தலையை குனிந்து உட்கார்ந்து கொண்டு இருக்க, என்னை சுற்றி சில, ஆண்களும் பெண்களும் நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.பார்பர் அதை பற்றி எல்லாம் கவலைபடாமல் அவன் வேலையில் கவனமாக இருந்தான். சுற்றி நின்று இருந்த ஆண்களில் விடலை பையன் முதல் வயசான கிழவன் வரை என்னையே பார்த்துக் கொண்டு இருப்பது போல இருந்தது. 

என் தலையை மொட்டை அடிப்பதால் நான் வெட்கத்தில் தலையை குனிந்து உட்கார்ந்து இருந்தேன். நாசுவன் கொண்டை போட்டு இருந்த என் முடியை கொஞ்சம் கொஞ்சமாக சிரைக்க, அந்த முடிகள் என் தலையை விட்டு பிரிந்து தொங்கி கொண்டு இருந்தது.

என் தலையின் ஒரு பக்கம் முழுவதும் மொட்டையாக இருக்க, நாசுவன் இன்னொரு பகுதியை மொட்டை அடிக்க ஆரம்பித்தான். அதிகாலை இருட்டில் வைகை ஆத்து பாலத்தின் மீது செட் பண்ணி இருந்த லைட் வெளிச்சத்தில் மொட்டை அடிக்கும் இடம் இருந்ததால், வெளிச்சம் குறைவாக இருக்க, அருகில் மொட்டை அடிக்க காத்துக் கொண்டு இருந்த பையனிடம் செல்போனில் வெளிச்சம் தர சொல்ல அந்த பையன் தன் செல்போனை எடுத்து டார்ச் போட்டுக் கொண்டு என் அருகே அமர்ந்து கொண்டான்

எந்த ஊர் அக்கா?

நான் என் ஊர் பெயர் சொல்ல, அவன் அக்கா நான் உங்க ஊருக்கு பக்கத்து ஊர் தான்க்கா என்றான்.
  
அக்கா, உங்க முடி ரொம்ப  நீளமா இருந்து இருக்கும் போல... ரொம்ப கடுமையான வேண்டுதலோ... 

ஆமா தம்பி, 

பரவால்லைக்கா..கொஞ்ச நாளில் முடி வளர ஆரம்பிச்சிடும்.. அதுக்குள்ள உங்க வேண்டுதலும் நிறைவேறிடும். 

ரொம்ப நன்றிடா தம்பி, நல்ல வார்த்தை சொன்ன..


நாங்கள் பேசிக் கொண்டு இருந்த போதே நாசுவன் என் தலையின் மறுபக்கத்தையும் மொட்டை அடித்து முடித்திருந்தான்.மேலே கொஞ்சம் தண்ணி எடுத்து தலையில்‌ தடவி விட்டு மறுபடியும் ரேசரை வைத்து ரிவர்ஸலாக சிரைத்தான். இந்த முறை மொட்டை தலை கொஞ்சம் எரிச்சல் கொடுக்க ஆரம்பித்தது.
அடுத்த சில‌ நிமிடங்களில் என் தலை  மழுங்க சிரைக்கப்பட்டு இருந்தது.



முழு மொட்டையுடன் என் தலையை தடவிக்‌ கொண்டு எழுந்து பக்கத்தில் ஒரு இடத்தில் குளித்து முடித்து அழகரை தரிசித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். என் மாமன் மொக்கசாமி முதல் எங்கள் வீதியின் நண்டு சிண்டுகள் வரை என் மொட்டை தலையை ஆச்சர்யமாக பார்த்தனர். சித்திரையில் அழகர் திருவிழா முடிந்ததும் மழை அதிகமாக இல்லாமல்‌ போக, என் மாமன் மொக்கச்சாமி இரவில் தோட்டத்துக்கு போகாமல் வீட்டிலேயே தங்க அடுத்த மூன்று மாதத்தில் நான் முழுகாமல்‌ இருந்தேன். 

அழகர் எப்போதும் மதுரை மக்களை‌ காத்து அருள்வார்..


No comments:

Post a Comment