Wednesday, 1 April 2020

பிளாக் மெயில்

நான் மாலதி. 18 வயது. கிராமத்து பொண்ணு. எனக்கு அப்பா மட்டும் தான். அம்மா இல்லை. என் அப்பா என்னை சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். நான் படிக்க வேண்டும் என்று ரொம்ப சிரமப்பட்டு படிக்க வைத்தார்.நானும் அப்பாவின் கஷ்டத்தை புரிந்து கொண்டு ரொம்பவும் அக்கறையாக படித்து +2 வில் நல்ல மார்க் எடுத்து காலேஜ் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தேன்.




ஆனால் என் அப்பா அதற்க்கு ஒத்துக் கொள்ளவில்லை. என்னை மேற்கொண்டு படிக்க வேண்டாம்‌ என்றும், ஒரு நல்ல வரன் கல்யாணம் செய்து தன் கடமையை முடித்து விட்டு தன் மீதி வாழ்க்கையை கடத்தி விடுவதாக கூறினார். என் அப்பாவுக்கு பெரிய வருமானம் ஒன்றும் இந்த கிராமத்தில் இல்லை. என் அப்பா ஒரு சிறிய கோவிலில் பூஜை செய்து கொண்டு, குறி சொல்லி அதில் வரும் வருமானத்தை கொண்டு எங்கள் குடும்பத்தை நடத்தி வந்தார்.

 அதனால் அவர் சொல்வது ஒரு வகையில் நியாயம் என்று எல்லோரும் சொல்ல நான் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதேன். அப்பா குறி சொன்னால்   அவர் சொல்லுக்கு  மறுவார்த்தை இல்லை.அதை அவர் பெற்ற பெண் நானே மீறினால் இந்த ஊர் எப்படி மதிக்கும். அதனால்என்ன செய்வது என்று என் தோழி ஒருத்தியிடம் ஐடியா கேட்க அவளும் பல யோசனைகள் சொன்னாள்.

எனக்கு எதுவும் சரியாக தோன்றவில்லை. அடுத்த நாள் நான் பள்ளி முடிந்து வரும் போது என் அப்பா பூஜை செய்யும் கோவில் வழியாக  நடந்து வரும் போது அங்கு சில பேர் நின்று பேசிக் கொண்டு இருக்க, அதனை நான் கேட்டேன்.

 வயது அதிகமான ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகாமல் தள்ளி போய் கொண்டே இருக்க, அதற்க்கு குறி கேட்க வந்து இருக்கிறார்கள்.அந்த பெண்ணின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், தோஷம் கழிக்க, அந்த பெண் தன் முடியை கருப்பனுக்கு கொடுக்க வேண்டும் என்று குறி சொல்லி இருக்கிறார்.  அதனால் எல்லோரும் கவலயில் பேசிக் கொண்டு  இருப்பதை கேட்ட எனக்கு ஒரு யோசனை வந்தது.

உடனே என் அப்பாவுக்கு நான் கோவிலில் இருப்பதாக சொல்லி ஒரு  ஆள் அனுப்பி விட்டு கோவில் பின்புறம் இருந்த இடத்துக்கு சென்றேன். அங்கு தான் மொட்டை அடிப்பார்கள். 


அண்ணா அப்பா என்னை தேடி இங்க வருவார். என்னை காலேஜ் போக கூடாதுன்னு சொல்றதால நான் மொட்டை அடிக்க போறதா சொல்லி ஒரு ஆள் அனுப்பி இருக்கேன். அப்பா வரும் போது  நீ எனக்கு மொட்டை அடிக்கிற மாதிரி பண்ணு,  அப்புறம் அப்பாவை நான் பேசி சரி பண்ணிக்கிறேன்.. என்றேன்.

என் அப்பா வீட்டில் இருந்து செய்தி கேள்வி பட்டதும், தலயில் அ டித்துக் கொண்டு ஓடி வந்தார். நான் நாசுவன் முன் என் தலமுடியை விரித்துக் கொண்டு உட்கார, நாசுவன் சும்மாவேணும் என் தலையில் தண்ணீர் ஊற்றி நன்றாக ஈரமாக்கி விட்டான்.

என்ன அண்ணா, தலையை ஈரமாக்கி விட்டுட்டீங்க....

இல்லம்மா... உன் அப்பா வரும் போது பார்க்க நிஜாமாவே மொட்டை அடிக்கிற மாதிரி நம்பணும்ல, அதான் தண்ணி விட்டு நனைச்சேன்...

சரி அண்ணா என்று சொல்லி விட்டு அப்பா வருகிறாரா என்று நான் பார்த்துக் கொண்டு  இருந்தேன்.என் அப்பா மாலதி என்று க த்திக் கொண்டே ஓடி வர, நான் தலை குனிய, நாசுவன்  என் தலையில் ரேசரை வைத்து நடுமண்டையில் இருந்து முடியை பெரிய கோடாக சிரைத்து விட்டான். இதை பார்த்த அப்பா அங்கேயே தன் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்.

என்ன அண்ணா இப்படி பண்ணிட்டிங்க, என் அப்பாவை மிரட்ட தானே மொட்டை அடிக்கிற மாதிரி  நடிக்க சொன்னேன்...

என்னம்மா சொல்ற, அதெல்லாம் சொல்லல... பொய் சொல்லாதம்மா... நீ சொல்லாம நான்  ஏன் உனக்கு மொட்டை அடிக்க போறேன்...

டேய், என் மேல இருக்கிற கோவத்தில், என் பொண்ணுக்கு மொட்டை அடிச்சு விட்டுட்டியே... படுபாவி என்று சொல்லி கதறி அழுது கொண்டு இருந்தார். அப்போது தான் என் அப்பாவுக்கும்,     நாசுவனுக்கும் ஏதோ முன்பகை இருக்க, நான் வந்து இவனிடம் மொட்டை அடிக்க சொல்லி கேட்க, இவன்  நிஜமாலுமே எனக்கு மொட்டை அடித்துவிட்டான்.

அதெல்லாம் எனக்கு தெரியாது பூசாரி..‌ உங்க பொண்ணு தான் என் அப்பா மேல படிக்க வேண்டாம்னு சொல்றார், அதனால் எனக்கு மொட்டை அடின்னு சொல்லுச்சு, அடிச்சேன், இப்ப என்ன பண்ணலான்னு சொல்லு,  

இப்படி என் பொண்ணை அலங்கோலம்  பண்ணிட்டியே, இனி பேசி என்ன ஆக போகுது.. முழுசா வழிச்சு விடு என்று சொல்ல, நான் மொட்டை அடிக்கும் செய்தி  கேட்டு
ஊர் மக்கள் மொத்தமும் வந்து  விட்டனர்

 நான் தலை குனிந்து உட்கார்ந்து இருந்தேன். ஒரு பக்கம் என் அப்பா அழுவது சந்தோஷமாக இருந்தாலும், ஒரு பக்கம் ஊர் மக்கள் முன் நான் மொட்டை அடிக்க படுவதை எண்ணி அழுகையாக தான் இருந்தது. நாசுவனும் இது தான் சமயம் என்று என் முடியை மொத்தமாக மழித்து எடுத்தான். என் அழகான முடி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக என் மடியில் விழுந்தது.


சில நிமிடங்களில் என் தலை முடி முழுவதும் மொட்டை அடிக்கப்பட்டது.  நான் என் முட்டாள் தனத்தால் என் அழகான கூந்தல் மொத்தத்தையும்‌ 
இழந்து மொட்டை ஆனேன். என் தோழிகள் என்னை மொட்டச்சி என்று கிண்டல் செய்தனர். ஆனால் என் அப்பா நான் காலேஜ் சேர சம்மதித்து விட்டார். கோடை விடுமுறை முடிந்து காலேஜ் போகும் போது குறைவான முடி தான்  இருந்தது. அதனால் அதே  நாசுவனிடம் மீண்டும் ஒரு முறை மொட்டை அடித்து விட்டு மொழு மொழு மொட்டையாக காலேஜ் சென்றேன்.



காலேஜில் மொட்டச்சி என்று  எல்லோரும் என்னை கிண்டல் செய்தாலும் அதுவே எனக்கு அடையளமாக இருந்தது. முதல் நாளிலேயே  நான் காலேஜில் பேமஸ் ஆகிவிட்டேன்.. அதன் பின் முடி வளர வளர விதவிதமாக ஹேர்ஸ்டைல் வைத்து என்னை நானே அழகு பார்த்தேன்.



No comments:

Post a Comment