இன்றைய கால கட்டத்தில் பெண்கள் தங்களின் முக அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை போல தங்கள் முடியின் அழகிற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
பெண்களின் இன்றைய வாழ்க்கை சூழலால் ஏற்படும் மன அழுத்தம், காற்று மாசுபாடு, சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் முடி அதிகம் கொட்டுவது, மற்றும் உதிர்வது அதிகமாக ஆகிறது.
முடி உதிர்வதற்கு ஹார்மோன்கள் சம நிலையில் இல்லாமை, புரோட்டின் குறைபாடு போன்றவைகளும் காரணமாகும். முடியின் அடர்த்தி குறைவதை தடுக்க புரோட்டீன் அதிகமுள்ள உணவு வகைகளை எடுத்து கொள்வது நல்லது.
அது மட்டுமின்றி ஒரு சில எளிய இயற்கை வழிகளை பின்பற்றுவதன் மூலம் முடியின் அடர்த்தியை அதிகரிக்க முடியும்.
கற்றாழை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, அடர்த்தியும் அதிகமாகும். வேண்டும் என்றால் கற்றாழை ஜுஸ் செய்தும் குடித்து வரலாம்.
வாரம் இருமுறை இரவில் தூங்க செல்லும் முன் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, ஸ்காலிப்பில் மென்மையாக தடவி, இரவு முழுவது ஊற வைத்து, மறுநாள் காலையில் அலசி வந்தால் முடியின் அடர்த்தி அதிகரிக்கும்.
வாரம் இரு முறை விளக்கெண்ணெய் தடவி வர, அது முடிமுடி உதிர்வதை தடுக்கும்.
வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து அதனை வாரம் ஒரு முறை தலைக்கு தடவி ஊற வைத்து, அலசி வந்தால் முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, அடர்த்தியும் அதிகரிக்கும்.
ஆலிவ் ஆயில் உடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி வர முடி உதிர்வது நிற்கும். இதனால் முடி மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கேரட் ஜுஸ் தினமும் குடித்து வந்தால் அவை மயிர்கால்களை வலுவாக்கி முடி உதிர்வதை தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவும்.
இரு வாரங்களுக்கு தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் சின்ன வெங்காயத்தை நசுக்கி சாறு எடுத்து ஸ்கால்ப்பில் மென்மையாக தடவி வர, முடி அடர்த்தி குறைவதை தடுக்கலாம்.
No comments:
Post a Comment