நான் நிஷா. காலேஜ் முதல் வருடம். எங்கள் ஊர் தேனி பக்கம் ஒரு வில்லேஜ். ஆனால் நான் கொஞ்சம் மாடர்னாக இருப்பேன். எங்கள் ஊர்
பசங்க எல்லோரும் என் பின்னால் தான் சுற்றுவார்கள். ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டும், ஜீன்ஸ்ஸும் போடுவேன். அதே நேரம் மூக்குத்தி குத்தி, பாவாடை, தாவணியும் க ட்டுவேன்.
எந்த உடைக்கும் ஏற்றவாறு என் முடி நீண்டு அடர்த்தியாக இருக்கும்.என்னுடைய அழகின் மேல் அதிக கவனம் எடுத்து கொள்வது என்னுடைய பாட்டி தான். என் தலை முடிக்கு சீயக்காய், அரப்பு, என் உடம்புக்கு பாசிப்பயறு முதல் அனைத்தும் பார்த்து பார்த்து செய்வது என் பாட்டி தான். என் பாட்டியை பொறுத்தவரை நான் தான் உலக அழகி. என்னை விட இந்த உலகத்தில் உயர்ந்தவள். யாரும் இல்லை.
அப்படி என்னை பார்த்துக் கொண்ட பாட்டி உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட நான் மிகவும் மனம் உடைந்து போனேன். என்னால் எதையும் உணர்ந்து செய்ய முடியவில்லை. அதனால் என் அப்பா என்னை என் மாமன் வீட்டில் சில நாள் தங்கி இருக்க சொன்னார்.
என் மாமா வீட்டில் எனக்கு சில மாற்றங்கள் இருந்தாலும் என்னால் என் பாட்டியை மறக்க முடியவில்லை. நான் குளிக்கும் போது எல்லாம் என் பாட்டியின் நினைவு வரும். என் பாட்டி நான் குளிக்க தேவையானதை எல்லாம் அக்கறையாக எடுத்து கொடுப்பாள். சில சமயம் என்னை குளிக்கவும் வைப்பார்.
என் முடியில் சீயக்காய், அல்லது அரப்பு போட்டு நல்ல நுரை பொங்க தேய்த்து விட்டு அலசி விடுவாள். என் பாட்டி இல்லாத ஒரு வலியை அன்று தான் நான் உணர்ந்தேன்.அன்று என் மாமன் வீட்டில் ஏதோ ஒரு பொருளை போட்டு தலைக்கு குளித்து விட்டு வந்து தலையை காய வைத்தேன். ஒரு பிங்க் கலர் சுடி அணிந்து கொண்டு அத்தை செய்து வைத்து இருந்த டிபனை சாப்பிட்டு விட்டு என் ரூமிற்க்கு வந்தேன்.
சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டே என் முடியுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன். இது என்னுடைய ரெகுரலான பழக்கம். என் கையால் தடவி விட்டு என் முடியை முகத்தில் வைத்து முகர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்.
அப்போது தான் எனக்கு அந்த யோசனை வந்தது. இந்த முடி இல்லாமல் கொஞ்ச நாள் இருந்தால் என்ன என்று தோன்றியது. என்ன செய்வது என்று யோசிக்க, என் மாமா ஊரில் இருந்து சற்று தொலைவில் ஒரு பிரபலமான கோவில் ஒன்று உள்ளது. அங்கு போனால் மொட்டை அடிக்கலாம், என்னை அ ங்கு யாருக்கும் தெரியாது... அதேவேளை என் மாமா வீட்டில் பொய் சொல்லி விட்டு கிளம்ப வேண்டும் என்று திட்டம் போட்டேன்.
அடுத்த நாள் நான் என் பிரெண்டை பார்க்க போகிறேன் என்று சொல்லி விட்டு ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அந்த கோவிலுக்கு சென்றேன்.
நான் அந்த கோவிலில் மொட்டை அடிக்கிற இடம் எங்கே இருக்கிறது என்று தேடினேன். யாரிடமும் கேட்க எனக்கு கூச்சமாக இருந்தது. நான் கோவிலை சுற்றி தேடிக் கொண்டே இருக்க, வெயில் அதிகமாக் இருக்க நான் ஒரு மரத்தின் நிழலில் வந்து நின்று கொண்டேன்.
என்னம்மா யாரையாவது தேடுறீங்களா? என்று ஒருவர் கேட்டார்.
இல்லை, இங்க பார்பர் எங்க இருக்காங்கன்னு தெர்ல் அதான்...
நான் பார்பர் தான், என்ன பண்ணனும் சொல்லுங்க...
அவர் கேட்டதற்க்கு எப்படி பதில் சொல்வது என்று தயங்கி நிற்க...
என்னம்மா, சொல்லுங்க, என்ன யோசிக்கிறீங்க...
ஹெட் ஷேவிங் பண்ணனும்னா..
தமிழ்ல சொல்லும்மா, எனக்கு இங்கிலிஷ் தெரியாது...
தமிழ்ல சொல்ல வெட்கப்பட்டு தான் நிஷா இங்கிலிஷ்ல சொன்னா, ஆனால் பார்பர் புரியலன்னு சொல்றாரே...
எனக்கு மொட்டை அடிக்கணும் அண்ணா,
அதை சொல்ல ஏன்மா இப்படி தயங்குற...சரி வா, வந்து இந்த பலகைல உட்காரு...
நான் போய் அந்த பலகையில் உட்கார,
க்ளிப்பை கழட்டிட்டு முடியை விரிச்சி போடுமா... என்று சொல்ல நானும் அதே போல என் முடியை விரித்து விட்டு உட்கார்ந்தேன்.
தண்ணி ஊத்தவா, இல்லை அப்படியே மொட்டை அடிக்கவா....
அண்ணா, தண்ணி ஊத்தாமயே மொட்டை அடிங்க அண்ணா.. நான் கோவிலுக்கு போகல.. அப்படியே வீட்டுக்கு போய்டுவேன்... வீட்டுக்கு போய் குளிச்சுட்டு ட்ரஸ் மாத்தணும்..
சரிம்மா... அப்படியே பண்ணிடறேன்..
பார்பர் என் தலையை குனிய வைத்து டிரையாக இருந்த முடியை மொட்டை அடிக்க ஆரம்பித்தார். என் நெற்றியில் இருந்து ஆரம்பித்து மேல் நோக்கி சவர கத்தியால் வழிக்க ஆரம்பித்தான். நிஷாவின் தலை முடி ட்ரையாக இருந்ததால் அவள் முடியை சவர கத்தியால் வழித்து எடுக்கும் சத்தம் நன்றாகவே கேட்டது.
அந்த சத்தம் கேட்க, கேட்க நிஷாவின் முடி காற்றில் பறந்து அவள் மடியிலேயே விழுந்தது. அதை பார்த்ததும் நிஷாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.15 நிமிடங்களில் நிஷாவின் முடி முழுவதும் நன்றாக மொழு மொழுவென மொட்டை அடிக்கப்பட்டது.
முடிஞ்சதுமா... மொட்டைல சந்தனம் நீங்களே தடவிக்கிறீங்களா... இல்லை நான் தடவி விடட்டுமா...
நீங்களே அதையும் தடவி விட்டுடுங்க அண்ணா...
சரிம்மா... என்று சொல்லி விட்டு நிஷாவின் மொட்டை தலையில் சந்தனம் தடவி விட்டான் பார்பர்.
அப்புறம் கோவிலில் இருந்து ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு என் மாமா வீட்டுக்கு வர, அங்கு எல்லோரும் என்னை அதிர்ச்சியாக பார்த்தனர்.
நிஷா என்ன கோலம்டி இது... ஏண்டி உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா... இப்படி வயசு பொண்ணு மொட்டை அடிச்சுட்டு வந்து நிக்கிற...
எனக்கு குளிக்கும் போது பாட்டி நியாபகமாகவே இருக்கு, என்னாலே மறக்க முடியவில்லை... அதான் மொட்டை அடிச்சேன்... இதுக்காக யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.. இனி இதை பத்தி என்கிட்ட பேசினா நான் என் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல யாரும் என்னிடம் பேசவில்லை.
மொட்டை அடித்த பின் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக மனம் தெளிவு கிடைத்தது.. அதில் இருந்து சில மாதங்கள் மீண்டும் மீண்டும் மொட்டை அடித்துக் கொண்டு இருந்தேன்.
simple & short story
ReplyDelete