Thursday, 16 April 2020

பெண்களின் முகத்தில் உள்ள முடியை நீக்குவது எப்படி?


பெண்களின் முகத்தில் உள்ள முடி, உண்மையில் விவாதம் செய்ய முடியாத ஒரு தலைப்பு. அது ஒரு அழகான இயற்கை நிகழ்வு. எல்லா பெண்களுக்கும் அவர்களது முகம், மற்றும் உடலில் முடி இயற்கையாகவே உள்ளது.

ஆனால் பெண்களுக்கு முகத்தில் முளைக்கும் முடியானது வெளிர் நிறமாகவும், இயற்கையில் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இருப்பினும் சில பெண்களுக்கு முடி கொஞ்சம் கடினமானதாக இருக்கும். இதற்கு காரணம் சில ஹார்மோன்கள் இயல்பை விட அதிகமாக சுரப்பது தான்.



டெஸ்டோஸ்டிரோன், ஆன்ட்ரோஜன்களின் இயல்பான அளவை விட அதிகமாக சுரப்பதே இதற்கு காரணம். எல்லா பெண்களும் ஆன்ட்ரோஜனை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால் இயல்பான அளவு மட்டுமே. சில பெண்களுக்கு மட்டும் இயல்பான அளவை விட அதிகமாக ஆன்ட்ரோஜன் அதிகமாக சுரக்கும்.

ஆன்ட்ரோஜன் அதிகமாக சுரக்கும் பெண்களுக்கு முகத்தில் மீசை தாடி போன்ற தேவையற்ற முடிகள் முளைத்து அவர்களின் தோற்றத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இதனால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.

இந்த தேவையற்ற முடிகளை சில இயற்கை வைத்தியங்கள் மூலம் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நிரந்தரமாக நீக்கி விடலாம்.

1) முட்டையின் வெள்ளை கருவால் பேஸ் மாஸ்க் செய்து போட்டால் அது முகத்தில் உள்ள முடி வளர்ச்சியை குறைக்கும். இந்த பேஸ் மாஸ்க்கில் முகத்தில் உள்ள முடி அனைத்தும் ஒட்டிக் கொள்வதோடு, அது உலர்ந்ததும், பேஸ் மாஸ்க்குடன் முடி அனைத்தும் உதிர்ந்து வந்து விடுகிறது. முட்டையில் உள்ள புரதம் சருமத்திற்க்கு தேவையான கொலஜன் பூஸ்டரை தருகிறது.

2) முகத்தில் வளரும் அதிகமான முடி வளர்ச்சிக்காக உங்கள் நவீன பார்லரின் கெமிக்கல் ப்ளீச்சிங்கை தவிர்த்திடுங்கள். சர்க்கரையை எலுமிச்சை உடன் சேர்த்து சூடு பண்ணி, அதை பேஸ்ட் போல செய்து பேஸ் மாஸ்க் போல போட்டு காய்ந்த பின் நீக்கினால் முடி உதிர்ந்து விடும்.

3) வறண்ட சருமம் மற்றும் அதிகமான முடி வளர்ச்சிக்கு இயற்கையான் வீட்டு வைத்தியம் என்னவென்றால் 2 ஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் எலுமிச்சை, 1 ஸ்பூன் தேன் ஆகியவை ஒன்றாக கலந்து பேஸ்ட் போல மாறும் வரை சூடாக்கவும். பின் சூடு ஆறிய பின் அதை முகத்தில் முடி அதிகம் உள்ள பகுதியில் தடவி, காய்ந்த பின், முடியின் வளர்ச்சிக்கு எதிர் திசையில் வெளியே இழுக்க வேண்டும்.

4) முகத்தில் தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கு உருளைக் கிழங்கிலும் பல நன்மைகள் உள்ளன. ஒரு உருளைக்கிழங்கு உடன் ஏதேனும் ஒரு பருப்பு, அதனுடன் தேன், எலுமிச்சை சேர்ந்து பேஸ்ட் செய்து அதை முகத்தில் தடவி, ஒரு இரவு முழுவதும் வைத்து, அடுத்த நாள் காலை குளிர்ந்த நீரில் கழுவவும்.



5) நன்றாக பழுத்த ஒரு பப்பாளியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி, அவற்றை பேஸ்டாக அரைக்கவும். பேஸ்ட்டில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து அதை அதிகமான முடி வளர்ச்சி உள்ள பகுதியில் தடவி 15 - 20 நிமிடங்கள் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரம் இரு முறை செய்ய வேண்டும்.

இந்த மாதிரியா இயற்கை வைத்தியங்கள் தொடர்ந்து செய்து வந்தால் பெண்களுக்கு தங்கள் முகத்தில் உள்ள மீசை, தாடி போன்ற தேவையற்ற முடிகளை எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் நிரந்தரமாக நீக்கி விடலாம்...





No comments:

Post a Comment